Food Allergy-ஐ தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

0

உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளில் முக்கியமானவை பால், முட்டை, நட்ஸ், கடலை, மீன், கோதுமை, சோயா.

ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளை `எலிமினேஷன் டயட்’ மூலம் ஒதுக்கும்போது, ஊட்டச்சத்து விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உணவில் 40 சதவிகிதம் காய்கறி, 30 சதவிகிதம் புரதச்சத்து உணவுகள், 20 சதவிகிதம் நல்ல கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், 10 சதவிகிதம் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

உணவில் காலிஃப்ளவர், புரோக்கோலி, வெள்ளரிக்காய், மஷ்ரூம், முள்ளங்கி, பெருஞ்சீரகம், தேங்காய்ப்பால், நல்ல கொழுப்பு அதிகமுள்ள தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இஞ்சி… ஆன்டிபயாடிக் உணவு. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, நோய்த் தொற்றுகளில் இருந்தும் உடலைப் பாதுகாக்கும். இஞ்சியின் சுவை தெரியக் கூடாது என்பதற்காக மாத்திரை, சாக்லேட் வடிவத்தில் சிலர் இதை உட்கொள்வதுண்டு. இதில் ஃப்ளேவர்கள் பெயரில் ரசாயனங்கள் கலந்திருக்க வாய்ப்பிருப்பதால் அன்றாட உணவில் இஞ்சி சேர்த்துக்கொள்வது நல்லது. இரண்டு கிராம்பை அரைத்துச் சாப்பிடுவது, கூடுதல் சிறப்பு.

எலுமிச்சை உடலிலுள்ள சத்துகளையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் சீர்படுத்தும். தினமும் எலுமிச்சை கலந்த தண்ணீரைக் குடித்துவந்தால், நீர்ச்சத்து பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி நிறைந்தது.

பச்சைக் காய்கறிகளிலிருக்கும் வைட்டமின், தாதுப்பொருள்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவும். மேலும் உடலில் ஏற்படும் பல அழற்சிப் பிரச்னைகளைத் தடுக்கவும் உதவும். காலிஃப்ளவர், புரோக்கோலி, வெங்காயம், கிரீன் டீ, சிட்ரஸ் பழங்களிலிருக்கும் `குவார்செடின்’ (Quercetin) எனப்படும் பாலிஃபினால் ஃபுட் அலர்ஜியைத் தடுக்க உதவும்.

புரோ பயாடிக் உணவுகளை (Pro Biotic அதிகம் உட்கொண்டால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். குடல் பிரச்னைகள் தீரும்.

நட்ஸ் வகைகளில் அலர்ஜி இருப்பவர்கள், அவற்றுக்குப் பதிலாக நல்ல கொழுப்பு மற்றும் தாதுச்சத்துகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வேர்க்கடலை, பாதாம், வெண்ணெய் போன்றவற்றைச் உட்கொள்ளலாம்.

சிலருக்கு ஒவ்வொரு காலத்திலும் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் போன்ற `சீசனல் உணவுகள்’ அலர்ஜியை ஏற்படுத்தும். அவர்கள், தினமும் சிறிதளவு தேன் குடித்துவந்தால், இந்தப் பிரச்னை தீரும்.

அவரவர் உடல் அமைப்பைப் பொறுத்து, சில உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவற்றை முழுமையாகத் தவிர்த்துவிடுவது நல்லது. ஓர் உணவு உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தினால், ஏன் ஏற்படுகிறது, அதற்கான காரணம் என்ன என்பதையெல்லாம் மருத்துவச் சோதனை மூலமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதயவு செய்து முழுவதும் படிக்கவும்!
Next articleமுதியவர்களுக்கு ஆரோக்கிய குறிப்புகள். வயதானவர்களுக்கு அவசியம் பகிருங்கள்.