ராகி/குரக்கன்/கேழ்வரகு/கேப்பை Finger Millet – Ragi Benefits in Tamil Ragi Payangal Ragi uses in Tamil.

0

Ragi Benefits in Tamil, Ragi Payangal, Ragi uses in Tamil, kelvaragu Payangal, Kurakkan Nanmaigal, Nutritional Value and Health Benefits of Finger Millet. Kurakkan Benefits in Tamil, Kelvaragu Benefits in Tamil, Ragi Benefits in Tamil, ராகி/குரக்கன்/கேழ்வரகு/கேப்பை பயன்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள். ராகி பயன்கள், குரக்கன் பயன்கள், கேழ்வரகு பயன்கள்.

ராகி/குரக்கன்/கேழ்வரகு தானியத்தில் செய்யக்கூடிய உணவு வகைகள்
ராகி குரக்கன்/கேழ்வரகு தானியத்தின் வரலாறு
ராகி/குரக்கன்/கேழ்வரகு பயிர்ச்செய்கை
ராகி/குரக்கன்/கேழ்வரகு தானியத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்
ராகி/குரக்கன்/கேழ்வரகு ஆரோக்கியப் பயன்கள்

Ragi Benefits in Tamil

ராகி/குரக்கன்/கேழ்வரகு எனப்படும் இத்தானியமானது Finger millet மற்றும் Eleusine coracanஅ என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. வித்துக்கள் நிறைந்த ஓராண்டு புல்லினக் குடும்பத்தைச் சேர்ந்த இத்தானியம் ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் வறண்ட மற்றும் ஓரளவு வறண்ட பிரதேசங்களில் பெருமளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

இதன் வகை/Species:E. coracana
குடும்பம்/Family‎: ‎Poaceae
இனம்/Genus‎: ‎Eleusine
இராட்சியம்/Kingdom‎: ‎Plantae

பாரம்பரிய உணவு மிகப்பழமையான இத்தானியமானது எமது பண்டையத் தழிழர்களிடையில் முக்கியமான பாரம்பரிய உணவாக இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த வகை தானியமானது ஓர் ஆண்டு புல்வகை தானியமாகும்,இதன் முதிர்ந்த தாவரமானது 30-150cm இடைப்பட்ட உயரத்தில் வளரக்கூடியது.இத்தானிய வித்துக்கள் கபில நிறமுடையட,உருளை வடிவான கிட்டத்தட்ட 1–2mm diameter அளவுடையது.

ராகி/குரக்கன்/கேழ்வரகு வரலாறு History of Finger Millet

இத்தானியம் தோற்றம்பெற்றது கிழக்கு ஆபிரிக்கவில் ஆகும்,இது பல ஆயிரமாண்டுகளாக எத்தியோப்பியா மற்றும் உகண்டா உயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதன் பின்னரே கிமு 2000‍‍_4000 காலகட்டங்களில் இந்தியாவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.தற்போது இந்தியா இத்தானியப்பயிர்ச்செய்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு ஆபிரிக்க நாடுகளான உகண்டா, கென்யா, சூடான், நைஜிரியா (Uganda, Kenya, Zaire, Zimbabwe, Zambia, Sudan, Tanzania, Nigeria and Mozambique) ஆகிய இடங்களிலும் மற்றும் தெற்கு ஆசிய நாடுகளான‌ இந்தியா , நேபாள் ஆகிய நாடுகளிலும் முக்கியமாக இத்தானியமானது பயிரிடப்படுகிறது.

பயிர்ச்செய்கை Cultivation of Finger Millet

இத்தானியமானது வெப்பமண்டல, இடைவெப்பமண்டல சில குளிர்ப் பிரதேசங்களில் வளரக்கூடிய சகிப்புத்தன்மையுள்ள தானியமாகும். இத்தானியத்தை மக்கிய பொருட்கள் கலந்த வண்டல் மண் உள்ள பிரதேசங்களில் பயிரிடுவது சிறந்தது. மற்றும் கறுப்பு மண்ணுடன் நல்ல உள்நீரோட்டம் கொண்ட நிலமும் இது பயிரிடுவதற்கு ஏதுவானது. இத்தானிய வளர்ச்சிக்கு சூரிய வெளிச்சத்துடன் 30° C- 34°C வெப்பநிலை பகலிலும்,22° C to 25°C இரவிலும் மற்றும் ஆண்டு மழை வீழ்ச்சி கிட்டத்தட்ட 100cm உம் இருக்கும் எனில் இதன் விளைச்சல் சிறப்பானதாக இருக்கும். கடல் மட்டத்தில் இருந்து 500- 2400m க்கும் மேலான உயரத்தில் இவ்வகைத்தானியங்கள் சிறப்பாக வளரும். இது பயிரிடக்கூடிய மண்ணின் PH பேறுமானம் 4.5_8.2 இடைப்பட்டிருக்க வேண்டும். இதனுடைய வித்துக்களை 5 வருடத்திற்கு மேல் எந்தவித பூச்சிகளின் சேதமும் இன்றி சேமித்து வைக்கமுடியும். அதிகமான களித்தன்மையுடைய மண்ணும், குறைவான உள்நீரோட்டம் உள்ள மண்ணும் இப்பயிர்ச்செய்கைக்கு பொருத்தமற்றது.

ராகி/குரக்கன்/கேழ்வரகு தானியத்தை பயிரிடும் நாடுகளில் இதற்கு வழங்கப்பட்டுள்ள பெயர்கள் Other Names of Finger Millet

Mandua/ Finger Millet (ஹிந்தி)
வேளாண்மை ஆரியம்; கேப்பை; கேழ்வரகு; ராகி (தழிழ்)
Koovarugu/ Finger Millet (மலையாளம்)
Ragulu (தெலுங்கு)
Finger Millet (கன்னடா)
Marwa (பெங்காலி)
Nagli, Bavato (குஜராத்தி)
Mandia (Oriya)
Finger Millet (ராஜஸ்தானி).

ராகி/குரக்கன்/கேழ்வரகு தானியத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் Nutritional Value and Health Benefits of Finger Millet

புரதம் (Protein)
கொழுப்பு (Fat)
மாச்சத்து (Carbohydrate)
சுண்ணாம்புச்சத்து (Calcium)
நார்ச்சத்து (dietary fiber)
இரும்புச்சத்து (Iron)
வைட்டமின் A (Vitamins)
தைமின் Thiamine (B1)
முக்கியமான அமினோ அமிலங்கள் (methionine, isoleucine, leucine, phenylalanine)
இத்தானியத்தில் பொதுவாக கேக்,புடிங்,கஞ்சி ஆகியவற்றை செய்யலாம், மற்றும் இத்தானியத்தை நொதிக்கவைத்து ஆபிரிகாவில் பல பகுதிகளில் பானவகைகள் செய்கிறார்கள்.

குரக்கன் தானியத்தின் ஆரோக்கியப் பயன்பாடுகள் Health benefits of finger millet

  1. இத்தானிய உணவுகளை அடிக்கடி குழந்தைகளும்,முதியவர்களும் உட்கொள்ளும் போதும், இதில் உயர்ந்த அளவில் உள்ள இயற்கையான சுண்ணாம்புச்சத்தானது எலும்புமுறிவு ,எலும்புதேய்மானம், osteoporosis, மற்றும் எலும்பு சம்மந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.
  2. இதில் உயர்வாக antioxidants இருப்பதால் நீண்டகாலமாக இருக்கும் நோய்களின் பாதிப்பைக் குறைக்க உதவும்,உதாரணமாக: இரத்த அழுத்தம்,கொலஸ்ரோல், நீரிழிவு ஆகியவை மற்றும் உடற்கலங்ளின் சிதைவையும் தடுக்க உதவும்.
  3. இதில் குறைவான glycemic index இருப்பதால் மெதுவான உணவு செரிமான செயட்பாட்டை துண்டுவதுடன், இன்சுலின் சுரத்தலையும் தூண்டி இரத்தத்தில் சக்கரையின் அளவை சரியான அளவில் பேணுவதற்கு உதவுகிறது.
  4. இவ்வுணவை தினமும் உண்ணும் போது எமது உணவுக்கால்வாய்த் தொகுதி சுத்தமாவதுடன்,மலச்சிக்கலும் தீரும்.
  5. இதில் இயற்கையாகவே உயர்வான இரும்புச்சத்து இருப்பதால் இரத்தச்சோகை, தசைப்பிடிப்பு மற்றும் இது தொடர்பான நோய் அறிகுறிகளை குறைக்க உதவும்.
  6. பால் கொடுக்கும் தாய்மார்கள் குரக்கன் வகை உணவுகளை அதிகமாக எடுக்கும்படி வைத்தியர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். ஏனென்றால் இது பால் சுரத்தலை அதிகரித்து,குழந்தைக்கு அதிக காலம் பாலுட்டுவதற்கு உதவுகிறது.

குரக்கன் தானியத்தில் செய்யக்கூடிய உணவு வகைகள் kurakkan Ragi kelvaragu food recipe

ராகி ரொட்டி Ragi Roti

தேவையான பொருட்கள்

•ராகிமா 1 கப் (finger millet)
•சிறிய துண்டுகளாக வெட்டிய வெங்காயம்
•சிறிய துண்டுகளாக வெட்டிய பச்சை மிளகாய் 2
•சிறிதளவு கறிவேப்பிள்ளை
•உப்பு தேவையான அளவு
•Oil – 2 tbsp
•தண்ணீர் தேவைக்கேற்ப‌

செய்யும் முறை

•ஒரு பாத்திரத்தினுள் ராகிமா, வெட்டிய வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிள்ளை தேவைக்குகேற்ப உப்பு விட்டு அனைத்தையும் கலக்கவும்.
•பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பிசைந்து ரொட்டி தட்டக்கூடிய பதத்திற்கு எடுக்கவும்.
•பின் எலுமிச்சம் பழம் அளவு, 4 சிறு துண்டுகளாக பிரித்து உருண்டை ஆக்கவும்.
•பின் அதை வட்டமாக மெல்லிதாக தட்டி எடுக்கவும். பின் ரொட்டிக்கல்லை சூடாக்கி ஒவ்வொரு ரொட்டியாக சுட்டெடுக்கவும்.

ராகி அரிசி தோசை Ragi Arisi Dosai

தேவையான பொருட்கள்

•ராகி மா 1 கப்
•அரிசி மா 1/4 கப்
•சீரகம்‍ 1 tbsp
•உப்பு தேவையான அளவு
•Oil – 2 tbsp
•தண்ணீர் தேவைக்கேற்ப‌

செய்யும் முறை

•ஒரு பாத்திரத்தினுள் ராகிமா, அரிசிமா, சிறிதளவு, சீரகம், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
•பின் தேவைக்கு ஏற்ப தண்ணீர் விட்டு கட்டிபடாமல் நன்கு கலக்கவும்.
•இதன் கலவை ஓரளவு தடிப்பாகவும், தோசை ஊற்றக் கூடிய பதத்திலும் இருக்க வேண்டும்.
•கலவையை 15‍-30 நிமிடங்களின் வைத்த‌ பின்னர் தோசைக்கான கலவை தயார்.
•பின் சூடாக்கிய தோசைக்கல்லில் ஊற்றி தோசை சுடவும், தோசையை சுற்றி oil விட்டு திருப்பி விடவும்.
•தோசை தயாரானதும் தக்காளி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

ராகி அரிசி இட்லி Ragi Arisi Idli

தேவையான பொருட்கள்

•ராகி 1.5 கப் (fingermillet)
•சிவப்பரிசி 0.5 சுப்
•உழுந்து 0.5 கப்
•ரவை 0.25 கப்
•வெந்தயம் 1 tsp
•தேவையான அளவு
•உப்பு மற்றும் தண்ணீர்

செய்யும் முறை

•தனித்தனியாக ராகி, சிவப்பரிசி உழுந்து, வெந்தயம் ஆகியவற்றை கழுவி 6-8 மணித்தியாளங்கள் ஊற வைக்கவும்.
•தண்ணீரை வடித்து பின் அனைத்தையும் நன்கு அரைத்து பின்னர் ரவையையும் சேர்த்து 8 மணி நேரம் நொதிக்க விடவும்.
•தேவைக்கு எற்ப உப்பு சேர்த்து கலக்கி இட்லி தட்டில் எண்னெய் தடவி மாவை ஊற்றி பின் 10 நிமிடங்கள் ஆவியில் அவிக்கவும்.
•இட்லி தயாரானதும் தக்காளி அல்லது தேங்காய் சட்னியுடன் சுடச்சுட பரிமாறவும்.

ராகி முறுக்கு Ragi Murukku

தேவையான பொருட்கள்

•ராகிமா 1/2 கப்
•அரிசிமா 1/4 கப்
•கடலைமா 1 tbs
•1 tsp oil hot
•பெருங்காய தூள் சிறிய அளவு
•தேவையான அளவு உப்பு

செய்யும் முறை

•முதலில் ஒரு பாத்திரத்தினுள் ராகிமா, அரிசிமா, கடலைமா, பெருங்காயத்தூள், உப்பு, சிறிதளவு எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
•பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசைந்து மென்மையான மாக்கலவையைப் பெறவும்.
•பின்னர் அளவாக எடுத்து முறுக்கு உரலினுள் இட்டு முறுக்கு பிழியவும்.
•இவ்வாறு பிழிந்த முறுக்குகளை கொதிக்கும் எண்ணெயினுள் போட்டு முறுக்குச் சுட்டெடுக்கவும்.

Millet Benefits சிறுதானிய பயன்கள்

Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

Article By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்று இரவு பிரதமர் நாட்டு மக்களுக்கு விசேட உரை!
Next articleமாவு என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தில் போண்டா செய்த இளம்பெண். இறுதியில் நேர்ந்த பரிதாபம்!