Sirukurinjan Payangal சிறு குறிஞ்சான் பயன்கள் siru kurinjan maruthuva payangal சிறுகுறிஞ்சான் மூலிகை மருத்துவ பயன்கள் Gymnema sylvestre Health benefits

0

Sirukurinjan Payangal: சிறுகுறிஞ்சான் பயன்கள், Sirukurinjan Payangal சிறு குறிஞ்சான் மருத்துவ பயன்கள் Sirukurinjan Payangal diabetic noikku sirukurinjan, diabetic gymnema sylvestre benefits, gymnema sylvestre in tamil, siru kurinjan சிறு குறிஞ்சான் இலை, சிறு குறிஞ்சான் கொடி, சிறு குறிஞ்சான், சிறுகுறிஞ்சான் பொடி, sirukurinjan podi in tamil, sirukurinjan benefits, sirukurinjan payangal, sirukurinjan maruthuva payangal, sirukurinchan, Sirukurinchan Powder, Medicinal uses of Sirukurinjan, சிறுகுறிஞ்சான் பொடி சாப்பிடும் முறை.visa kadikku sirukurinjan. diabetic noikku sirukurinjan

Sirukurinjan Payangal

Sirukurinjan Payangal

வேலிகளில் கொடியாக படரும் சிறிய இலைகளை உடையதும், முனை கூர்மையாகவும் மிளகாயிலை போன்று காணப்படுவதும், கசப்புச் சுவை உடையதுமான் சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை அதாவது நீரிழிவு நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகும். இதனால் இத்தகைய தாவரங்களை தமிழில் சர்க்கரை கொல்லிகள் என்று வழக்குவது உண்டு. முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டதுடன், இலைகள், விதைகள் மற்றும் வேர் என சகலமுமே மருத்துவ குணம் உடையவை. மேலும், இவை மலையைச் சார்ந்த காடுகளில் அதிகம் வளர்கின்றன.

வினைதிறனான மருத்துவ பொருட்கள்:

10 சிறுகுறிஞ்சான் இலைகளுடன், 5 மிளகு மற்றும் ½ தேக்கரண்டி சீரகம் சேர்த்து பொடியாக்கி ½ லிட்டர் தண்ணீரில்; கலந்து கொதிக்கவைத்து கஷாயம் தயாரித்து ஒரு மணி நேரத்திற்கு இரண்டு தேக்கரண்டிகள் வீதம் குடித்து வரும் போது காய்ச்சல் குணமாகும். ஏதாவது ஒரு வகையான ஒவ்வாமை மூலம் உடலில் பரவிய நஞ்சினை வெளியக்றுவதற்கு சிறுகுறிஞ்சான் வேரினை நன்கு காயவைத்து பொடி தயாரித்து, ஒரு தேக்கரண்டி உட்கொள்ளும் போது, வாந்தி ஏற்பட்டு அவ்விஷம் வெளியேறும்.

நன்கு சுத்தம் செய்து பின்னர் நன்கு நறுக்கிய 20 கிராம் சிறுகுறிஞ்சான் வேரினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, 100மி.லி. அளவு வரும் வரை நன்கு காய்ச்சி, அதனை வடிகட்டி, காலை, மதியம் மற்றும் இரவு அதாவது ஒரு நாள் மட்டும் அதில் 30 மி.லி. அளவு, பருகும் போது இருமல் குணமாகும்.

ஜிம்னீமாவில் சபோனின் மற்றும் பாலிபெப்டைடுகள் என்பன பிரித்தெடுக்கப் பட்டுள்ளன. இதன் இலைகளில் ஜிம்னீமிக் அமிலம், குர்மாரின் மற்றும் ஜிம்னமைன் என்னும் அல்கலாய்டு ஆகியன காணப்படுகின்றன.

மேலும், சிறுகுறிஞ்சான் இலையானது, பித்தம் பெருக்குவதுடன், தும்மல் மற்றும் வாந்தியினை ஏற்படுத்தக் கூடிய நஞ்சினை செயலிழக்கச் செய்யக் கூடியது. இதன் வேரானது, வாந்தி மற்றும் காய்ச்சலினை ஏற்படுத்தக் கூடிய நஞ்சினை செயலிழக்கச் செய்வதோடு, பசியினை அதிகரித்து உடல் சூட்டைத் தணிப்பதோடு நரம்புகளையும் பலப்படுத்தும்.

நீரிழிவு நோயினை நீக்கும்

அண்மைக் காலமாக ஜப்பான் மற்றும் இந்தியாவில் ஜிம்னீமா சார்பான பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இவற்றின் பெறுபேறாக, ஜிம்னிமா இலைகள் நீரிழிவு நோயினை இயற்கையாக கட்டுப்படுததுவதில் பெரும் பங்காற்றுகின்றன என்பது இனங்காணப்பட்டுள்ளது. மேலும், பல்வேறுபட்ட மருத்துவ ஆய்வுகளில், நீரிழிவு நோயின் பாதிப்பிற்கு உள்ளானவர்களிற்கு குறைந்தளவான இன்சுலின் தேவைப்படுவது தெரியவந்துள்ளது. அதாவது, இதன் இலைகள் நாக்கின் இனிப்பு சுவைமொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் வைத்து இனிப்பு சுவைக்கான ஆர்வத்தினைத் குறைப்பது தெரியவந்துள்ளது.

இதனுடைய நீரிழிவு நோயிலிருந்து விடுதலையளிக்கும் சிறப்பான மருத்துவக் குணத்தினால் பல்வேறுபட்ட உயர்நிலையான ஆய்வுகள் இந்தத் தாவரத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் அமைப்பினை நோக்கும் போது எதிரடுக்கில் அமைந்துள்ள நீள்வட்டமான இலைகளையும், இலைக்கோணத்தில் அமைந்துள்ள பூக்களையும் உடைய சுற்றிப்படரும் கொடியாக இது காணப்படுகின்றது.

இதனை விட, நன்கு முதிர்ந்த தாவரங்கள் பெருங்கொடி அமைப்பிலும் சிலவேளைகளில் அரிதாகக் காணப்படும். அதாவது, சிறு கிளைகள், நுனியின் உச்சியிலிருந்து தொங்கும் அமைப்பில் இவை காணப்படுகின்றன.

இந்தியாவில் இவற்றின் இலைகள் நீரிழிவு நோயினை தவிர்பதில் முக்கிய மருந்தாக நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதிலுள்ள ஜிம்னீமிக் அமிலம் சர்க்கரை மேலான ஆசை தூண்டப்படுவதனைக் கட்டுப்படுத்துகின்றது. அதாவது. நாவிலுள்ள உணர்ச்சி மொட்டுக்கள் தற்காலிகமாக செயலபடாமலிருக்கச் செய்கின்றது. இதனைவிட, கணயத்திலுள்ள செல்களை புத்துயிர்க்கச் செய்து இன்சுலின் சுரப்பினை மேம்படுத்தி உடலினை நிறை குறைவடைய உதவுகின்றது.

இதன் பகுதிகளான மலர்கள், வெளிர் மஞ்சள் நிறமுடையன, காய்கள் பச்சை நிறமானவை. மேலும், இவற்றின் முதிர்ந்த காய்களிலிருந்து விதைகள, பஞ்சு போன்ற நார்களுடன் வெளிப்பட்டு பறக்கும்.

இவை பொதுவாக தமிழகத்தில், முட்புதர்க் காடுகள், பாழடைந்த காடுகள் மற்றும் வேலிகளில் பரவலாக வளர்கின்றன. சர்க்கரைக் கொல்லி, குறிஞ்சான், குரிந்தை போன்ற பல்வேறு மாற்றுப் பெயர்களை உடைய இதன் இலை மற்றும் வேர் ஆகியன பல்வேறு மருத்துவப் பயன் உடையவையாகும்.

வாந்தியினைத் தூண்டவும், சளியினை நீக்கவும் இதன் விதைகள் பயன்படுத்தப்படுகின்றதுடன், இருமலினை குணமாக்குதல், வயிற்று வலியினை சுகமாக்குதல் சிறுநீர் கழிக்கும் தன்மையினை அதிகரித்தல் மற்றும் மாதவிடாயினை தடுத்தல் என்பனவற்றில் குளுமைப் படுத்தும் தன்மை கொண்ட இதன் வேர்ப்பகுதியும் முக்கிய பங்காற்றுகின்றது.

நீரிழிவு நோயுள்ளவர்கள் சிறுகுறிஞ்சான் இலையினை நிழலில் உலர்த்தி, அதனை இடித்து பொடி செய்து அரித்து அவ்வாறு பெறப்படும் பொடியினை நெய்யில் குழைத்து உட்கொண்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைவடைந்து கால்போக்கில் நோய் முழுமையாக நீங்கி நலமாகும்.

இதனை விட, நீரிழிவு நோயின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு சிறுகுறிஞ்சான் இலைகளை அவற்றுடன் சம அளவு நிறையுடைய நாவற்கொட்டையினையும் சேர்த்து, இரண்டையும் தனித்தனியாக நிழலில் காயவைத்து, தனித்தனியாக இடித்து, பொடியாக்கி, அவற்றை நன்கு அரித்து, ஒன்றாகக் கலந்து, காலை மற்றும் மாலை வேளைகளில் தொடர்ச்சியாக 40 நாட்கள் வரை அக்கலவையில் 1 தேக்கரண்டி அளவு வாயிலிட்டு சுடுநீர் பருகுதல் வேண்டும்.

நச்சுக்கடி நீக்கும்;

வண்டு, செவ்வட்டை, செய்யான் மற்றும் பூரான் போன்றனவற்றின் நஞ்சுகள்; எமது உடலில் பட்டால்; அதன் மூலம் எமக்கு பல்வேறுபட்ட நோய்கள் ஏற்படும். இவ்வாறான சந்தர்பத்தில், சுத்தமாக்கப்பட்ட சிறுகுறிஞ்சான் இலையில் 5 மிளகுகள் வைத்து அதனை நன்கு அரைத்து சுண்டக்காய் பிரமாணம் தொடர்சியாக ஒரு மண்டலத்திற்கு நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் உட்கொள்ளும் போது சகலவிதமான நஞ்சும் அகற்றப்பட்டுவிடும். இதன்போது, உணவில் கடுகு மற்றும் புளி ஆகியன எடுத்துக் கொள்ளாமல் பத்தியம் காத்தல் அவசியமாகின்றது. இதனைவிட, இதன் இலையை அரைத்து பூசுவதன் மூலம் உடலில் அதாவது தோலில் ஏற்படும் வீக்கம், பத்து மற்றும் படை போன்றனவற்றை நீக்க முடிவதுடன், இரத்தத்தை சுத்தம் செய்து உடலிற்கு பொலிவினை அளிக்கும்.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சக்கரைகொல்லி என்றழைக்கப்படும் இரண்டு அல்லது மூன்று சிறுகுறிஞ்சா இலைகளைக் காலையில் பச்சையாகச் மென்றோ, கறியாக அல்லது வறை செய்தோ உட்கொள்ளும் போது, அது இன்சுலின் என்னும் ஓமோன் சுரக்கப்படுவதனை அதிகரித்து இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும்.

ஒரு கைப்பிடி அளவுள்ள சிறுகுறிஞ்சான் இலைகளுடன், 2 கைப்பிடி அளவுள்ள களா இலையினை சேர்த்து, நன்கு பசிந்தாக அரைத்து, பசையாக்கி, அதனை காலையில், வெறும் வயிற்றில் ஒரு நாள் மட்டும் உட்கொள்ளும் போது மாதவிலக்கு ஒழுங்கீனங்கள் நீங்கி சீராகும்.

சிறுகுறிஞ்சான் வேர்த்தூளில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து, அதனுடன் சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி கலந்து தயாரித்த தூளினை (திகடுகு சூரணம்) தொடர்ந்து, காலை மற்றும் இரவு வேளைகளில் 7 நாட்களிற்கு ஒரு சிட்டிகை அளவினை வாயில் இட்டு, சுடுநீர் குடித்துவரும் போது சுவாச காசம் நீங்கும்.

Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

Article By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articlepalvinai noi theerkum vellerukku: ஆஸ்துமா, மார்புச்சளி, பால்வினை நோய்கள், சிறுநீரக கோளாறு, கருச்சிதைவு மற்றும் வலியுள்ள‌ கட்டிகளைக் கரைத்து ஆரோக்கியம் தரும் வெள்ளெருக்கு செடியின் பயன்கள்.
Next articleToday Rasi Palan இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசி பலன் – 07.01.2020 !