Today Special Historical Events In Tamil | 25-12 | December 25
December 25 Today Special | December 25 What Happened Today In History. December 25 Today Whose Birthday (born) | December-25th Important Famous Deaths In History On This Day 25/12 | Today Events In History December 25th | Today Important Incident In History | மார்கழி 25 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 25-12 | மார்கழி மாதம் 25ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 25.12 Varalatril Indru Nadanthathu Enna| December 25 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 25/12 | Famous People Born Today 25.12 | Famous People died Today 25-12.
Today Special in Tamil 25-12
Today Events in Tamil 25-12
Famous People Born Today 25-12
Famous People died Today 25-12
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 25-12 | December 25
கிறித்துமசு நாளாக கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. (கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், எக்குவடோரியல் கினி, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, காபோன், கொங்கோ குடியரசு)
நல்லாட்சி நாளாக கொண்டாடப்படுகிறது. (இந்தியா)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 25-12 | December 25
274ல் சூரியனுக்கான கோவில் உரோமை நகரில் அமைக்கப்பட்டது.
336ல் உரோமை நகரில் நத்தார் முதன் முதலில் கொண்டாடப்பட்டதாக அறியப்படுகிறது.
508ல் பிராங்குகளின் மன்னர் முதலாம் குளோவிசு கத்தோலிக்கராகத் திருமுழுக்குப் பெற்றார்.
800ல் சார்லமேன் புனித உரோமைப் பேரரசனாக முடிசூடினான்.
1000ல் அங்கேரிப் பேரரசு முதலாம் இசுடீவனின் கீழ் கிறித்தவ நாடானது.
1066ல் நோர்மண்டி இளவரசர் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.
1100ல் முதலாம் பால்டுவின் எருசலேமின் முதலாவது மன்னராக பெத்லகேம், பிறப்பிடத் தேவாலயத்தில் முடிசூடினார்.
1492ல் கொலம்பசின் சாண்டா மரியா கப்பல் எயிட்டி அருகே பவளப் படிப்பாறையில் மோதியது.
1559ல் நான்காம் பயசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1643ல் கிறித்துமசு தீவு கண்டுபிடிக்கப்பட்டது. பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ரோயல் மேரி கப்பலின் தலைவன் வில்லியம் மைநோர்ஸ் என்பவரால் இத்தீவுக்கு கிறித்துமசுத் தீவு எனப் பெயரிடப்பட்டது.
1741ல் ஆன்டர்சு செல்சியசு தனது செல்சியசு வெப்பமானியைக் கண்டுபிடித்தார்.
1758ல் ஹேலியின் வால்வெள்ளி ஜொகான் பாலிட்ச் என்னும் செருமனியரால் அவதானிக்கப்பட்டது. இதன் மூலம் எட்மண்டு ஏலியின் எதிர்வுகூறல் நிறுவப்பட்டது.
1776ல் சியார்ச் வாசிங்டன் அமெரிக்க விடுதலைப் படையுடன் இரவோடிரவாக டெலவேர் ஆற்றைக் கடந்து டிரெண்டனில் பிரித்தானியப் படைகளுடன் போரில் ஈடுபட சென்றார்.
1831ல் ஜமேக்காவில் அடிமைகள் விடுதலை வேண்டி கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1868ல் அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட அனைத்து கூட்டமைப்புப் படைவீரர்களுக்கும் பொது மன்னிப்பை அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜோன்சன் அறிவித்தார்.
1914ல் முதலாம் உலகப் போர்: செருமனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் கிறித்துமசு நாள் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
1932ல் சீனாவின் கான்சு நகரில் 7.6 நிலநடுக்கம் ஏற்பட்டதில் 275 பேர் இறந்தனர்.
1941ல் இரண்டாம் உலகப் போர்: ஆங்காங் மீதான சப்பானின் முற்றுகை ஆரம்பமாயிற்று.
1947ல் சீனக் குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
1962ல் சோவியத் ஒன்றியம் கடைசித் தடவையாக நிலத்திற்கு மேலான அணுவாயுத சோதனையை மேற்கொண்டது.
1968ல் கீழ்வெண்மணிப் படுகொலைகள்: கூலி அதிகம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 44 தலித் மக்கள் தமிழ்நாட்டில் கீழவெண்மணி கிராமத்தில் உயிருடன் தீயிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
1976ல் எகிப்திய விமானம் பேங்காக் நகரில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 52 பேரும், தரையில் 19 பேரும் உயிரிழந்தனர்.
1977ல் இசுரேல் பிரதமர் பெகின் எகிப்திய அதிபர் அன்வர் சதாத்தை சந்தித்தார்.
1979ல் சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானில் தனது படைகளை பெருமளவில் இறக்கியது.
1989ல் உருமேனியாவின் முன்னாள் கம்யூனிசத் தலைவர் நிக்கொலாய் செய்செஸ்குவுக்கும் அவரது மனைவிக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1990ல் உலகளாவிய வலைத் திட்டம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
1991ல் சோவியத் தலைவர் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பச்சோவ் விலகினார். அடுத்த நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
1991ல் உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகியது.
2003ல் பெனின் விமான நிலையத்தில் போயிங் 727 விமானம் வீழ்ந்ததில் 151 பேர் உயிரிழந்தனர்.
2003ல் மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் இருந்து டிசம்பர் 19 இல் ஏவப்பட்ட பீகில் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் தரையிறங்குவதற்கு சற்று முன்னர் காணாமல் போனது.
2004ல் காசினி விண்கப்பலில் இருந்து சனிக் கோளின் டைட்டன் துணைக்கோளில் இறக்குவதற்காக இயூஜென்சு என்ற சேய்க்கலம் விடுவிக்கப்பட்டது. இது 2005 சனவரி 14-இல் டைட்டானில் இறங்கியது.
2005ல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் அதிகாலை 12:15 மணியளவில் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த போது துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த ஒருவனால் சுட்டு கொல்லப்பட்டார்.
2012ல் கசக்ஸ்தானில் அண்டோனொவ் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்தனர்.
2016ல் உருசிய பாதுகாப்பு அமைச்சின் விமானம் ஒன்று கருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 92 பேரும் உயிரிழந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 25-12 | December 25
1642ல் ஆங்கிலேய இயற்பியலாளரும் கணிதவியலாளருமான ஐசாக் நியூட்டன் பிறந்த நாள். (இறப்பு-1726/1727)
1724ல் ஆங்கிலேய மெய்யியலாளரும் கருந்துளையை எதிர்வு கூறியவருமான ஜான் மிச்சல் பிறந்த நாள். (இறப்பு-1793)
1861ல் இந்திய அரசியல்வாதியான மதன் மோகன் மாளவியா பிறந்த நாள். (இறப்பு-1946)
1876ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளரான அடால்ஃப் வின்டாஸ் பிறந்த நாள். (இறப்பு-1959)
1876ல் பாக்கித்தானின் 1வது ஆளுநரான முகம்மது அலி ஜின்னா பிறந்த நாள். (இறப்பு-1948)
1899ல் அமெரிக்க நடிகரான ஹம்பிறி போகார்ட் பிறந்த நாள். (இறப்பு-1957)
1905ல் வைணவப் புலவரும் தமிழறிஞருமான டி. கே. இராமானுஜக் கவிராயர் பிறந்த நாள். (இறப்பு-1985)
1906ல் நோபல் பரிசு எப்ற்ற செருமானிய இயற்பியலாளரான ஏர்ணஸ்ட் ருஸ்கா பிறந்த நாள். (இறப்பு-1988)
1918ல் எகிப்தின் 3வது அரசுத்தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான அன்வர் சாதாத் பிறந்த நாள். (இறப்பு-1981)
1924ல் 10வது இந்தியப் பிரதமரான அடல் பிகாரி வாச்பாய் பிறந்த நாள். (இறப்பு-2018)
1927ல் இந்துத்தானி இசைக்கலைஞரான ராம் நாராயண் பிறந்த நாள்.
1942ல் எசுப்பானியப் பாடகரான என்ரீக்கே மொறேந்தே பிறந்த நாள். (இறப்பு-2010)
1949ல் பாக்கித்தானின் 12வது பிரதமரான நவாஸ் ஷெரீப் பிறந்த நாள்.
1956ல் தமிழ்த் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான பிரபு பிறந்த நாள்.
1960ல் இலங்கைத் தமிழ் கத்தோலிக்க மதகுருவும் ஆயருமான நோயெல் இம்மானுவேல் பிறந்த நாள்.
1971ல் கனடாவின் 23வது பிரதமரான ஜஸ்டின் துரூடோ பிறந்த நாள்.
1974ல் இந்திய நடிகையான நக்மா பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 25-12 | December 25
1796ல் ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளியான வேலு நாச்சியார் இறப்பு நாள். (பிறப்பு-1730)
1921ல் உருசிய ஊடகவியலாளரும் எழுத்தாளரும் செய்ற்பாட்டாளருமான விளாதிமிர் கொரலென்கோ இறப்பு நாள். (பிறப்பு-1853)
1931ல் அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞரான பா. வே. மாணிக்க நாயக்கர் இறப்பு நாள். (பிறப்பு-1871)
1961ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவரான ஒட்டோ லோவி இறப்பு நாள். (பிறப்பு-1873)
1972ல் சென்னை மாகாண முதல்வரும் அரசியல்வாதியும் எழுத்தாளருமான ராஜாஜி இறப்பு நாள். (பிறப்பு-1978)
1977ல் ஆங்கிலேய நடிகரான சார்லி சாப்ளின் இறப்பு நாள். (பிறப்பு-1889)
1994ல் 7வது இந்தியக் குடியரசுத் தலைவரான ஜெயில் சிங் இறப்பு நாள். (பிறப்பு-1916)
2004ல் இந்திய இடதுசாரி அரசியல்வாதியான நிரூபன் சக்கரபோர்த்தி இறப்பு நாள். (பிறப்பு-1905)
2005ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான யோசப் பரராஜசிங்கம் இறப்பு நாள். (பிறப்பு-1934)
2006ல் அமெரிக்கப் பாடகரான ஜேம்ஸ் ப்ரௌன் இறப்பு நாள். (பிறப்பு-1933)
2006ல் இலங்கை மலையக இலக்கியவாதியும் கவிஞருமான தமிழோவியன்,
2016ல் அமெரிக்க வானியலாளரான வேரா உரூபின் இறப்பு நாள். (பிறப்பு-1928)
2018ல் வங்காள மொழிக் கவிஞரான நரேந்திரநாத் சக்ரவர்த்தி இறப்பு நாள். (பிறப்பு-1924)
2018ல் அமெரிக்க வானியலாளரான நான்சி கிரேசு உரோமன் இறப்பு நாள். (பிறப்பு-1925)
2019ல் ஈழத்து நூலகரும் எழுத்தாளருமான சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் இறப்பு நாள். (பிறப்பு-1961)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan