கண்டங்கத்தரி (வட்டுக்கத்தரி) யின் மருத்துவ குணங்கள்! Kandankathiri Benefits in Tamil Vattu Kathirikai Payangal

0

வெண் குஷ்டம், பாதவெடிப்பு, பல் வலி பல்கூச்சம், காய்ச்சல், தலைவலி, வாத நோய்கள், சிறுநீர் எரிச்சல் மற்றும் கடுப்பு, இருமல் என்பவற்றிற்கு அருமருந்தாகும் வட்டுக்கத்திரி! கண்டங்கத்தரியின் மருத்துவ பயன்கள் kandankathiri benefits in tamil Vattu Kathirikai Payangal பயன்கள் நன்மைகள். kandankathiri uses in tamil

Kandankathiri Benefits in Tamil

கண்டங்கத்தரிக்கு வட்டுக்கத்தரி, கண்டகாரி, முள்ளிக்காய், கண்டங்காரி, பொன்னிறத்தி, முள்கொடிச்சி, சிங்கினி ஆகிய வேறு பெயர்கள் உண்டு. சிறுபஞ்சமூல வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற செடி வகையைச் சேர்ந்ததும் எல்லா இடங்களிலும் வளரக் கூடியதுமான கண்டங்கத்தரி (Yellow fruit nightshade) அரிய பல மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

மூலிகை வகைகளில் கண்டங்கத்தரியானது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். “தச மூலம்” என்று சொல்லப்படுவது சித்த மருந்துகளில் புகழ் பெற்றதாகும். அதாவது பத்து வகையான மூலிகைகளின் வேர்களைக் கொண்டு இந்த மருந்து தயாரிக்கப் படுவதால் தச மூலம் எனப் பெயர் பெற்றது. இப்பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத்தரியும் ஒன்றாகும் என்பது இதற்கு பெருமையே.

வட்டுக்கத்தரி செடி இலங்கை மற்றும் தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் குப்பை மேடு கரிசல் மண் செம்மண் வண்டல் மண்ணில் மானாவாரியாக வளர்ந்து காணப்படுகின்றது. இலங்கையில் இதனை வட்டுக்கத்தரி என்றே அதிகமாக அழைக்கின்றனர்.

நீல நிறத்திலான பூக்களினையும் சிறிய கத்தரிக்காய் வடிவிலான காய்களினையும் காய் முற்றி பழுக்கும் போது மஞ்சள் நிறத்திலும் காணப்படுவதுடன் கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான இதன் இலை பூ காய் பழம் விதை பட்டை வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணமுடையனவாக காணப்படுகின்றது.

இளம் பிள்ளை வாத நோய் தாக்கிய சிறுவர்களுக்கு, கண்டங்கத்தரி தளைகளை நீருடன் மட்பாண்டத்தில் வேக வைத்து நீரை குளியல் செய்து வர குணமாகும்.

மஞ்சள் நிறத்திலான பழுத்தை நன்கு உலர்த்தி நெருப்பில் சுட்டு பொடியாக்கி ஆடாதோடை இலைகளில் வைத்துச் சுருட்டு போலச் செய்து வாயில் புகை பிடித்து வரும் போது பல் வலி பல்கூச்சம் மற்றும் பல் அரணை என்பன தீருவதுடன் அதனை உணவாக எடுத்துக் கொள்ளும் போது இரத்த அழுத்தம் சீர் செய்யப்படும்

கண்டங்கத்திரி வேர் ஆடு தொடா வேர் சுக்கு திப்பிலி மற்றும் ஓமம் போன்றவற்றை இடித்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு சுண்ட காய்ச்சி தினமும் காலை மாலை குடித்து வரும் போது கபம் சம்பந்தமான காய்ச்சல் காணாமல் போவதுடன் இக்காயை சுண்டைக்காய் போன்று குழம்பிலிட்டு அளவாக அருந்தி வரும் போது பசி தூண்டப்படும்.

கண்டங்கத்தரி பழத்தை மண் பாண்டத்தில் இட்டு தண்ணீர் சேர்த்து வேக வைத்து குழம்பு பதமாக இருக்கும் போது ஒரு பங்கு நல்லெண்ணெய் கூட்டி மெழுகு பதம் வரை நன்கு காய்ச்சி வடித்து பெறப்பட்ட கலவையை வெண் குஷ்டத்திற்கு மேல் தடவி வரும் போது வெண் குஷ்டம் குணமடைவதுடன் இதனை காதில் இரண்டு சொட்டு விட்டு வரும் போது காது நோய் குணமடையும்.

30 கிராம் வேர் 5 கிராம் சுக்கு 5 கிராம் சீரகம்; மற்றும் ஒரு பிடி கொத்தமல்லி ஆகியனவற்றை இரண்டு லிட்டர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அரை லிட்டராக காய்ச்சி தினமும் 4 முதல் 6 தடவைகள் 100 மில்லி வீதம் குடித்து வரும் போது சீதளக் காய்ச்சல் சளிக் காய்ச்சல் மற்றும் நுரையீரல் காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து வகையான காய்ச்சல்களும் நீங்கும்.

இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து உடலில் தேய்த்து வரும் போது வியர்வை நாற்றம் உடலை விட்டு நீங்குவதுடன் காலில் ஏற்படும் வெடிப்பிற்கு இவ்விலையை இடித்து பெறப்படும் சாறுடன் ஆளி விதை எண்ணெய் சம அளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசி வருதல் நல்ல பலனைத்தரும்.

மேலும் கண்டங்கத்திரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவப் பண்பு கொண்டுள்ளதாக உயர்நிலை ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டங்கத்திரி இலையை நன்கு இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல் லெண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து பூசி வரும் போது தலைவலி மற்றும் கீல்வாதம் போன்ற வாத நோய்கள் குணமடையும்.

இர‌ண்டு கண்டங்கத்தரி இசங்கு தூதுவளை மற்றும் ஆடாதொடை ஆகிய மூலிகைச் செடிகளின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் நன்கு காயவைத்துப் பொடியாக்கி தினமும் இரு வேளை ஒரு கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரும் போது சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்னைகளும் குணமடையும்.

அதிகரித்த உடல் சூடு காரணமாக சிறுநீர் வெளியேறும் போது நீர்த்தாரையில் எரிச்சலும் கடுப்பும் உண்டாகும் போது நன்கு சுத்தம் செய்த கண்டங்கத்தரி இலையிலுள்ள முட்களை வெட்டி எடுத்துவிட்டு அம்மியில் வைத்து நசித்து கையில் வைத்துக் கசக்கிப் பிழிந்து ஒன்னரைத் தேக்கரண்டியளவு சாறு எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து எந்த நேரத்திலும் சாப்பிட்டால் சாப்பிட்ட இரண்டு மணி நேரத்தில் எரிச்சல் மற்றும் கடுப்பு இல்லாமல் சிறுநீர் சரளமாக வெளியேறும்.

கண்டங்கத்தரி பழத்தை நன்கு உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டுவேளை கொடுத்து வரும் போது சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள் பட்ட இருமல் நீங்கும்.

வட்டுக்கத்தரி பழத்தை தீயில் வாட்டும் போது புகையை பல்லில் படும்படி செய்தால் பல்லில் இருக்கும் கிருமிகள் நீங்கி வலி தீரும். இவ்வாறாக இதனை சாதாரணமாக அவ்வப்போது எடுத்துக் கொண்டே வந்தால் சிறு சிறு நோய்களுக்கெல்லாம் ஆஸ்பத்திரிக்கு செல்வதை தவிர்த்து நீண்ட காலம் மிகவும் ஆரோக்கியமாக வாழ முடியும். Kandankathiri Benefits in Tamil

Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவார ராசிப்பலன்- ஜனவரி 20 முதல் 26 வரை!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 21.01.2019 திங்கட்கிழமை !