Today Special Historical Events In Tamil | 22-11 | November 22
November 22 Today Special | November 22 What Happened Today In History. November 22 Today Whose Birthday (born) | November-22nd Important Famous Deaths In History On This Day 22/11 | Today Events In History November 22nd | Today Important Incident In History | கார்த்திகை 22 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 22-11 | கார்த்திகை மாதம் 22ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 22.11 Varalatril Indru Nadanthathu Enna| November 22 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 22/11 | Famous People Born Today 22.11 | Famous People died Today 22-11.
Today Special in Tamil 22-11
Today Events in Tamil 22-11
Famous People Born Today 22-11
Famous People died Today 22-11
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 22-11 | November 22
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (லெபனான், பிரான்சிடம் இருந்து 1943)
ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது. (கோஸ்ட்டா ரிக்கா)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 22-11 | November 22
498ல் திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுசு இறந்ததை அடுத்து, சிம்மாக்கசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
1307ல் ஐரோப்பாவில் உள்ள அனைத்து புனித வீரர்களினதும் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய திருத்தந்தை ஐந்தாம் கிளெமெண்டு ஆணையிட்டார்.
1635ல் சீனக் குடியரசின் இடச்சுக் குடியேற்றப் படைகள் தைவானிய பழங்குடிக் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி தீவின் மத்திய தெற்குப் பகுதிகளத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.
1718ல் அமெரிக்காவின் வட கரொலைனாவில், பிரித்தானியக் கடல்கொள்ளைக்காரன் பிளாக்பியர்ட் அரச கடற்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டான்.
1873ல் பிரெஞ்சு நீராவிக் கப்பல் இசுக்காட்டியக் கப்பலுடன் அத்திலாந்திக் பெருங்கடலில் மோதி மூழ்கியதில் 226 உயிரிழந்தனர்.
1908ல் அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
1922ல் துட்டன்காமுன் என்ற எகிப்திய பாரோ வின் 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமாதி கண்டுபிடிக்கப்பட்டது.
1935ல் பசிபிக் பெருங்கடலைத் தாண்டி முதன்முறையாக விமானத் தபால்களை விநியோகிக்கும் பணியில் சைனா கிளிப்பர் என்ற விமானம் கலிபோர்னியாவை விட்டுப் புறப்பட்டது. (இவ்விமானம் நவம்பர் 29 இல் 110,000 தபால்களுடன் மணிலாவை அடைந்தது.)
1940ல் இரண்டாம் உலகப் போர்: இத்தாலியரின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து கிரேக்கப் படைகள் அல்பேனியாவுக்குள் நுழைந்து கோரிட்சாவை விடுவித்தன.
1942ல் இரண்டாம் உலகப் போர்: செருமனியத் தளபதி பிரீட்றிக் பவுலஸ், ஸ்டாலின்கிராட்டில் தாம் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக இட்லருக்குத் தந்தி மூலம் செய்தி அனுப்பினான்.
1943ல் இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட், பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சீனத் தலைவர் சங் கை செக் ஆகியோர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சந்தித்தனர்.
1943ல் லெபனான், பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1956ல் 16-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆத்திரேலியா மெல்பேர்ணில் ஆரம்பமாயின.
1963ல் அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். டெக்சசு ஆளுநர் ஜான் கொனெலி படுகாயமடைந்தார். துணைத் தலைவர் லின்டன் பி. ஜான்சன் 36வது அரசுத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
1974ல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பலத்தீன விடுதலை இயக்கம் பார்வையாளர் தகுதியைப் பெற்றது.
1975ல் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் மறைவை அடுத்து எசுப்பானியாவின் அரசராக யுவான் கார்லொசு எசுப்பானியாவின் அரசரானார்.
1977ல் மீயொலிவேக கான்கோர்டு சேவையை பிரிட்டிஷ் ஏர்வேஸ் இலண்டன் முதல் நியூயார்க் வரை ஆரம்பித்தது.
1986ல் மைக் டைசன் தனது 20வது அகவையில் குத்துச்சண்டை வாகையாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1989ல் மேற்கு பெய்ரூத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் லெபனான் ஜனாதிபதி ரெனே மோவாட் கொல்லப்பட்டார்.
1995ல் உலகின் முதலாவது முழுமையான அசைவூட்டத் திரைப்படம் டாய் ஸ்டோரி வெளியானது.
1995ல் சினாய் தீபகற்பம், சவூதி அரேபியா பகுதிகளில் 7.3 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றதில், 8 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர்.
2002ல் நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
2003ல் ஜோர்ஜியாவில் அரசுத்தலைவர் எதுவார்து செவர்துநாத்சேயின் எதிராளிகள் நாடாளுமன்றத்தைத் தம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து அரசுத்தலைவரைப் பதவி விலகுமாறு கோரினர்.
2005ல் செருமனியின் முதலாவது பெண் அரசுத்தலைவராக அங்கிலா மெர்க்கெல் தெரிவு செய்யப்பட்டார்.
2007ல் இலங்கை அரசு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது.
2012ல் எட்டு நாட்கள் போருக்குப் பின்னர் காசாக்கரையில் அமாசிற்கும் இசுரேலுக்கும் இடையே போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 22-11 | November 22
1830ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான ஜல்காரிபாய் பிறந்த நாள். (இறப்பு-1858)
1839ல் தமிழிசை அறிஞரான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிறந்த நாள். (இறப்பு-1898)
1890ல் பிரான்சின் 18வது அரசுத்தலைவரான சார்லஸ் டி கோல் பிறந்த நாள். (இறப்பு-1970)
1898ல் பிரித்தானியப் பொருளியல் அறிஞரான லயனல் ராபின்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1984)
1904ல் தமிழகத் தொழிலதிபரும் பதிப்பாளரும் கொடையாளருமான மரே ராஜம் பிறந்த நாள். (இறப்பு-1986)
1904ல் நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளரான இலூயீ நீல் பிறந்த நாள். (இறப்பு-2000)
1939ல் இந்திய அரசியல்வாதியான முலாயம் சிங் யாதவ் பிறந்த நாள்.
1943ல் அமெரிக்க டென்னிசு வீராங்கனையான பில்லி ஜீன் கிங் பிறந்த நாள்.
1958ல் அமெரிக்க நடிகையான ஜேமி லீ குர்திஸ் பிறந்த நாள்.
1967ல் செருமானிய-சுவிசு டென்னிசு வீரயான பொறிஸ் பெக்கர் பிறந்த நாள்.
1967ல் அமெரிக்க நடிகரான மார்க் ருஃப்பால்லோ பிறந்த நாள்.
1968ல் பி.எச்.பி நிரல் மொழியைக் கண்டுபிடித்தவரான ரஸ்மஸ் லெர்டெர்ஃப் பிறந்த நாள்.
1969ல் ஈரானிய எழுத்தாளரான மர்ஜானே சத்ரபி பிறந்த நாள்.
1970ல் இலங்கைத் துடுப்பாளரான மாவன் அத்தப்பத்து பிறந்த நாள்.
1984ல் அமெரிக்க நடிகையான ஸ்கார்லெட் ஜோஹான்சன் பிறந்த நாள்.
1986ல் தென்னாப்பிரிக்க ஓட்டப்பந்தய வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியஸ் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 22-11 | November 22
1718ல் ஆங்கிலேயக் கடல் கொள்ளைக்காரனான பிளாக்பியர்ட் இறப்பு நாள். (பிறப்பு-1680)
1774ல் ஆங்கிலேய இராணுவ வீரரான அரசியல்வாதியான ராபர்ட் கிளைவ் இறப்பு நாள். (பிறப்பு-1725)
1907ல் அமெரிக்க வானியலாளரான ஆசப் ஆல் இறப்பு நாள். (பிறப்பு-1829)
1944ல் ஆங்கிலேய வானியலாளரான ஆர்த்தர் எடிங்டன் இறப்பு நாள். (பிறப்பு-1882)
1963ல் ஆங்கிலேய எழுத்தாளரான ஆல்டசு அக்சுலி இறப்பு நாள். (பிறப்பு-1894)
1963ல் அமெரிக்காவின் 35வது அரசுத்தலைவரான ஜான் எஃப். கென்னடி இறப்பு நாள். (பிறப்பு-1917)
1967ல் தமிழகத் தமிழறிஞரும் மொழியியலாளருமான சிதம்பரநாதன் செட்டியார் இறப்பு நாள். (பிறப்பு-1907)
1967ல் சீக்கிய சமய மற்றும் அரசியல் தலைவரான தாரா சிங் இறப்பு நாள். (பிறப்பு-1885)
1974ல் அமெரிக்க வானியலாளரான ஜெரால்டு மவுரிசு கிளெமான்சு இறப்பு நாள். (பிறப்பு-1908)
1988ல் ஆத்திரேலியத் தொல்லியலாளரும் புதைபடிவ ஆய்வாளருமான ரேமாண்ட் டார்ட் இறப்பு நாள். (பிறப்பு-1893)
1997ல் தமிழகப் பத்திரிகையாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான தி. சதாசிவம் இறப்பு நாள். (பிறப்பு-1902)
2011ல் உருசிய-அமெரிக்க எழுத்தாளரான சுவெத்லானா அலிலுயேவா இறப்பு நாள். (பிறப்பு-1926)
2011ல் அமெரிக்க உயிரியலாளரான லின் மர்குலிஸ் இறப்பு நாள். (பிறப்பு-1938)
2012ல் இந்திய அரசியல்வாதியான பி. கோவிந்த பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1926)
2015ல் வங்காளதேச அரசியல்வாதியான சலாகுதீன் காதர் சௌத்ரி இறப்பு நாள். (பிறப்பு-1949)
2016ல் கருநாடக இசைப் பாடகரும் இசைக்கலைஞருமான எம். பாலமுரளிகிருஷ்ணா இறப்பு நாள். (பிறப்பு-1930)
2016ல் இந்திய இயல்பியலாளரான எம். ஜி. கே. மேனன் இறப்பு நாள். (பிறப்பு-1928)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan