February 27 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 27

0

Today Special Historical Events In Tamil | 27-02 | February 27

February 27 Today Special | February 27 What Happened Today In History. February 27 Today Whose Birthday (born) | February-27th Important Famous Deaths In History On This Day 27/02 | Today Events In History February 27th | Today Important Incident In History | மாசி 27 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 27-02 | மாசி மாதம் 27ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 27.02 Varalatril Indru Nadanthathu Enna| February 27 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 27/02 | Famous People Born Today 27.02 | Famous People died Today 27-02.

Today Special in Tamil 27-02
Today Events in Tamil 27-02
Famous People Born Today 27-02
Famous People died Today 27-02

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 27-02 | February 27

தேசிய மருத்துவர்கள் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (வியட்நாம்)
மராட்டி மொழி நாளாக கொண்டாடப்படுகிறது. (மகாராட்டிரம்)
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (டொமினிக்கன் குடியரசு, எயிட்டியிடம் இருந்து 1844)
பன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்புகளின் நாளாக கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 27-02 | February 27

380ல் அனைத்து உரோமைக் குடிமக்களும் திரித்துவக் கிறித்தவத்தைத் தழுவ வேண்டும் என பேரரசர் முதலாம் தியோடோசியசு கேட்டுக் கொண்டார்.
425ல் கான்ஸ்டண்டினோபில் பல்கலைக்கழகம் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் நிறுவப்பட்டது.
907ல் கித்தான் இனத் தலைவர் ஆபோஜி வடக்கு சீனாவில் பேரரசர் தைசூ என்ற பெயரில் லியாவோ அரசமரபைத் தோற்றுவித்தார்.
1560ல் இசுக்கொட்லாந்தில் இருந்து பிரான்சியரை வெளியேற்ற இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1594ல் பிரான்சின் மன்னனாக நான்காம் என்றி முடிசூடினார்.
1700ல் புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
1782ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்காவில் போரைத் தொடர்வதற்கு எதிராக பிரித்தானிய நாடாளுமன்றம் வாக்களித்தது.
1801ல் வாசிங்டன், டீசி நகரம் அமெரிக்க காங்கிரசின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.
1844ல் டொமினிக்கன் குடியரசு எயிட்டியிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1861ல் போலந்தில் உருசிய ஆக்கிரமிப்பை எதிர்த்து வார்சாவாவில் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தியதில், ஐந்து பேர் உருசியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1898ல் கிரேக்க மன்னர் முதலாம் ஜோர்ஜ் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
1900ல் பிரித்தானியத் தொழிற் கட்சி அமைக்கப்பட்டது.
1900ல் இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவில் பூவர்களின் தளபதி பியெட் குரோனியே நிபந்தனையின்றி சரணடைவதாக அறிவித்தார்.
1902ல் இரண்டாம் பூவர் போர்: ஆத்திரேலிய இராணுவத்தினர் இருவர் போர்க்குற்றங்களுக்காக தென்னாப்பிரிக்கா, பிரிட்டோரியாவில் தூக்கிலிடப்பட்டனர்.
1933ல் பெர்லினில் செருமனியின் நாடாளுமன்றக் கட்டடம் இடச்சு கம்யூனிஸ்டுகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது.
1939ல் அமர்ந்துறை வேலை நிறுத்தங்கள் நில உரிமையாளர்களின் உரிமையை மீறுவதால், இவ்வகை வேலைநிறுத்தங்கள் சட்டவிரோதமானவை என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1940ல் ரேடியோகார்பன் என்ற கரிமம்-14 கண்டுபிடிக்கப்பட்டது.
1942ல் இரண்டாம் உலகப் போர்: சாவகக் கடலில் இடம்பெற்ற சமரில் கூட்டுப் படைகளை சப்பான் படைகள் தோற்கடித்தன.
1943ல் பெர்லினில், நாட்சிகளின் இரகசியக் காவல்துறையினர் செருமனியப் பெண்களை மணந்த 1,800 யூத இன ஆண்களைக் கைது செய்தனர்.
1943ல் அமெரிக்காவின் மொன்ட்டானாவில் பெயர்கிரீக் நகரில் சுரங்கம் ஒன்று வெடித்ததில் 74 பேர் கொல்லப்பட்டனர்.
1951ல் ஐக்கிய அமெரிக்காவில் அரசுத்தலைவர் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.
1964ல் பீசாவின் சாய்ந்த கோபுரம் மேலும் சரிவதைத் தடுக்க இத்தாலிய அரசு உதவி கோரியது.
1976ல் முன்னாள் எசுப்பானிய நாடான மேற்கு சகாரா சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்தது.
1991ல் வளைகுடாப் போர்: அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் குவைத் விடுதலையானதாக அறிவித்தார்.
2002ல் கோத்ரா தொடருந்து எரிப்பு: அயோத்தியாவில் இருந்து தொடருந்தில் திரும்பிக்கொண்டிருந்த 59 இந்துப் பயணிகள் கோத்ரா புகையிரத நிலையத்தில் வைத்து முசுலிம்களால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் நடந்த கலவரத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
2004ல் 1995 டோக்கியோ மெட்ரோ தாக்குதல்களைத் திட்டமிட்டதாகக் குற்ரம் சாட்டப்பட்ட சோக்கோ அசகாரா என்ற மதக்குழுத் தலைவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இவரது மரணதண்டனை 2018 இல் நிறைவேற்றப்பட்டது.
2004ல் பிலிப்பீன்சில் பயணிகள் கப்பலில் அபு சயாப் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில் 116 பேர் கொல்லப்பட்டனர்.
2007ல் மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் இலங்கைக்கான அமெரிக்க, இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.
2010ல் சிலியில் 8.8 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 500 பேர் உயிரிழந்தனர்.
2013ல் சுவிட்சர்லாந்தில் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஐவர் கொல்லப்பட்டனர்.
2015ல் உருசிய அறிவியலாளரும், அரசியல்வாதியுமான போரிசு நெம்த்சோவ் கிரெம்லின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 27-02 | February 27

272ல் உரோமைப் பேரரசரானரான‌ முதலாம் கான்ஸ்டன்டைன் பிறந்த நாள். (இறப்பு-337)
1807ல் அமெரிக்கக் கவிஞரான‌ ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ பிறந்த நாள். (இறப்பு-1882)
1856ல் செருமானிய வேதியியலாளரான‌ ஆல்பிரட் ஐன்ஹார்ன் பிறந்த நாள். (இறப்பு-1917)
1897ல் பிரான்சிய வானியலாளரான‌ பெர்னார்டு இலியோத் பிறந்த நாள். (இறப்பு-1952)
1902ல் பிரான்சிய-பிரேசில் கட்டிடக்கலைஞரான‌ லூசியோ கோஸ்தா பிறந்த நாள். (இறப்பு-1998)
1912ல் இந்திய எழுத்தாளரும் கவிஞருமான‌ குசுமாகரசு பிறந்த நாள். (இறப்பு-1999)
1926ல் நோபல் பரிசு கனடிய உடலியங்கியலாளரும் நரம்பியலாளருமான‌ டேவிட் ஹண்டர் ஹியூபெல் பிறந்த நாள்.
1932ல் ஆங்கிலேய-அமெரிக்க நடிகையான‌ எலிசபெத் டெய்லர் பிறந்த நாள். (இறப்பு-2011)
1934ல் அமெரிக்க அரசியல்வாதியும் செயற்பாட்டாளருமான‌ ரால்ஃப் நேடர் பிறந்த நாள்.
1943ல் இந்திய அரசியல்வாதியான‌ பி. எஸ். எடியூரப்பா பிறந்த நாள்.
1962ல் அமெரிக்க எழுத்தாளரான‌ இராபர்ட் ஸ்பென்சர் பிறந்த நாள்.
1967ல் ஆங்கிலேய உற்பத்திப் பொருள் வடிவமைப்பாளரான‌ ஜோனாதன் ஐவ் பிறந்த நாள்.
1975ல் அமெரிக்க இயக்குநரான‌ கிறிஸ்டோபர் பி. லாண்டன் பிறந்த நாள்.
1977ல் மலேசிய-ஆத்திரேலிய இயக்குநரான‌ ஜேம்ஸ் வான் பிறந்த நாள்.
1982ல் பிரேசிலிய டென்னிசு வீரரான‌ புருனோ சோரெசு பிறந்த நாள்.
1983ல் லிபிய ஊடகவியலாளரான‌ முகமது நபௌசு பிறந்த நாள். (இறப்பு-2011)
1986ல் இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரரான‌ சந்தீப் சிங் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 27-02 | February 27

1712ல் முகலாயப் பேரரசரான‌ முதலாம் பகதூர் சா இறப்பு நாள். (பிறப்பு-1643)
1906ல் அமெரிக்க வானியலாளரும் இயற்பியலாளருமான‌ சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே இறப்பு நாள். (பிறப்பு-1834)
1931ல் இந்திய செயற்பாட்டாளரான‌ சந்திரசேகர ஆசாத் இறப்பு நாள். (பிறப்பு-1906)
1936ல் நோபல் பரிசு பெற்ற உருசிய மருத்துவரான‌ இவான் பாவ்லோவ் இறப்பு நாள். (பிறப்பு-1849)
1939ல் உருசியப் புரட்சியாளரும் அரசியல்வாதியும் கல்வியாளரும் நதியெஸ்தா குரூப்ஸ்கயா இறப்பு நாள். (பிறப்பு-1869)
1956ல் இந்திய அரசியல்வாதியும் கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர் இறப்பு நாள். (பிறப்பு-1888)
1983ல் உருவிய வானியலாளரும் வானியற்பியலாளரும் நிகோலாய் அலெக்சாந்திரோவிச் கொசூரேவ் இறப்பு நாள். (பிறப்பு-1908)
1989ல் இலங்கை இடதுசாரி அரசியல்வாதியான‌ கொல்வின் ஆர். டி சில்வா இறப்பு நாள். (பிறப்பு-1907)
1993ல் அமெரிக்க நடிகையான‌ லில்லியன் கிஸ் இறப்பு நாள். (பிறப்பு-1893)
1998ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருந்தியலாளரான‌ ஜார்ஜ் எச் ஹிட்சிங்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1905)
2005ல் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான‌ புகழேந்தி இறப்பு நாள். (பிறப்பு-1929)
2008ல் தமிழக எழுத்தாளரான‌ சுஜாதா இறப்பு நாள். (பிறப்பு-1935)
2010ல் இந்திய செயற்பாட்டாளரான‌ நானாஜி தேஷ்முக் இறப்பு நாள். (பிறப்பு-1916)
2012ல் தமிழக மிருதங்கக் கலைஞரான வேலூர் ஜி. ராமபத்ரன் இறப்பு நாள். (பிறப்பு-1929)
2014ல் ஈழத்துப் புதின எழுத்தாளரான‌ ந. பாலேஸ்வரி இறப்பு நாள். (பிறப்பு-1929)
2015ல் உருசிய அரசியல்வாதியான‌ போரிசு நெம்த்சோவ் இறப்பு நாள். (பிறப்பு-1959)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleFebruary 26 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 26
Next articleFebruary 28 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 28