Kambu benefits in Tamil, கம்பு பயன்கள் Pearl Millet – “Kampu Benefits in Tamil”, Kambu Payangal “கம்பு பயன்கள்” Kambu uses in Tamil. Kampu கம்பு Kambu benefits for diabetes in Tamil, kambu benefits for weight loss in Tamil, Kambu Payangal, Kambu Nanmaigal, Nutritional Value and Health Benefits of Pearl Millet கம்பு பயன்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள். சர்க்கரைநோய், Kambu Dosai, Kambu Koozh, Kambu Roti, Kambu Idli.

கம்பு எனப்படும் இத்தானியமானது Pearl Millet மற்றும் Pennisetum glaucum என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இத்தானியம் ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் வறண்ட பிரதேசங்களில் பெருமளவில் பயிரிடப்பட்டு வருகிறது.
இதன் வகை/Species:P. glaucum
குடும்பம்/Family: Poaceae
இனம்/Genus: Pennisetum
இராட்சியம்/Kingdom: Plantae
இந்த கம்பு தானியமானது நீண்ட கால வரலாற்றில் ஒரு கால்நடை தீவனத்திற்காக பயிரிடப்பட்ட ஒரு வகை புல்லினமாகும். ஆனாலும் காலப்போக்கில் இது ஆபிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பெருமாளவில் மனிதர்களின் உணவாக பயிரிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் முதிர்ந்த தாவரமானது 0.5-4m க்கு இடைப்பட்ட உயரத்தில் வளரக்கூடியது. இத்தானிய வித்துக்கள் கிட்டத்தட்ட வெள்ளை, மங்களான மஞ்சள்,கபிலம் ,சாம்பல்,மென்கருநீலம் அல்லது நாவல் ஆகிய நிறங்களை கொண்டு காணப்படுகிறது.
கம்பு தானியத்தின் வரலாறு History of Pearl Millet
வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே ஆபிரிக்கா,இந்தியா மற்றும் அதன் துணைக்கண்டங்களில் இத்தானியமானது முக்கிய பயிர்ச்செய்கையாக இருந்து வந்துள்ளது. இத்தானியம் முதலில் தோற்றம் பெற்றது ஆபிரிக்காவில் ஆகும். கிமு 2000 ஆண்டுக்காலப்பகுதியில் இந்தியாவிலும் அதற்கு முன்னரே ஆபிரிக்காவிலும் இத்தானியம் பயிரிடப்பட்டிருக்கலாம் என பண்டய தொல் பொருள் ஆராட்சியாளர்களின் சான்றுகள் கூறுகிறது.
ஆபிரிக்கவிலும் இந்தியாவிலும் இத்தானிய உணவு வகைகள் முக்கிய பாரம்பரிய உணவாக இன்றும் இருந்து வருகிறது. இது பிற்பட்ட காலங்களில் அதாவது 19ம் நூற்றாண்டிகளில் வடஅமெரிக்கா,மேற்கு ஐரோப்பா ஆகிய நாடுகளில் அறிமுகமாகியபோது இத்தானியம் பறவைகள்,விலங்குகளின் தீவனத்திற்காக பயிரிடப்பட்டது ஆனால் இப்போது இது ஆரோக்கியமான,சத்தான உணவாக மக்கள் மத்தியில் கருதப்பட்டு பெருமளவில் பயிரிடப்படுகிறது.தற்போது இந்தியா இத்தானிய உற்பத்தியில் பொருளாதாரச்சந்தையில் முன்னிலையிலும் சீனா அடுத்ததாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கம்புத்தானிய பயிர்ச்செய்கை Cultivation of Pearl Millet
கம்புத்தானியமானது மற்றைய வெப்ப வலய தானியங்களோடு ஒப்பிடும் போது மிகவும் சகிப்புத்தன்மையுள்ள, குறைவான ஈரப்பதனும், மண்வளமும் உள்ள இடத்திலும், அமிலத்தன்மையுள்ள மணல் பாங்கான இடத்திலும் செழித்து வளரக்கூடிய தன்மையுள்ளது. இத்தானிய பயிர்ச்செய்கைக்கு உரங்கள் பெருமாளவில் தேவையில்லை ஏனென்றால் இதன் வேர் ஆழமாகச் சென்று நைதரசன், பொஸ்பரஸ், பொட்டசியம் ஆகிய கனிமங்களை நிலத்திலிருந்து பெற்றுகொள்கிறது.இவ்வகை சிறப்பியல்புகள் இருப்பதால் மற்ற தானியங்களை விட இதற்கு விவசாயிகள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு உண்டு. மற்றும் இது உயர் உப்புத்தன்மையும், தாழ் PH பெறுமானம் கொண்ட மற்ற தானியங்கள் வளரமுடியாத நிலத்திலும் கூட இது சகிப்புத்தன்மையுடன் செழித்து வளரக்கூடியது. (சோளம்,கோதுமை).
கம்பு தானியமானது கோடைகாலத்தில் சுழற்சிமுறை பயிர்செய்கைக்கும் பொருத்தமானது. இதன் கதிர்கள் மேலிருந்து கீழாக பூக்கிறது, அது போன்றே மேலிருந்து கீழாக வித்துக்களும் முதிர்ச்சியடைகிறது. இத்தானியத்திற்கு விரைவாகவும், ஆழமாகவும், நான்குபக்கமும் பரந்தும் வளரக்கூடிய வேர் அமைப்பு இருப்பதால் நீரையும், கனியுப்புக்களையும் உறிஞ்சி எச்சூழலிலும் வளரும் ஆற்றல் கொண்டது.இது பூத்து 40 நாட்களின் பின்னர் அறுவடைக்கு தயாராகிறது. தற்போது உலகத்தானிய உற்பத்தியில் 50 சதவிகிதம் இக்கம்புத் தானியம் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பு தானியத்தை பயிரிடும் நாடுகளில் இதற்கு வழங்கப்பட்டுள்ள பெயர்கள் - Names of Pearl millet
ஆபிரிக்கா In Africa : gero (Hausa), N!u-khwaba ( Khwe language , Botswana), Arum ( Borno Kanuri ), Uwele (Kiswahili), Oka (Yoruba), mahangu (Mbukushu, Oshiwambo language ), saɲo (Bambara), gawri (Fula), babala, nyoloti, dukkin, souna, petit mil (French), heyni (Zarma), masago (Somali), mexoeira (Mozambique), biltug (Tigrinya), biltug (Blin), mhunga (Shona, Zimbabwe), inyawuthi (Northern Ndebele, Zimbabwe), lebelebele (Setswana, Botswana), zembwe ( Ikalanga , Botswana), دْرُعْ dro’o (Tunisian Arabic), دُخن dokhn (Yemeni Arabic) mahangu (Namibia, Oshiwambo)
அவுஸ்ரேலியா In Australia: bulrush millet
பிரேசில் In Brazil: milheto
ஐரோப்பா In Europe: candle millet, dark millet
இந்தியா In India: கம்பு (Kambu in Tamil); (“Kambam” in Malayalam); બાજરી or બાજરો
(Bajri or Bajro in Gujarati); बाजरी (Bajri in Rajasthani and Marathi), ಸಜ್ಜೆ
/ಕಂಬು(Sajje/kambu in Kannada); बाजरा (Bajra in Hindi, Urdu and Punjabi [“ਬਾਜਰਾ”]) and
సజ్జలు(sajjalu in Telugu) and বাজরা (“ba:jra:” in Bengali).
பாகிஸ்தான் In Pakistan: باجرا (Ba’ajra, in Urdu, Kashmiri, Balochi, Pashto, Punjabi, Saraiki); ٻاجھري Sindhi,
அமெரிக்கா In USA: cattail millet (Pennisetum americanum)
நேபாள் In Nepal: “जुनेलो” ( junelo) Wikipedia Link
ஊட்டச்சத்துக்கள் கம்பு தானியத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் – Nutritional value of Pearl Millet
புரதம்: அமினோ அமிலம்
மாச்சத்து: காபோகைட்ரேட், நார்ச்சத்து
கொழுப்பு: கொழுப்பமிலம், Saturated Fat, Monounsaturated Fat, Polyunsaturated Fat
Omega-3 Fatty Acids, Omega-6 Fatty Acids
வைட்டமின்கள்: வைட்டமின் E, வைட்டமின் K, Thiamin, Riboflavin, Niacin, வைட்டமின் B6, Folate, Pantothenic Acid
கனியுப்புகள்: சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பொஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், சிங், கொப்பர், மங்கனீஸ், செலினியம்
கம்பு பயன்கள் கம்புத் தானியத்தின் ஆரோக்கியப் பயன்பாடுகள் – Health benefits of Pearl Millet
வைட்டமின்கள் நிறைந்த கம்பு, உடலுக்குச் சிறந்த ஆற்றலையும் வலிமையையும் தரும்.
உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; சோர்வை நீக்கி, புத்துணர்வு தரும்; அஜீரணக் கோளாறுகளைச் சரிசெய்யும்.
வயிற்றுப்புண் வயிற்றுப்புண் வராமல் தவிர்க்கும்.
வளரும் குழந்தைகளுக்கும் பூப்பெய்திய பெண்களுக்கும் ஏற்றது.
இதில் உயர்ந்த அளவில் உள்ள இயற்கையான சுண்ணாம்புச்சத்தானது எலும்பு முறிவு எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்மந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.
இதில் வைட்டமின் B12 இருப்பதால் எமது இதயத்தையும், நரம்புமண்டலத்தையும் சீராக செயல்படுத்துவதற்கும் மற்றும் எமது சருமத்தை பாதுகாப்பதுடன் வைத்திருப்பதற்கும், முடி வளருவதற்கும் உதவுகிறது.
உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு இதில் உள்ளதால், இதய நோயிலிருந்து பாதுகாக்கும். இது சிறுநீரைப் பெருக்கி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இத்தானியத்தில் உயர் அளவில் பொஸ்பரஸ் இருப்பதாலும் அதில் உள்ள adenosine
triphosphate(ATP) மற்றும் nucleic acids ஆகியவை எமது உடலின் அனைத்துக் கலங்களையும், நரம்பு மண்டலத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.
அண்மையில் கிடைத்த ஆய்வுகளின் முடிவின் படி இந்த கம்புத்தானிய வகை உணவுகளை உட்கொண்டு வரும் போது இதில் உள்ள கரைக்க முடியாத நார்ச்சத்துக்கள் உணவு செரிமானத்திற்கும்,இன்சுலின் சுரத்தலை அதிகரித்து, இரத்தத்தில் சக்கரை இரத்தத்தில் சக்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும், பித்த அமிலம் சரியான அளவில் சுரந்து பித்தப்பைகல் உருவாதலைத் தடுப்பதற்கும் உதவுகிறது.
இந்த கம்புத்தானிய வகை உணவுகளை உட்கொண்டு வரும் போது அடிக்கடி ஏற்படும் சளி, தடிமன், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கும், பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய்க்கு நல்ல தீர்வாகவும் அமையும்.
கம்புத் தானியத்தில் செய்யக்கூடிய உணவு வகைகள்
Kambu Kool

•கம்பு – கால் கிலோ,
•மோர் – அரை லிட்டர்,
•உப்பு – தேவையான அளவு,
•சின்ன வெங்காயம் – 20,
•தண்ணீர் – தேவையான அளவு
•முதலில் கம்பைக் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து அரை மணி நேரம்
வெயிலில் காய விடவும்.
•பிறகு மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக மையாக அரைத்துக் கொள்ளவும்.
•சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாய் அகன்ற
பாத்திரத்தை வைத்து ஒன்றரை லிட்டர் தண்ணீர்
ஊற்றிக் கொதிக்கவிடவும்.
•பிறகு அரைத்த கம்பை தண்ணீரில் கெட்டியாக கரைத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துக்
கட்டியில்லாமல் கலக்கவும்.
•கம்பு 10 நிமிடம் கொதித்ததும் உப்பு போட்டு கரண்டியால் கலக்கி இறக்கவும். கூழ் சிறிது கெட்டியாக இருப்பது போல் இருந்தால், தண்ணீர் ஊற்றிக் கலந்து கொள்ளலாம்.
•பரிமாறும் போது மோர் ஊற்றிக் கலக்கி நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பருகுவதற்குக் கொடுக்கவும்.
Kambu Dosai

•கம்பு 3கப்
•உழுந்து – 1கப்
•வெந்தயம் 2 tbsp
•உப்பு தேவையான அளவு
•Oil – 2 tbsp
•தண்ணீர் தேவைக்கேற்ப
•தனித்தனியாக கம்பு, உழுந்து,வெந்தயம் ஆகியவற்றை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
•இவை அனைத்தையும் நன்கு அரைத்து 8 மணி நேரம் நொதிக்க விடவும்.
•தேவைக்கு எற்ப உப்பு,தண்ணீர் விட்டு கலக்கி சூடாக்கிய தோசைக்கல்லில் ஊற்றி தோசை சுடவும், தோசையை சுற்றி oil விட்டு திருப்பி விடவும்.
•தோசை தயாரானதும் தக்காளி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
Kambu Idli

• கம்பு 1 கப்
•உழுந்து – ½ கப்
•வெந்தயம் 1 tbsp
•உப்பு தேவையான அளவு
•Oil – 2 tbsp
•தண்ணீர் தேவைக்கேற்ப
•தனித்தனியாக கம்பு, உழுந்து,வெந்தயம் ஆகியவற்றை கழுவி 6 – 8 மணித்தியாளங்கள் ஊற வைக்கவும்.
•தண்ணீரை வடித்து பின் அனைத்தையும் நன்கு அரைத்து 8 மணி நேரம் நொதிக்க விடவும்.
•தேவைக்கு எற்ப உப்பு சேர்த்து கலக்கி இட்லி தட்டில் எண்னெய் தடவி மாவை ஊற்றி பின் 10 நிமிடங்கள் ஆவியில் அவிக்கவும்.
•இட்லி தயாரானதும் தக்காளி அல்லது தேங்காய் சட்னியுடன் சுடச்சுட பரிமாறவும்.
Kambu Roti

•கம்பு – 2 கப்
•கொதி நீர் – தேவையான அளவு
•ரொட்டி தட்ட – வாழை இலை எண்ணெய்
•உப்பு – தேவையான அளவு
•கம்பில் தண்ணீர் தெளித்து, உரலில் இடித்து, அதனை உலர்த்தி மில்லில் கொடுத்து அரைத்து மாவாக்கிக் கொள்ளவும். தேவைக்கேற்ப எடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
•இதில் தேவையான அளவு மாவை எடுத்துக் கொண்டு சிறிது உப்பு சேர்த்து, கொதி நீரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு நன்றாக அழுத்தி பிசைய வேண்டும்.
•பின்னர் வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பர் எடுத்துக் கொண்டு தண்ணீர் தொட்டு வட்ட வட்டமாக ரொட்டி போல் தட்ட வேண்டும்.
•பின்னர் மிதமான சூட்டில் தோசைக்கல்லை வைத்து, காய்ந்தது, மெலிசாக தட்டி வைத்துள்ள ரொட்டியை போட்டு சுற்றிலும் எண்ணெய் ஊற்றி இரு பக்கமும் திருப்பிப்போட்டு எடுக்கவும். கம்பு என்பதால் வேக நேரம் எடுக்கும். எனவே பொறுமையாக செய்து சாப்பிட வேண்டும்.
Millet Benefits சிறுதானிய பயன்கள்
Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam
Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)
Article By: Tamilpiththan