October 07 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 07

0

Today Special Historical Events In Tamil | 07-10 | October 07

October 07 Today Special | October 07 What Happened Today In History. October 07 Today Whose Birthday (born) | October -07th Important Famous Deaths In History On This Day 07/10 | Today Events In History October-07th | Today Important Incident In History | ஐப்பசி 07 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 07-10 | ஐப்பசி மாதம் 07ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 07.10 Varalatril Indru Nadanthathu Enna| October 07 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 07/10 | Famous People Born Today October 07 | Famous People died Today 07-10.

  • Today Special in Tamil 07-10
  • Today Events in Tamil 07-10
  • Famous People Born Today 07-10
  • Famous People died Today 07-10
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 07-10 | October 07

    செபமாலை அன்னை விழாவாக கொண்டாடப்படுகிறது.
    ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது. (லாவோஸ்)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 07-10 | October 07

    கிமு 3761ல் எபிரேய நாட்காட்டியின் படி முதலாவது ஆண்டு.
    1403ல் வெனீசிய-செனோவப் போர்கள்: செனோவா கடற்படை பிரெஞ்சு அதிகாரியின் தலைமையில் வெனிசியப் படைகளைத் தோற்கடித்தன.
    1477ல் உப்சாலா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
    1513ல் லா மொட்டா சமரில் எசுப்பானியா வெனிசை வென்றது.
    1571ல் லெப்பாண்டோ சமரில் திருத்தந்தை ஐந்தாம் பயசின் திருச்சபைப் படைகளிடம் உதுமானிய படைகள் முதலாவது தோல்வியைச் சந்தித்தன.
    1763ல் ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் வட அமெரிக்காவின் வடக்கு மற்றும் மேற்கு பழங்குடிகளின் பிரதேசங்களை வெள்ளையினக் குடியேற்றங்களுக்கு வழங்க உத்தரவிட்டார்.
    1777ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியருக்கு எதிரான இரண்டாவது சரட்டோகா போரில் அமெரிக்கப் படைகள் வென்றன.
    1806ல் ஆங்கிலேயர் ரால்ஃப் வெட்ஜ்வூட் கரிமத்தாளுக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்
    1826ல் ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது தனியார் தொடருந்து சேவை “கிரனைட்டு இரயில்வே” தொடங்கப்பட்டது.
    1840ல் இரண்டாம் வில்லியம் நெதர்லாந்தின் மன்னராக முடிசூடினார்.
    1858ல் பிரித்தானிய அரசினால் கைது செய்யப்பட்ட கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் சா சஃபார் இரங்கூனிற்கு நாடு கடத்தப்பட்டார்.
    1864ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: பிரேசிலின் கடற்பகுதியில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல் அமெரிக்கக் கூட்டமைப்பின் கப்பல் ஒன்றைக் கைப்பற்றியது
    1879ல் செருமனியும், ஆத்திரியா-அங்கேரியும் கூட்டமைப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
    1919ல் நெதர்லாந்தின் கே.எல்.எம் விமானசேவை ஆரம்பிக்கப்பட்டது.
    1933ல் ஏர் பிரான்சு நிறுவனம் ஆரம்பபிக்கப்பட்டது.
    1940ல் இரண்டாம் உலகப் போர்: மெக்கலம் குறிப்பு சப்பானியரை அமெரிக்கா மீது தாக்குதலை நடத்தத் தூண்டுவதன் மூலம் ஐக்கிய அமெரிக்காவை ஐரோப்பாவில் போரில் ஈடுபடுத்த முன்மொழிந்தது.
    1944ல் இரண்டாம் உலகப் போர்: அவுசுவிட்சு வதை முகாமில் இடம்பெற்ற கிளர்ச்சியில் யூதக் கைதிகள் அங்கிருந்த சவக்காலையைத் தீயிட்டுக் கொளுத்தினர்.
    1949ல் கம்யூனிச செருமன் மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.
    1950ல் அன்னை தெரேசா பிறரன்பின் பணியாளர்கள் சபையை நிறுவினார்.
    1950ல் சீனா திபெத்து மீதான தாக்குதலை ஆரம்பித்தது.
    1958ல் பாக்கித்தான் அரசுத்தலைவர் இசுக்காண்டர் மிர்சா நாட்டின் அரசியலமைப்பைக் கலைத்து இராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
    1959ல் சோவியத் விண்கலம் லூனா 3 சந்திரனின் அதி தூரத்தியப் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது.
    1977ல் நான்காவது சோவியத் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
    1985ல் புவேர்ட்டோ ரிக்கோவில் வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 200 பேர் வரை உயிரிழந்தனர்.
    1987ல் சீக்கிய தேசியவாதிகள் இந்தியாவில் இருந்து காலித்தானின் விடுதலையை அறிவித்தனர். ஆனாலும், எந்நாடுகளும் இதனை அங்கீகரிக்கவில்லை.
    2000ல் இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: ஹிஸ்புல்லா போராளிகள் மூன்று இசுரேலியப் பாதுகாப்புப் படையினரை கைப்பற்றினர்.
    2001ல் ஆப்கானித்தான் மீது அமெரிக்கா மூன்று முறை விமானத்தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகளின் உதவியுடன் ஆரம்பமாகியது.
    2004ல் கம்போடிய மன்னர் நொரடோம் சீயனூக் பதவியில் இருந்து விலகினார்.
    2007ல் கொழும்பில் முதல் நாள் கடத்தப்பட்ட யாழ் பல்கலைக்கழக கணிதப் பேராசிரியர் பொ. மகினனின் சிதைந்த உடல் வெள்ளவத்தையில் கண்டுபிடிக்கப்பட்டது.
    2008ல் சிறுகோள் 2008 டிசி3 சூடானுக்கு மேலாக 37 கிமீ உயரத்தில் வெடித்தது.
    2016ல் மேத்யூ சூறாவளியின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்தது.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 07-10 | October 07

    1900ல் செருமானிய இராணுவத் தளபதியும் அரசியல்வாதியுமான ஐன்ரிக் இம்லர் பிறந்த நாள். (இறப்பு-1945)
    1906ல் ஈழத்துக் கவிஞரான‌ மு. செல்லையா பிறந்த நாள். (இறப்பு-1966)
    1906ல் தமிழகத் தமிழறிஞரும் பேராசிரியரும் வழக்கறிஞருமான‌ கோ. சுப்பிரமணியன் பிறந்த நாள். (இறப்பு-1971)
    1914ல் இந்தியப் பாடகியும் நடிகையுமான‌ பேகம் அக்தர் பிறந்த நாள். (இறப்பு-1974)
    1920ல் தமிழகக் கவிஞரான‌ முடியரசன் பிறந்த நாள். (இறப்பு-1998)
    1931ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க ஆயரான‌ டெசுமான்ட் டுட்டு பிறந்த நாள்.
    1935ல் ஆத்திரேலிய எழுத்தாளரான‌ தாமஸ் கெநீலி பிறந்த நாள்.
    1937ல் தமிழறிஞரும் நூலாசிரியருமான‌ அ. தட்சிணாமூர்த்தி பிறந்த நாள்.
    1938ல் தமிழகக் கவிஞரான‌ ஞானக்கூத்தன் பிறந்த நாள். (இறப்பு-2016)
    1938ல் தமிழக அரசியல்வாதியான‌ புளியங்குடி க.பழனிச்சாமி பிறந்த நாள். (இறப்பு-2007)
    1945ல் உருசிய வானியற்பியலாளரான‌ நிக்கோலாய் சக்கூரா பிறந்த நாள்.
    1952ல் உருசியாவின் 4வது அரசுத்தலைவரான‌ விளாதிமிர் பூட்டின் பிறந்த நாள்.
    1978ல் இந்தியத் துடுப்பாளரான‌ ஜாகிர் கான் பிறந்த நாள்.
    1979ல் கனடிய நடிகரான‌ சான் ஆஷ்மோர் பிறந்த நாள்.
    1979ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான‌ நரேன் பிறந்த நாள்.
    1981ல் தென்னிந்திய வீணைக் கலைஞரும் பின்னணிப் பாடகியுமான‌ வைக்கம் விஜயலட்சுமி பிறந்த நாள்.
    1983ல் தென்னிந்திய நடிகையான‌ பூஜா காந்தி பிறந்த நாள்.
    1984ல் பாக்கித்தானியத் துடுப்பாளரான‌ சல்மான் பட் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 07-10 | October 07

    336ல் திருத்தந்தையான‌ மாற்கு இறப்பு நாள்.
    1708ல் 10வது சீக்கிய குருவான‌ குரு கோவிந்த் சிங் இறப்பு நாள். (பிறப்பு-1666)
    1813ல் சுவீடிய வேதியியலாளரான‌ பீட்டர் சாக்கப் இச்செலம் இறப்பு நாள். (பிறப்பு-1746)
    1849ல் அமெரிக்க எழுத்தாளரான‌ எட்கர் ஆலன் போ இறப்பு நாள். (பிறப்பு-1809)
    1919ல் ஆத்திரேலியாவின் 2வது பிரதமரான‌ ஆல்பிரெட் டிக்கன் இறப்பு நாள். (பிறப்பு-1856)
    1984ல் இலங்கைக் கவிஞரான‌ அப்துல் காதர் லெப்பை இறப்பு நாள். (பிறப்பு-1913)
    2006ல் அமெரிக்க-உருசிய ஊடகவியலாளரும் செயற்பாட்டாளருமான‌ அன்னா பலிட்கோவ்ஸ்கயா இறப்பு நாள். (பிறப்பு-1958)
    2010ல் தமிழக அரசியல்வாதியான‌ அ. வெங்கடாசலம் இறப்பு நாள். (பிறப்பு-1955)
    2012ல் இந்திய இயக்குநரான‌ ஏ. ஜெகந்நாதன் இறப்பு நாள்.
    2014ல் போலந்து-செருமானிய எழுத்தாளரும் நாடகாசிரியருமான‌ சீக்பிரீட் லென்சு இறப்பு நாள். (பிறப்பு-1926)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleOctober 06 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 06
    Next articleOctober 08 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 08