Today Rasi Palan 01-02-2020 இன்றைய ராசி பலன் 01.02.2020 இன்றைய பஞ்சாங்கம் சனிக்கிழமை Today Calendar 01/02/2020 Saturday Indraya Rasipalan

0

Today Rasi Palan 01-02-2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan.

Today Rasi Palan 01-02-2020: இன்றைய பஞ்சாங்கம்: 01.02.2020 தை மாதம் 18, சனிக்கிழமை, சப்தமி திதி மாலை 06.11 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 08.53 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ரத சப்தமி.

இராகு காலம் காலை 09.00 தொடக்கம் 10.30 வரை
எம கண்டம் மதியம் 01.30 தொடக்கம் 03.00 வரை
குளிகன் காலை 06.00 தொடக்கம் 07.30 வரை
சுப ஹோரைகள் காலை 07.00 தொடக்கம் 08.00 வரை
பகல் 10.30 தொடக்கம் 12.00 வரை
மாலை 05.00 தொடக்கம் 07.00 வரை
இரவு 09.00 தொடக்கம் 10.00 வரை

இன்றைய ராசி பலன் 01.02.2020

மேஷம் கவலை விலகும்.
ரிஷபம் உதவி கிடைக்கும்.
மிதுனம் நன்மை ஏற்படும்.
கடகம் சிரமம் ஏற்படும்.
சிம்மம் நின்மதி உண்டாகும்.
கன்னி லாபம் ஏற்படும்.
துலாம் சுகம் கிடைக்கும்.
விருச்சிகம் மேன்மை கிடைக்கும்.
தனுசு வெற்றி கிடைக்கும்.
மகரம் நற்செயல் உண்டாகும்.
கும்பம் ஆக்கம் ஏற்படும்.
மீனம் அன்பு கிடைக்கும்.

மேஷம் ராசிக்காரர்களே!
கணவன் மனைவியிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் விலகி மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். தொழில் ரீதியான புதிய‌ எண்ணங்கள் நிறைவேறும். வங்கி சேமிப்பு உயரும். குடும்பத்தில் பொருளாதார நிலைமைகள் சிறப்பாக இருக்கும். உங்கள் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் மூலம் தீர்வு கிடைக்கும்.

ரிஷபம் ராசிக்காரர்களே!
பிறருடைய விடயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். ஆரோக்கிய குறைபாடுகள் ஓரளவு குறையும். வீட்டில் பெரியவர்களின் நம்பிக்கையீனத்துக்கு ஆளாக நேரிடும். உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். எந்த காரியத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.

மிதுனம் ராசிக்காரர்களே!
திழிலில் ஏற்பட்ட எதிர்ப்புக்கள் தொல்லைகள் நீங்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு ரீதியாக‌ எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய வாய்ப்புக்கள் கைகூடும்.

கடகம் ராசிக்காரர்களே!
உடல் ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். விலை உயர்ந்த‌ பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் செயற்படுவார்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

சிம்மம் ராசிக்காரர்களே!
சுபகாரிய முயற்சிகளை செய்வதற்கு உகந்த நாள். தொழில் ரீதியாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நண்பர்களிடம் இருந்து சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் கிடைப்பதால் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகளால் நன்மைகள் உண்டாகும்.

கன்னி ராசிக்காரர்களே!
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் தேவையில்லாத சங்கடங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.

துலாம் ராசிக்காரர்களே!
வேலையில் உங்களுடன் எல்லோரும் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் கைக்கு கிடைக்கும். பயணங்களால் நன்மை கிட்டும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய நண்பர்கள் இணைவார்கள்.

விருச்சிகம் ராசிக்காரர்களே!
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக‌ இருக்கும். சுபகாரியங்கள் நல்லபடியாக‌ கைகூடும். பழைய கடன்கள் நல்லபடியாக தீரும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். மனதில் புது தெம்புடன் செயல்பட முடியும். வியாபாரத்தில் நண்பர்களின் உதவியால் முன்னேற்றமான நிலை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும்.

தனுசு ராசிக்காரர்களே!
உறவினர்கள் உங்களின் முயற்சிகளில் பக்கபலமாக இருப்பார்கள். கடன்கள் தீரும். இறை வழிபாடு செய்வதால் நன்மை ஏற்படும். உடல் ரீதியாக பலவீனமான நிலையில் காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவுவதோடு தொழில் வியாபாரத்தில் பணியாட்களுடன் மனசங்கடங்கள் ஏற்படும்.

மகரம் ராசிக்காரர்களே!
உடன் இருப்பவர்களிமன் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நல்ல‌ மனிதர்களின் நட்பு நல்ல மறுதல்களை தரும். பொன் பொருட்கள் சேரும். உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம்.வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகும்.

கும்பம் ராசிக்காரர்களே!
உறவினர்கள் உதவியால் பிரச்சினைகளை குறைக்க முடியும். தொழிலில் ர்ர்தியாக‌ நல்ல முன்னேற்றமான சூழல் ஏற்படும். சுறுசுறுப்புடன் வேலைகளில் ர்டுபடுவதன் மூலம் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.

மீனம் ராசிக்காரர்களே!
தொழில் ரீதியாக‌ வெளியூர் தொடர்புகள் ஏற்படுவதால் நல்ல‌ பலன்கள் கிடைக்கும். தொழிலில் லாபம் பெருகும். மன உறுதியோடு பிரச்சினைகளை சந்திக்க‌ வேண்டி வரும். குடும்பத்தில் உள்ள‌ பெரியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம்.

ராசி பலன் ஜோதிடம்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleSani Peyarchi Palangal Kumbam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் கும்பம் 2020-2023 Aquarius Astrology Kumbha Rasi கும்ப ராசி
Next articleFebruary Matha Rasi Palan 2020 பெப்ரவரி மாத ராசி பலன் மாசி மாத ராசி பலன் masi Matha Rasi Palan monthly Rasi Palan in Tamil.