Today Special Historical Events In Tamil | 21-11 | November 21
November 21 Today Special | November 21 What Happened Today In History. November 21 Today Whose Birthday (born) | November-21st Important Famous Deaths In History On This Day 21/11 | Today Events In History November 21st | Today Important Incident In History | கார்த்திகை 21 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 21-11 | கார்த்திகை மாதம் 21ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 21.11 Varalatril Indru Nadanthathu Enna| November 21 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 21/11 | Famous People Born Today 21.11 | Famous People died Today 21-11.
Today Special in Tamil 21-11
Today Events in Tamil 21-11
Famous People Born Today 21-11
Famous People died Today 21-11
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 21-11 | November 21
மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் எனும் கிறித்தவ விழாவாக கொண்டாடப்படுகிறது.
உலகத் தொலைக்காட்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்பம் நாளாக கொண்டாடப்படுகிறது. (தமிழீழம்)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 21-11 | November 21
கிமு 164ல் மக்கபேயர் மன்னர் யூதாசு மக்கபெயசு எருசலேம் கோவிலைப் புதுப்பித்துக் கட்டினார். இந்நிகழ்வு ஆண்டுதோறும் அனுக்கா திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
235ல் போந்தியனுக்குப் பின் அந்தேருசு 19-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
1386ல் சமர்கந்துவின் தைமூர் ஜார்ஜியத் தலைநகர் திபிலீசியைக் கைப்பற்றி, ஜோர்ஜிய மன்னர் ஐந்தாம் பக்ராத்தைக் கைது செய்தான்.
1676ல் தென்மார்க்கு வானியலாளர் ஓலி ரோமர் ஒளியின் வேகத்தின் முதலாவது அளவீட்டைக் கண்டுபிடித்தார்.
1789ல் வட கரொலைனா ஐக்கிய அமெரிக்காவின் 12வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
1877ல் ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தாமசு ஆல்வா எடிசன் அறிவித்தார்.
1894ல் முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895): சீனாவின் மஞ்சூரியாவில் ஆர்தர் துறைமுகத்தை சப்பான் கைப்பற்றியது.
1905ல் ஆற்றலுக்கும் திணிவுக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்டார்.
1916ல் முதலாம் உலகப் போர்: பிரித்தானியாவின் பிரித்தானிக் கப்பல் கிரேக்கத்தில் ஏஜியன் கடலில் வெடித்து மூழ்கியதில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
1920ல் டப்ளினில் காற்பந்துப் போட்டி நிகழ்வொன்றில் பிரித்தானியப் படையினர் சுட்டதில் 14 அயர்லாந்துப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1918ல் உக்ரைன், லுவோவ் நகரில் குறைந்தது 50 யூதர்கள், 270 உக்ரைனியக் கிறித்தவர்கள் போலந்துப் படைகளால் கொல்லப்பட்டனர்.
1942ல் அலாஸ்கா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
1944ல் இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க நீர்மூழ்கி சீலயன் சப்பானியப் போர்க் கப்பல்கள் கொங்கோ, உராக்கேசு மூழ்கடிக்கப்பட்டன.
1947ல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. “ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின் விலை மூன்றரை அணா.
1950ல் வடகிழக்கு பிரிட்டிசு கொலம்பியாவில் இரண்டு கனடியத் தொடருந்துகள் மோதியதில் 21 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 17 பேர் கனடிய இராணுவத்தினர் ஆவார்.
1962ல் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் இந்தோ-சீனப் போரில் போர் நிறுத்தம் செய்வதாக ஒருதலைப் பட்சமாக அறிவித்தது.
1963ல் இந்தியாவின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அப்பாச்சி ஏவப்பட்டது.
1969ல் முதலாவது ஆர்ப்பநெட் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
1969ல் ஓக்கினாவா தீவை 1972 இல் சப்பானியரிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜப்பான் பிரதமர் ஐசாக்கு சாட்டோவுக்கும் இடையில் வாசிங்டனில் கையெழுத்திடப்பட்டது.
1971ல் வங்காள தீவிரவாதக் குழுவான முக்தி வாகினியின் உதவியுடன் இந்தியப் படைகள் கரிப்பூர் என்ற இடத்தில் பாக்கித்தான் படைகளைத் தோற்கடித்தன.
1974ல் பேர்மிங்காமில் ஐரிஷ் குடியரசு இராணுவத்தினரின் குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
1980ல் தமிழீழத் தேசியக்கொடி உருவாக்கப்பட்டது.
1980ல் நெவாடாவில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 87 பேர் கொல்லப்பட்டு 650 பேர் காயமடைந்தனர்.
1990ல் புலிகளின் குரல் வானொலி தொடங்கப்பட்டது.
1990ல் மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் ஆரம்பமானது.
1996ல் புவேர்ட்டோ ரிக்கோவில் சான் ஜுவான் நகரில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
2004ல் டொமினிக்காத் தீவில் இடம்பெற்ற நிலநடுக்கம் போர்ட்ஸ்மவுத் நகரில் பலத்த சேதத்தை விளைவித்தது.
2009ல் சீனாவில் சுரங்க வெடி விபத்தில் சிக்கி 108 பேர் உயிரிழந்தனர்.
2013ல் லாத்வியா, ரீகா நகரில் வணிகத் தொகுதி ஒன்றின் கூரை இடிந்து விழ்ந்ததில் 54 பேர் உயிரிழந்தனர்.
2013ல் உக்ரைனில் அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச் உக்ரைனிய-ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை இடைநிறுத்தியதை அடுத்து, அங்கு பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
2017ல் 37 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் ராபர்ட் முகாபே சிம்பாப்வே அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 21-11 | November 21
1694ல் பிரான்சிய வரலாற்றாளரும் மெய்யியலாளருமான வோல்ட்டயர் பிறந்த நாள். (இறப்பு-1778)
1854ல் திருத்தந்தையான பதினைந்தாம் பெனடிக்ட் பிறந்த நாள். (இறப்பு-1922)
1902ல் நோபல் பரிசு பெற்ற போலந்து-அமெரிக்க எழுத்தாளரான ஐசக் பாஷவிஸ் சிங்கர் பிறந்த நாள். (இறப்பு-1991)
1933ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான த. இராசலிங்கம் பிறந்த நாள்.
1938ல் ஆங்கிலோ-பர்மிய இந்தியத் திரைப்பட நடிகையான ஹெலன் பிறந்த நாள்.
1941ல் இந்தியாவின் குசராத் முதலமைச்சரான ஆனந்திபென் படேல் பிறந்த நாள்.
1949ல் இலங்கையின் மலையக எழுத்தாளரான கே. கோவிந்தராஜ் பிறந்த நாள். (இறப்பு-2009)
1968ல் இந்தோனேசிய எழுத்தாளரான ஆயு உத்தமி பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 21-11 | November 21
1555ல் செருமானிய கனிமவியலாளரும் கல்வியாளருமான அகிரிகோலா சார்சியஸ் இறப்பு நாள். (பிறப்பு-1490)
1912ல் இந்தியக் கல்வெட்டாய்வாளரும் வரலாற்றாளருமான வலையட்டூர் வெங்கையா இறப்பு நாள். (பிறப்பு-1864)
1970ல் நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளரான ச. வெ. இராமன் இறப்பு நாள். (பிறப்பு-1888)
1991ல் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளருமான தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார் இறப்பு நாள். (பிறப்பு-1903)
1994ல் இந்தியக் கல்வியாளரும் பொருளியலாளருமான மால்கம் ஆதிசேசையா இறப்பு நாள். (பிறப்பு-1910)
1996ல் நோபல் பரிசு பெற்ற பாக்கித்தானிய-ஆங்கிலேய இயற்பியலாளரான அப்துஸ் சலாம் இறப்பு நாள். (பிறப்பு-1926)
2012ல் பாக்கித்தானிய தீவிரவாதியான அஜ்மல் கசாப் இறப்பு நாள். (பிறப்பு-1987)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan