Today Special Historical Events In Tamil | 15-10 | October 15
October 15 Today Special | October 15 What Happened Today In History. October 15 Today Whose Birthday (born) | October -15th Important Famous Deaths In History On This Day 15/10 | Today Events In History October-15th | Today Important Incident In History | ஐப்பசி 15 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 15-10 | ஐப்பசி மாதம் 15ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 15.10 Varalatril Indru Nadanthathu Enna| October 15 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 15/10 | Famous People Born Today October 15 | Famous People died Today 15-10.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 15-10 | October 15
ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது. (பிரேசில்)
வெண்பிரம்பு பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படுகிறது. (ஐக்கிய அமெரிக்கா)
உலகக் கைகழுவும் நாளாக கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 15-10 | October 15
1066ல் இங்கிலாந்தின் மன்னராக எட்கார் அறிவிக்கப்பட்டார், ஆனாலும் அவர் முடிசூடவில்லை. 1066 டிசம்பர் 10 வரை இவர் ஆட்சியில் இருந்தார்.
1529ல் வியென்னா நகர் மீதான உதுமானியரின் முற்றுகையை ஆத்திரியர்கள் முறியடித்தனர். உதுமானியரின் ஐரோப்பிய விரிவாக்கம்முடிவுக்கு வந்தது.
1582ல் புதிய நாட்காட்டியை திருத்தந்தை பதின்மூன்றாம் கிரெகொரி கத்தோலிக்க நாடுகளில் அறிமுகப்படுத்தினார். இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக இன்றைய நாளிற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
1764ல் ஆர்க்காடு படைகளின் போர் வீரரும் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கிய மருதநாயகம் ஆங்கிலேயர்களினால் தூக்கிலிடப்பட்டார்.
1793ல் பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயியின் மனைவியும் அரசியுமான மரீ அண்டோனெட் பாரிசு நகரில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். அடுத்த நாள் இவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
1815ல் பிரான்சின் முதலாம் நெப்போலியன் அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள செயிண்ட் எலனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
1851ல் இங்கிலாந்தில் பளிங்கு அரண்மனையில் அனைத்துலக வணிகக் கண்காட்சி முடிவுற்றது.
1863ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: முதற் தடவையாக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கப்பல் ஒன்றை மூழ்கடித்தது.
1864ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: மிசூரி, கிளாஸ்கோவில் அமெரிக்க ஒன்றியப் படைகள் கூட்டமைப்புப் படைகளிடம் சரணடைந்தன.
1878ல் மின்குமிழ் தயாரிக்கும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தை எடிசன் ஆரம்பித்தார்.
1879ல் எசுப்பானியாவின் தென்கிழக்கே செகூரா ஆறு பெருக்கெடுத்ததில், 1,077 பேர் உயிரிழந்தனர்.
1880ல் செருமனியில் கோல்ன் கதீட்ரல் திறப்பு விழா கொண்டாடப்பட்டது.
1904ல் உருசிய-சப்பானியப் போர்: உருசியாவின் பால்ட்டிக் கடற்படை தூர-கிழக்கு நோக்கிய 77ழு-மாதப் பயணத்தை ஆரம்பித்தது.
1917ல் முதலாம் உலகப் போர்: செருமனிக்காக உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட டச்சு நடன மாது மாட்ட ஹரி பாரிசில் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாள்.
1932ல் டாட்டா ஏர்லைன்சு விமான நிறுவனம் தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது. இது பின்னர் ஏர் இந்தியா எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1934ல் சீன சோவியத் குடியரசு கலைந்தது. சங் கை செக்கின் தேசிய புரட்சி இராணுவம் ருயிச்சின் நகரை வெற்றிகரமாகச் சுற்றி வளைத்தது, கம்யூனிஸ்டுகள் வெளியேறினர்.
1940ல் காத்தலோனியாவின் அரசுத்தலைவர் லூயிசு கொம்பானிசு எசுப்பானிய அரசினால் தூக்கிலிடப்பட்டார்.
1944ல் இரண்டாம் உலகப் போர்: அங்கேரி சோவியத் ஒன்றியத்துடன் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு வந்ததை அடுத்து, செருமனி அங்கேரிய அரசை மாற்றியது.
1944ல் இட்லரின் நாட்சிக் கட்சிக்கு ஒப்பான “அம்புக் குறுக்குக் கட்சி'” அங்கேரியில் ஆட்சியைப் பிடித்தது.
1945ல் இரண்டாம் உலகப் போர்: பிரான்சின் முன்னாள் பிரதமர் பியேர் லாவல் நாட்டுத்துரோகத்துக்காக சுட்டுக் கொல்லப்பட்டார்.
1946ல் அனைத்துலக நீதிமன்றம் அமைப்பது தொடர்பான தீர்மானத்தை ஐநா பாதுகாப்புப் பேரவை ஏற்றுக் கொண்டது.
1953ல் பிரித்தானியா டோட்டெம் 1 என்ற தனது அணுகுண்டு சோதனையை தெற்கு ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தியது.
1954ல் வட அமெரிக்காவில் ஏசெல் சூறாவளி தாக்கியதில் 95 பேர் உயிரிழந்தனர். டொரோண்டோ வரை பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
1956ல் போர்ட்ரான் என்ற முதலாவது நவீன கணினி மொழி முதல் தடவையாக குறியீட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
1957ல் பிரித்தானியக் கடற்படைத் தளம் அடங்கலான திருகோணமலைத் துறைமுகத்தை பிரித்தானியா இலங்கையிடம் கையளித்தது.
1962ல் கியூபா ஏவுகணை நெருக்கடி: சோவியத் ஏவுகணைகள் கியூபாவில் இருப்பதாக நடுவண் ஒற்று முகமை அமெரிக்க அரசுத் திணைக்களத்திற்கு அறிவித்தது.
1966ல் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகளை வென்றெடுக்கவென கருஞ்சிறுத்தைக் கட்சி என்ற பெயரில் மார்க்சிய இயக்கம் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
1967ல் “சுடாலின்கிராட் சண்டையின் வீரர்களுக்காக” தாய்நாடு அழைக்கிறது என்ற சிலை திறந்து வைக்கப்பட்டது.
1970ல் மெல்பேர்ண் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட மேற்கு வாசல் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 35 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1979ல் எல் சல்வடோர் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1987ல் புர்க்கினா பாசோவில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் தோமசு சங்காரா சுட்டுக் கொல்லப்பட்டார்.
1990ல் பனிப்போரைத் தணிக்க உதவியமைக்காக சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1995ல் சதாம் உசேன் மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் ஈராக்கின் அரசுத்தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1997ல் நாசாவின் இயூஜென்சு விண்ணுளவி சனிக் கோளை நோக்கி ஏவப்பட்டது.
1997ல் கொழும்பு, கோட்டையில் உலக வணிக மையத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர், சுற்றுலாப் பயணிகள் உட்பட நூற்றிற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
2001ல் நாசாவின் கலிலியோ விண்கலம் வியாழனின் ஐஓ சந்திரனுக்குக் கிட்டவாக 112 மைல் தூரம் சென்றது.
2003ல் சீனா முதற்தடவையாக சென்சோ 5 விண்கலத்தில் விண்வெளி வீரர்களை அனுப்பியது.
2006ல் அவாயில் 6.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் நிலச்சரிவுகள், மின்சார நிறுத்தம், உட்படப் பெரும் சேதம் ஏற்பட்டது.
2008ல் தாய்லாந்தும் கம்போடியாவும் அவற்றின் எல்லையிலுள்ள 900 ஆண்டுகள் பழமையான பிரியா விகார் கோவிலுக்காக போரிட்டுக்கொண்டன. குறைந்தது இரண்டு கம்போடிய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
2013ல் பிலிப்பீன்சை 7.2-அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 215 பேர் உயிரிழந்தனர்.
2016ல் ருவாண்டாவில் 150 நாடுகள் ஐக்கிய நாடுகள் சூழல் திட்ட உச்சி மாநாட்டில் பங்குபற்றின.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 15-10 | October 15
கிமு 70ல் உரோமைக் கவிஞரான வேர்ஜில் பிறந்த நாள். (இறப்பு-கிமு 19)
1218ல் மங்கோலியப் பேரரசரான ஊலாகு கான் பிறந்த நாள். (இறப்பு-1265)
1265ல் மங்கோலியப் பேரரசரான தெமுர் கான் பிறந்த நாள். (இறப்பு-1307)
1542ல் முகலாயப் பேரரசரான அக்பர் பிறந்த நாள். (இறப்பு-1605)
1829ல் அமெரிக்க வானியலாளரான ஆசப் ஆல் பிறந்த நாள். (இறப்பு-1907)
1844ல் செருமானிய இசையமைப்பாளரும் கவிஞருமான பிரீட்ரிக் நீட்சே பிறந்த நாள். (இறப்பு-1900)
1855ல் சென்னை மாகாண முதலமைச்சரான சுப்பராயலு பிறந்த நாள். (இறப்பு-1921)
1863ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் ஆசிரியருமான நெவின்ஸ் செல்வதுரை பிறந்த நாள். (இறப்பு-1938)
1881ல் ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளரான பி. ஜி. வுட்ஹவுஸ் பிறந்த நாள். (இறப்பு-1975)
1897ல் இந்திய கருடாடக இசைப் பாடகரான முடிகொண்டான் வெங்கடராம ஐயர் பிறந்த நாள். (இறப்பு-1975)
1904ல் உருசிய வானியலாளரான இகோர் பெல்கோவிச் பிறந்த நாள். (இறப்பு-1949)
1909ல் அமெரிக்க வானியலாளரான யெசே இலியோனார்டு கிரீன்சுடைன் பிறந்த நாள். (இறப்பு-2002)
1913ல் யாழ்ப்பாணத்தின் கல்வியாளரான தெ. து. ஜயரத்தினம் பிறந்த நாள். (இறப்பு-1976)
1924ல் தமிழக இயக்குநரும் தயாரிப்பாளரும் தொகுப்பாளரும் திரைக்கதை எழுத்தாளருமான ஏ. பீம்சிங் பிறந்த நாள். (இறப்பு-1978)
1926ல் பிரான்சிய வரலாற்றாளரும் மெய்யியலாளருமான மிசேல் பூக்கோ பிறந்த நாள். (இறப்பு-1984)
1926ல் இலங்கை அரசியல்வாதியான எம். ஏ. அப்துல் மஜீத் பிறந்த நாள். (இறப்பு-2011)
1927ல் இந்தியத் தொழிலதிபரான பி. எஸ். அப்துர் ரகுமான் பிறந்த நாள். (இறப்பு-2015)
1928ல் தமிழக வரலாற்று ஆய்வாளரான எசு. எம். கமால் பிறந்த நாள். (இறப்பு-2007)
1931ல் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரான ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் பிறந்த நாள். (இறப்பு-2015)
1931ல் ஈழத்துக் கவிஞரும் கருநாடக இசைப் பாடகருமான வீரமணி ஐயர் பிறந்த நாள். (இறப்பு-2003)
1934ல் இந்திய புல்லாங்குழல் கலைஞரான என். ரமணி பிறந்த நாள். (இறப்பு-2015)
1935ல் அமெரிக்க ஓட்ட வீரரான பாபி ஜோ மோரோ பிறந்த நாள்.
1935ல் டொமினிக்கன் குடியரசு பெண்ணிய செயற்பாட்டாளரான மரியா தெரேசா மிராபெல் பிறந்த நாள். (இறப்பு-1960)
1936ல் இந்திய அரசியல்வாதியான மதன் லால் குரானா பிறந்த நாள்.
1939ல் இலங்கை துடுப்பாட்ட நடுவரான கே. டி. பிரான்சிஸ் பிறந்த நாள். (இறப்பு-2013)
1942ல் அமெரிக்க இந்து சமய ஞானியான போதிநாத வேலன்சாமி பிறந்த நாள்.
1944ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான அரியநாயகம் சந்திரநேரு பிறந்த நாள். (இறப்பு-2005)
1946ல் ஈழத்து எழுத்தாளரும் நாடக இயக்குனருமான யாழூர் துரை பிறந்த நாள். (இறப்பு-2012)
1949ல் இந்திய ஊடகவியலாளரான பிரணாய் ராய் பிறந்த நாள்.
1957ல் இந்திய-அமெரிக்க நடிகையான மீரா நாயர் பிறந்த நாள்.
1988ல் செருமானிய காற்பந்து வீரரான மெசுத் ஓசில் பிறந்த நாள்.
1994ல் பாக்கித்தானொயத் துடுப்பாளரான பாபர் அசாம் பிறந்த நாள்.
1995ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான நிவேதா தாமஸ் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 15-10 | October 15
925ல் பாரசீக பல்துறை அறிஞரான முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி இறப்பு நாள். (பிறப்பு-864)
1389ல் திருத்தந்தையான ஆறாம் அர்பன் இறப்பு நாள். (பிறப்பு-1318)
1564ல் பெல்ஜிய-கிரேக்க மருத்துவரான ஆண்ட்ரியசு வெசாலியசு இறப்பு நாள். (பிறப்பு-1514)
1764ல் இந்திய விடுதலைப் போராட்ட வீரரான மருதநாயகம் இறப்பு நாள். (பிறப்பு-1725)
1917ல் டச்சு நடன மாதும் உளவாளியுமான மாட்ட ஹரி இறப்பு நாள். (பிறப்பு-1876)
1918ல் இந்திய குருவான சீரடி சாயி பாபா இறப்பு நாள். (பிறப்பு-1838)
1930ல் கனடிய-அமெரிக்கத் தொழிலதிபரான எர்பர்ட்டு என்றி டவ் இறப்பு நாள். (பிறப்பு-1866)
1938ல் தமிழக வீணைக் கலைஞரான வீணை தனம்மாள் இறப்பு நாள். (பிறப்பு-1868)
1946ல் செருமானிய அரசியல்வாதியான எர்மன் கோரிங் இறப்பு நாள். (பிறப்பு-1893)
1958ல் பிரித்தானிய நிலவியலாளரும் இயற்பியலாளருமான எலிசபெத் அலெக்சாந்தர் இறப்பு நாள். (பிறப்பு-1908)
1961ல் இந்தியக் கவிஞரான சூர்யகாந்த் திரிபாதி இறப்பு நாள். (பிறப்பு-1896)
1987ல் புர்க்கினா பாசோவின் 5வது அரசுத்தலைவரான தோமசு சங்காரா இறப்பு நாள். (பிறப்பு-1949)
1988ல் அமெரிக்க தாவரவியலாளரான ஜூலியன் ஆல்பிரட் ஸ்டியர்மார்க் இறப்பு நாள். (பிறப்பு-1909)
2004ல் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான டி. ஆர். பாப்பா இறப்பு நாள். (பிறப்பு-1923)
2009ல் சைவத் திருமுறை ஓதுபவரான தருமபுரம் ப. சுவாமிநாதன் இறப்பு நாள். (பிறப்பு-1923)
2009ல் ஈழத்து, தமிழ் ஆத்திரேலிய எழுத்தாளரான தெ. நித்தியகீர்த்தி இறப்பு நாள். (பிறப்பு-1946)
2010ல் தமிழக எழுத்தாளரான சௌந்தரா கைலாசம் இறப்பு நாள். (பிறப்பு-1927)
2012ல் கம்போடியாவின் 1வது பிரதமரான நொரடோம் சீயனூக் இறப்பு நாள். (பிறப்பு- 1922)
2018ல் அமெரிக்கத் தொழிலதிபரான பவுல் ஆல்லென் இறப்பு நாள். (பிறப்பு-1953)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan