October 14 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 14

0

Today Special Historical Events In Tamil | 14-10 | October 14

October 14 Today Special | October 14 What Happened Today In History. October 14 Today Whose Birthday (born) | October -14th Important Famous Deaths In History On This Day 14/10 | Today Events In History October-14th| Today Important Incident In History | ஐப்பசி 14 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 14-10 | ஐப்பசி மாதம் 14ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 14.10 Varalatril Indru Nadanthathu Enna| October 14 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 14 /10 | Famous People Born Today October 14 | Famous People died Today 14-10.

  • Today Special in Tamil 14-10
  • Today Events in Tamil 14-10
  • Famous People Born Today 14-10
  • Famous People died Today 14-10
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 14-10 | October 14

    அன்னையர் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (பெலருஸ்)
    உலகத் தர நிர்ணய நாளாக‌ கொண்டாடப்படுகிறது.
    ஆசிரியர் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (போலந்து)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 14-10 | October 14

    1066ல் நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: ஏஸ்டிங்சு சண்டை: இங்கிலாந்தில் முதலாம் வில்லியமின் நோர்மானியப் படையினர் ஆங்கிலேய இராணுவத்தைத் தோற்கடித்து, இரண்டாம் அரோல்டு மன்னரைக் கொன்றனர்.
    1322ல் இசுக்காட்லாந்தின் இராபர்ட்டு புரூசு பைலாண்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் இரண்டாம் எட்சர்டு மன்னரைத் தோற்கடித்ததை அடுத்து, இசுக்காட்லாந்தின் விடுதலையை எட்வர்ட் ஏற்றுக் கொண்டார்.
    1582ல் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
    1586ல் இசுக்காட்லாந்தின் முதலாம் மேரி இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்துக்கு எதிராக சதி மேற்கொண்டதாகக் குற்றஞ் சாட்டப்பட்டு விசாரணைக்குட்படுத்தபட்டார்.
    1758ல் ஏழாண்டுப் போர்: ஆஸ்திரியா புருசியாவை ஆக்கிக்ர்க் என்ற இடத்தில் நடந்த போரில் வெற்றி கொண்டது.
    1773ல் உலகின் முதலாவது கல்வி அமைச்சு போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தில் அமைக்கப்பட்டது.
    1773ல் அமெரிக்கப் புரட்சிப் போர் தொடங்குவதற்கு சில காலத்திற்கு முன்னர், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் தேயிலைக் கப்பல்கள் பல அனாபொலிசு துறைமுகத்தில் எரிக்கப்பட்டன.
    1808ல் ரகுசா குடியரசு பிரான்சுடன் இணைக்கப்பட்டது.
    1898ல் இங்கிலாந்து, கோர்ன்வால் அருகே மொகெகன் என்ற நீராவிக் கப்பல் கவிழ்ந்ததில் 106 பேர் உயிரிழந்தனர்.
    1903ல் யாழ்ப்பாணத்தின் ஜாஃப்னா என்ற பயணிகள் கப்பல் நெடுந்தீவுக்கு பயணம் மேற்கொண்டது.[1]
    1912ல் அமெரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட் மில்வாக்கியில் பரப்புரை நடத்திய போது, மன நோயால் பாதிக்கப்பட்ட ஒருவனால் சுடப்பட்டார்.
    1913ல் ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 439 பேர் உயிரிழந்தனர்,
    1915ல் முதலாம் உலகப் போர்: பல்காரியா மைய நாடுகளுடன் இணைந்து போரில் குதித்தது.
    1933ல் நாட்சி ஜெர்மனி உலக நாடுகள் அமைப்பில் இருந்து விலகியது.
    1939ல் இரண்டாம் உலகப் போர்: செருமனியின் நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியக் கடற்படையினரின் ரோயல் ஓக் என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. 800 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
    1940ல் இரண்டாம் உலகப் போர்: இலண்டன் பிளிட்சு குண்டுவீச்சுகளின் போது பாலம் தொடருந்து நிலையத்தில் 66 பேர் கொல்லப்பட்டனர்.
    1944ல் இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தின் ஏதென்சு நகரம் பிரித்தானிய இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது. வேர்மாக்ட் படைகள் வெளியேறின.
    1944ல் இரண்டாம் உலகப் போர்: சூலை 20 இல் இடம்பெற்ற இட்லரின் படுகொலை முயற்சி தொடர்பாக இராணுவ அதிகாரி இர்வின் ரோமெல் கட்டாயமாகத் தற்கொலை செய்யத் தூண்டப்பட்டு இறந்தார்.
    1948ல் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.
    1949ல் அமெரிக்கக் கூட்டரசைக் கவிழ்க்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்கக் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த 11 தலைவர்கள் மீது ஒன்பது மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கை அடுத்து அவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
    1949ல் சீன உள்நாட்டுப் போர்: சீனக் கம்யூனிசப் படைகள் குவாங்சௌ நகரைக் கைப்பற்றின.
    1956ல் இந்தியத் தலித் தலைவர் அம்பேத்கர் தனது 385,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்.
    1957ல் எசுப்பானியாவின் வாலேன்சியா நகரில் இடம்பெற்ற பெரும் வெள்ளப்பெருக்கில் 81 பேர் உயிரிழந்தனர்.
    1962ல் கியூபா ஏவுகணை நெருக்கடி தொடங்கியது: கியூபாவுக்கு மேல் பறந்த அமெரிக்க U-2 விமானம் சோவியத் அணு ஆயுதங்களைப் படம் பிடித்தது.
    1964ல் மார்ட்டின் லூதர் கிங் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
    1964ல் லியொனீது பிரெசுனேவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், அலெக்சி கொசிஜின் சோவியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். நிக்கித்தா குருசேவ் தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார்.
    1968ல் மேற்கு ஆஸ்திரேலியாவில் 6.5 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20–28 பேர் உயிரிழந்தனர்.
    1968ல் விண்ணிலிருந்தான முதலாவது நேரடி தொலைக்காட்சி அஞ்சல் அப்போலோ 7 விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்கள் புவியைச் சுற்றுவது ஒளிபரப்பபட்டது.
    1973ல் தாய்லாந்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மக்களாட்சிக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டதில் 77 பேர் கொல்லப்பட்டு 857 பேர் காயமடைந்தனர்.
    1983ல் கிரெனடாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பிரதமர் மோரிசு பிசொப் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்.
    1987ல் டெக்சாசில் ஜெசிக்கா என்ற 18-மாதக் குழந்தை கிணறு ஒன்றில் வீழ்ந்தது. 58 மணி நேரத்தின் பின்னர் இது உயிருடன் மீட்கப்பட்ட நிகழ்வு தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்பட்டது.
    1991ல் பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
    1994ல் பாலத்தீனத் தலைவர் யாசிர் அரஃபாத், இசுரேல் பிரதமர் இட்சாக் ரபீன், வெளியுறவுத் துறை அமைச்சர் சிமோன் பெரெஸ் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
    2014ல் நேபாளத்தைத் தாக்கிய ஊத் ஊத் புயலினால் பனிப்புயல் ஏற்பட்டதில் 43 பேர் உயிரிழந்தனர்.
    2017ல் சோமாலியாவில் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பில் 358 பேர் கொல்லப்பட்டனர், 400 பேர் காயமடைந்தனர்.பன்னாட்டு இயற்கை பேரழிவு குறைப்பு நாளாக

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 14-10 | October 14

    1606ல் டச்சுக் கிழக்கிந்தியப் பகுதிகளின் ஆளுனரான‌ யோவான் மத்சாக்கர் பிறந்த நாள். (இறப்பு-1678)
    1633ல் இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு பிறந்த நாள். (இறப்பு-1701)
    1643ல் முகலாயப் பேரரசரான முதலாம் பகதூர் சா பிறந்த நாள். (இறப்பு-1712)
    1873ல் பிரான்சியத் தொழிலதிபரான‌ ஜூல்ஸ் ரிமெட் பிறந்த நாள். (இறப்பு-1954)
    1887ல் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான ஆற்காடு இராமசாமி முதலியார் பிறந்த நாள். (இறப்பு-1976)
    1887ல் இந்திய மருத்துவரும் கல்வியாளருமான‌ ஏ. இலட்சுமணசுவாமி பிறந்த நாள். (இறப்பு-1974)
    1890ல் அமெரிக்காவின் 34வது அரசுத்தலைவரான‌ டுவைட் டி. ஐசனாவர் பிறந்த நாள். (இறப்பு-1969)
    1893ல் அமெரிக்க முதல் நடிகையான‌ லில்லியன் கிஸ் பிறந்த நாள். (இறப்பு-1993)
    1900ல் அமெரிக்கப் புள்ளிவிபரவியலாளரும் எழுத்தாளருமான‌ வி எட்வர்ட் டெமிங் பிறந்த நாள். (இறப்பு-1993)
    1926ல் இலங்கை நீதிபதியும் வழக்கறிஞருமான‌ எர்பர்ட் தம்பையா பிறந்த நாள். (இறப்பு-1992)
    1927ல் ஆங்கிலேய நடிகரும் தயாரிப்பாளருமான‌ ரோஜர் மூர் பிறந்த நாள். (இறப்பு-2017)
    1930ல் சயீர் அரசுத்தலைவரான‌ மொபுட்டு செசெ செக்கோ பிறந்த நாள். (இறப்பு-1997)
    1939ல் ஈழத்துத் தமிழறிஞரும் கவிஞரும் எழுத்தாளருமான‌ மயிலங்கூடலூர் பி. நடராசன் பிறந்த நாள். (இறப்பு-2022)
    1942ல் தமிழக எழுத்தாளரான‌ சிவசங்கரி பிறந்த நாள்.
    1943ல் ஈழத்தின் கல்வியாளரும் தமிழறிஞருமான‌ மனோன்மணி சண்முகதாஸ் பிறந்த நாள்.
    1946ல் அமெரிக்க உயிரியலாளரான‌ கிரைக் வெண்டர் பிறந்த நாள்.
    1957ல் அங்கேரிய இந்தியவியலாளரும் மெய்யியலாளருமான‌ பிரான்சு உருசா பிறந்த நாள்.
    1965ல் ஆங்கிலேய நடிகரும் தயாரிப்பாளருமான‌ ஸ்டீவ் கூகன் பிறந்த நாள்.
    1976ல் இலங்கைத் துடுப்பாளரான‌ திலகரத்ன டில்சான் பிறந்த நாள்.
    1981ல் இந்தியத் துடுப்பாளரான‌ கவுதம் கம்பீர் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 14-10 | October 14

    1803ல் சுவிட்சர்லாந்து இயற்பியலாளரான‌ அய்மே ஆர்கண்ட் இறப்பு நாள். (பிறப்பு-1750)
    1827ல் பிரித்தானிய இலங்கையின் முதலாவது ஆளுநரான‌ பிரடெரிக் நோர்த் இறப்பு நாள். (பிறப்பு-1766)
    1831ல் பிரான்சிய வானியலாளரான‌ ழீன் உலூயிசு பொன்சு இறப்பு நாள். (பிறப்பு-1761)
    1944ல் செருமானிய இராணுவத் தலைவரான‌ இர்வின் ரோமெல் இறப்பு நாள். (பிறப்பு-1891)
    1961ல் ஈழத்துச் சிறுகதை முன்னோடி இலங்கையரான கோன் இறப்பு நாள். (பிறப்பு-1915)
    1977ல் அமெரிக்கப் பாடகரும் நடிகருமான‌ பிங்கு கிராசுபி இறப்பு நாள். (பிறப்பு-1903)
    1981ல் தமிழக-இலங்கைப் பத்திரிகையாளரான‌ பேச்சாளரான‌ கே. பி. ஹரன் இறப்பு நாள். (பிறப்பு-1906)
    1984ல் ஆங்கிலேய வானியலாளரான‌ மார்ட்டின் இரைல் இறப்பு நாள். (பிறப்பு-1918)
    1995ல் ஈழத்து எழுத்தாளரும் கவிஞரும் நாடக மற்றும் திரைப்பட நடிகருமான‌ சில்லையூர் செல்வராசன் இறப்பு நாள். (பிறப்பு-1933)
    2005ல் தமிழ் எழுத்தாளரான‌ சுந்தர ராமசாமி இறப்பு நாள். (பிறப்பு-1931)
    2009ல் இந்தியப் பெண் சாதனையாளரான‌ சி. பி. முத்தம்மா இறப்பு நாள். (பிறப்பு-1924)
    2011ல் தமிழக-இலங்கை நாடகக் கலைஞரான‌ கம்பளைதாசன் இறப்பு நாள்.
    2013ல் இந்திய அரசியல்வாதியும் சமூகச் செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான‌ மோகன் தாரியா இறப்பு நாள். (பிறப்பு-1925)
    2014ல் ஈழத்து எழுத்தாளரான‌ காவலூர் ராஜதுரை இறப்பு நாள். (பிறப்பு-1931)
    2019ல் 1930களின் குழந்தை நடிகையான‌ பேபி சரோஜா இறப்பு நாள். (பிறப்பு-1931)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleOctober 15 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 15
    Next articleஇன்றைய ராசி பலன் 20.09.2022 Today Rasi Palan 20-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!