October 03 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 03

0

Today Special Historical Events In Tamil | 03-10 | October 03

October 03 Today Special | October 03 What Happened Today In History. October 03 Today Whose Birthday (born) | October -03rd Important Famous Deaths In History On This Day 03/10 | Today Events In History October-03rd | Today Important Incident In History | ஐப்பசி 03 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 03-10 | ஐப்பசி மாதம் 03ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 03.10 Varalatril Indru Nadanthathu Enna| October 03 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 03/10 | Famous People Born Today October 03 | Famous People died Today 03-10.

  • Today Special in Tamil 03-10
  • Today Events in Tamil 03-10
  • Famous People Born Today 03-10
  • Famous People died Today 03-10
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 03-10 | October 03

    மீளிணைவு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (செருமனி)
    விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (ஈராக், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1932)
    தேசிய உருவாக்க நாளாக கொண்டாடப்படுகிறது. (தென் கொரியா)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 03-10 | October 03

    கிமு 52ல் கவுல்சு தலைவர் வெர்சிஞ்செடோர்க்சு உரோமர்களிடம் சரணடைந்தார். யூலியசு சீசரின் அலேசியா மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது.
    கிமு 42ல் மார்க் அந்தோனியும், ஒக்டேவியனும் சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர்.
    382ல் உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் கோத்துகளுடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்து, அவர்களை பால்கன்களில் குடியேற்றினார்.
    1392ல் ஏழாம் முகம்மது கிரனாதாவின் 12-வது சுல்தானாக முடி சூடினார்.
    1739ல் உருசிய-துருக்கிப் போர் (1736–1739) முடிவில் உருசியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
    1789ல் சியார்ச் வாசிங்டன் அந்த ஆண்டின் நன்றியறிதல் நாளை அறிவித்தார்.
    1833ல் இலங்கையில் மாவட்ட நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
    1863ல் நவம்பர் மாதத்தின் கடைசி வியாழக்கிழமையை நன்றியறிதல் நாளாக அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் அறிவித்தார்.
    1908ல் பிராவ்தா செய்திப்பத்திரிகை லியோன் திரொட்ஸ்கியினாலும் அவரது சகாக்களினாலும் வியென்னாவில் வெளியிடப்பட்டது.
    1912ல் அமெரிக்கப் படைகள் நிக்கராகுவாவின் கிளர்ச்சியாளர்களை வென்றன.
    1918ல் மூன்றாம் போரிசு பல்கேரியாவின் மன்னனாக முடிசூடினான்.
    1929ல் செர்பிய, குரோவாசிய, சுலோவீனிய இராச்சியம் இணைக்கப்பட்டு அதற்கு யுகோசுலாவியா எனப் பெயரிடப்பட்டது.
    1932ல் ஈராக், பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
    1935ல் இத்தாலி எதியோப்பியாவினுள் ஊடுருவியது. இரண்டாவது இத்தாலிய-அபிசீனியப் போர் ஆரம்பமானது.
    1942ல் செருமனியில் இருந்து ஏ4-ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது 85 கிமீ உயரத்துக்கு சென்றது.
    1943ல் இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் கிரேக்கத்தில் லிஞ்சியாதெசு கிராமத்தில் 92 பொதுமக்களைக் கொன்றனர்.
    1952ல் ஐக்கிய இராச்சியம் வெற்றிகரமாக அணுவாயுதச் சோதனையை நடத்தியது.
    1962ல் சிக்மா 7 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி சீரா ஒன்பது மணி நேரத்தில் ஆறு தடவைகள் பூமியைச் சுற்றினார்.
    1963ல் ஒண்டுராசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு இராணுவ ஆட்சி ஆரம்பமானது.
    1978ல் பின்லாந்தில் வான்படை வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதைல் பயணம் செய்த அனைத்து 15 பேரும் உயிரிழந்தனர்.
    1981ல் வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.
    1985ல் அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.
    1986ல் டாஸ்க் என்ற மீக்கடத்து சுழற்சியலைவி கனடாவில் சாக் ரிவர் ஆய்வுகூடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
    1989ல் பனாமாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டு, புரட்சியில் ஈடுபட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
    1990ல் செருமானிய மீளிணைவு: செருமானிய சனநாயகக் குடியரசு முடிவுக்கு வந்தது. கிழக்கும் மேற்கும் செருமனி என்ற பெயரில் இணைந்தன.
    1993ல் சோமாலியாவின் இராணுவத் தலைவர் முகம்மது பரா ஐடிடு என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 அமெரிக்கப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர்.
    2001ல் வங்காளதேசத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் காலிதா சியாவின் வங்காளதேசக் தேசியக் கட்சி வெற்றி பெற்றது.
    2007ல் மன்னார் மாவட்டம், விளாத்திக்குளம், முள்ளிக்குளம் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட இலங்கை இராணுவத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.
    2010ல் 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் தில்லி நகரில் ஆரம்பமாயின.
    2013ல் இத்தாலியின் லம்பெதூசா தீவில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 134 பேர் உயிரிழந்தனர்.
    2015ல் ஆப்கானித்தானில் குண்டூசு மருத்துவமனை மீது வான் தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 03-10 | October 03

    1846ல் உருசிய வானியலாளரும் கணிதவியலாளருமான‌ பிளத்தோன் போரெத்சுகி பிறந்த நாள். (இறப்பு-1907)
    1849ல் உருசிய வானியலாளரான‌ திமித்ரி துபியாகோ பிறந்த நாள். (இறப்பு-1818)
    1854ல் உருசிய வானியலாளரான‌ எர்மேன் சுத்ரூவ பிறந்த நாள். (இறப்பு-1920)
    1917ல் இலங்கை இடதுசாரி அரசியல்வாதியான‌ பீட்டர் கெனமன் பிறந்த நாள். (இறப்பு-1997)
    1919ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொறியியலாளரான‌ ஜேம்ஸ் எம். புக்கானன் பிறந்த நாள். (இறப்பு-2013)
    1930ல் அமெரிக்க இயற்பியலாளரான‌ மார்வின் டி. கிரார்டோ பிறந்த நாள். (இறப்பு-2015)
    1932ல் தமிழக அரசியல்வாதியான‌ வி. பி. இராமன் பிறந்த நாள். (இறப்பு-1991)
    1940ல் மலேசிய எழுத்தாளரான‌ முரு. சொ. நாச்சியப்பன் பிறந்த நாள்.
    1943ல் இந்திய எழுத்தாளரான‌ குருசரண் தாஸ் பிறந்த நாள்.
    1945ல் இந்திய எழுத்தாளரான‌ சேடபட்டி இரா. முத்தையா பிறந்த நாள்.
    1954ல் தமிழ்த் திரைப்பட நடிகரான‌ சத்யராஜ் பிறந்த நாள்.
    1957ல் உலக வணிக அமைப்பின் 6வது தலைவரான‌ இராபர்ட்டோ செவெதோ பிறந்த நாள்.
    1985ல் இந்திய இசையமைப்பாளரான‌ அரோள் கரோலி பிறந்த நாள்.
    1988ல் சுவீடிய நடிகையான‌ அலிசியா விகண்டேர் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 03-10 | October 03

    1226ல் இத்தாலியப் புனிதரான‌ அசிசியின் பிரான்சிசு இறப்பு நாள். (பிறப்பு-1181)
    1867ல் தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த அமெரிக்கரான‌ எலியாஸ் ஓவே இறப்பு நாள். (பிறப்பு-1819)
    1896ல் ஆங்கிலேயக் கவிஞரான‌ வில்லியம் மோரிஸ் இறப்பு நாள். (பிறப்பு-1834)
    1923ல் இந்திய மருத்துவரான‌ கடம்பினி கங்கூலி இறப்பு நாள். (பிறப்பு-1861)
    1932ல் செருமானிய வானியலாளரான‌ மேக்சு வுல்ஃப் இறப்பு நாள். (பிறப்பு-1863)
    1954ல் உருசிய வானியலாளரான‌ வேரா பெதரோவ்னா கசே இறப்பு நாள். (பிறப்பு-1899)
    1962ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான‌ கந்தையா கனகரத்தினம் இறப்பு நாள். (பிறப்பு-1892)
    1966ல் சுவீடிய இயற்பியலாளரான‌ ரோல்ப் மாக்சிமில்லன் சீவெர்ட் இறப்பு நாள். (பிறப்பு-1896)
    1995ல் தமிழக எழுத்தாளரும் அரசியல்வாதியுமான‌ ம. பொ. சிவஞானம் இறப்பு நாள். (பிறப்பு-1906)
    1999ல் தமிழக எழுத்தாளரான‌ மாரி. அறவாழி இறப்பு நாள். (பிறப்பு-1935)
    1999ல் சப்பானியத் தொழிலதிபரான‌ அக்கியோ மொறிட்டா இறப்பு நாள். (பிறப்பு-1921)
    2009ல் இலங்கையின் மலையக ஓவியரான‌ எஸ். இராமச்சந்திரன் இறப்பு நாள். (பிறப்பு-1942)
    2011ல் ஈழத்துத் தமிழறிஞரும் பேராசிரியருமான‌ ஆ. கந்தையா இறப்பு நாள். (பிறப்பு-1928)
    2015ல் இலங்கை அரசியல்வாதியான‌ ஏ. ஆர். எம். அப்துல் காதர் இறப்பு நாள். (பிறப்பு-1936)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleஇன்றைய ராசி பலன் 15.09.2022 Today Rasi Palan 15-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
    Next articleOctober 04 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 04