December 26 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 26

0

Today Special Historical Events In Tamil | 26-12 | December 26

December 26 Today Special | December 26 What Happened Today In History. December 26 Today Whose Birthday (born) | December-26th Important Famous Deaths In History On This Day 26/12 | Today Events In History December 26th | Today Important Incident In History | மார்கழி 26 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 26-12 | மார்கழி மாதம் 26ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 26.12 Varalatril Indru Nadanthathu Enna| December 26 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 26/12 | Famous People Born Today 26.12 | Famous People died Today 26-12.

Today Special in Tamil 26-12
Today Events in Tamil 26-12
Famous People Born Today 26-12
Famous People died Today 26-12

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 26-12 | December 26

விடுதலை மற்றும் ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது. (சுலோவீனியா)
பொக்சிங் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (பொதுநலவாய நாடுகள்)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 26-12 | December 26

887ல் முதலாம் பெரிங்கார் இத்தாலியின் மன்னராக லோம்பார்டி பிரபுக்களால் நியமிக்கப்பட்டார்.
1489ல் பெர்டினாண்டு, இசபெல்லா ஆட்சியாளர்களின் கத்தோலிக்கப் படைகள் அல்மேரீயாவை கிரனாதா அமீரகத்தின் சுல்தானிடமிருந்து கைப்பற்றின.
1776ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: டிரென்டன் சண்டையில், அமெரிக்க விடுதலைப் படை எசியன் படைகளுடன் போரிட்டு வென்றது.
1792ல் பிரெஞ்சுப் புரட்சி: பாரிசில் பதினாறாம் லூயி மன்னனுக்கெதிரான கடைசி விசாரணைகள் ஆரம்பமாயின.
1805ல் ஆஸ்திரியாவும், பிரான்சும் பிரெசுபர்க் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
1811ல் வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரில் நாடக அரங்கில் இடம்பெற்ற தீவிபத்தில் வேர்ஜீனியாவின் ஆளுநர் ஜோர்ஜ் வில்லியம் சிமித் இறந்தார்.
1825ல் புருசியப் பேரரசர் முதலாம் நிக்கலாசுக்கு எதிராக மூவாயிரத்துக்கும் அதிகமான உருசியத் தாராண்மைவாதிகள் சென் பீட்டர்ஸ்பேர்க் செனட் சதுக்கத்தில் திரண்டனர். இவர்களின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
1862ல் ஐக்கிய அமெரிக்காவின் மினசோட்டாவில் 39 அமெரிக்கப் பழங்குடியினர் தூக்கிலிடப்பட்டனர்.
1870ல் ஆல்ப்ஸ் மலைத்தொடரூடான 12.8-கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.
1882ல் யாழ்ப்பாணம், மன்னார் உட்பட இலங்கையின் பல இடங்களிலும் பலத்த மழையுடன் சூறாவளி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
1896ல் 1896 சிலாபம் கலவரம்: இலங்கை, சிலாபம் நகரில் சோனகர்களுக்கும், கத்தோலிக்க சிங்களவர்களுக்குமிடையில் கலவரம் வெடித்தது.
1898ல் மேரி கியூரி, பியேர் கியூரி ஆகியோர் ரேடியத்தைத் தாம் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
1925ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1925ல் துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
1943ல் இரண்டாம் உலகப் போர்: நோர்வேயில் செருமனிய போர்க்கப்ப்பல் ஷார்ன்ஹோஸ்ட் பிரித்தானியக் கடற்படையினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
1944ல் ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை உருவாக்கினார்.
1948ல் வட கொரியாவில் இருந்து கடைசி சோவியத் படைகள் வெளியேறின.
1972ல் வியட்நாம் போர்: அமெரிக்காவின் பி-52 ஸ்ராடோபோட்ரெஸ் போர் வானூர்திகள் ஹனோய் நகரைத் தாக்கின.
1973ல் சோவியத்தின் சோயூஸ் 13 விண்கலம் ஒரு வார பயணத்தின் பின் பூமி திரும்பியது.
1974ல் சோவியத்தின் சல்யூட் 4 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
1975ல் உலகின் முதலாவது வணிக-நோக்கு சுப்பர்சோனிக் வானூர்தி துப்போலெவ் டி.யு-144 சேவைக்கு விடப்பட்டது.
1976ல் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைக்கப்பட்டது.
1979ல் சோவியத் சிறப்புப் படையினர் ஆப்கானிஸ்தானின் அரசுத்தலைவர் மாளிகையைக் கைப்பற்றினர்.
1985ல் கொரில்லா பற்றி ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் டயான் ஃபாசி கொல்லப்பட்டார்.
1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது. பனிப்போர் முடிவுக்கு வந்தது.
1999ல் மத்திய ஐரோப்பாவில் சூறாவளி தாக்கியதில் 137 பேர் உயிரிழந்தனர்.
2003ல் தென்கிழக்கு ஈரானில் பாம் நகரில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் நிலநடுக்கத்தால் 26,000 பேர் உயிரிழந்தனர்.
2004ல் வடக்கு சுமாத்திராவை 9.1–9.3 Mw இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் தாக்கியதில் தாய்லாந்து, இந்தியா, இலங்கை, மாலைத்தீவுகள், மலேசியா, மியான்மர், வங்காளதேசம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் 300,000 பேர் வரை இறந்தனர்.
2006ல் சதாம் உசேனின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது.
2006ல் நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எண்ணெய்க் குழாய் ஒன்று வெடித்ததில் 260 பேர் உயிரிழந்தனர்.
2009ல் உலகின் மிக நீளமான அதி-விரைவு தொடருந்துப் பாதை சீனாவில் பெய்ஜிங்கிற்கும் குவாங்சௌவிற்கும் இடையில் அமைக்கப்பட்டது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 26-12 | December 26

1617ல் போர்த்துக்கீச இயேசு சபை கத்தோலிக்கக் குருவும் மதப்பரப்புனரும் வரலாற்று எழுத்தாளருமான‌ பெர்னாவ் தெ குவெய்ரோசு பிறந்த நாள். (இறப்பு-1688)
1780ல் இசுக்கொட்டியக் கணிதவியலாளரும் வானியலாளருமான‌ மேரி சோமர்வில்லி பிறந்த நாள். (இறப்பு-1872)
1791ல் ஆங்கிலேயக் கணிதவியலாளரும் வித்தியாசப் பொறியைக் கண்டுபிடித்தவருமான‌ சார்ல்ஸ் பாபேஜ் பிறந்த நாள். (இறப்பு-1871)
1864ல் கொரிய செயற்பாட்டாளரும் அரசியல்வாதியுமான‌ யுன் சி – கோ பிறந்த நாள். (இறப்பு-1945)
1880ல் ஆத்திரேலிய உளவியலாளரான‌ எல்டன் மேயோ பிறந்த நாள். (இறப்பு-1949)
1893ல் சீனப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரான‌ மா சே துங் பிறந்த நாள். (இறப்பு-1976)
1896ல் இலங்கையின் முன்னோடித் தொல்லியலாளரும் கல்வெட்டியலாளருமான‌ சேனரத் பரணவிதான பிறந்த நாள். (இறப்பு-1972)
1899ல் இந்தியப் புரட்சியாளரான‌ உத்தம் சிங் பிறந்த நாள். (இறப்பு-1940)
1901ல் டச்சு வானியலாளரான‌ பீட்டர் வான் தெ கேம்ப் பிறந்த நாள். (இறப்பு-1995)
1904ல் தமிழக பெண்ணியவாதியும் அரசியல் செயற்பாட்டாளரான‌ மீனாம்பாள் சிவராஜ் பிறந்த நாள். (இறப்பு-1992)
1910ல் இந்திய விடுதலை போராட்ட செயற்பாட்டாளரும் ஆத்திரியருமான‌ எமிலி செங்கல் பிறந்த நாள். (இறப்பு-1996)
1914ல் இந்திய சமூக சேவகரும் செயற்பாட்டாளருமான‌ பாபா ஆம்தே பிறந்த நாள். (இறப்பு-2008)
1925ல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அரசியல்வாதியான‌ விடுதலைப் போராட்ட வீரரான‌ இரா. நல்லகண்ணு பிறந்த நாள்.
1929ல் தமிழகக் கவிஞரான‌ முருகு சுந்தரம் பிறந்த நாள். (இறப்பு-2007)
1931ல் ஈழத்து நாடக மற்றும் திரைப்பட நடிகரும் வானொலிக் கலைஞருமான‌ எஸ். ஜேசுரத்தினம் பிறந்த நாள். (இறப்பு-2010)
1936ல் பின்லாந்து-அர்ச்செந்தீன வானியலாளரான‌ விற்பி நீமெலா பிறந்த நாள். (இறப்பு-2006)
1950ல் பாக்கித்தானின் 17வது பிரதமரான‌ ராசா பர்வைசு அசரஃப் பிறந்த நாள்.
1971ல் அமெரிக்க நடிகரான‌ ஜாரெட் லெடோ பிறந்த நாள்.
1986ல் ஆங்கிலேய நடிகரான‌ கிட் ஹாரிங்டோன் பிறந்த நாள்.
1990ல் உருசிய காற்பந்து வீரரான‌ தெனீசு சேரிசெவ் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 26-12 | December 26

268ல் திருத்தந்தையான‌ தியோனீசியுஸ் இறப்பு நாள்.
418ல் திருத்தந்தையான‌ சோசிமஸ் இறப்பு நாள். (பிறப்பு-
1530ல் மங்கோலியப் பேரரசரான‌ பாபர் இறப்பு நாள். (பிறப்பு-1483)
1624ல் செருமானிய வானியலாளரான‌ சைமன் மாரியசு இறப்பு நாள். (பிறப்பு-1573)
1886ல் ஆசுத்திரிய வானியலாளரும் கணிதவியலாளருமான‌ தியோடோர் வான் அப்போல்சர் இறப்பு நாள். (பிறப்பு-1841)
1931ல் தூவி தசம வகைப்படுத்தல் முறையைக் கண்டுபிடித்த அமெரிக்கரான‌ மெல்வில் தூவி இறப்பு நாள். (பிறப்பு-1851)
1972ல் அமெரிக்காவின் 33வது அரசுத்தலைவரான‌ ஹாரி எஸ். ட்ரூமன் இறப்பு நாள். (பிறப்பு-1884)
1981ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ சாவித்திரி இறப்பு நாள்.
1985ல் கொரில்லாவைப் பற்றி ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண்ணான‌ டயான் ஃபாசி இறப்பு நாள். (பிறப்பு-1932)
1989ல் இந்தியக் கேலிச்சித்திர ஓவியரான‌ கே. சங்கர் பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1902)
1998ல் இந்திய மெய்யியலாளரும் எழுத்தாளருமான‌ ராம் ஸ்வரூப் இறப்பு நாள். (பிறப்பு-1920)
1999ல் இந்தியாவின் 9வது குடியரசுத் தலைவரான‌ சங்கர் தயாள் சர்மா இறப்பு நாள். (பிறப்பு-1918)
2001ல் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவரும் தொழிற்சங்கத் தலைவருமான‌ கே. டி. கே. தங்கமணி இறப்பு நாள். (பிறப்பு-1914)
2006ல் அமெரிக்காவின் 38வது அரசுத்தலைவரான‌ ஜெரால்ட் ஃபோர்ட் இறப்பு நாள். (பிறப்பு-1913)
2011ல் கருநாடகத்தின் 15வது முதலமைச்சரான‌ சாரெகொப்பா பங்காரப்பா இறப்பு நாள். (பிறப்பு-1932)
2018ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளரான‌ ராய் கிளாபர் இறப்பு நாள். (பிறப்பு-1925)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleDecember 25 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 25
Next articleDecember 27 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 27