Sani Peyarchi Palangal Magaram 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் மகரம் 2020-2023 Capricorn Astrology Magara Rasi மகர ராசி

0

Sani Peyarchi Palangal Magaram 2020-2023

Sani Peyarchi Palangal Magaram 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் மகரம் 2020-2023
Mesham, Rishabam, Mithunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. Mesha, Rishaba, Mithuna, Kadaga, Simha, Kanya, Thula, Viruchika, Dhanu, Makara, Kumbha, Meena. Capricorn Astrology Magara Rasi மகர ராசி சனி பெயர்ச்சி பலன்கள்.
Sani Peyarchi Palangal Magaram 2020-2023

Sani Peyarchi Palangal Magaram 2020-2023: உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

இன்பமோ துன்பமோ அதனை சமமாக ஏற்றுக் கொள்ளகூடிய மனத்தெளிவு கொண்ட மகர ராசி நேயர்களே, சனியின் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை 12-ல் சஞ்சரித்த சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை ஜென்ம ராசியில் சஞ்சரிக்க உள்ளதனால் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனி தொடங்குகின்றது. இதனால் நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களையும் மற்றவர்கள் தவறாக எடுத்து கொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளதனால் எதிலும் நிதானமாகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது மிகமிக அவசியம்.

உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடக் கூடிய வாய்ப்புகள் உள்ளதனால் உணவு விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. ஏழரைச்சனி நடைபெற்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதனால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார நிலை சற்று சுமாராக இருந்தாலும் வேலைபளு அதிகப்படியாக இருப்பதுடன் உழைப்பிற்கான பலனை அடைய முடியாத நிலை ஏற்படும். எனவே மேலதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானமாக இருப்பதுடன் கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்வது நல்லது.

பொருளாதார நிலை ஓரளவுக்கு சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்ற அதேவேளை சிலருக்கு எதிர்பாராத திடீர் செலவுகளால் வீண் விரயங்கள் ஏற்பட்டு கடன் வாங்கும் நிலை ஏற்படக் கூடும். அதிக முதலீடு கொண்ட செயல்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. அப்படி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் உங்கள் பெயரில் செய்யாமல் மனைவி பெயரில் செய்வது சற்று நல்லது. கணவன்- மனைவி இடையே வாக்கு வாதங்கள் அதிகரித்தாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபார ரீதியாக தேக்கமான நிலை பெருளாதார ரீதியாக நெருக்கடி இருந்தாலும் எதையும் சாமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.

சனி ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டு கோளான குருபகவான் உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் (கும்ப ராசியில்) 06-04-2021 முதல் 20-06-2021 வரையும் அதன் பின்பு 20-11-2021 முதல் 13-04-2022 வரை சஞ்சரிக்க உள்ள காலங்களில் உங்களது பொருளாதார நிலை மிகவும் சாதகமாக அமைந்து நீங்கள் எந்தவிதமான பிரச்சினைகளையும் சமாளிக்கும் பலம் பெறுவதுடன் திருமணம் போன்ற சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும்.

சர்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 6-ல் வரும் 01-09-2020 வரையும், கேது 11-ல் வரும் 23-09-2020 முதல் 12-04-2022 வரையும் சஞ்சரிக்க இருப்பதன் மூலம் ஏழரைச்சனி நடைபெற்றாலும் உங்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைப்பதனால் எதையும் எதிர்கொள்ளும் திறன் ஏற்படும்;. பணவிஷயங்களில் நம்பியர்களே உங்களுக்கு துரோகம் செய்யக் கூடிய வாய்ப்புகள் உள்ளதனால்; பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பதுடன் பொதுவாக பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது மிகவும் நல்லது.

உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படுவதுடன், நெருங்கியவர்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் காரணமாக உங்களின் மனநிம்மதி குறையும். மேலும், சிலருக்கு வயிறு சம்பந்தமான பாதிப்புகளால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதுடன் தூக்கமின்மை, சோர்வு மற்றும் அஜீரணக் கோளாறுகள் போன்றனவும் ஏற்படும். பொதுவாக முன்கோபத்தைக் குறைப்பதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை எப்படி இருக்கும்

பொருளாதார நிலை சுமாராகவே காணப்படும் என்பதனால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. மேலும், கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதனால் முடிந்த வரை அனைவரையும் அனுசரித்துச் செல்வதுடன், உற்றார்- உறவினர்களால் நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும் என்பதனால் எந்தவொரு செயலிலும் பிறர் மனதை புண்படுத்தாது இருப்பதும் நற்பலனை உண்டாக்கும். சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்கு பின் சாதகப்பலன் ஏற்படுகின்ற போதிலும் அடிக்கடி ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டி ஏற்படும்.

கொடுக்கல் வாங்கல் எப்படி இருக்கும்

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் ஓரளவுக்கு லாபத்தை அடைய முடியும். மேலும், பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருப்பதுடன் கொடுத்த கடன்களை சில தடைகளுக்குப் பின்எரே தான் திரும்பப் பெற கூடிய சாத்தியங்கள் காணப்படுவதனால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதையும், பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுத்தல் போன்றனவற்றையும் தவிர்த்தல் நல்லது.

தொழில், வியாபாரம் எப்படி இருக்கும்

அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்க தாமதம் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டி ஏற்படுவதனால்; வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் கவனமுடன் செயல்படுவது, அப்படி செய்ய வேண்டும் என்றால் உங்கள் பெயரில் செய்யாமல் இருப்பது நல்லது. கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல் பாட்டினால் தொழிலாளர்கள் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவதன் மூலம் அபிவிருத்தி குறையும்.

உத்தியோகம் எப்படி இருக்கும்

உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகி அதிக நேரம் பணிபுரிய நேரிடுவதனால் உடல்நிலை சோர்வடைதல்; மற்றும் அலைச்சல் காரணமான டென்ஷன் அதிகரித்து அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடுவதால் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடுவதுடன் எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகி வெளியூர் செல்ல நேரிடும். எனவே கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. மேலும் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது.

அரசியல் நிலை எப்படி இருக்கும்

கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் தடைகள் ஏற்படுவதன் காரணமாக புகழ், பெருமை மங்கக்கூடிய காலமாக உள்ளதனால் மக்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ள அரும்பாடு படவேண்டி இருக்கும். மேலும், கட்சிப் பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளும் செய்ய வேண்டி ஏற்படுவதுடன் முன்னெடுக்கும் காரியங்களை சரிவர செய்து முடிக்காதபடி இடையூறுகள் ஏற்படுவதனால் உடனிருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.

விவசாயிகள் நிலை எப்படி இருக்கும்

போதிய நீர் இன்மை மற்றும் அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் கிடைப்பதில் தாமதம் போன்றனவற்றால் பயிர் விளைச்சல் எதிர்பார்த்த அளவிற்கு அமையாததனால் போட்ட முதலீட்டினை எடுக்க முடியாது. இதனால் வங்கிக்கடன்கள் அதிகரிப்பதுடன் கால் நடைகளால் எதிர்பாராத வீண் செலவுகள் மற்றும் பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் உண்டாகும்.

கலைஞர்கள் நிலை எப்படி இருக்கும்

புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் நிறைய போட்டிகள் காணப்படுவதனால் கிடைக்கக் கூடிய எந்தவொரு வாய்ப்புகளையும் தவறவிடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் அதன் மூலம் ஒரளவுக்கு பொருளாதார மேன்மையும் ஏற்படுவதுடன் வரவேண்டிய சம்பளத் தொகைகள் தாமதப்பட்டாலும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும். எனினும் அதிக நேரம் உழைப்பதன் காரணமாக உடல் அசதி மற்றும் சோர்வு என்பன ஏற்படும்.

பெண்கள் நிலை எப்படி இருக்கும்

சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறுகின்ற அதேவேளை புத்திர வழியில் சிறுசிறு நிம்மதிக் குறைவுகள் உண்டாகும். மேலும், கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறைவதற்கான சாத்தியங்கள் அதிகளவில் உள்ளதளால் விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்வது நல்லது. வீடு, மனை வாங்கும் முயற்சிகளால் கடன்கள் ஏற்படுவதுடன், பணவரவுகள் ஏற்ற இறக்கமாக காணப்பட்ட போதிலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மேலும், உடல்நிலையில் வயிறு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் கர்ப்பபை கோளாறுகள் ஏற்படும்.

மாணவ மாணவியர் நிலை எப்படி இருக்கும்

கல்வியில் மந்த நிலை ஏற்படக் கூடிய காலம் என்பதனால் எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண்களைப் பெற முடியாவிட்டாலும் தேர்ச்சியடையும் அளவிற்கு மதிப்பெண்கள் கிடைக்கும். இவ்வாறாக பெற்றோர் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எனவே தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்த்து முழு ஈடுபாட்டினைச் செலுத்துவது நல்லது. மேலும், அரசு வழியில் கிடைக்க வேண்டிய மானியத் தொகைகள் சற்று தாமதப்படும்.

தனுசு கும்பம்

ஏனைய அனைத்து ராசிகளுக்குமான சனிபெயர்ச்சி பலன்களை பார்வையிட இங்கே அழுத்தவும்

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleSani Peyarchi Palangal Kanni 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் கன்னி 2020-2023 Virgo Astrology Kanya Rasi கன்னி ராசி
Next articleSani Peyarchi Palangal Kumbam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் கும்பம் 2020-2023 Aquarius Astrology Kumbha Rasi கும்ப ராசி