Today Special Historical Events In Tamil | 08-03 | March 08
March 08 Today Special | March 08 What Happened Today In History. March 08 Today Whose Birthday (born) | March-8th Important Famous Deaths In History On This Day 08/03 | Today Events In History March 8th | Today Important Incident In History | பங்குனி 08 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 08-03 | பங்குனி மாதம் 08ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 08.03 Varalatril Indru Nadanthathu Enna| March 08 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 08/03 | Famous People Born Today 08.03 | Famous People died Today 08-03.
Today Special in Tamil 08-03
Today Events in Tamil 08-03
Famous People Born Today 08-03
Famous People died Today 08-03
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 08-03 | March 08
அனைத்துலக பெண்கள் நாளாக கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 08-03 | March 08
1010ல் பிர்தௌசி தனது சாஃனாமா என்ற இதிகாசத்தை எழுதி முடித்தார்.
1576ல் எசுப்பானிய நாடுகாண் பயணி தியேகோ கார்சியா டி பலாசியோ முதன்முறையாக பண்டைய மாயன் நகரமான கொப்பானின் எச்சங்களைக் கண்ணுற்றார்.
1618ல் யோகான்னசு கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.
1658ல் வடக்குப் போர்களில் (1655–1661) ஏற்பட்ட பெரும் தோல்விகளை அடுத்து, டென்மார்க்-நார்வே மன்னர் மூன்றாம் பிரெடெரிக் தனது பகுதியின் அரைவாசிப் பகுதியை சுவீடனிடம் இழந்தார்.
1702ல் ஆன் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார்.
1722ல் ஈரானின் சபாவித்து அரசு ஆப்கானித்தானின் இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
1736ல் அப்சரித்து வம்சத்தின் நிறுவனர் நாதிர் ஷா ஈரானின் மன்னராக (ஷா) முடிசூடினார்.
1782ல் ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தில் கிறித்தவத்துக்கு மதம் மாறிய 96 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பென்சில்வேனியாவின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.
1817ல் நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது.
1844ல் முதலாம் ஆசுக்கார் சுவீடன்-நார்வே மன்னராக முடிசூடினார்.
1868ல் சப்பானிய சாமுராய் சக்காய் நகரில் 11 பிரெஞ்சுக் கடற்படையினரைக் கொன்றான்.
1906ல் பிலிப்பைன்சில் அமெரிக்கத் துருப்புக்களால் ஏறத்தாழ 600 ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1908ல் திருநெல்வேலி எழுச்சி 1908: திருநெல்வேலியில் பிரித்தானியர்களுக்கு எதிரான போராட்டத்தில் நால்வர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.
1910ல் ரேமொன்டே டெ லாரோச் என்ற பிரான்சியர் வானோடிக்கான உரிமத்தைப் பெற்று, உலகின் முதலாவது பெண் வானோடியானார்.
1911ல் அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.
1917ல் பன்னாட்டு பெண்கள் நாள் ஆர்ப்பாட்டம் உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் இடம்பெற்றது. இதுவே பெப்ரவரிப் புரட்சியின் (பழைய யூலியன் நாட்காட்டியில் பெப்ரவரி 23) ஆரம்பமாகும்.
1920ல் முதலாவது நவீன அரபு நாடு சிரிய அரபு இராச்சியம் உருவாக்கப்பட்டது.
1921ல் எசுப்பானியப் பிரதமர் எதுவார்தோ டாட்டோ மத்ரிதில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
1924ல் யூட்டாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 172 பேர் உயிரிழந்தனர்.
1942ல் இரண்டாம் உலகப் போர்: சப்பானிய இராணுவம் இடச்சுக் கிழக்கிந்திய இராணுவத்தை நிபந்தனையின்றிச் சரணடைய இறுதி எச்சரிக்கையை விடுத்தது.
1942ல் இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் ரங்கூன் நகரை சப்பான் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கைப்பற்றியது.
1947ல் பெப்ரவரி 26 எதிர்ப்புப் போராட்டத்தை அடுத்து சீனக் குடியரசின் 13,000 இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் தைவானில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1949ல் வியெட்நாமிற்கு பிரான்சிடம் இருந்து அதிக சுயாட்சி வழங்குவதற்கும், வியட் மின்-தலைமையிலான வியட்நாம் சனநாயகக் குடியரசிற்கு எதிராக வியட்நாம் நாட்டை உருவாக்குவதற்கும் பிரெஞ்சு அரசுத்தலைவர் வின்சென்ட் ஓரியோலிற்கும், முன்னாள் வியட்நாம் பேரரசர் பாவோ டாயிற்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது.
1950ல் சோவியத் ஒன்றியம் தன்னிடம் அணுக்குண்டு இருப்பதாக அறிவித்தது.
1957ல் சூயெசு நெருக்கடிக்குப் பின்னர் எகிப்து சூயஸ் கால்வாயை முதல் தடவையாகத் திறந்தது.
1963ல் சிரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு பஹாத் கட்சி ஆட்சிக்கு வந்தது.
1965ல் வியட்நாம் போர்: 3,500 அமெரிக்கப் படைகள் தென் வியட்நாமில் தரையிறங்கினர்.
1971ல் ஜோ பிரேசியர், முகம்மது அலி ஆகியோருக்கிடையேயான புகழ்பெற்ற நூற்றாண்டுக்கான குத்துச்சண்டை ஆரம்பமானது. இப்போட்டியில் பிரேசியர் 15 சுற்றுகளில் வென்றார்.
1979ல் பிலிப்சு நிறுவனம் குறுவட்டை முதற்தடவையாக அறிமுகம் செய்தது.
1983ல் பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் சோவியத் ஒன்றியத்தை தீய பேரரசு என வர்ணித்தார்.
1985ல் லெபனான், பெய்ரூத் நகரில் மேற்கொள்ளப்பட்ட வாகனக் குண்டுத் தாக்குதலில், 45 பேர் கொல்லப்பட்டனர், 175 பேர் காயமடைந்தனர்.
2014ல் 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்ற மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 மாயமாக மறைந்தது.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 08-03 | March 08
1566ல் இத்தாலிய இசையமைப்பாளரான கார்லோ கேசுவால்தோ பிறந்த நாள். (இறப்பு-1613)
1879ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளரான ஓட்டோ ஹான் பிறந்த நாள். (இறப்பு-1968)
1900ல் ஆர்வர்டு மார்க் I ஐக் கண்டுபிடித்த அமெரிக்க இயற்பியலாளரும் கணினி அறிவியலாளருமான அவார்டு அயிக்கன் பிறந்த நாள். (இறப்பு-1973)
1914ல் பெலருசிய-உருசிய இயற்பியலாளரும் வானியலாளருமான யாகோவ் போரிசோவிச் செல்டோவிச் பிறந்த நாள். (இறப்பு-1987)
1934ல் தமிழக எழுத்தாளரான ம. லெ. தங்கப்பா பிறந்த நாள். (இறப்பு-2018)
1936ல் மலேசிய அரசியல்வாதியான ச. சாமிவேலு பிறந்த நாள். (இறப்பு-2022)
1940ல் ஈழத்து எழுத்தாளரும் நாடக மற்றும் நாட்டுக்கூத்துக் கலைஞருமான செபஸ்தியான் செபமாலை பிறந்த நாள்.
1943ல் இலங்கை அரசியல்வாதியான விக்கிரமபாகு கருணாரத்தின பிறந்த நாள்.
1976ல் அமெரிக்க நடிகரும் தயாரிப்பாளருமான பிரெட்டி பிரின்ஸ் ஜூனியர் பிறந்த நாள்.
1990ல் செக் டென்னிசு வீராங்கனையான பெத்ரா கிவிதோவா பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 08-03 | March 08
1535ல் இந்தியாவின் பூந்தி நகர இளவரசியான இராணி கர்ணாவதி இறப்பு நாள்.
1702ல் இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் இறப்பு நாள். (பிறப்பு-1650)
1723ல் ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞரான கிறிஸ்டோபர் ரென் இறப்பு நாள். (பிறப்பு-1632)
1844ல் சுவீடன்-நோர்வே மன்னரான காருல் யோவான் இறப்பு நாள். (பிறப்பு-1763)
1869ல் பிரான்சிய இசையமைப்பாளரான ஹெக்டர் பேர்லியோஸ் இறப்பு நாள். (பிறப்பு-1803)
1873ல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரான ராபர்ட் வில்லியம் தாம்சன் இறப்பு நாள். (பிறப்பு-1822)
1923ல் நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளரான யோகான்னசு வான் டெர் வால்சு இறப்பு நாள். (பிறப்பு-1837)
1930ல் அமெரிக்காவின் 27வது அரசுத்தலைவரான வில்லியம் டாஃப்ட் இறப்பு நாள். (பிறப்பு-1857)
1957ல் பம்பாய் மாகாணத்தின் முதல் பிரதம மந்திரியான பி. ஜி. கெர் இறப்பு நாள். (பிறப்பு-1888)
1963ல் சோவியத் மார்க்சியவாதியும் மெய்யியலாளருமான அபிராம் தெபோரின் இறப்பு நாள். (பிறப்பு-1881)
1971ல் அமெரிக்க நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஹரோல்ட் லாயிட் இறப்பு நாள். (பிறப்பு-1893)
1974ல் தமிழகத் திரைப்படப் பாடகரும் நடிகருமான ஜே. பி. சந்திரபாபு இறப்பு நாள். (பிறப்பு-1924)
1977ல் இந்திய எழுத்தாளரான கிருஷன் சந்தர் இறப்பு நாள். (பிறப்பு-1914)
1988ல் இந்தியப் பாடகரான அமர் சிங் சம்கிலா இறப்பு நாள். (பிறப்பு-1961)
2009ல் இந்திய தோக்ரி மொழி எழுத்தாளரான இராம்நாத் சாஸ்திரி இறப்பு நாள். (பிறப்பு-1914)
2015ல் ஈழத்து எழுத்தாளரும் கவிஞருமான கி. பி. அரவிந்தன் இறப்பு நாள். (பிறப்பு-1953)
2015ல் இந்தியப் பத்திரிகையாளரான வினோத் மேத்தா இறப்பு நாள். (பிறப்பு-1941)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan