Sani Peyarchi Palangal Kumbam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் கும்பம் 2020-2023 Aquarius Astrology Kumbha Rasi கும்ப ராசி

0

Sani Peyarchi Palangal Kumbam 2020-2023

Sani Peyarchi Palangal Kumbam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் கும்பம் 2020-2023
Mesham, Rishabam, Mithunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. Mesha, Rishaba, Mithuna, Kadaga, Simha, Kanya, Thula, Viruchika, Dhanu, Makara, Kumbha, Meena.Aquarius Astrology Kumbha Rasi கும்ப ராசி சனி பெயர்ச்சி பலன்கள்.
Sani Peyarchi Palangal Kumbam 2020-2023

Sani Peyarchi Palangal Kumbam 2020-2023: அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

உயர்ந்த பண்பும், பிறர் விஷயங்களில் அத்துமீறி தலையிடாத நற்குணமும், பொறுமையும் உள்ள கும்பராசி நேயர்களே, இதுநாள் வரை லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரித்து வந்த உங்கள் ராசியாதிபதி சனி திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை விரய ஸ்தானமான 12-ல் மகர ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க உள்ளார். இதனால் உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயசனி தொடங்கி உள்ளது. கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு சனி ராசியாதிபதி என்பதால் அதிக கெடுபலன்களை ஏற்படுத்த மாட்டார்.

உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் செயல்படுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளை தவிர்க்க முடிவதுடன் உடல்நிலையில் சோர்வு, கை, கால் அசதி போன்றவை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் தெம்புடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உண்டாக கூடிய கருத்து வேறுபாடுகளால் மன நிம்மதியற்ற நிலை ஏற்படுமாதலால் நெருங்கியவர்களை மிகவும் அனுசரித்து செல்ல வேண்டிவரும். கடன்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் மந்தமான நிலைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களிடம் உள்ளதனால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது அதாவது முடிந்த வரை உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கின்ற அதேவேளை நீங்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க தாமத நிலை உண்டாவதோடு தேவையில்லாத இடமாற்றம் ஏற்படும். இதனால் உடன் பணிபுரியும் சக நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது. அதிகாரிகளின் ஆதரவு சற்று சாதகமாக இருப்பதாலும் பொருளாதார நிலை அனுகூலமாக இருப்பதாலும் மன நிம்மதி உண்டாகும்.

சனி விரயஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குருபகவானும் வரும் 20-11-2020 வரை லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும், வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் சிறப்பான அமைப்பு என்பதால் இக்காலங்களில் எதிலும் சற்று அனுகூலமான பலனை பெறுவீர்கள். திருமண போன்ற சுப காரிய முயற்சிகளில் இருந்த தடை விலகி எளிதில் கைகூடுவதுடன் சிலருக்கு புத்திரபாக்கியம் அமையும்.

எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று தொழில் உத்தியோக ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன் பொருளாதார நிலை சிறப்பாக காணப்பட்டு நெருக்கடிகள் குறையும். ஏழரைச்சனி நடக்கும் இக்காலத்தில் சர்ப கிரகமான கேது லாப ஸ்தானத்தில் 23-09-2020 வரை சஞ்சரிப்பதும், ராகு வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக நீங்கள் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்கு உள்ள பிரச்சினைகளை சமாளிக்கும் பலம் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்

முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை உண்டாக்கும் என்றாலும் அன்றாட பணிகளில் தெம்புடனேயே செயல்படுவீர்கள். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் ஏற்படும் என்பதால் முடிந்த வரை தூர பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படும்.

குடும்பம், பொருளாதார நிலை எப்படி இருக்கும்

குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். தேவையற்ற நெருக்கடிகள் தோன்றுவதால் பணவரவுகள் சாதகமாக இருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும். எனவே முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

கொடுக்கல் வாங்கல் எப்படி இருக்கும்

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் ஒரளவுக்கு லாபம் காண முடியும். அதேவேளை பணவிஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யக் கூடியவர்களாக காணப்படுவதனால் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். எனவே கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குறிப்பாக கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை என்பது போலாகி யாவும் வீண் விரயங்கள் உண்டாகும். இவ்வாறாக உங்களுக்கு ஏற்படக் கூடிய வீண் வம்பு, வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும்.

தொழில், வியாபாரம் எப்படி இருக்கும்

புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சில தடைகளுக்கு பின் அனுகூலப்பலன் உண்டாகும். இதனால் கூட்டாளிகளிடமும், உடன்பணிபுரியும் தொழிலாளிகளிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் காணப்படுகின்ற அதேவேளை தொழில் வியாபாரத்தில் மந்தமான நிலை நிலவினாலும் தேக்கமின்றி லாபம் காணமுடியும். இவ்வாறாக நீங்கள் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள்.

உத்தியோகம் எப்படி இருக்கும்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிப்பதுடன் கூடுதல் பொறுப்புகளும் ஏற்படுவதனால் அதிகளவான நேரம் உழைக்க வேண்டி ஏற்படுவதுடன் சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க நேரிடும். இதனால் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. மேலும் உடல் நலக்குறைவுகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடுவதுடன் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சுமாராக காணப்படுவதனால் புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்திக் கொள்ளவது நல்லது.

அரசியல் நிலை எப்படி இருக்கும்

உடனிருப்பவர்களினால் உங்கள் பெயர், புகழுக்கு, பங்கம் ஏற்பட கூடிய வாய்ப்புகள் உள்ளதனால் மேடைப் பேச்சுகளில் நிதானத்தைக் கையாள்வதுடன், எதிலும் சற்று எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்வது உத்தமம். கட்சியில் எதிர்பாராத சிக்கல்களை சந்திக்க நேர்ந்தாலும் நீங்கள் உங்கள் பேச்சுத் திறமையால் எதையும் சாதிப்பதுடன் மக்களின் தேவைகளை நிறைவேற்றி நற்பெயர் எடுப்பீர்கள். எவ்வாறாயினும் எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

விவசாயிகள் நிலை எப்படி இருக்கும்

நீர் வரத்து குறைவதால் பயிர் விளைச்சல் சற்று பாதிப்படைகின்ற அதேவேளை விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபங்கள் கிடைக்கும் என்றாலும் நவீன கருவிகள் வாங்குவதற்காக கடன் வாங்குதல், வேலையாட்கள் கிடைப்பது சிரமம் மற்றும் உங்களிள் உடல் அசதியால் சரிவர பணிகளை செய்து முடிக்க முடியாது. எனவே பங்காளிகளை அனுசரித்து செல்வதுடன் எந்த விஷயத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

கலைஞர்கள் நிலை எப்படி இருக்கும்

இரவு பகலாக உழைக்க வேண்டியிருப்பதால் உடல்நிலை சற்று சோர்வடைவதுடன் போட்டிகள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் அலைச்சல்களும் அதிகரிக்கும். நல்ல வாய்ப்புகள் கைநழுவிப்போனாலும் இருக்கும் வாய்ப்புகளை வைத்தே முன்னேறி விடுவதுடன் வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். எனினும் வரவேண்டிய பணத்தொகைகள் சற்று இழுபறிக்குப்பின் கிடைக்கும். சேமிப்பு குறையும்.

பெண்கள் நிலை எப்படி இருக்கும்

ஆடை ஆபரணங்களும், நவீன பொருட்சேர்க்கைகள் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தியளிககின்ற போதிலும் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. மேலும், உடல் அசதி வயிறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்தல் மற்றும் நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம்.

மாணவ மாணவியர் நிலை எப்படி இருக்கும்

தேவையற்ற நட்புகள் உங்களை வேறு பாதைக்கு இழுத்துச் செல்லக் கூடியவை என்பதனால் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடிவதுடன் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் போது சற்று கவனம் தேவை. மேலும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது.

மகரம் மீனம்

ஏனைய அனைத்து ராசிகளுக்குமான சனிபெயர்ச்சி பலன்களை பார்வையிட இங்கே அழுத்தவும்

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleSani Peyarchi Palangal Magaram 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் மகரம் 2020-2023 Capricorn Astrology Magara Rasi மகர ராசி
Next articleToday Rasi Palan 01-02-2020 இன்றைய ராசி பலன் 01.02.2020 இன்றைய பஞ்சாங்கம் சனிக்கிழமை Today Calendar 01/02/2020 Saturday Indraya Rasipalan