February Matha Rasi Palan 2020, பெப்ரவரி மாத ராசி பலன், பிப்ரவரி மாசி மாத ராசி பலன், masi Matha Rasi Palan, Monthly Rasi Palan, monthly Rasi Palan in Tamil, Monthly Horoscope in Tamil. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். February Matha Rasi Palan 2020.
February Matha Rasi Palan 2020
மேஷம்: குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சி அனைத்திலும் வெற்றி கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். செய்யும் தொழில் உத்தியோக நிலையில் முன்னேற்றங்களும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். நெருங்கியவர்களின் ஆதரவுகள் சிலநேரங்களில் உங்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும். நினைத்தது நிறைவேறும். மகாலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம். சந்திராஷ்டமம் – 15-02-2020 இரவு 11.18 மணி முதல் 18-02-2020 அதிகாலை 05.13 மணி வரை.
ரிஷபம்: உங்கள் ராசிக்கு 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பதும் 2-ஆம் தேதி முதல் ராசியதிபதி சுக்கிரன் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எதிர்பாராத வகையில் பணவரவுகள் கிடைத்து உங்களது பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். ராகு 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிப்பதால் உடல் நிலை சற்று சோர்வடையும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். தொழில் உத்தியோக ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். -துர்கையம்மனை வழிபாடு செய்யவும். சந்திராஷ்டமம் – 18-02-2020 அதிகாலை 05.13 மணி முதல் 20-02-2020 பகல் 01.52 மணி வரை.
மிதுனம்: உங்கள் ராசியதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதும், குரு 7-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் தாராள தனவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உறவினர்களிடம் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். பேச்சில் கவனமுடன் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம். சந்திராஷ்டமம் – 20-02-2020 பகல் 01.52 மணி முதல் 23-02-2020 அதிகாலை 00.29 மணி வரை.
கடகம்: உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் சற்று விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தேவையற்ற பிரச்சினைகளையும் அலைச்சல்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் 7-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயங்களிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். துர்கையம்மன் வழிபாடு செய்வது நன்மை அளிக்கும். சந்திராஷ்டமம் – 23-02-2020 அதிகாலை 00.29 மணி முதல் 25-02-2020 பகல் 12.27 மணி வரை.
சிம்மம்: உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சூரியன், சனி, 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். திருமணம் தடைபட்டவர்களுக்கு இம்மாதம் தடை விலகி நற்பலன் அமையும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கலில் லாபங்கள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம். சந்திராஷ்டமம் – 25-02-2020 பகல் 12.27 மணி முதல் 28-02-2020 அதிகாலை 01.08 மணி வரை.
கன்னி: உங்கள் ராசிக்கு குரு 4-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாராக இருக்கும் என்றாலும் மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் தேக்கம் உண்டாகாது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் அலைச்சல் உண்டாகும். விநாயகரை வழிபடவும். சந்திராஷ்டமம் – 28-02-2020 பின்இரவு 01.08 மணி முதல் 01-03-2020 பகல் 01.18 மணி வரை.
துலாம்: உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் சஞ்சரிப்பதும் வரும் 8-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எதிர்பாராத லாபங்கள் தேடி வரும். குடும்பத்தில் சுபசெலவுகளை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். மாத முற்பாதியில் சூரியன் 4-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் தடைகளைத் தாண்டி வெற்றிகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. சந்திராஷ்டமம் – 03-02-2020 அதிகாலை 05.40 மணி முதல் 05-02-2020 பகல் 02.00 மணி வரை.
விருச்சிகம்: உங்கள் ராசிக்கு குரு 2-ல், சனி 3-ல், புதன் 4-ல் மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு மேலோங்கும் இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எல்லா வகையிலும் மேன்மைகள் உண்டாகும். இதனால் கடந்த காலங்களில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் அனைத்தும் விலகி முன்னேற்றமானப் பலன்கள் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து உதவி கரம் நீட்டுவார்கள். பொன், பொருள் சேரும். உணவு விஷயத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தேடி வரும். முருக கடவுளை வழிபடுவது உத்தமம். சந்திராஷ்டமம் – 05-02-2020 பகல் 02.00 மணி முதல் 07-02-2020 மாலை 06.24 மணி வரை.
தனுசு: உங்கள் ராசிக்கு சுக்கிரன் 4-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல பணவரவை தந்து உங்களுக்குள்ள நெருக்கடிகளை குறைக்கும் அமைப்பாகும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டால் எதையும் சாதிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது உத்தமம். சந்திராஷ்டமம் – 07-02-2020 மாலை 06.24 மணி முதல் 09-02-2020 இரவு 07.43 மணி வரை.
மகரம்: ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் குரு, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் பொறுமையுடனும், கவனமுடனும் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகி மனநிம்மதி குறையும். எதிர்பாராத வீண் விரயங்களும் அதிகரிக்கும். பண வரவுகளில் பற்றாகுறை ஏற்படும். ராகு 6-ல் இருப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது. சந்திராஷ்டமம் – 09-02-2020 இரவு 07.43 மணி முதல் 11-02-2020 இரவு 07.43 மணி வரை.
கும்பம்: உங்கள் ராசிக்கு 10, 11-ல் செவ்வாய், லாப ஸ்தானத்தில் குரு, கேது சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நல்ல லாபம் கிட்டும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகப் பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். துர்கையம்மன் வழிபாடு செய்தால் நன்மைகள் உண்டாகும்.
சந்திராஷ்டமம் – 11-02-2020 இரவு 07.43 மணி முதல் 13-02-2020 இரவு 08.22 மணி வரை.
மீனம்: சனி 11-ல், மாத கோளான சூரியன் மாத முற்பாதியில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு 10-ல் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. புதிய விடு, மனை வாங்கும் விஷயத்தில் சற்று கவனம் தேவை. விஷ்ணு வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது. சந்திராஷ்டமம் – 13-02-2020 இரவு 08.22 மணி முதல் 15-02-2020 இரவு 11.18 மணி வரை.
சுப முகூர்த்த நாட்கள்
05.02.2020 தை மாதம் 22 ஆம் தேதி புதன்கிழமை அன்று ஏகாதசி திதி மிருகசீரிஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி தொடக்கம் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை
07.02.2020 தை மாதம் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திரயோதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி தொடக்கம் 10.00 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை
12.02.2020 தை மாதம் 29 ஆம் தேதி புதன்கிழமை அன்று சதுர்தசி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி தொடக்கம்10.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை
14.02.2020 மாசி மாதம் 02 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சஷ்டி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.00 மணி தொடக்கம் 08.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை
20.02.2020 மாசி மாதம் 08 ஆம் தேதி வியாழக்கிழமைஅன்று துவாதசி திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.00 மணி தொடக்கம் 09.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை
26.02.2020 மாசி 14 ஆம் தேதி புதன்கிழமை திருதியை திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை
ராசி பலன் ஜோதிடம்