karumbu saru payangal Udalai Melliyathaka Mattum உடலில் நிலை கொண்டுள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து உடலை மெலிதாக்கும் கரும்புச்சாறு
மெல்லிய உடல் தரும் கரும்புச்சாறு
கரும்பு தின்ன கைக்கூலியா?. மித வெப்பமண்டல தாவரமான கரும்பு இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. மருத்துவப் பயன் கொண்ட இது சர்க்கரைக்காகவும், பிற தேவைகளுக்காகவும் உலகெங்கும் ஏறத்தாள 200 நாடுகளில் பயிரிடப்படுகின்றது. இதில் பிரேசில் முதன்மையான நாடாக விளங்குகின்றது. கரும்பிலிருந்து பெறப்படும் கரும்புச்சாறு, சர்க்கரை, வேர் ஆகியன மருத்துவ ரீதியில் முக்கியமானவையாக காணப்படுகின்றன.
உடலின் நிறையைக் குறைத்து மெல்லிய உடலினைப் பெறுவதற்கு ஆண்களும், பெண்களும் பல்வேறு தரப்பட்ட கடினமான வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றதுடன், போலியான விளம்பரங்களை நம்பி பல்வேறுபட்ட குளிசைகள்;, ஊட்டச்சத்துபாணிகள் போன்றவற்றையும் வாங்கி உண்டு, எப்படியாவது உடலின் நிறையைக் குறைக்க முயற்சிக்கின்றனர். உங்களது கஸ்டத்தைப் போக்குவதற்கான, செலவற்ற, ஒரு இயற்கையான உணவு பொருள் பற்றி இங்கு பார்ப்;போம்.
உடலில் உள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்கும் கரும்பு :
தசைப்பிடிப்பான உடலை மெலியச்; செய்வதில் கரும்பு மிகமுக்கிய பங்கினை வகிக்கின்றது. கரும்புச் சாற்றிலுள்ள சிறப்பான இரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பினைக் கரையச் செய்வதன் மூலம் உடலின் நிறையினை குறைக்கின்றது. இவ்வாறு நிறை குறைவதன் மூலம் உடலில் ஏற்படும் களைப்பினை இக்கரும்புச்சாறு நீக்குவதுடன், இரத்த அழுத்தத்தினையும் கட்டுப்படுத்தி, உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கின்றது. இதனைப் பயன்படுத்த ஆரம்பித்த 12 கிழமைகளில் இதன் பலனை நீங்கள் வெளிப்படையாக உணரமுடியும். இங்கு கரும்பு பக்க விளைவுகள் எதனையும் உருவாக்காமல்;, உடலின் தேவையற்ற நியையைக் குறைக்கின்றது என்பது மிகவும் முக்கிய விடயமாகும்.
உடல் மெலியும்: karumbu saru payangal
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள், பருமனான உடலை மெலியச்; செய்வதில் கரும்பு மிகமுக்கிய பங்கினை வகிக்கின்றது. கரும்புச் சாற்றிலுள்ள சிறப்பான இரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பினைக் கரையச் செய்வதன் மூலம் உடலின் நிறையினை குறைக்கின்றது. இவ்வாறு நிறை குறைவதன் மூலம் உடலில் ஏற்படும் களைப்பினை இக்கரும்புச்சாறு நீக்குவதுடன், இரத்த அழுத்தத்தினையும் கட்டுப்படுத்தி, உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கின்றது என்று கண்டுபிடித்துள்ளனர்.
கரும்புச்சாறு பயன்படுத்த ஆரம்பித்த அடுத்துவரும் 12 வாரங்களில் இதன் பலனை வெளிப்படையாக உணரலாம். இங்கு கரும்பு பக்க விளைவுகள் எதனையும் உருவாக்காமல்;, உடலின் தேவையற்ற நியையைக் குறைப்பதற்கு பயன்படுகின்றது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விக்கல் நிற்கும்;
கரும்புச்சாறானது விக்கலை கட்டுப்படுத்துவதுடன், உடம்பு சூட்டைக் குறைத்து எரிச்சலையும் தணிக்கும். இக்கரும்புச் சாற்றுடன் தயிர் சேர்த்துக் குடிக்கும் போது பித்தம் நீங்கும். வயிற்றுப் புழுக்களையும், நீரிழிவையும் உருவாக்கும் வெள்ளை, அழற்சி பெருக்கினைக் கட்டுப்படுத்தும் எனினும், இக்கரும்புச் சாற்றை அதிகமாக உட்கொண்டால்; சந்தேக நோய் உருவாகும்.
கரும்பு சாற்றைக் காய்ச்சி வடிகட்டி தயாரிக்கப்படும்; சர்க்கரை கைவைத்தியங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றதுடன், பித்தம், வாந்தி மற்றும் சுவையற்றதன்மை போன்றவற்றினையும் நீக்குகின்றதுடன், அதிகப்படியான சளியினையம் கரைக்கின்றது. மேலும், வாதக்காய்ச்சல்;, வாதநோய், நுண்மையான புழு மற்றும் விக்கல் போன்றனவற்றிற்கு வெண்மை சர்க்கரையானது முக்கிய மருந்தாக காணப்படுகின்றது.
சர்க்கரையைக் கொண்டு தயாரிக்கப்படும் மிகச்சிறந்த மருந்துவ குணம் கொண்ட கற்கண்டில் சிறிதளவுடன், சிறிதளவு பொரிகாரம் சேர்த்து 7 நாட்கள்; உட்கொண்டு வந்தால், விந்து நீர்த்தல் நீங்குவதுடன், ஈறுதடிப்பு, வாந்தி மற்றும் இருமல் ஆகியவை முற்றாக நீங்கும். தீரும் கொண்டது.
விஷ முறிவு
உணவுப் பொருட்களை நீண்டகாலம்; பாதுகாத்து வைப்பதற்கு சர்க்கரையைப் பாகு பயன்படுத்த முடியும். சளி, தும்மல் மற்றும் நீர்ப்பீனிச நோய்களைப் நீக்குவதற்கும் இதனைப் பயன்டுத்த முடியும்;. செம்பு, வெள்ளப் பாஷாணம் போன்ற நச்சுப்பதார்த்தங்களை உட்கொள்வதனால்; ஏற்படும் தொல்லைகளிலிருந்து சர்க்கரை மிகச் சிறப்பான விஷமுறிப்பாக செயல்படுகின்றதுடன், நாள்பட்ட புண்களையும் குணமாக்குகின்றது. முக்கியமாக, கரும்பு வேரினைப் பயன்படுத்தி சரியான வகையில் குடிநீர் தயாரித்து குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்;.
இலகுவாக பருக்களை நீக்குவதற்கு மஞ்சள் மெழுகினையும் சர்க்கரையும் சேர்த்து குழம்பாக்கி பருக்களின் மீது தடவுதல் நல்ல பலன் தரும். நீண்டகால் நோயாளிகளாக உள்ளவர்களின் படுக்கை அறையில் துய காற்றினை பெறுவதற்கு சர்க்கரையை பயன்படுத்தி புகையை உருவாக்கி அறையினை சுத்தம் செய்யலாம்.
கரும்பு அமிலம்
காடி என்பது கருப்பஞ்சாற்றின் புளித்த நிலை ஆகும். இதில் அதிகளவில் அமிலத்தன்மை காணப்படுவதனால்; பசியை தூண்டி விரைவான சமிபாட்டிற்கு வழிவகுப்பதுடன், தாகத்தையும்; குறைக்கும். ஈயம் போன்ற கொடிய விஷங்கள் மூலம் உருவாகும் நோய்களினை நீக்குவதற்கு ஒரு பங்கும் காடியும், 5 பங்கு சுத்தமான நீரும் கலந்து பருகலாம். இங்கு இப்பானத்தைப் பருகுவதற்கு முன்னர் பேதிக்கு மருந்து கொடுத்து அதன்பின்னர்; கையாள்வது சிறப்பான பெறுபேற்றினை வழங்கும்.
இக்காடியினை உடலின் தொடை மற்றும் இடுக்கு ஆகிய பகுதிகளில் பூசுவதன் மூலம் சிறுநீரில் இரத்தம் வெளியேறும் வியாதியிலிருந்து குணம் பெறமுடிவதுடன், தேள், குளவி மற்றும் தேனீ போன்றவை கொட்டுதல் மற்றும் சிலவகையான பயிர்களின்; உரசல் போன்றவற்றினால் உருவாகும்; தினவு, நமைச்சல் போன்ற நோய்களுக்கும் இதனைப் பூச முடியும். இதனை விட மார்பக வீக்கத்தினைக் கரைக்க முடிவதுடன், தலைவலி, மயக்கம், தொண்டைப் புண் மற்றும் மூக்கில் நீர் வடிதல்; போன்றனவற்றிலிருந்து குணம் பெறுவதற்கு இதன் ஆவியை மணந்தாலே போதுமானது என்பது இங்கு குறிப்பிடதக்கது
விக்கலினை போக்குவதற்கு கரும்பினை இரு சம பாதியாக வெட்டி திப்பிலிப் பொடி மற்றும் ஏலக்காய்ப் பொடி என்பனவற்றினை இடையில் வைத்து செம்மண் சீலையால் கட்டி கும்பி நெருப்பிலிட்டு பதமாகச் சுட்டு, சீலையை நீக்கிய பின்னர் பிழிந்தெடுத்த சாற்றினை குடித்தல் போதுமானது. இதனைப் பல்வேறு துண்டுகளாக வெட்டி, சுத்திகரிக்கப்பட்ட துய செம்புத்தூளை சட்டியிலிட்டு வறுத்து பின்னர் அவ்வெட்டிய துண்டுகளால் கடைந்தால் ஒருவகையான திரவம் உருவாகும். இதனை தயாரிப்பதற்கு ஒரு பலம் செம்பு தூளுக்கு 4 கரும்புகள் அவசியமாகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் திரவத்தினைக் கொண்டு பலவகையான நோய்களை நீக்குவதற்கான மருந்துகளை வருவாக்க முடியும். மேலும் இது போன்ற மருத்துவ குறிப்புகளுக்கு Patti Vaithiyam (பாட்டி வைத்தியம்)
Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam
Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)
Article By: Tamilpiththan