October 04 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 04

0

Today Special Historical Events In Tamil | 04-10 | October 04

October 04 Today Special | October 04 What Happened Today In History. October 04 Today Whose Birthday (born) | October -04th Important Famous Deaths In History On This Day 04/10 | Today Events In History October-04th | Today Important Incident In History | ஐப்பசி 04 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 04-10 | ஐப்பசி மாதம் 04ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 04.10 Varalatril Indru Nadanthathu Enna| October 04 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 04/10 | Famous People Born Today October 04 | Famous People died Today 04-10.

  • Today Special in Tamil 04-10
  • Today Events in Tamil 04-10
  • Famous People Born Today 04-10
  • Famous People died Today 04-10
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 04-10 | October 04

    விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (லெசோத்தோ, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1966)
    உலக விலங்கு நாளாக‌ கொண்டாடப்படுகிறது.
    உலக விண்வெளி வாரம் ஆரம்ப நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (அக். 4 – 10)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 04-10 | October 04

    23ல் சீனத் தலைநகர் சாங்கான் நகரை கிளர்ச்சிவாதிகள் கைப்பற்றி சூறையாடினர். இரண்டு நாட்களின் பின்னர் சீனப் பேரரசர் வாங் மாங் கொல்லப்பட்டார்.
    1227ல் மொரோக்கோ கலீபா அப்தல்லா அல்-அடில் படுகொலை செய்யப்பட்டார்.
    1302ல் பைசாந்திய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது.
    1511ல் பிரான்சுக்கு எதிராக அரகொன், திருத்தந்தை நாடுகள், வெனிசு ஆகியன இணைந்து புனித முன்னணியை உருவாக்கின.
    1537ல் மெத்தியூ விவிலியம் எனப்படும் முதலாவது முழுமையான ஆங்கில விவிலிய நூல் அச்சிடப்பட்டது.
    1582ல் கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக அக்டோபர் 15 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
    1636ல் முப்பதாண்டுப் போர்: சுவீடன் இராணுவம் புனித உரோமைப் பேரரசு, சாக்சனி இராணுவத்தை விட்சுடொக் சமரில் தோற்கடித்தது.
    1777ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: பிலடெல்பியாவின் ஜெர்மண்டவுன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஜார்ஜ் வாசிங்டனின் படைகளை வில்லியம் ரோவின் பிரித்தானியப் படைகள் தோற்கடித்தன.
    1824ல் மெக்சிகோ குடியரசு ஆகியது.
    1830ல் பெல்ஜியம் நெதர்லாந்து நாட்டில் இருந்து பிரிந்து தனிநாடாகியது.
    1853ல் கிரிமியப் போர்: உதுமானியப் பேரரசு உருசியா மீது போர் தொடுத்தது.
    1883ல் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் விரைவுத் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
    1918ல் அமெரிக்காவில் நியூ செர்சியில் ஷெல் கம்பனியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
    1943ல் இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா சொலமன் தீவுகளைக் கைப்பற்றியது.
    1957ல் பண்டா – செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக சிங்கள இனவாதிகள் கண்டிக்கு நடைப்பயணம் நடத்தினர்.
    1957ல் புவியைச் சுற்றி வந்த முதலாவது செயற்கைக்கோள் என்ற சாதனையை சோவியத் ஒன்றியத்தின் இசுப்புட்னிக் 1 ஏற்படுத்தியது.
    1959ல் லூனா 3 விண்ணுக்கு ஏவப்பட்டது. இது சந்திரனைச் சுற்றி வந்து அதன் தொலைவுப் படத்தை பூமிக்கு அனுப்பியது.
    1960ல் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் விமானம் ஒன்று பறவையினால் தாக்கப்பட்டதை அடுத்து வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 72 பேரில் 62 பேர் உயிரிழந்தனர்.
    1963ல் கியூபா, எயிட்டி ஆகிய நாடுகளைத் சூறாவளி புளோரா தாக்கியதில் 6,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
    1966ல் பசூட்டோலாந்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று லெசோத்தோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.
    1985ல் கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை நிறுவப்பட்டது.
    1992ல் மொசாம்பிக்கின் 16 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
    1992ல் ஆம்ஸ்டர்டாம் நகரில் குடியிருப்பு மனைகள் மீது விமானம் ஒன்று மோதியதில் தரையில் இருந்த 39 பேர் உட்பட 43 பேர் உயிரிழந்தனர்.
    1993ல் உருசியத் தலைவர் போரிசு யெல்ட்சினுக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு வெளியே பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. தாங்கிகள் நாடாளுமன்றத்தின் மீது குண்டுகளை வீசின.
    1997ல் ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றில் இரண்டாவது மிகப் பெரிய வங்கிக் கொள்ளை வட கரொலைனாவில் இடம்பெற்றது. 17.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இவற்றில் 95 விழுக்காடு பணம் திரும்பப் பெறப்பட்டது.
    2001ல் சைபீரியாவில் விமானம் ஒன்றை உக்ரைனின் ஏவுகணை தாக்கியதில் விமானம் கருங் கடலில் வீழ்ந்து 78 பேர் உயிரிழந்தனர்.
    2003ல் இசுரேலில் உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
    2006ல் விக்கிலீக்ஸ் ஆரம்பிக்கப்பட்டது.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 04-10 | October 04

    1542ல் இத்தாலியப் புனிதரான‌ ராபர்ட் பெல்லார்மின் பிறந்த நாள். (இறப்பு-1621)
    1840ல் செருமானிய-உருசிய வானியலாளரான‌ விக்தர் நோர் பிறந்த நாள். (இறப்பு-1919)
    1884ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான‌ சுப்பிரமணிய சிவா பிறந்த நாள். (இறப்பு-1925)
    1895ல் அமெரிக்கத் திரைப்பட நடிகரும் இயக்குநருமான‌ பஸ்டர் கீடன் பிறந்த நாள். (இறப்பு-1966)
    1904ல் இந்திய விடுதலைப் போராட்ட தியாகியான‌ திருப்பூர் குமரன் பிறந்த நாள். (இறப்பு-1932)
    1911ல் இலங்கை கல்வியாளரும் அரசியல்வாதியுமான‌ ஏ. எம். ஏ. அசீஸ் பிறந்த நாள். (இறப்பு-1973)
    1916ல் நோபல் பரிசு பெற்ற உருசிய இயற்பியலாளரான‌ வித்தாலி கீன்ஸ்புர்க் பிறந்த நாள். (இறப்பு-2009)
    1918ல் நோபல் பரிசு பெற்ற சப்பானிய வேதியியலாளரான‌ கெனிச்சி புகுயி பிறந்த நாள். (இறப்பு-1998)
    1923ல் அமெரிக்க நடிகரன‌ சார்ள்டன் ஹெஸ்டன் பிறந்த நாள். (இறப்பு-2008)
    1926ல் மலேசிய அரசியல்வாதியான‌ வி. மாணிக்கவாசகம் பிறந்த நாள்.
    1926ல் தமிழக அரசியல்வாதியான‌ அப்துல் சமது பிறந்த நாள். (இறப்பு-1999)
    1928ல் செருமானிய-அமெரிக்க ஊடகவியலாளரான‌ ஆல்வின் டாப்லர் பிறந்த நாள். (இறப்பு-2016)
    1930ல் இந்தியப் பொருளியலாளரான‌ அனிருத் லால் நகர் பிறந்த நாள். (இறப்பு-2014)
    1931ல் தென்னாப்பிரிக்கத் துடுப்பாளரான‌ பேசில் ட’ஒலிவேரா பிறந்த நாள். (இறப்பு-2011)
    1936ல் ஆத்திரியக் கட்டடக் கலைஞரான கிறிஸ்தோபர் அலெக்சாண்டர் பிறந்த நாள்.
    1938ல் நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து வேதியியலாளரான‌ குர்த் வியூத்ரிச் பிறந்த நாள்.
    1941ல் இந்திய அரசியல்வாதியான‌ மணிசங்கர் அய்யர் பிறந்த நாள்.
    1942ல் இலங்கையின் மேடை மற்றும் வானொலி நடிகரான ரி. ராஜகோபால் பிறந்த நாள்.
    1975ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ சங்கவி பிறந்த நாள்.
    1989ல் அமெரிக்க நடிகையான‌ டகோட்டா ஜோன்சன் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 04-10 | October 04

    1226ல் கத்தோலிக்க கிறிஸ்தவத் திருத்தொண்டரும், பிரான்சிஸ்கு சபை என்னும் கிறிஸ்தவ துறவற அமைப்பை நிறுவியவருமான‌அசிசியின் பிரான்சிசு இறப்பு நாள். (பிறப்பு-1182)
    1582ல் எசுப்பானியப் புனிதரான‌ அவிலாவின் புனித தெரேசா இறப்பு நாள். (பிறப்பு-1515)
    1669ல் டச்சு ஓவியரான‌ ரெம்பிரான்ட் இறப்பு நாள். (பிறப்பு-1606)
    1904ல் விடுதலைச் சிலையை வடிவமைத்த பிரான்சியச் சிற்பியான‌ பிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி இறப்பு நாள். (பிறப்பு-1834)
    1904ல் ஆத்திரிய வேதியியலாளரான‌ கார்ல் பேயர் இறப்பு நாள். (பிறப்பு-1847)
    1947ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளரான‌ மேக்ஸ் பிளாங்க் இறப்பு நாள். (பிறப்பு-1858)
    1972ல் இலங்கை தொல்லியலாளரான‌ கல்வெட்டியலாளரான‌ சேனரத் பரணவிதான இறப்பு நாள். (பிறப்பு-1896)
    1982ல் இந்தியாவின் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவரான‌ கோபால் சுவரூப் பதக் இறப்பு நாள். (பிறப்பு-1896)
    1986ல் இந்திய சுதந்திர இயக்க செயற்பாட்டாளரும் பெண்ணியவாதியும் எழுத்தாளருமான‌ சரளாதேவி இறப்பு நாள். (பிறப்பு-1904)
    1992ல் இலங்கை நீதிபதியான‌ எர்பர்ட் தம்பையா இறப்பு நாள். (பிறப்பு-1926)
    1998ல் தமிழகத் தமிழறிஞரும் திறனாய்வாளருமான‌ சொற்பொழிவாளரும் அரசியற் செயற்பாட்டாளரும் தமிழ்த் தேசியவாதியுமான‌ சாலை இளந்திரையன் இறப்பு நாள். (பிறப்பு-1930)
    2009ல் கேரளப் பகுத்தறிவாளரான‌ பசவ பிரேமானந்த் இறப்பு நாள். (பிறப்பு-1930)
    2011ல் அமெரிக்க கணினி அறிவியலாளரும் உணரறிவியல் அறிஞருமான‌ ஜோன் மெக்கார்த்தி இறப்பு நாள். (பிறப்பு-1927)
    2013ல் வியட்நாமிய இராணுவத் தளபதியும் அரசியல்வாதியுமான‌ வோ இங்குயென் கியாப் இறப்பு நாள். (பிறப்பு-1911)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleOctober 03 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 03
    Next articleOctober 05 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 05