அம்மா Amma | தமிழ் அகராதி அம்மா Mother அம்மா Amma Mother In Tamil Mother’s Day Wishes(Tamilpiththan kavithai-22)

0

Amma | அம்மா Amma | தமிழ் அகராதி அம்மா Mother அம்மா Amma | Mother’s Day

Amma

ஓர் ஆணுக்கும் ஓர் பெண்ணுக்கும் என இருபாலினருக்கிடையிலான பா(லுற)வின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பெண் பாலினமாக இருப்பவர் அம்மா அதாவது தாய் ஆவார். அதாவது ஒரு குழந்தையை யார் பெற்றெடுக்கிறாரோ அவர் தான் அம்மா. ஒவ்வொரு உயிருக்கும் ஆதாரம் அன்னையே.

அம்மா என்னும் சொல் எவ்வாறு உருவாகியது.

அம்மா என்னும் சொல் இயற்கையாகவே உருவான ஓர் சொல் ஆகும். பிறந்த குழந்தை அழுவதும், சிரிப்பதுமாக வாயை மூடி மூடித் திறப்பதாக இருக்கும். அப்போது குழந்தை வாயைத் திறக்கும் போது “அ” என்ற ஒலி எழுகின்றது. குழந்தை வாயை மூடும் போது “ம்” என்ற ஒலி எழுகின்றது. ம்+அ = ம்ம (ம்ம) என்ற ஒலி மீண்டும் மீண்டும் வெளிவரும் போது அது அம்மா என்ற சொல்லைக் கொடுக்கிறது.

அம்மா என்னும் சொல்லுக்கு ஒத்த சொற்கள்

அம்மாள்
அன்னை
தாய்
மௌவை
மாதா
ஆத்தா
பெற்றவள்
ஆய்

வேற்றுமையுருபு ஏற்றல்

அம்மா + ஐ: அம்மாவை
அம்மா + ஆல்: அம்மாவால்
அம்மா + ஓடு: அம்மாவோடு
அம்மா + உடன்: அம்மாவுடன்
அம்மா + கு: அம்மாவுக்கு
அம்மா + இல்: அம்மாவில்
அம்மா + இருந்து: அம்மாவிலிருந்து
அம்மா + அது: அம்மாவது
அம்மா + உடைய: அம்மாவுடைய
அம்மா + இடம்: அம்மாவிடம்
அம்மா + (இடம் + இருந்து): அம்மாவிடமிருந்து

அம்மாவைப்பற்றிய பாடல்கள் | Amma Songs

அம்மாக்கண்ணு பாட்டு

ஆசிரியர் : மகாகவி பாரதியார்.

”பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
மனந் திறப்பது மதியாலே”
பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே

ஏட்டைத் துடைப்பது கையாலே-மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே;
வேட்டை யடிப்பது வில்லாலே-அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே

காற்றை யடைப்பது மனதாலே-இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சோற்றைப் புசிப்பது வாயாலே-உயிர்
துணி வுறுவது தாயாலே

அம்மா இங்கே வா! வா!

அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்,
ஊரில் யாவர் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயமின்றி சொல்லுவேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.

அம்மா என்னும் திரைப்படம் Amma Movies

அம்மா – 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திக்குறிசி சுகுமாரன், டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

அம்மா – இது 2017 ஆம் ஆண்டில் வெளிவந்தது அறிமுக இயக்குனரான இரவி உத்யவார் இயக்கிய, இந்திய குற்றவியல் சார்ந்த திகில் திரைப்படமாகும்.

அம்மாவை பற்றிய கவிதைகள் சில | Amma Kavithaigl‌

அம்மாவுக்காக‌ வைரமுத்து எழுதிய‌ கவிதை ‍ “பெத்தவளே உன் பெருமை ஒத்தவரி சொல்லலியே!”

நம்மைப் பெற்று வளர்க்க தூக்கம், சாப்பாட்டைத் துறந்து, பிள்ளைகள் சந்தோஷமே தன் சந்தோஷம் என்று வாழும் தாயின் தியாகத்துக்கு எதுவுமே ஈடாகாது. நாற்பது வயதை எட்டிய ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் அம்மாவை சரியாகப் பார்த்துக்கொள்ளவில்லையோ என்கிற குற்ற உணர்வு மனதுக்குள் தொக்கி நிற்கும். அப்படியொரு சந்தர்ப்பத்தில் கவிப்பேரரசு வைரமுத்து தன் தாய்க்காக ‘முதல் முதலாய் அம்மாவுக்கு’ என்ற தலைப்பில் எழுதிய கவிதை இன்றளவும் பிரபலம். வைரமுத்துவின் ‘கொஞ்சம் தேநீர் நிறைய வானம்’ தொகுப்பில் இந்தக் கவிதை இடம்பெற்றுள்ளது.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தாய்ப்பாசத்தின் அடி ஆழம் வரை பயணிக்கும் அவருடைய கவிதை வரிகள் அம்மா’ எனும் அற்புதத்தை மீண்டும் ஒருமுறை உணர வைக்கும். பிள்ளை தனக்கு செய்யவேண்டிய கடமையைச் சரியாக நிறைவேற்றாவிட்டாலும், எங்கேயோ இருந்தாலும் என் பிள்ளை நல்லாயிருக்கணும்’ என்று ஊர்க்கோயிலில் வேண்டுதல் வைக்கிற அந்த அம்மாக்களின் மனம் குளிரும் வண்ணம், அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று நன்றி சொல்ல இந்தக் கவிதை பிள்ளைகளை இழுத்துச் செல்லும்; அவர்கள் விருப்பங்களை நிறைவேற்றத் தூண்டும்…

முதன் முதலாய் அம்மாவுக்கு…

ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரும
ஒத்தவரி சொல்லலியே!

காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஓங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமப் போனேனோ?

பொன்னையாத் தேவன்
பெத்த பொன்னே! குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே!

வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு

கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாடப் பிறந்தவனோ?
தரணிஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?

இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
நெனச்சா அழுகவரும்

கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே

தொண்டையில் அதுஎறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

தித்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்புமேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்

வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேளையிலே
பாசம்வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போனபின்னே

அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!

வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே!

எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?

வேறு சில கவிதைகள்

உயிர் நாடி துடிக்க உயிர் மூச்சடக்கி உன்னை பெற்றெடுத்த தாயை உன் உயிர் மூச்சு உள்ளவரை மறவாதே. (தமிழ்பித்தன்)

தாய் என்னும் தீபம் இந்த உலகில் சுடர் விட்டு எரிவதால் தான் பாசம் எனும் ஒளி இந்த உலகில் இன்னமும் மின்னி வருகிறது.

கடல் அலைகளுக்கு என்றுமே விடுமுறை கிடையாது அது போல தான் தாயின் அன்பிற்கும் இந்த உலகில் எல்லை கிடையாது.

சோர்ந்து போய் வந்தாலும் சரி நான் தோற்றுப் போய் வந்தாலும் சரி என்றுமே எனக்கு ஆதரவுகரமாக என் “அம்மா” என் அருகிலே.

என் அம்மாவின் கருவறையே நான் மீண்டும் மரணித்து ஜனிக்க விரும்பும் கருவறை.

எனக்கு பிடித்த அம்மாவின் பொய்களில் இதுவும் ஒன்று “சீக்கிரம் சாப்பிட்டு விடு இல்லை என்றால் நிலா வந்து திருடி கொள்ளும்”.

வாழ்க்கையில் எவ்வளவு துயரங்கள் இருந்தால் என்ன என் அம்மாவின் முகத்தை பார்த்ததும் அவள் தரும் ஆறுதலால் மீண்டும் இந்த உலகையே வெல்லும் அளவிற்கு என்னுள் வலிமை பிறந்து விடுகிறது.

யார் சொன்னது என் காதலி தான் என்னை முதலில் காதலித்தது என்று நான் பிறக்கும் போதே என் முகம் கூட பார்க்காமல் என் அன்னை என்னை நேசிக்க தொடங்கி விட்டாள்.

தாயின் கருவறையில் இருந்து பிறக்கும் போதே கட்பிக்க பட்டு விடுகிறது “அம்மா” என்னும் மூன்று எழுத்து.

காசு பணம் இல்லாதவன் என்றுமே ஏழை இல்லை ஆனால் அன்னையின் அன்பை இழந்தவன் பணம் இருந்தும் ஏழை தான்.

எதையும் கட்டளையிட்டு செய்ய சொல்பவன் தான் “அப்பா” தன் கருணை மொழியில் உணர்த்தி பாசமுடன் எதையும் செய்ய சொல்பவளே “அம்மா”.

எப்போதும் உன் அன்பு எனக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும், உன் தாலாட்டில் நான் தூங்க வேண்டும், உன் அரவணைப்பில் மடி சாய வேண்டும், நான் இருக்கும் வரை என்றுமே நீ வேண்டும் என் தாயே.

எனக்கு என்ன பிடிக்கும் என்பது எனக்கு தெரியுமோ இல்லையோ என் அன்னை தெரிந்து வைத்து இருப்பாள் அனைத்தையும் தன்னுடைய மனக்கணக்கில். அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

அன்பு, அரவணைப்பு, பாசம், பரிவு, பொறுமை, பொறுப்பு, நிதானம், கருணை, கடமை, காதல், நேசம், தன்னலம் இன்மை, தியாகம் என அனைத்து நல்ல ஒழுக்கங்களும் நிரம்பி வழியும் நடமாடும் கடவுளே என்னுடைய அம்மா.

உன்னை பத்து மாதம் முகம் கூட தெரியாமல் நேசித்த உன் தாயை மட்டும் சோதித்து விடாதே.

இந்த உலகில் பணம் மட்டும் இருந்தால் போதும் அனைத்துமே உன் காலுக்கு அடியில் உன் அன்னையின் அன்பை தவிர.

இறைவன் இல்லை என்று சொன்னால் அது பொய் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இறைவன் இருக்கிறான் அம்மாவின் வடிவில்.

கல்லை சிற்பம் செய்து அதனை சிலை ஆக்கி மாலை அலங்காரம் செய்து பூஜை செய்யும் காணாத இறைவனை நம்பி வாழும் நாம் அனைவருமே நமக்காகவே உயிர் வாழும் உயிருள்ள கடவுளான “அம்மா” வை மறந்து தான் போகிறோம்.

தமிழின் உயிர் எழுத்துக்களில் முதலாகி மெய் எழுத்துக்களில் இடையாகி உயிர் மெய் எழுத்துக்களில் கடை ஆகி முற்று பெற்று வரும் பெயர் கொண்ட அற்புத பிறவி “அம்மா”.

தொப்புள் கொடி உறவு

உனக்காக கவிதை எழுத எண்ணினேன் தீர்ந்தது எனது பேனாமையும் புத்தகங்களும் மட்டுமே. நான்கு எழுத்தில் “உலகம்” என உச்சரித்தேன். மூன்று எழுத்தில் “அன்னை” என அழைத்தேன். இரண்டு எழுத்தில் “தாய்” என எழுதினேன். ஓர் எழுத்தில் எழுத எண்ணினேன் வரவில்லை எனக்கு வார்த்தைகள் கீழே “ஆ” என அழுதேன் ஓடி வந்தால் என் அன்னை, அப்போது தான் உனக்கு அப்படியும் ஒரு பெயர் உள்ளது என தெரிந்தது… நான் பிறக்கும்போது உன் தொப்புள் கொடியை வெட்டியது நம்மை பிரிக்க அல்ல … என்னை பெற்ற உன்னை பாராட்டி வெட்டும் ரிப்பன் “அம்மா”.

என்னதான் இருந்தாலும் தாயுனக்கு ஈடாகுமா

உன்னதமாய் உயர்ந்திட வோர்
ஓயாத முனைப் பிருந்தாலும்
உழைக்கின்ற உள்ளங் கையில்
ஊறிவந்த காய்ப் பிருந்தாலும்
கன்னல் மொழிகற்றுக் கவிபாடும்
கவின்மிகு வாய்ப் பிருந்தாலும்
அன்னமிட்ட கைகளில் வளையிட்ட
வகைவந்த வனப் பிருந்தாலும்
தின்னத் தின்னத் திகட்டாத
தீஞ்சுவை இனிப் பிருந்தாலும்-பொன்னனைய
அன்னையெனும் நீயின்றிப் போனால்
அழகுநிறைப் பூவுலகம் சிறந்திடுமா?

விண் ணுக்கும் மண்ணுக்குமோர்
இடையில் இணைப் பிருந்தாலும்
கண் ணுக்கும் கருத்துக்குமோர்
கனவுப் பிணைப் பிருந்தாலும்
பெண் களுக்குப் பெருமைதரும்
பெறற்கரிய பிறப் பிருந்தாலும்
கண் களுக்குஇமை யிரண்டின்
காவலெனும் காப் பிருந்தாலும்
கால மெல்லாம் செல்வம்தன்னைத்
தேடிவைத்த குவிப் பிருந்தாலும்-கோடிகோடிச்
சீலம் நிறைந்த தாய்நீ ! உனையன்றி
அணுவளவும் அவை யெனக்கு உயர்ந்ததாமோ?

என் மனதில் எத்தனையோ
மறந்தறியா நினைப் பிருந்தாலும்
வென் றடையும்செயல் மீதேயென்
குறையாத குறிப் பிருந்தாலும்
வாழ்வினிலே வந்த துயரமென்னை
வதைத்த வதைப் பிருந்தாலும்
தாழ்வு, தடைபல வத்தனையும்
தாண்டிவந்த களிப் பிருந்தாலும்
தஞ்சமென்றுன் மடிமீதென் தலைசாயத்
தணியாத புதைப் பிருந்தாலே – என்தாயே!
தாளாத தனியமைதி தான்வந்தென்னை
வாஞ்சை மிகத் தழுவுதம்மா!

R K மேகன்

அன்னை அன்னைதான்

கருவறையில் காத்திட்டு
அன்பூட்டி அமுதூட்டி
உணர்வோடு உயிர்காத்து
உருவாக்க உழைத்திட்டு
உள்ளத்தில் வைத்திட்டு
விழியாய் வழிகாட்டி
இதயமாய் நினைத்திட்டு
தழைத்திட நாம் வித்தாகி
கற்பதற்கும் உதவிட்டு ​
பாசத்தை பாய்ச்சிட்டு
பண்பை பாங்காய் கற்பித்து
ஒளியாய் விளங்கிடுவாள்
எதையும் தாங்கிடுவாள்
நமக்காக என்றும் வாழ்பவள்
என்றுமே நம் அன்னைதான் !
மறைந்தாலும் நெஞ்சில் வாழ்பவள்
என்றும் நம் அன்னையேதான் !

பழனி குமார்

தாயின் பெருமை திருமந்திரம் – 488

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே. – (திருமந்திரம் – 488)

விளக்கம்:
நாமெல்லாம் சிவபெருமானின் குழந்தைகள். குயில் தனது முட்டையை காக்கையின் கூட்டில் வைத்து விடுகிறது. காக்கையும் எந்தவிதச் சந்தேகமும் இல்லாமல் அந்த முட்டையை அடைகாத்து வளர்த்து விடுகிறது. அதே போல் சிவபெருமானும் தனது குழந்தையான நம்மை நமது தாயின் வயிற்றில் விட்டு வளரச் செய்கிறான். நமது தாயும் நம்மைத் தன்னுடைய குழந்தையாகவே நினைத்து மனச்சோர்வு இல்லாமல், தனது உடலுக்கு அதிக அசைவு கொடுக்காமல் ஜாக்கிராதையாக வளர்க்கிறாள்.

அம்மாவை பற்றிய சினிமா பாடல்கள் | Amma Songs

அம்மா அம்மா எந்தன் ஆருயிரே – உழைப்பாளி (Amma Amma Enthan Aaruyire Song Lyrics)

அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
கண்ணின் மணியே..
தெய்வம் நீயே ஓ ஓ ஓ

அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓர் உயிரே.
இரு கண்ணின் மணியே ஓ ஓ..
தெய்வம் நீயே ஓ ஓ

பூவிழி ஓரம், ஓர் துளி நீரும்
நீ வடித்தாள் மனம் தாங்காது.
பொன்முகம் கொஞ்சம்
வாடி நின்றாலும் நான் துடிப்பின்
வலி தாழாது

பத்து மாசம் சுமந்து
பட்ட பாடும் மறந்து
பிள்ளை செல்வம் பிறக்க
அல்லி கையில் எடுக்க

தாயும் நீயே, தவமிருந்தாயே
வாடுதம்மா பிள்ளையே
வாட்டுவதோ என்னை நீயே.

அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓர் உயிரே.

பாதைகள் மாறி ஓடிய கன்றை
தாய் பசுதான் இங்கு ஏற்காதா
கூட்டில் இருந்து குஞ்சு விழுந்தால்
தாய் குருவி அல்லி சேர்க்காதா

நல்ல காலம் பிறக்க
உன்னை நானும் அறிந்தேன்
உந்தன் கண்கள் திறக்க
இங்கு பாடல் படித்தேன்

போதும் போதும் பிரிந்தது போதும்
வாடுதம்மா பிள்ளையே.
வாட்டுவதோ என்னை நீயே.

அம்மான்னா சும்மா இல்லேடா (Ammana Summa Illada Songs Lyrics)

அம்மான்னா சும்மா இல்லேடா..அ..
அவ இல்லேனா யாரும் இல்லேடா….
அம்மான்னா சும்மா இல்லேடா..அ..
அவ இல்லேனா யாரும் இல்லேடா….
தங்கம் கொண்ட பூமி பூமி…..
உன்னத் தாங்கி கொண்ட சாமி சாமி….
பெத்தவள..மறந்தா அவன் செத்தவனே தாண்டா
அந்த உத்தமியே…நெ(நி)னச்சா
அவன் உத்தமனே தாண்டா…
அம்மான்னா சும்மா இல்லேடா..அ..
அவ இல்லேனா யாரும் இல்லேடா…

நல்ல பேர நீ எடுத்தா
அப்பனுக்கு சந்தோசம்
நாலு காசு நீ கொடுத்தா
அண்ணனுக்கு சந்தோசம்
போற வழி போக விட்டா
புள்ளைக்கெல்லாம் சந்தோசம்
வாராதேல்லாம் வாரித்தந்தா
ஊருக்கெல்லாம் சந்தோசம்
நெஞ்சு நெகிழ்ந்து….மந்திரம் சொன்னா…
வந்திருந்துத்தா>ன் தெய்வம் மகிழும்ம்ம்ம்
ஒன்னு கொடுத்து….ஒன்னு வாங்கினா….
அன்பு என்னடா…பண்பு என்னடா…
தந்தாலும் தராமப் போனாலும்ம்ம்…
தாங்கும் அவ கோவில் தாண்டா…
அம்மான்னா சும்மா இல்லேடா..அ..
அவ இல்லேனா யாரும் இல்லேடா…

ராவு பகல் கண் முழிச்சு
நாளும் உன்னப் பார்த்திருப்பா
தாலாட்டு பாடி வச்சு
தன மடியில் தூங்க வைப்பா
புள்ளைகள தூங்க வச்சு
கண் உறக்கம் தள்ளி வைப்பா
உள்ளத்திலே உன்ன வச்சு
ஊருக்கெல்லாம் சொல்லி வைப்பா
கொஞ்சம் பசிச்சா….நெஞ்சு கொதிக்கும்ம்ம்
தாயி போலத்தான்….நண்பன் அவனே…
சாமி கிட்டத்தான்….உன்ன நெனச்சு…
வேண்டியிருக்கும்ம் அன்பன் அவனே….
அன்னையப்போல் நண்பனும் உண்டு….
தெய்வத்தைப்போல் அன்னையும் உண்டு..
அம்மான்னா சும்மா இல்லேடா..அ..
அவ இல்லேனா யாரும் இல்லேடா….
தங்கம் கொண்ட பூமி பூமி…..
உன்னத் தாங்கி கொண்ட சாமி சாமி….
பெத்தவள மறந்தா>அவன் செத்தவனே தாண்டா
அந்த உத்தமியே (நி)னச்சா
அவன் உத்தமனே தாண்டா
அம்மான்னா சும்மா இல்லேடா..அ..
அவ இல்லேனா யாரும் இல்லேடா…

அம்மா அம்மா நீ எங்க அம்மா (Amma Amma Nee Enga Amma Song Lyrics)

அம்மா அம்மா
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா
எனக்காரு அம்மா

தேடிப்பாத்தேனே
காணோம் ஒன்ன
கண்ணாமூச்சி ஏன்
வா நீ வெளியே

தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்

அம்மா அம்மா
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா
எனக்காரு அம்மா

நான் தூங்கும் முன்னே
நீ தூங்கி போனாய்
தாயே என்மேல்
உனக்கென்ன கோபம்

கண்ணான கண்ணே
என் தெய்வ பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்

ஐயோ ஏன் இந்த சாபம்
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்

பகலும் இரவாகி பயமானதே அம்மா
விளக்குகம் துணையின்றி இருளானதே

உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை நிலையானதே

ஓ…
அம்மா அம்மா
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா
எனக்காரு அம்மா

நான் போன பின்னும்
நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சே உனக்குள்ளும் உண்டு

வானெங்கும் வண்ணம்
பூவெல்லாம் வாசம்
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு

நீயென் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை

ஊரும் பிரிவில்லை தயங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண்முன்னே

காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணைசேரும்
மீண்டும் நான் உன் பிள்ளை

அம்மா அம்மா
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா
எனக்காரு அம்மா

எங்க போனாலும்
நானும் வருவேன்
கண்ணாடி பாரு
நானும் தெரிவேன்

தாயே உயிர் பிரிந்தாயே
கண்ணே நீயும் என் உயிர் தானே

இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும்
நான் பாடும் தாலாட்டு நீ தூங்க காதோரம் என்றென்றும் கேக்கும்

அம்மா தாலாட்டு பாடல்க‌ள் | Amma Thalattu Padalgal

ஆராரோ ஆரிரரோ ( புகழ் பெற்ற பாடல் )

ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ

ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு

கண்ணே யடிச்சாரார்
கற்பகத்தைத் தொட்டாரார்

தொட்டாரைச் சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்

அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்

மாமன் அடித்தானோ
மல்லி பூச் செண்டாலே

அண்ணன் அடித்தானோ
ஆவாரங் கொம்பாலே

பாட்டி அடித்தாளோ
பால் வடியும் கம்பாலே

ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ

ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு

பச்சை இலுப்பை

பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு

கட்டிப் பசும் பொன்னே – கண்ணே நீ
சித்திரப் பூந்தொட்டிலிலே
சிரியம்மா சிரிச்சிடு – கண்ணே நீ
சித்திரப் பூந் தொட்டிலிலே.

இன்னும் சில தாலாட்டுப் பாடல்களில் உறவினரின் பெருமைகள் எல்லாம் வருகின்றன. இவற்றில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம். மாமனைக் கேலி செய்து பாடும் நகைச்சுவைப் பாடல்களும் உள்ளன.

உசந்த தலைப்பா

உசந்த தலைப்பாவோ
‘உல்லாச வல்லவாட்டு’
நிறைந்த தலை வாசலிலே
வந்து நிற்பான் உன் மாமன்

தொட்டிலிட்ட நல்லம்மாள்
பட்டினியாப் போராண்டா
பட்டினியாய் போற மாமன்-உனக்கு
பரியம் கொண்டு வருவானோ?

பால் குடிக்க

பால் குடிக்கக் கிண்ணி,
பழந்திங்கச் சேணாடு

நெய் குடிக்கக் கிண்ணி,
முகம் பார்க்கக் கண்ணாடி

கொண்டைக்குக் குப்பி
கொண்டு வந்தான் தாய்மாமன்.

ஆனை விற்கும் வர்த்தகராம்

ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு

பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்
பல வர்ணச் சட்டைகளும்
பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு
கட்டிக் கிடக் கொடுத்தானோ!

பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு
மின்னோலைப் புஸ்தகமும்
கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே
கவிகளையும் கொடுத்தானோ !

ஐரை மீனும் ஆர மீனும்

ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே
அம்புட்டுதாம் அப்பனுக்கு
வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி
விதம்விதமா அம்புட்டிச்சாம்,

அரண்மனைக்கு ஆயிரமாம்
ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி
அப்பன் விற்று வீடுவர
அண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி

ஆச்சரியப் பட்டார்களாம்,
பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான்
பிரியமாக ஆறெடுத்தேன்
அயலூரு சந்தையிலே-கண்ணே நான்

ஆறு மீனை விற்றுப் போட்டேன்.
அரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை
அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன்.
அரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான்

அழகு பார்த்தேன், ஆலத்தியிட்டு
அத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே உன்
அழகைப் பார்த்து அரண்டார்களே.
அத்திமரம் குத்தகையாம்

ஐந்துலட்சம் சம்பளமாம்
சாமத்தலை முழுக்காம்-உங்கப்பாவுக்குச்
சர்க்கார் உத்தியோகமாம்.

ஆராரோ ஆரிரரோ – Araro Ariraro Song

ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலயும்
காசி பதம் பெற்றவனே!
கண்ணே நீ கண்ணுறங்கு!
கண்மணியே நீ உறங்கு!
பச்சை இலுப்பை வெட்டி,
பவளக்கால் தொட்டிலிட்டு,
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீ உறங்கு!
நானாட்ட நீ தூங்கு!
நாகமரம் தேரோட!
தேரு திரும்பி வர!
தேவ ரெல்லாம் கை யெடுக்க!
வண்டி திரும்பி வர!
வந்த பொண்கள் பந்தாட!
வாழப் பழ மேனி!
வைகாசி மாங்கனியே!
கொய்யாப் பழ மேனி! – நான் பெத்த
கொஞ்சி வரும் ரஞ்சிதமே!
வாசலிலே வன்னிமரம்!
வம்மிசமாம் செட்டி கொலம்!
செட்டி கொலம் பெத்தெடுத்த!
சீராளா நீ தூங்கு!
சித்திரப் பூ தொட்டிலிலே!
சீராளா நீ தூங்கு!
கொறத்தி கொறமாட!
கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல!
வேதஞ் சொல்லி வெளியே வர!
வெயிலேறி போகுதையா!
மாசி பொறக்கு மடா!
மாமன் குடி யீடேற!
தையி பொறக்குமடா – உங்க
தகப்பன் குடி யீடேற!
ஆராரோ ஆரிரரோ
கண்ணே நீ கண்ணுறங்கு!

ஓடும் மான் கண்ணோ

ஓடும் மான் கண்ணோ என் கண்ணே நீ கவரிமான் பெற்ற கண்ணோ
புள்ளி மான் கண்ணோ என் கண்ணே நீ புத்திமான் பெற்ற கண்ணோ
முத்தோ ரத்தினமோ என் கண்ணே நீ தூத்துக்குடி முத்தினமோ…
முல்லை மலரோ என் கண்ணே நீ அரும்புவிரியா தேன்மலரோ..
கண்ணே கண்ணுறங்கு கனியமுதே நீ உறங்கு….

மார்கழி மாசத்திலே

மார்கழி மாசத்திலேதான் – கண்ணே நீ
மாராசாவைப் பார்க்கையிலே
தைப் பொங்கல் காலத்திலே – கண்ணே நீ
தயிரும், சோறும் திங்கையிலே
மாசி மாசக் கடைசியிலே – கண்ணே நீ
மாமன் வீடு போகையிலே
பங்குனி மாசத்திலே – கண்ணே நீ
பங்குச் சொத்தை வாங்கையிலே
சித்திரை மாசத் துவக்கத்திலே – கண்ணே நீ
சீர் வரிசை வாங்கையிலே,
வைகாசி மாசத்திலே – கண்ணே நீ
வயலைச் சுற்றிப் பார்க்கையிலே
ஆனி மாசக் கடைசியிலே – கண்ணே நீ
அடியெடுத்து வைக்கையிலே
அகஸ்மாத்தா ஆவணியில் – கண்ணே நீ
அரண்மனைக்குப் போகையிலே
ஐப்பசி மாசமெல்லாம் கண்ணே – நீ
அப்பன் வீடு தங்கையிலே
கார்த்திகை மாசத்திலும் – கண்ணே
கடவுளுக்குக் கையெடடி

ஆயர்பாடி மாளிகையில் – (ayar padi maligai song lyrics)

ஆயர்பாடி மாளிகையில்
தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான்
தாலேலோ

அவன் வாய்நிறைய மண்ணை உண்டு
மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான்
ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான்
ஆராரோ
(ஆயர்பாடி…)

பின்னலிட்ட கோபியரின்
கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல்
லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க
மயக்கத்திலே இவனுறங்க
மண்டலமே உறங்குதம்மா
ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா
ஆராரோ
(ஆயர்பாடி…)

நாகப்படம் மீதில் அவன்
நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான்
தாலேலோ
அவன் மோக நிலை கூட
ஒரு யோக நிலை போலிருக்கும்
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
(ஆயர்பாடி…)

கண்ணனவன் தூங்கிவிட்டால்
காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகைப் பார்ப்பதற்க்கும்
போதை முத்தம் பெறுவதற்க்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ
(ஆயர்பாடி…)

ஆராரோ ஆரிரரோ ஆம்புலிக்கு நேர் இவரோ
(araro ariraro ambulikku song lyrics
)

படம் : சிறுத்தை
பாடலாசிரியர் : அறிவுமதி

ஆராரோ ஆரிரரோ ஆம்புலிக்கு நேர் இவரோ

தாயான தாய் இவரோ தங்க ரத தேர் இவரோ

மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்

நிழலுபட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்

தூங்காமணி விளக்கே தூங்காம தூங்கு கண்ணே

ஆச அகல் விளக்கே அசையாமல் தூங்கு கண்ணே

ஆராரோ ஆரிரரோ…. ஆரிரோ ஆரிரரோ….

ஆராரோ ஆரிரரோ….ஒ ஒ… ஆரிரோ ஆரிரரோ….

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே!
(neerodum vaigaiyile song lyrics)

படம் : பார் மகளே பார்
பாடலாசிரியர் : கண்ணதாசன்

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
மகளே உன்னைத் தேடி நின்றாளே மங்கை இந்த மங்கல மங்கை
வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை உன் மழலையின் தந்தை
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக்
கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக்
கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
குயிலே என்று கூவி நின்றேனே உன்னை என் குலக்கொடி உன்னை
துணையே ஒன்று தூக்கி வந்தாயே எங்கே உன் தோள்களீல் இங்கே
உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளமல்லவா
உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே!
(kaalamithu kaalamithu song lyrics)

படம்: சித்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்

படம் : சித்தி
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : M.S.V
நடிகை : பத்மினி

பாடல் ஒலிவடிவில்

பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
இறப்பில் ஒரு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கம் இல்லை
என்னரிய கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு

ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே

நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெள்ளுதமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன்
போராடச் சொல்லுமடி
தீராத தொல்லையடி

(காலமிது)

மாறும்..
கன்னி மனம் மாறும்
கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும்போது
தூக்கம் என்பதேது
தான் நினைத்த காதலனை
சேர வரும்போது
தந்தை அதை மறுத்து விட்டால்
கண்ணுறக்கம் ஏது..
கண்ணுறக்கம் ஏது..

மாலையிட்ட தலைவன் வந்து
சேலை தொடும்போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது..
கண்ணுறக்கம் ஏது

(காலமிது)

ஐயிரண்டு திங்களிலும்
பிள்ளை பெறும்போதும்
அன்னை என்று வந்தபின்னும்
கண்ணுறக்கம் போகும்
கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து
காலம் வந்து சேரும்
காணாத தூக்கமெல்லாம்
தானாகச் சேரும்
தானாகச் சேரும்

(காலமிது)

ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
(karuppu nila neethan kalanguvathen song lyrics)

கருப்பு நிலா
கருப்பு நிலா

{ கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர்
விழுவது ஏன் } (2)

சின்ன மானே
மாங்குயிலே உன் மனசுல
என்ன குறை பெத்த ஆத்தா
போல் இருப்பேன் இந்த
பூமியில் வாழும் வர

எட்டு திசை
யாவும் கட்டி அரசாள
வந்த ராசா நீதானே

கருப்பு நிலா நீதான்
கலங்குவது ஏன் துளி
துளியாய் கண்ணீர்
விழுவது ஏன்

பத்து மாசம்
மடியேந்தி பெத்தெடுத்த
மகராசி பச்ச புள்ள உன்ன
விட்டு போனதென்னி
அழுதாயா

மாமன் வந்து
என்னை காக்க நானும்
வந்து உன்னை தாக்க
நாம் விரும்பும் இன்பம்
எல்லாம் நாளை வரும்
நமக்காக

காலம் உள்ள
காலம் வாழும் இந்த
பாசம் பூ விழி இமை
மூடியே சின்ன பூவே
கண்ணுறங்கு

கருப்பு நிலா
நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர்
விழுவது ஏன்

வண்ண வண்ண
முகம் காட்டி வானவில்லின்
நிறம் காட்டி சின்ன சின்ன
மழலை பேசி சித்திரம்
போல் மகனே வா

செம்பருத்தி மலர்
போலே சொக்க வெள்ளி
மணி போலே கன்னம்
ரெண்டும் மின்ன மின்ன
கண்மணியே மடிமேல் வா

பாட்டு தமிழ்
பாட்டு பாட அத கேட்டு
ஆடிடும் விளையாடிடும்
தங்க தேரே நீதானே

{ கருப்பு நிலா
நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர்
விழுவது ஏன் } (2)

யேன் சின்ன மானே
மாங்குயிலே உன் மனசுல
என்ன குறை பெத்த ஆத்தா
போல் இருப்பேன் இந்த
பூமியில் வாழும் வர

எட்டு திசை
யாவும் கட்டி அரசாள
வந்த ராசா நீதானே

கருப்பு நிலா நீதான்
கலங்குவது ஏன் துளி
துளியாய் கண்ணீர்
விழுவது ஏன்

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
(kannan varuvan kathai solluvan song lyrics)

படம்: பஞ்சவர்ணக் கிளி
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1965

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்

பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க முத்தம் கொடுக்க

தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கித் திக்கிப் பேசுகையில் குயில் போலே
கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே

ஆரிரோ ஆரிராரி ஆரிராரி ஆராரோ
ஆராரோ ஆரிராரி ராரிராரி ராரிரோ
ஆரிராரி ராரிராரி ஆராரோ ஆரிராரி ராரிராரி ஆராரோ

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உண்மையை அதிலே உறங்க வைத்தான்
உறங்க வைத்தான் உறங்க வைத்தான்

தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கித் திக்கிப் பேசுகையில் குயில் போலே
கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே

ஆரிரோ ஆரிராரி ஆரிராரி ஆராரோ
ஆராரோ ஆரிராரி ராரிராரி ராரிரோ
ஆரிராரி ராரிராரி ஆராரோ ஆரிராரி ராரிராரி ஆராரோ

மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
(mannava mannava mannathi song lyrics)

படம் : வால்டர் வெற்றிவேல்
பாடலாசிரியர் : வாலி

மன்னவா மன்னவா
மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும்
சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும் தேனோ
மரகத வீணை தானோ
மடி மேலே ஆடும் பூந்தேரோ
அன்னை மனம் தான் பாடும் ஆராரோ

ஓ… மன்னவா மன்னவா
மன்னாதி மன்னன் அல்லவா

நாள்தோறும் காவல் நின்று நம்மை காக்கும் தந்தை உண்டு
இந்த வாழ்வு என்பது அந்த தெய்வம் தந்தது
ராஜாதிராஜன் என்று பல தேசம் நீயும் வென்று
வர வேண்டும் கண்மணி வெற்றிவேலின் பிள்ளை நீ
தென் மதுரை சீமை எல்லாம் அரசாளும் உன்னை கண்டு
திரு தோளில் மாலை சூடும் மகராணி யாரோ இங்கு
ஒளி விடும் எதிர்காலம் ஒன்று உருவாகும் நாளை இங்கு
பணிவாய் மலரே மடிமேல் உறங்கு

மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா

மீனாட்சி கையில் கொண்டு அருள் கூறும் கிள்ளை ஒன்று
உருமாறி நின்றதோ எந்தன் மகனாய் வந்ததோ
காமாட்சி கோயில் கண்டு சுடர் வீசும் தெய்வம் ஒன்று
எந்தன் வீடு வந்ததோ பிள்ளை வடிவாய் நின்றதோ
உன்னை ஒரு ஈயும் மொய்த்தால் உருகாதா தாயின் சித்தம்
விழியோரம் நீரை கண்டால் கொதிக்காதா அன்னை ரத்தம்
உனக்கு ஒரு குறை நேர்ந்திடாது வளர்ப்பேனே தோளின் மீது
பணிவாய் மலரே மடிமேல் உறங்கு

மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும் தேனோ மரகத வீணை தானோ
மடிமேலே ஆடும் பூந்தேரோ
அன்னை மனம் தான் பாடும் ஆராரோ

ஓ… மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
(araro ariraro ithu thanthaiyin thalattu song lyrics)

படம்: தெய்வதிருமகள்
இசை: G.V.பிரகாஷ்
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: ஹரிசரண்

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு

தாயாக தந்தை மாறும் புது காவியம்
ஓ…இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு

முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே
இதுபோல் ஆனந்தம் வேறில்லையே
இரு மனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே
ஒரு நொடி போதும் போதும் என்று ஓர் குரல் கேட்குதே
விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு

கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்
அடடா தெய்வம் இங்கே வரமானதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரமானதே
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன் இன்று உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு

கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல்
(karpoora bommai ondru song lyrics)

படம் : கேளடி கண்மணி
பாடலாசிரியர் : மு.மேத்தா

கற்பூர பொம்மை ஒன்று
கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும்
பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை …

பூந்தேரிலே நீ ஆடவே
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே
நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம்
மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ….

தாய் அன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே
உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ….

அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா
(athai madi methaiyadi song lyrics)

பாடல்: அத்தை மடி மெத்தையடி
படம்: கற்பகம்
பாடியவர்: P. சுசீலா
கவிஞர்: வாலி
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்டு: 1963
Song: Athai Madi

லுலுலு…ஆயி ….ஆரி ….ஆரி ….ஆரி….ஆரி ….ஆராரோ ….
லுலுலு…ஆயி ….ஆரி ….ஆரி ….ஆரி….ஆரி ….ஆராரோ ….
அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடீ.

அத்தை மடி மெத்தையடி…
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடீ…..
லுலுலு…ஆயி ….ஆரி ….ஆரி ….ஆரி….ஆரி ….ஆராரோ ….
லுலுலு…ஆயி ….ஆரி ….ஆரி ….ஆரி….ஆரி ….ஆராரோ ….

மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
முல்லை மல்லிகை மெத்தையிட்டு
தேன் குயில் கூட்டம் பண் பாடும்
மான் குட்டி கேட்டு கண் மூடும்
அதை மான் குட்டி கேட்டு கண் மூடும்

ம்ம்ம்.. அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடீ…

வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
வேறோர் தீபத்தை ஏற்றவில்லை
வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
வேறோர் தீபத்தை ஏற்றவில்லை
அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன்
அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்
அதில் அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்

ம்ம்ம்.. அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடீ…

கண்கள் நீயே..காற்றும் நீயே
(Kangal neeye kaatrum neeye song lyrics)

படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
இசை: G.V.பிரகாஷ் குமார்
பாடியவர்: சித்ரா
பாடலாசியர்: தாமரை
வருடம்: 2012
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானம் நீயே
ஊனும் நீ உயிரும் நீ

பலநாள் கனவே ஒருநாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உன்னை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை

முகம் வெள்ளைத்தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில் நீர் என்னும் தீர்த்தத்தால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே

(கண்கள் நீயே ..)

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னை தாங்க ஏங்கினேன்
அடுத்த கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்
தூளில் ஆடும் சேலை
தொட்டில் தன் பாதி வேலை
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாலே பலப்பல ஓசை
செய்திடும்
ராவணன்
ஈடில்லா என் மகன்

என்னை தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
என்னை கிள்ளும் உன் விரல் மெத்தைக்குள்
என் முத்தத்தை நான் தந்தேன் கண்ணே

(கண்கள் நீயே ..)

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளி போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைகிறேன்
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்
சுவர் மீதும் கிருக்கிடும் போது
ரவிவர்மன் நீ
பசி என்றால் தாயிடம் தேடும்
மானிட
மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித்தானே பெற்றேன் உன்னை
உடல் செவ்வாது பிணியும்வது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

(கண்கள் நீயே ..)

தொகுப்பு: தமிழ்பித்தன்

தமிழ் இலக்கியம் Youtube amma amma, amma roses, amma song, amma images, amma meaning, amma quotes, amma padalgal, amma kavithaigl, ammavai patri kavithai, அம்மா, அம்மா கவிதை, அம்மா கவிதை வைரமுத்து, அம்மா பாடல்கள், அம்மா அம்மா எந்தன் ஆருயிரே, அம்மா தாலாட்டு பாடல்கள், ஆராரோ ஆரிரரோ பாட்டு, அம்மா வேறு சொல்,

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஜூலை மாத ராசி பலன் July Matha Rasi Palan 2020 ஆடி மாத ராசி பலன் Aadi Matha Rasi Palan monthly Rasi Palan in Tamil.
Next article02-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 02-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live