February 28 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 28

0

Today Special Historical Events In Tamil | 28-02 | February 28

February 28 Today Special | February 28 What Happened Today In History. February 28 Today Whose Birthday (born) | February-28th Important Famous Deaths In History On This Day 28/02 | Today Events In History February 28th | Today Important Incident In History | மாசி 28 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 28-02 | மாசி மாதம் 28ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 28.02 Varalatril Indru Nadanthathu Enna| February 28 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 28/02 | Famous People Born Today 28.02 | Famous People died Today 28-02.

Today Special in Tamil 28-02
Today Events in Tamil 28-02
Famous People Born Today 28-02
Famous People died Today 28-02

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 28-02 | February 28

அமைதி நினைவு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (சீனக் குடியரசு)
கலேவலா நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (பின்லாந்து)
தேசிய அறிவியல் நாளாக கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (அரபு நாடுகள்)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 28-02 | February 28

கிமு 202ல் லியூ பாங் சீனாவின் பேரரசராக முடிசூடினார். இவருடன் அடுத்த நான்கு நூற்றாண்டுகால ஆன் அரசமரபு ஆட்சி ஆரம்பமானது.
628ல் சாசானியப் பேரரசசின் கடைசி மன்னர் இரண்டாம் கொசுரோ அவரது மகன் இரண்டாம் கவாத்தின் உத்தரவின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.
1525ல் அசுட்டெக் மன்னர் குவாவுத்தேமொக் எசுப்பானியத் தேடல் வீரர் எர்னான் கோட்டெசின் உத்தரவின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.
1700ல் சுவீடனில் இன்று மார்ச் 1. சுவீடிய நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
1710ல் சுவீடனில் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்ட டென்மார்க் படையினர் எல்சின்போர்க் என்ற இடத்தில் வைத்து சுவீடன் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.
1784ல் ஜோன் உவெசுலி மெதடிஸ்த திருச்சபையை ஆரம்பித்தார்.
1844ல் பொட்டாமக் ஆற்றில் பிரின்ஸ்டன் என்ற படகில் பொருத்தப்பட்ட துப்பாக்கி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த இரண்டு அமெரிக்க அமைச்சர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
1867ல் வத்திக்கானுக்கான தூதர்களுக்கான நிதிகளை அமெரிக்க காங்கிரசு நிறுத்தியதைத் தொடர்ந்து எழுபது ஆண்டு கால திரு ஆட்சிப்பீட–அமெரிக்க உறவுகள் முறிவடைந்தன. 1984 ஆம் ஆண்டிலேயே உறவு புதுப்பிக்கப்பட்டது.
1897ல் மடகஸ்காரின் கடைசி அரசியான மூன்றாம் ரனவலோனா பிரான்சியப் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்ப்பட்டார்.
1922ல் எகிப்தின் விடுதலையை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.
1935ல் வொலஸ் கரோதேர்ஸ் என்பவரினால் நைலோன் கண்டுபிடிக்கப்பட்டது.
1942ல் இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் ஊஸ்டன் என்ற கப்பலும், ஆத்திரேலியாவின் பேர்த் கப்பலும் இந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் இடம்பெற்ற போரில் சப்பானினால் மூழ்கடிக்கப்பட்டதில் முறையே 693 பேரும், 375 பேரும் கொல்லப்பட்டனர்.
1947ல் தாய்வானில் அரசுக்கெதிராக இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டம் முறியடிக்கப்பட்டது. 30,000 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
1948ல் கானாவில் பிரித்தானியக் காவல்துறையினன் ஒருவன் முன்னாள் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு ஒன்றை நோக்கிச் சுட்டதில் மூவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அக்ரா நகரில் பெரும் கலவரம் மூண்டது.
1953ல் ஜேம்ஸ் வாட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்ஏயின் வேதியியல் அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
1954ல் என்டிஎஸ்சி தரத்துடன் முதலாவது வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்பனைக்கு வந்தன.
1958ல் கென்டக்கியில் பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சுமையுந்து ஒன்றுடன் மோதி ஆற்றிற்குள் வீழ்ந்ததில் 26 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
1975ல் லண்டனில் மூர்கேட் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற புகைவண்டி விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர்.
1980ல் அந்தாலூசியா பொது வாக்கெடுப்பு மூலம் தன்னாட்சியை அங்கீகரித்தது.
1986ல் சுவீடன் பிரதமர் ஓலொஃப் பால்மே ஸ்டாக்ஹோம் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1991ல் முதலாம் வளைகுடாப் போர் முடிவுற்றது.
1997ல் வடக்கு ஈரானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 3,000 பேர் வரையில் இறந்தனர்.
1997ல் ஜிஆர்பி 970228 என்ற மிகவும் ஒளிர்வான காம்மா கதிர்கள் 80 செக்கன்களுக்கு பூமியைத் தாக்கியது. இதன்மூலம் காமா கதிர் வெடிப்புகள் பால் வழிக்கப்பால் நிகழ்கின்றன என எடுத்துக்காட்டப்பட்டது.
1998ல் கொசோவோவில் கொசோவோ விடுதலை இராணுவத்தின் மீது செர்பியக் காவற்துறையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.
2002ல் குஜராத் வன்முறை 2002: அகமதாபாத்தில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டனர்.
2005ல் ஈராக்கு, கில்லா நகரில் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 127 பேர் கொல்லப்பட்டனர்.
2006ல் இந்தியாவில் சத்தீஷ்கார் மாநிலத்தில் தாண்டிவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுக்கள் நடாத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
2007ல் புளூட்டோவை நோக்கி ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் வியாழனை அண்மித்தது.
2013ல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்தார். 1415 இல் பன்னிரண்டாம் கிரகோரி பதவி துறந்த பின்னர் இடம்பெற்ற முதலாவது பணிதுறப்பு இதுவாகும்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 28-02 | February 28

1893ல் இந்திய இயற்பியலாளரும் வானிலையியலாளருமான‌ கே. ஆர். ராமநாதன் பிறந்த நாள். (இறப்பு-1984)
1901ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளரான‌ லைனசு பாலிங் பிறந்த நாள். (இறப்பு-1994)
1904ல் அமெரிக்க மொழியியலாளரான‌ மரே எமெனோ பிறந்த நாள். (இறப்பு-2005)
1921ல் தமிழக எழுத்தாளரான‌ தி. ஜானகிராமன் பிறந்த நாள். (இறப்பு-1982)
1926ல் உருசிய-அமெரிக்க எழுத்தாளரான‌ சுவெத்லானா அலிலுயேவா பிறந்த நாள். (இறப்பு-2011)
1927ல் தமிழக எழுத்தாளரான‌ சௌந்தரா கைலாசம் பிறந்த நாள். (இறப்பு-2010)
1928ல் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண ஆயரான‌ டி. ஜெ. அம்பலவாணர் பிறந்த நாள். (இறப்பு-1997)
1929ல் கனடிய-அமெரிக்கக் கட்டிடக்கலைஞரான‌ பிராங்க் கெரி பிறந்த நாள்.
1929ல் இந்திய-அமெரிக்க வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளருமான‌ ரங்கசாமி சீனிவாசன் பிறந்த நாள்.
1930ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளரான‌ லியோன் கூப்பர் பிறந்த நாள்.
1931ல் ஈழத்தின் பதிப்பாளரான‌ துரை விஸ்வநாதன் பிறந்த நாள். (இறப்பு-1998)
1931ல் யாழ்ப்பாண மாநகர முதல்வரான‌ சி. நாகராஜா பிறந்த நாள். (இறப்பு-2008)
1933ல் ஈழத்து எழுத்தாளரான‌ சிற்பி பிறந்த நாள். (இறப்பு-2015)
1948ல் அமெரிக்க நடிகையும் பாடகியுமான‌ பேர்ணாடெற்றே பீட்டர்சு பிறந்த நாள்.
1953ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளரான‌ பால் கிரக்மேன் பிறந்த நாள்.
1957ல் அமெரிக்க நடிகரும் இயக்குநருமான‌ ஜான் டர்டர்ரோ பிறந்த நாள்.
1969ல் தமிழக மேண்டலின் இசைக் கலைஞரான‌ உ. ஸ்ரீநிவாஸ் பிறந்த நாள். (இறப்பு-2014)
1976ல் அமெரிக்க நடிகையான‌ அலி லார்டேர் பிறந்த நாள்.
1979ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான‌ ஸ்ரீகாந்த் பிறந்த நாள்.
1980ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ பத்மபிரியா பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 28-02 | February 28

1869ல் பிரான்சியக் கவிஞரும் வரலாற்றாளருமான‌ அல்போன்சு டி லாமார்ட்டின் இறப்பு நாள். (பிறப்பு-1790)
1936ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான‌ கமலா நேரு இறப்பு நாள். (பிறப்பு-1899)
1963ல் இந்தியாவின் 1வது குடியரசுத் தலைவரான‌ இராசேந்திர பிரசாத் இறப்பு நாள். (பிறப்பு-1884)
2006ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளரான‌ ஓவன் சேம்பர்லேன் இறப்பு நாள். (பிறப்பு-1920)
2010ல் சப்பானிய வானியற்பியலாளரான‌ சுசிரோ அயாசி இறப்பு நாள். (பிறப்பு-1920)
2016ல் ஈழத்து எழுத்தாளரான‌ செங்கை ஆழியான் இறப்பு நாள். (பிறப்பு-1941)
2016ல் தமிழ்த் திரைப்பட நடிகரான‌ குமரிமுத்து இறப்பு நாள்.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleFebruary 27 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 27
Next articleFebruary 29 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 29