Karumbu கரும்பு Karumbu Juice கரும்பு ஜூஸ் Karumbu Saaru கரும்பு சாறு Sugarcane Benefits Medicine Karumbu in Tamil

0
955

Karumbu கரும்பு Karumbu Juice கரும்பு ஜூஸ் கரும்பு சாறு Sugarcane Benefits Medicine Karumbu in Tamil. udal edai kuraiya karumbu saaru உடல் எடையை குறைக்கும் கரும்பு சாறு Karumbu in English Sugarcane Benefits. udal edai kuraiya tips, weight loss tips, udal meliya, udal edai kuraiya, udal edai kuraiya diet, udal edai kuraiya kurippu உடல் எடை குறைய, உடல் எடை குறைய வழிகள் Karumpu.

Karumbu

Karumbu கரும்பு

100% இயற்கையான இனிப்பு சுவைப்பானங்களில் கருப்புச்சாறும் அடங்கிறது. இந்த கரும்புத்தாவரமானது எமது முன்னோர்களினால் பாரம்பரிய விழாக்களிலும், உணவுத்தயாரிப்புக்களிலும் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அதிலும் தமிழர்களின் பொங்கல் விழாவில் முக்கிய இடத்தை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கரும்புச்சாறு தாகம் தீர்க்கும் பானம் மட்டும் அல்லாது உடனடி ஊக்கமூட்டும் பானமாகவும் உள்ளது உங்களுக்கு தெரியுமா? 1493 ஆண்டு Christopher Columbus என்பவர் முதல் முதலாக பயிரிட்டார், அதன் பின்னரே உலகம் முழுவதும் இத்தவரம் பயிரிடப்பட்டு வருகிறது.இது ஆசியா ,அமெரிக்க நாடுகளில் பெரும்பாலும் பயிரிடப்படுகிறது. இதன் விஞ்ஞான பெயர் saccharum Officinarum. இது புல்லுவகை குடும்பத்தை சேர்தது.

சாதாரணமாக 30 அடி உயரம் வரை இது வளரகூடியது.எல்லா மித வெப்பவலய பிரதேசங்களிலும் இலகுவாக வரகூடியது, 9-24 மாதங்களில் பயன்தரவும் கூடியது. கரும்புச்சாற்றில் sucrose,fructose வேறு பல glucose வகைகளும் உண்டு.அத்துடன் மாச்சத்து,புரதம், கனியுப்புக்கள் ,சுண்ணாம்பு சத்து , இரும்பு சத்து,மக்னீசியம்,zinc, potassium, வைட்டமின் A & C யும் உள்ளது.

கரும்பிலிருந்து பெறப்படும் கரும்புச்சாறு, சர்க்கரை, வேர் ஆகியன மருத்துவ ரீதியில் முக்கியமானவையாக காணப்படுகின்றன. இது தொற்றுநோய்களை குணப்படுத்த உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே இது நீரிழப்புக்கு நல்லது. இது பொதுவான சளி மற்றும் பல தொற்று நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

ஏன் கரும்புச்சாறு மிகவும் ஆரோக்கிய பான‌மாக கருதப்படுகிறது?

இது எமது சருமத்திற்கும், உடல் ஆரோக்கியதுக்கும் நன்மை தருகிறது என்பதால், இப்போது இதன் பயன்களை பார்போம்.

பருக்கள் வருவதை தடுக்கிறது.

சருமம் வயதாவதிலிருந்து பாதுகாகிறது.

உடனடி ஊக்கமூட்டும் பானம்

பாதுகாப்பான சுகபிரசவத்திற்கு உதவுகிறது

வாய் துர்நாற்றம் மற்றும் பற்சிதைவிலிருந்து பாதுகாகிறது

நோய் எதிர்ப்பு திறனை வலுப்படுத்துகிறது

சிறுநீரக தொற்று நோய்கள் குணமாக உதவுகிறது

உடல் நச்சுதன்மை நீக்கத்துக்கு உதவுகிறது

உடலின் அமிலதன்மையை சமன் செய்து குடல் ஆரோக்கியத்தை பேணுகிறது

அஜீரண கோளாறு,மலசிக்கல் நீக்குகிறது

தொண்டை புண்

சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.

karumbu saru payangal – கரும்பு சாறு பயன்கள்

பருக்கள் வருவதை தடுக்கிறது.

முகப்பருக்கள் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் மிகப்பெரிய தொல்லையாக உள்ளது. இது அழகையே கெடுப்பதாகவும் உள்ளது. நாட்டு சர்க்கரை, தேன் மெழுகு சேர்த்து காய்ச்சி முகப்பருவின் மீது தடவுவதன் மூலம் பருக்களை விரைவில் மறைக்கலாம்.

வளரும் குழந்தகளின் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவும்.

கரும்புச்சாறு குடித்து வரும் போது குழந்தைகளுக்கு எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும்,வளர்தவர்களுக்கு அது சம்மந்தமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கிறது, ஏன் என்றால் இதில் உயர் அளவில் கல்சியம் இருப்பதால் எலும்பு மற்றும் பற்களுக்கு தேவையான சக்தியை கொடுத்து உடலை பலமுடன் வைத்திருக்க உதவுகிறது.

பெண்களின் பிரசவத்திற்கு உதவுகிறது

கரும்புச்சாறு கர்பிணி பெண்களின் உணவு பட்டியலில் சேர்க பட‌வேண்டிய ஒரு சிறந்த பானமாக இருப்பதுடன், பாதுகாப்பான பிரசவத்திற்கும்,விரைவாக கருதரிப்பதற்கும் உதவுகிறது. இந்த அற்புத பானத்தில் போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் B9 இருப்பதால் spina bifida எனப்படும் முள்ளதண்டில் ஏற்படும் குறைபாடுடைய குழந்தைகள் பிறப்பதை தவிர்கலாம்.

சிறுநீரக தொற்று நோய்கள் குணமாக‌

சிறுநீரக தொற்று உடலில் அந்தரங்க உறுப்புகளின் தூய்மையை சரிவர பேணாதவவர்களுக்கு சிறுநீரக தொற்று வியாதிகள் சுலபத்தில் ஏற்படுகின்றன. இந்த பாதிப்பு நீங்க ஒரு நாளைக்கு இரு முறை எலுமிச்சை மற்றும் தேங்காய்த் தண்ணீர் கலந்த கரும்பு சாறு பருகி வருவதால் சிறுநீரக தொற்று கிருமிகள் அழிந்து, சிறுநீரங்கள் நலம் காக்கப்படும்.

உடலை மெலியச்செய்ய கரும்பு

தசைப்பிடிப்பான உடலை மெலியச் செய்வதில் கரும்பு மிகமுக்கிய பங்கினை வகிக்கின்றது.கரும்புச் சாற்றிலுள்ள சிறப்பான இரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பினைக் கரையச் செய்வதன் மூலம் உடலின் நிறையினை குறைக்கின்றது. இவ்வாறு நிறை குறைவதன் மூலம் உடலில் ஏற்படும் களைப்பினை இக்கரும்புச்சாறு நீக்குவதுடன், இரத்த அழுத்தத்தினையும் கட்டுப்படுத்தி, உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கின்றது. இங்கு கரும்பு பக்க விளைவுகள் எதனையும் உருவாக்காமல், உடலின் தேவையற்ற நிறையைக் குறைக்கின்றது என்பது மிகவும் முக்கிய விடயமாகும்.

உடனடி ஊக்கமூட்டும் பானம்

கரும்பு சாறு என்பது உடனடி ஆற்றலிற்க்கு ஒரு சிறந்த ஆதாரமாகும். நீங்கள் மிகவும் தாகமாக இருந்தால் கரும்பு சாறு அருந்தும் போது அது உங்களுக்கு புத்துயிர் அளித்து உங்கள் மன நிலையை புதுப்பிக்கிறது.

அஜீரண கோளாறு,மலசிக்கல் நீக்குகிறது

செரிமான பிரச்சனைக்கு இன்றைய காலங்களில் பலருக்கும் உணவு செரிமானமின்மை மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. இவர்கள் கரும்பு சாறு தினமும் அருந்த வேண்டும். கரும்பு சாற்றில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றின் அமில சுரப்பு அளவுகளை சமன்செய்ய உதவுகிறது மற்றும் செரிமான சாறுகள் சுரக்கவும் உதவுகிறது.

கரும்புச்சாறு பயன்படுத்த ஆரம்பித்த அடுத்துவரும் 12 வாரங்களில் இதன் பலனை வெளிப்படையாக உணரலாம். இங்கு கரும்பு பக்க விளைவுகள் எதனையும் உருவாக்காமல், உடலின் தேவையற்ற நியையைக் குறைப்பதற்கு பயன்படுகின்றது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

Article By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: