November 20 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 20

0

Today Special Historical Events In Tamil | 20-11 | November 20

November 20 Today Special | November 20 What Happened Today In History. November 20 Today Whose Birthday (born) | November-20th Important Famous Deaths In History On This Day 20/11 | Today Events In History November 20th | Today Important Incident In History | கார்த்திகை 20 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 20-11 | கார்த்திகை மாதம் 20ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 20.11 Varalatril Indru Nadanthathu Enna| November 20 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 01/11 | Famous People Born Today 20.11 | Famous People died Today 20-11.

Today Special in Tamil 20-11
Today Events in Tamil 20-11
Famous People Born Today 20-11
Famous People died Today 20-11

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 20-11 | November 20

புரட்சி நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (மெக்சிக்கோ)
ஆசிரியர் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (வியட்நாம்)
திருநர் நினைவு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (அகனள், அகனன், ஈரர், திருனர் சமூகம்)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 20-11 | November 20

284ல் டயோக்கிளேசியன் உரோமைப் பேரரசராக முடி சூடினார்.
1194ல் புனித உரோமைப் பேரரசர் ஆறாம் என்றி பலெர்மோவைக் கைப்பற்றினார்.
1658ல் இலங்கையில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் இடச்சு ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.
1776ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படை நியூ செர்சியில் இருந்து பின்வாங்க ஆரம்பித்தது.
1789ல் நியூ செர்சி உரிமைகளின் சட்டத்தை ஏற்றுக் கொண்ட முதலாவது அமெரிக்க மாநிலமானது.
1820ல் தென் அமெரிக்காவில் 80-தொன் எடையுள்ள எண்ணெய்த் திமிங்கிலம் ஒன்று எசெக்சு என்ற திமிங்கில வேட்டைக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
1910ல் பிரான்சிஸ்கோ மடேரோ மெக்சிகோ அரசுத்தலைவர் போர்பீரியோ டயஸ் என்பவரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டதாகவும் தன்னை அரசுத்தலைவராகவும் அறிவித்தார். மெக்சிக்கோ புரட்சி ஆரம்பமாயிற்று.
1923ல் செருமனியின் நாணயம் பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது. (1 ரெண்டென்மார்க் = 1 திரில்லியன் பேப்பியர்மார்க்)
1936ல் எசுப்பானிய அரசியல்வாதி ஒசே அந்தோனியோ பிறிமோ டெ ரிவேரா கொல்லப்பட்டார்.
1940ல் இரண்டாம் உலகப் போர்: அங்கேரி அச்சு நாடுகள் அமைப்பில் இணைந்தது.
1943ல் இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படையினர் கில்பர்ட் தீவுகளில் தரவா நகரில் தரையிறங்கியதில், அங்கிருந்த சப்பானியப் படைகளினால் பெரும் தாக்குதலுக்குள்ளானர்கள்.
1945ல் நியூரம்பெர்க் தீர்ப்பாயம்: 24 நாட்சி போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான வழக்கு நியூரம்பெர்க்கில் ஆரம்பமானது.
1947ல் இளவரசி எலிசபெத் – இளவரசர் பிலிப்பு திருமணம் இலண்டனில் இடம்பெற்றது.
1959ல் குழந்தைகள் உரிமை சாசனம் ஐக்கிய நாடுகள் அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1962ல் சோவியத் ஒன்றியம் தனது ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்றுவதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து, அமெரிக்கத் தலைவர் ஜான் எஃப். கென்னடி கரிபியன் நாட்டுக்கெதிராக கொண்டுவந்த பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது. கியூபா ஏவுகணை நெருக்கடி முடிவுக்கு வந்தது.
1968ல் மேற்கு வர்ஜீனியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 78 தொழிலாளர்கள் இறந்தனர்.
1969ல் வியட்நாம் போர்: வியட்நாமில் இடம்பெற்ற மை லாய் படுகொலைகள் தொடர்பான ஆவணப் படங்களை பிளெயின் டீலர் என்ற பத்திரிகை வெளியிட்டது.
1969ல் அமெரிக்கப் பழங்குடி செயற்பாட்டாளர்கள் அல்காட்ராசு தீவை ஆக்கிரமித்தனர். இத்தீவைப் பின்னர் அமெரிக்க அரசு 1971 சூன் 11 இல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
1977ல் எகிப்திய அரசுத்தலைவர் அன்வர் சாதாத் இசுரேலியப் பிரதமர் மெனசெம் பெகின் உடன் அமைதிப் பேச்சுக்களுக்காக இசுரேல் சென்றடைந்தார். இசுரேல் சென்ற முதல் அரபுத் தலைவர் இவரே.
1977ல் ஆறு ஆண்டுகள் சிறைக்குப் பின் இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் றோகண விஜேவீர விடுதலை செய்யப்பட்டார்.
1979ல் பெரிய பள்ளிவாசல் கைப்பற்றல்: சவூதி அரேபியா, மெக்காவில் கஃபா மசூதியைத் தாக்கிய இசுலாமியத் தீவிரவாதிகள் 6,000 பேரைப் பணயக் கைதிகளாக்கினர். பிரான்சியப் படைகளின் உதவியுடன் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
1985ல் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.
1988ல் ராஜிவ் காந்திக்கும் மிக்கைல் கோர்பசேவுக்கும் இடையே இரு அணு உலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. எனினும் சோவியத் கலைப்பை அடுத்து இத்திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.
1991ல் 19 பேரடங்கிய அமைதிப் பணிக் குழுவுடன் சென்ற அசர்பைஜான் எம்ஐ-8 உலங்குவானூர்தி ஒன்று ஆர்மீனிய இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1992ல் இங்கிலாந்து வின்சர் அரண்மனையில் தீ பரவியதில் பெரும்சேதம் ஏற்பட்டது.
1993ல் மகெடோனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 116 பயணிகளில் 115 பேரும் 8 பணியாளர்களும் உயிரிழந்தனர்.
1994ல் அங்கோலா அரசுக்கும் யுனிட்டா தீவிரவாதிகளுக்கும் இடையே சாம்பியாவில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதில் 19 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. எனினும் அடுத்த ஆண்டு போர் மீண்டும் ஆரம்பமாயிற்று.
1996ல் ஆங்காங்கில் அலுவலகக் கட்டடம் ஒன்றில் தீப்பற்றியதில் 41 பேர் உயிரிழந்தனர், 81 பேர் காயமடைந்தனர்.
1998ல் பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சர்யா விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
1999ல் இலங்கையில் மன்னார், மடுத் தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 31 தமிழ்ப் பொது மக்கள் கொல்லப்பட்டனர், 64 பேர் காயமடைந்தனர்.
2015ல் மாலியில் தங்குவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 20-11 | November 20

1750ல் மைசூர் பேரரசரான‌ திப்பு சுல்தான் பிறந்த நாள். (இறப்பு-1799)
1858ல் நோபல் பரிசு பெற்ற சுவீடிய எழுத்தாளரான‌ செல்மா லோவிசா லேகர்லாவ் பிறந்த நாள். (இறப்பு-1940)
1889ல் அமெரிக்க வானியலாளரான‌ எட்வின் ஹபிள் பிறந்த நாள். (இறப்பு-1953)
1905ல் இந்திய அரசியல்வாதியான‌ மினூ மசானி பிறந்த நாள். (இறப்பு-1998)
1910ல் தென்னிந்திய நாடக மற்றும் திரைப்பட நடிகரான‌ எம். கே. ராதா பிறந்த நாள். (இறப்பு-1985)
1923ல் நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளரான‌ நாடின் கார்டிமர் பிறந்த நாள். (இறப்பு-2014)
1925ல் அமெரிக்க அரசியல்வாதியான‌ இராபர்ட் எஃப் கென்னடி பிறந்த நாள். (இறப்பு-1968)
1929ல் இந்தியத் தடகள விளையாட்டு வீரரான‌ மில்கா சிங் பிறந்த நாள். (இறப்பு-2021)
1940ல் இசுரேலிய-அமெரிக்க வேதியியலாளரான‌ ஏரியே வார்செல் பிறந்த நாள்.
1940ல் அமெரிக்க இந்து சமய ஆய்வாளரான‌ வெண்டி டோனிகர் பிறந்த நாள்.
1942ல் அமெரிக்க அரசியல்வாதியான‌ ஜோ பைடன் பிறந்த நாள்.
1946ல் உருசிய மரபுவழித் திருச்சபை ஆயரான‌ மாசுக்கோவின் மறைமுதுவர் கிரீல் பிறந்த நாள்.
1950ல் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமான‌ தேவா பிறந்த நாள்.
1957ல் நைஜீரியாவின் 14வது அரசுத்தலைவரான குட்லக் ஜொனத்தன் பிறந்த நாள்.
1962ல் இந்தியத் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான‌ ராஜ்குமார் கிரானி பிறந்த நாள்.
1976ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான‌ ஜான் விஜய் பிறந்த நாள்.
1980ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான சாலினி பிறந்த நாள்.
1989ல் தமிழகத் திரைப்பட நடிகையான‌ தன்சிகா பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 20-11 | November 20

1861ல் பிரான்சியக் கணிதவியலாளரான‌ பியர்ரே பிரெடெரிக் சாரசு இறப்பு நாள். (பிறப்பு-1798)
1882ல் அமெரிக்க மருத்துவரும் வானியலாளருமான‌ என்றி டிரேப்பர் இறப்பு நாள். (பிறப்பு-1837)
1910ல் உருசிய எழுத்தாளரான‌ லியோ டால்ஸ்டாய் இறப்பு நாள். (பிறப்பு-1828)
1934ல் இடச்சுக் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் வானியலாளருமான‌ வில்லெம் தெ சிட்டர் இறப்பு நாள். (பிறப்பு-1872)
1952ல் இத்தாலிய இலக்கியவாதியான‌ வரலாற்றாசிரியாரும் அரசியல்வாதியுமான‌ பெனிடெட்டோ குரோசே இறப்பு நாள். (பிறப்பு-1866)
1963ல் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரான‌ ஜி. ராமநாதன் இறப்பு நாள்.
1975ல் எசுப்பானியப் பிரதமரான‌ பிரான்சிஸ்கோ பிராங்கோ இறப்பு நாள். (பிறப்பு-1892)
1988ல் சோவியத் வானியலாளரான‌ பெலிக்சு யூரியேவிச் சீகல் இறப்பு நாள். (பிறப்பு-1920)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleNovember 19 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 19
Next articleவிநாயகர் சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிப்பது எப்படி?