July Matha Rasi Palan 2020 ஜூலை மாத ராசி பலன் ஆடி மாத ராசி பலன் Aadi Matha Rasi Palan monthly Rasi Palan in Tamil. July Matha Rasi Palan 2020 ஆங்கில மாத ராசி பலன்கள்.
July Matha Rasi Palan 2020
மேஷம்: உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். தொழில் உத்தியோக ரீதியாகவும் புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது அலைச்சலை குறைக்க உதவும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். முருகன் வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 01-07-2020 இரவு 08.55 மணி முதல் 03-07-2020 பின்இரவு 12.10 மணி வரை மற்றும் 29-07-2020 அதிகாலை 02.48 மணி முதல் 31-07-2020 காலை 07.05 மணி வரை.
ரிஷபம்: லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், ஜென்ம ராசியில் சுக்கிரன், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய இனிய மாதமாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். நெருங்கியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். சிவ வழிபாடு, அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 03-07-2020 பின்இரவு 12.10 மணி முதல் 06-07-2020 அதிகாலை 05.00 மணி வரை மற்றும் 31-07-2020 காலை 07.05 மணி முதல் 02-08-2020 பகல் 12.55 மணி வரை.
மிதுனம்: செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பு மரியாதை மேலோங்கும். நண்பர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இதுவரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள், நெருக்கடிகள் யாவும் விலகும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். சூரியன், ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 06-07-2020 அதிகாலை 05.00 மணி முதல் 08-07-2020 பகல் 12.30 மணி வரை.
கடகம்: உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 9-ல் செவ்வாய், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். தொழில் வியாபாரத்தில் தேக்கங்கள் விலகி லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வான நிலையினை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 08-07-2020 பகல் 12.30 மணி முதல் 10-07-2020 இரவு 10.55 மணி வரை.
சிம்மம்: உங்கள் ராசியதிபதி சூரியன், ராகு சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 6-ல் சனி, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகளும் மேன்மைகளும் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். செவ்வாய் 8-ல் இருப்பதால் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது சிறப்பு. முருக கடவுளை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 10-07-2020 இரவு 10.55 மணி முதல் 13-07-2020 பகல் 11.15 மணி வரை.
கன்னி: உங்கள் ராசிக்கு சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் தாராள தனவரவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கக் கூடிய யோகம் அமையும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் தொடர்புகளால் லாபமும், பயணங்களால் அனுகூலமும் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். குரு பகவான் வழிபாடு சுபிட்சத்தை அளிக்கும்.
சந்திராஷ்டமம் – 13-07-2020 பகல் 11.15 மணி முதல் 15-07-2020 இரவு 11.18 மணி வரை.
துலாம்: கேது 3-லும், செவ்வாய் 6-லும் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். மாத கோளான சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி முன்னேற்றமான நிலையும் லாபங்களும் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் – 15-07-2020 இரவு 11.18 மணி முதல் 18-07-2020 காலை 09.00 மணி வரை.
விருச்சிகம்: உங்கள் ராசிக்கு சுக்கிரன் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத செலவுகளால் கடன்கள் வாங்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். முடிந்த வரை சிக்கனமாகவும் ஆடம்பர செலவுகளைக் குறைத்து கொள்வதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபங்களை பெற முடியும். சிவ வழிபாடு, அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 18-07-2020 காலை 09.00 மணி முதல் 20-07-2020 மாலை 03.28 மணி வரை.
தனுசு: உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 7-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன், குடும்பத்தில் ஒற்றுமை குறையும் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துக் கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிப்பதால் நிம்மதியற்ற நிலை உண்டாகும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 20-07-2020 மாலை 03.28 மணி முதல் 22-07-2020 இரவு 07.15 மணி வரை.
மகரம்: உங்கள் ராசிக்கு செவ்வாய் 3-லும், சுக்கிரன் 5-லும் சஞ்சரிப்பதால் நல்ல பணவரவுகள், குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் குறைந்து ஏற்றம் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மந்த நிலைகள் விலகி லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்து கெடுபிடிகள் விலகும். விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடுவது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம் – 22-07-2020 இரவு 07.15 மணி முதல் 24-07-2020 இரவு 09.35 மணி வரை.
கும்பம்: உங்கள் ராசிக்கு சுக்கிரன் 4-ல், கேது 11-ல், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து எடுக்கும் காரியங்களை தடையின்றி செய்து முடிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களையும் தவிர்த்து விட முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. முருக பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் – 24-07-2020 இரவு 09.35 மணி முதல் 26-07-2020 இரவு 11.50 மணி வரை.
மீனம்: ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, தேவையற்ற அலைச்சல், குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதும், நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நற்பலனை தரும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்கு பின் தான் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற உயர்வு தாமதப்படும். சிவ வழிபாட்டையும், முருக வழிபாட்டையும் மேற்கொண்டால் நன்மைகள் உண்டாகும்.
சந்திராஷ்டமம் – 26-07-2020 இரவு 11.50 மணி முதல் 29-07-2020 அதிகாலை 02.48 மணி வரை.
சுப முகூர்த்த நாட்கள்
ஜூலை 2 வியாழன் (வளர்பிறை)
ஜூலை 12 ஞாயிறு
July Matha Rasi Palan 2020, ஜூலை மாத ராசி பலன், ஆடி மாத ராசி பலன், Aadi Matha Rasi Palan, Monthly Rasi Palan July, monthly Rasi Palan in Tamil, Monthly Horoscope in Tamil. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். July Matha Rasi Palan 2020.
ராசி பலன் ஜோதிடம்
By: Tamilpiththan