March Matha Rasi Palan 2020 மார்ச் மாத ராசி பலன் பங்குனி மாத ராசி பலன் Panguni Matha Rasi Palan monthly Rasi Palan in Tamil.

0

March Matha Rasi Palan 2020 மார்ச் மாத ராசி பலன் பங்குனி மாத ராசி பலன் Panguni Matha Rasi Palan monthly Rasi Palan in Tamil. March Matha Rasi Palan 2020 ஆங்கில மாத ராசி பலன்கள்

மேஷம்

முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு, 9-ல் குரு, மாத முற்பாதியில் 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். பொருளாதார நிலையில் உயர்வான நிலைகள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன்களை அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் நிறைவேறும். கடன்கள் அனைத்தும் குறையும். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 14-03-2020 காலை 06.41 மணி முதல் 16-03-2020 பகல் 11.12 மணி வரை.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு இம்மாதம் 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். எதிர்பாராத முன்னேற்றங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். செவ்வாய், கேது 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி இடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் திருப்திகரமான நிலை ஏற்படும். முருக வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 16-03-2020 பகல் 11.12 மணி முதல் 18-03-2020 இரவு 07.25 மணி வரை.

மிதுனம்

உங்கள் ராசிக்கு 7-ல் குரு, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார ரீதியாக உயர்வு உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. மாத பிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சரிப்பது அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 18-03-2020 இரவு 07.25 மணி முதல் 21-03-2020 காலை 06.20 மணி வரை.

கடகம்

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், கேது, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதார ரீதியாக ஏற்றம், புத்திர வழியில் பூரிப்பு, குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற கூடிய வாய்ப்பு, நவீனகரமான பொருட்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். பூர்வீக சொத்து ரீதியாக உள்ள சிக்கல் ஒரு முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்கள் நிம்மதியுடன் செயல்பட முடியும். சிவ பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 21-03-2020 காலை 06.20 மணி முதல் 23-03-2020 மாலை 06.37 மணி வரை.

சிம்மம்

உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, 11-ல் ராகு சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பாகும். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடும் என்பதால் அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை அடைவார்கள். சிவ வழிபாட்டையும், விநாயகர் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 23-03-2020 மாலை 06.37 மணி முதல் 26-03-2020 காலை 07.16 மணி வரை.

கன்னி

மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் சாதகமான பலன்களை பெறுவீர்கள். செவ்வாய், குரு 4-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. அசையா சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது மூலம் மருத்துவ செலவுகள் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.

சந்திராஷ்டமம் – 26-03-2020 காலை 07.16 மணி முதல் 28-03-2020 இரவு 07.30 மணி வரை.

துலாம்

உங்கள் ராசிக்கு செவ்வாய், கேது 3-ல் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை பெறுவீர்கள். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. நெருங்கியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்யும்.

சந்திராஷ்டமம் – 01-03-2020 பகல் 01.18 மணி முதல் 03-03-2020 இரவு 11.03 மணி வரை மற்றும் 28-03-2020 இரவு 07.30 மணி முதல் 31-03-2020 காலை 06.05 மணி வரை.

விருச்சிகம்

உங்களுக்கு குரு தன ஸ்தானத்தில், சனி 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கடந்த கால பிரச்சினைகள் விலகி முன்னேற்றமும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் கிட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், மாத முற்பாதியில் சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன், உடல் சோர்வு ஏற்படும். முடிந்த வரை தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் மருத்துவ செலவுகள் குறையும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. நவகிரக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 03-03-2020 இரவு 11.03 மணி முதல் 06-03-2020 அதிகாலை 04.55 மணி வரை மற்றும் 31-03-2020 காலை 06.05 மணி முதல் 02-04-2020 பகல் 01.33 மணி வரை.

தனுசு

உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சாதகமாக சஞ்சரிப்பதும் பல்வேறு வகையில் அனுகூலங்களை தரும் அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. உணவு விஷயத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவச் செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும். நெருங்கியவர்களால் ஒரளவுக்கு அனுகூலங்களை பெறுவீர்கள். தொழிலில் போட்டி நிலவினாலும் நஷ்டம் ஏற்படாமல் சமாளிக்க முடியும். சுபகாரிய முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 06-03-2020 அதிகாலை 04.55 மணி முதல் 08-03-2020 காலை 06.52 மணி வரை.

மகரம்

உங்கள் ராசிக்கு சுக்கிரன் 4-ல், ராகு 6-ல் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நவீனகரமான பொருட் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். குரு, சனி சாதகமற்று இருப்பதால் பணவிஷயத்தில் கவனமாக செயல்பட்டால் ஏற்றமிகுந்த பலன்களை அடையலாம். முருக வழிபாடும் விநாயக வழிபாடும் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 08-03-2020 காலை 06.52 மணி முதல் 10-03-2020 காலை 06.22 மணி வரை.

கும்பம்

லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், குரு, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிலருக்கு புதிய வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகங்கள் உண்டாகும். குடும்ப ஒற்றுமை சற்று குறையும். முடிந்த வரை முன்கோபத்தை குறைத்துக் கொண்டு உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பண விஷயங்களில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபார ரீதியாக புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். சிவ வழிபாடும் துர்கையம்மன் வழிபாடும் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 10-03-2020 காலை 06.22 மணி முதல் 12-03-2020 காலை 05.35 மணி வரை.

மீனம்

உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். சனி 11-ல், செவ்வாய் 10, 11-ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில் உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் கிடைப்பதோடு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. திருமண முயற்சிகளில் அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும். குரு பகவானை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 12-03-2020 காலை 05.35 மணி முதல் 14-03-2020 காலை 06.41 மணி வரை.

March Matha Rasi Palan 2020, பங்குனி மாத ராசி பலன், மார்ச் மாத ராசி பலன், ஆங்கில மாத ராசி பலன்கள், Panguni Matha Rasi Palan, Monthly Rasi Palan, monthly Rasi Palan in Tamil, Monthly Horoscope in Tamil. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். March Matha Rasi Palan 2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 01.03.2020 Today Rasi Palan 01-03-2020 Today Calendar Indraya Rasi Palan!
Next articleமுற்றத்து மரம்! Mutrathu Maram (Tamilpiththan kavithai-7)