Today Special Historical Events In Tamil | 13-10 | October 13
October 13 Today Special | October 13 What Happened Today In History. October 13 Today Whose Birthday (born) | October -13th Important Famous Deaths In History On This Day 13/10 | Today Events In History October-13th| Today Important Incident In History | ஐப்பசி 13 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 13-10 | ஐப்பசி மாதம் 13ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 13.10 Varalatril Indru Nadanthathu Enna| October 13 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 13/10 | Famous People Born Today October 13 | Famous People died Today 13-10.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 13-10 | October 13
பன்னாட்டு இயற்கை பேரழிவு குறைப்பு நாளாக கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 13-10 | October 13
54ல் உரோமைப் பேரரசர் குளோடியசு (படம்) நஞ்சுண்ட நிலையில் மர்மமான முறையில் இறந்தார், அவரது நான்காவது மனைவியின் மகன் நீரோ பேரரசனானார்.
1269ல் வெசுட்மினிஸ்டர் மடத்தின் இன்றைய தேவாலயம் திறக்கப்பட்டது.
1307ல் நூற்றுக்கணக்கான தேவாலய புனித வீரர்கள் பிரான்சில் நான்காம் பிலிப்பு மன்னரின் ஆட்களால் கைது செய்யப்பட்டனர்.
1332ல் ரிஞ்சின்பால் கான், மங்கோலியரின் ககான் ஆகவும், யுவான் பேரரசனாகவும் முடிசூடினான். இவன் 53 நாட்கள் மட்டும் பதவியில் இருந்தான்.
1399ல் இங்கிலாந்து மன்னர் நான்காம் என்றியின் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் மடம்யில் நடைபெற்றது.
1644ல் சுவீடன்-டச்சு கடற்படையினர் பெகுமாம் சமரில் டென்மார்க் கடற்படையைத் தோற்கடித்து, 1,000 இற்கும் அதிகமானோரைச் சிறைப்பிடித்தனர்.
1710ல் பிரெஞ்சு அகாடியாவின் தலைநகர் போர்ட்-ரோயல் பிரித்தானியப் படைகளிடம் வீழ்ந்தது.
1792ல் வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
1821ல் மெக்சிக்கோ பேரரசு விடுதலையை பகிரங்கமாக அறிவித்தது.
1881ல் இன்றைய எபிரேய மொழியின் முதலாவது அறியப்பட்ட உரையாடல் எலியேசர் பெந்யெகுடாவினால் பதியப்பட்டது.
1884ல் அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக இலண்டனில் உள்ள கிறீனிச்சு தெரிவு செய்யப்பட்டது.
1885ல் ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1892ல் புகைப்படங்கள் வாயிலாக முதலாவது வால்வெள்ளியை எட்வர்ட் பார்னார்டு கண்டறிந்தார்.
1917ல் யாழ்ப்பாணம் மாநகராட்சிப் பகுதி மத்திய, மேற்கு, கிழக்கு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.
1923ல் துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் இலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.
1943ல் இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் புதிய அரசு நேசப் படைகளுடன் இணைந்து செருமனியுடன் போர் தொடுத்தது.
1944ல் இரண்டாம் உலகப் போர்: லாத்வியாவின் தலைநகர் ரீகா சோவியத்தின் செஞ்சேனையினால் கைப்பற்றப்பட்டது.
1953ல் டட்லி சேனநாயக்கா இலங்கைப் பிரதமர் பதவியைத் துறந்தார்.
1972ல் உருகுவை வான்படை விமானம் ஒன்று அந்தீசு மலைகளில் மோதியது. டிசம்பர் 23 ஆம் நாள் 45 பேர்களில் 16 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.
1972ல் மாஸ்கோவுக்கு வெளியே ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 174 பேர் உயிரிழந்தனர்.
1976ல் பொலிவியாவைச் சேர்ந்த போயிங் 707 சரக்கு விமானம் ஒன்று சாண்டா குரூசு நகரில் வீழ்ந்ததில் தரையில் நின்ற 97 பேர் (பெரும்பாலானோர் குழந்தைகள்) உட்பட 100 கொல்லப்பட்டனர்.
1990ல் லெபனான் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. சிரியப் படைகள் லெபனானின் பல பகுதிகளைத் தாக்கின. அரசுத்தலைவர் மாளிகையில் இருந்து ஜெனரல் மைக்கேல் அவுன் வெளியேற்றப்பட்டார்.
1992ல் அன்டோனொவ் விமானம் ஒன்று உக்ரைன், கீவ் நகருக்கருகில் வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.
2010ல் சிலியில் நிலக்கரிச் சுரங்கம் ஏற்பட்ட விபத்தினால் 69 நாட்களாக சுரங்கத்தில் சிக்கிய அனைத்து 33 சுரங்கத் தொழிலாளரும் மீட்கப்பட்டனர்.
2013ல் மத்தியப் பிரதேசம், ததியா மாவட்டத்தில் ரத்தன்கார் மாதா கோவிலில் நவராத்திரி நாளில் பாலம் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் 115 பேர் உயிரிழந்தனர், 110 பேர் காயமடைந்தனர்.
2014ல் இலங்கையில் 1990 முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வரையான யாழ்தேவி தொடருந்து சேவை, 24 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது.
2016ல் மாலைத்தீவுகள் பொதுநலவாயத்தில் இருந்து வெளியேறுவதாக அற்வித்தது.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 13-10 | October 13
1884ல் இலங்கையில் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தியவரும் அரசியல்வாதியுமான சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா பிறந்த நாள். (இறப்பு-1969)
1908ல் புதுச்சேரி கவிஞரும் இதழாளரும் நாடக ஆசிரியருமான புதுவை சிவம் பிறந்த நாள். (இறப்பு-1989)
1910ல் இந்திய ஆன்மிகவாதியான ஹரிவான்ஷ் லால் பூன்ஜா பிறந்த நாள். (இறப்பு-1997)
1911ல் இலங்கை அரசியல்வாதியான கு. வன்னியசிங்கம் பிறந்த நாள். (இறப்பு-1959)
1911ல் இந்திய நடிகரும் பாடகருமான அசோக் குமார் பிறந்த நாள். (இறப்பு-2001)
1925ல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரான மார்கரெட் தாட்சர் பிறந்த நாள். (இறப்பு-2013)
1931ல் ஈழத்து எழுத்தாளரான காவலூர் ராஜதுரை பிறந்த நாள். (இறப்பு-2014)
1936ல் இந்திய வீணைக் கலைஞரும் இசையமைப்பாளருமான சிட்டி பாபு பிறந்த நாள். (இறப்பு-1996)
1936ல் மார்க்சியவாதியான பொ. வே. பக்தவச்சலம் பிறந்த நாள். (இறப்பு-2007)
1937ல் இலங்கை அரசியல்வாதியான ஏ. எச். எம். பௌசி பிறந்த நாள்.
1947ல் இசுரேலியத் திரைப்பட தயாரிப்பாளரான அவி லேர்னர் பிறந்த நாள்.
1948ல் பாக்கித்தானியப் பாடகரும் இசைக் கலைஞருமான நுசுரத் பதே அலி கான் பிறந்த நாள். (இறப்பு-1997)
1956ல் அமெரிக்கத் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான கிறிசு கார்ட்டர் பிறந்த நாள்.
1982ல் ஆத்திரேலிய நீச்சல் வீரரான இயன் தோப் பிறந்த நாள்.
1990ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான பூஜா ஹெக்டே பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 13-10 | October 13
54ல் உரோமைப் பேரரசரான குளோடியசு இறப்பு நாள். (பிறப்பு-கிமு 10)
1240ல் தில்லி சுல்தானான ரஸியா பேகம் இறப்பு நாள். (பிறப்பு-1205)
1695ல் சென்னையின் முதல் கிறித்தவ மறைபணியாளரான எப்ரேம் தெ நேவேர் இறப்பு நாள். (பிறப்பு-1603)
1911ல் ஐரிய-இந்திய சமூகப் பணியாளரான சகோதரி நிவேதிதை இறப்பு நாள். (பிறப்பு-1867)
1953ல் சோவியத்-உருசிய வானியலாளரான செர்கேய் இவனோவிச் பெலியாவ்சுகி இறப்பு நாள். (பிறப்பு-1883)
1956ல் தமிழக செயற்பாட்டாளரும் போராளியுமான சங்கரலிங்கனார் இறப்பு நாள். (பிறப்பு-
1987ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளரும் பொறியியலாளருமான வால்டர் பிராட்டன் இறப்பு நாள். (பிறப்பு-1902)
1987ல் இந்தியப் பாடகரும் நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான கிஷோர் குமார் இறப்பு நாள். (பிறப்பு-1929)
2000ல் தமிழக வயலின் இசைக்கலைஞரான கண்டதேவி எஸ். அழகிரிசாமி இறப்பு நாள். (பிறப்பு-1925)
2015ல் இலங்கை மலையக அரசியல்வாதியும் தொழிற்சங்கத் தலைவருமான கருப்பையா வேலாயுதம் இறப்பு நாள். (பிறப்பு-1950)
2016ல் தாய்லாந்து மன்னரான 9-ம் இராமா இறப்பு நாள். (பிறப்பு-1927)
2017ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான பி. எஸ். சூசைதாசன் இறப்பு நாள். (பிறப்பு-1934)
2018ல் இந்துத்தானி இசைக்கலைஞரான அன்னபூர்ணா தேவி இறப்பு நாள். (பிறப்பு-1927)
2018ல் இந்தியத் தன்னார்வத் தொண்டரான ஜாக்கின் அற்புதம் இறப்பு நாள். (பிறப்பு-1947)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan