palvinai noi theerkum vellerukku: ஆஸ்துமா, மார்புச்சளி, பால்வினை நோய்கள், சிறுநீரக கோளாறு, கருச்சிதைவு மற்றும் வலியுள்ள‌ கட்டிகளைக் கரைத்து ஆரோக்கியம் தரும் வெள்ளெருக்கு செடியின் பயன்கள்.

0

palvinai noi theerkum vellerukku: ஆஸ்துமா, மார்புச்சளி, பால்வினை நோய்கள், சிறுநீரக கோளாறு, கருச்சிதைவு மற்றும் வலியுள்ள‌ கட்டிகளைக் கரைத்து ஆரோக்கியம் தரும் வெள்ளெருக்கு செடியின் பயன்கள். vellerukku flower, vellerukku plant, vellerukku in english, vellerukku benefits in tamil, vellerukku malai, vellerukku ver, vellerukku root, vellerukku payangal in tamil, vellerukku, vellerukku mooligai, vellerukku mooligai sedi payangal. palvinai noi theerkum vellerukku எருக்கஞ்செடி, எருக்கு, எருக்கன் இலை, எருக்கன் செடி, எருக்கம் பால், எருக்கம் பூ, சித்தர்பாடல்.

palvinai noi theerkum vellerukku

”எருக்கம்பால் கட்டிகளையே கரைக்கும்
வாயுவைத் திறக்கறவே கொன்றுவிடும் தீர செருக்கான
சந்நிவலி தீர்க்கும் சார்ந்த பல செந்தூரம்
உண்ணமுடியுமென ஓது”

என்கிறது சித்தர்பாடல்.

தரிசு நிலங்களிலும், ஆற்றங்கரைகளிலும் காணப்படும் வெள்ளெருக்கு புதர்செடி வகையைச் சேர்ந்தது. கருஞ்சிவப்பு அல்லது வெண்மை நிற மலர்கள் நெடியுடன் கூடிய மணம் கொண்டவை. இந்த செடியின் இலைகள், மலர்கள், லேடக்ஸ்பால், வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

இலைகளின் பொடியை எண்ணெயில் கொதிக்க வைத்து தோல்வியாதிகள், படை, கொப்புளங்களுக்கு பூச்சாகப் பயன்படுகிறது. வதக்கிய இலைகள் வீக்கமடைந்த மற்றும் வலியுள்ள மூட்டுக்களின் மேல் வைத்து கட்டப்படுகிறது.

இலை நஞ்சு நீக்குதல், வாந்தியுண்டாக்குதல், பித்தம் பெருக்குதல், வீக்கம்-கட்டிகளைக் கரைத்து வேதனை குறைத்தல் ஆகிய குணங்களையுடையது. பூ, பட்டை ஆகியவை கோழையகற்றுதல், பசியுண்டாக்குதல், முறைநோய் நீக்குதல் ஆகிய பண்புகளையுடையது. பால் புண்ணுண்டாக்கும் தன்மை கொண்டது.

வெள்ளெருக்கம்பூ ஆஸ்துமா, மார்புச்சளி ஆகியவற்றுக்குச் சிறந்தது. குப்பை மேடுகளிலும் தரிசு நிலங்களிலும் காணப்படும் எருக்கன் செடியை விஷ செடி என்று நாம் ஒதுக்கி விடுகிறோம். எருக்கன் செடியில் பூக்கும் பூக்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. விஷக்கடிக்கு மருந்தாக பயன்படும் இந்த பூக்கள் சிறுநீரக கோளாறுகளை மூன்று நாட்களில் குணமடையும்.

பால்வினை நோய்கள் தீரும்

இலைகளின் கலவை காய்ச்சலை குணப்படுத்தக்கூடியது. வெள்ளைநிறப் பால்போன்ற லேடக்ஸ் கருச்சிதைவினை தூண்டக்கூடியது. சிறுகுச்சியினை லேடக்ஸ் பாலில் தேய்த்து கருப்பை வாயில் தடவினால் கருப்பை சுருக்கம் அடைந்து கருச்சிதைவு ஏற்படுகிறது.

மலர்கள் ஜீரணத்தை தருபவை, வயிற்று வலியினை போக்கக் கூடியவை. பசியின்மை, ஆஸ்துமா, சளி, இருமல் ஆகியவற்றினை போக்கும் திறன்கொண்டவை. உலர்த்தப்பட்ட மலர்கள் சர்க்கரையுடன் சேர்க்கப்பட்டு தொழுநோய், பால்வினை நோய்களுக்கு மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.

வெள்ளெருக்கு, நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன என சித்தவைத்தியர்கள் கூறுகின்றனர். எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது. அதன் பருவகாலத்தில் பூத்து, காய்த்து, வளர்ந்துவிடும். இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு. இதை வீட்டிலும் வளர்க்கலாம்.

வேர்ப்பட்டை

வேர்ப்பட்டை உடலின் சுரப்பிகளை ஊக்கப்படுத்தும். தோல்வியாதிகள், யானைக்கால் வியாதி, அடிவயிறு வீக்கம், வயிற்றுப் புழுக்கள், தோலடி நீர்கோர்வை ஆகியவற்றிர்க்கும் மருந்தாகிறது. வேர்ப்பட்டையின் மேல் உள்ள கார்க் போன்ற பகுதியைப் பிரித்தெடுத்துவிட்டு பட்டையினை அரைத்து பழைய கஞ்சியுடன் பசையாக்கி யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்ட கால் மற்றும் விரைப் பகுதிகளின் மீது தடவப்படுகிறது.

வேர்ப்பட்டையினால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் தொழுநோய், பால்வினை நோய், பால்வினை நோயின் புண்கள், வயிற்றுப்போக்கு, நாள்பட்ட மூட்டுவலி ஆகியவற்றை குணப்படுத்தும். பால்போன்ற சாறு தலையின் படை மற்றும் மூல வியாதியினை போக்கும். தேனுடன் கலந்து வாய்ப்புண்ணுக்கும், பஞ்சில் தோய்த்து சொத்தை பல் வலிக்கும் மருந்தாகப் பயன்படு்ததப்படுகிறது.

மஞ்சள் காமாலை குணமாகும்

வேர்ப்பட்டையின் பொடி வாந்தியினைத் தூண்டக்கூடியது. நாள்பட்ட மூட்டுவலிக்கு, மஞ்சள் காமாலைக்கு மிளகுடன் சேர்த்து இருவேளை கொடுக்கப்படுகிறது. பால் திரிந்தபின் மேலே காணப்படும் நீருடன் சோடியம் கார்பனேட் கலந்து கொடுக்கப்பட்டால் ஒரே வாரத்தில் மஞ்சள் காமாலை குணமாகும்.

மருந்து தயாரிப்பதற்கு மிக வயதான தாவரத்தின் வேரினை வெப்பமான அல்லது உலர் காலத்தில் பிரித்தெடுக்க வேண்டும். வேரினை தோண்டியதும் பட்டையினை பிரித்தெடுக்காமல் ஒரு நாள் கழித்தே எடுக்க வேண்டும். வேர்ப்பட்டை தூளினை தயாரிப்பதற்கு முன் பட்டையின் மேல் புறத்தில் உள்ள தடித்த கார்க் போன்ற பகுதியினை சுரண்டி எடுத்துவிட வேண்டும்.

Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

Article By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan 06-01-2020 இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசி பலன் !
Next articleSirukurinjan Payangal சிறு குறிஞ்சான் பயன்கள் siru kurinjan maruthuva payangal சிறுகுறிஞ்சான் மூலிகை மருத்துவ பயன்கள் Gymnema sylvestre Health benefits