01-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 01-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 01-07-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 01.7.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 01/7/20, Today News in Tamil 01.07.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்.

வௌ்ளை வான் விவகாரம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்திருந்த பிணை கோரிக்கை மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் இருந்து மீள பெற்றுக்கொண்டார்.

மேலதிக வகுப்புக்களை சுகாதார வழிகாட்டுதலின்படி இரண்டு நேர இடைவெளியில் 500 மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுமதி.

“யுத்த காலத்தில் கூட தமிழ் மக்களை நாங்கள் ஒருபோதும் மோசமாக நடத்தவில்லை” பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு.

“சிலர் கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் செய்ததைப் போலவே தற்போது பொதுத் தேர்தல் பிரசாரத்தின்போதும் இனவெறியைத் தூண்ட முயற்சிக்கின்றனர்” முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்.

Tamil News Today India

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்குள் 423 மீட்டர் தூரம் வரை சீனா ஆக்கிரமித்துள்ளதாக செயற்கைக்கோள் படங்களில்…!

மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல்களுக்கு பாகிஸ்தானிடமிருந்து வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பெரும் பாதிப்படைந்த மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் ஜூலை 31 ம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு.

இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கோவாக்சினை (COVAXINE) மனிதர்களுக்கு பரிசோதிக்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் ரோபோவை கண்டுபிடித்த கும்பகோணம் கல்லூரி மாணவர்கள்‍ அமைச்சர் துரைக்கண்ணு பாராட்டு.

“ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்-ஐ விடிய விடிய லத்தியால் அடித்தனர்” நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார், மாஜிஸ்திரேட் பாரதிதாசன் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பிய அறிக்கை..!

சாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து விழுப்புரம் எஸ்.பி.ஆக இருந்த ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடிக்கு மாற்றம்.!

Tamil News Today World

பாகிஸ்தான் விமானிகள் போலி உரிமம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு… ” 262 விமானிகள் மோசடி செய்து பணியில் சேர்ந்துள்ளனர்”- விமான போக்குவரத்து துறை அமைச்சர் குலாம் சார்வார் குலாம் சர்வார் கருத்து.

சீனாவில் பன்றிகளிடையே தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. ஆனால், தற்போதுவரை இந்த வைரஸ் மக்களிடையே பரவவில்லை என்றாலும் எந்த நேரத்திலும் இது மனிதர்களைத் தாக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது…!

பாதுகாப்பானவை என்று கருதப்படும் 14 நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் பெயரிட்டுள்ளது. அவுஸ்ரேலியா, கனடா, ஜப்பான், மொராக்கோ மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் அடங்குகின்றது, ஆனால் இதில் அமெரிக்கா, பிரேஸில் மற்றும் சீனா ஆகிய நாடுகள் விலக்கப்பட்டுள்ளன.

Tamil News Live

தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் ’லட்சுமி பாம்’ என்ற திரைப்படம் ஓடிடி யில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.

Today News Tamil – Tamil News Today 01-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article30-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 30-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live
Next articleஇன்றைய ராசி பலன் 01.07.2020 Today Rasi Palan 01-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!