Today Special Historical Events In Tamil | 24-12 | December 24
December 20 Today Special | December 20 What Happened Today In History. December 20 Today Whose Birthday (born) | December-20th Important Famous Deaths In History On This Day 20/12 | Today Events In History December 24th | Today Important Incident In History | மார்கழி 24 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 24-12 | மார்கழி மாதம் 24ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 24.12 Varalatril Indru Nadanthathu Enna| December 24 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 24/12 | Famous People Born Today 24.12 | Famous People died Today 24-12.
Today Special in Tamil 24-12
Today Events in Tamil 24-12
Famous People Born Today 24-12
Famous People died Today 24-12
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 24-12 | December 24
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (லிபியா)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 24-12 | December 24
640ல் நான்காம் ஜான் திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
820ல் பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் லியோ கான்ஸ்டண்டினோபில், ஹேகியா சோபியாவில் கொல்லப்பட்டார். முதலாம் மைக்கேல் பேரரசரானார்.
1294ல் ஐந்தாம் செலசுத்தீன் திருத்தந்தை பதவியைத் துறந்ததை அடுத்து எட்டாம் பொனிஃபேசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1690ல் யாழ்ப்பாணத்தில் கிறித்துமசு இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
1737ல் போபால் போரில் மராட்டியப் படைகள் முகலாய, ஜெய்ப்பூர், நிசாம், அயோத்தி நவாப், வங்காள நவாபுகளின் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தன.
1777ல் கிரிட்டிமட்டி தீவு ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது.
1814ல் பிரித்தானியாவுக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டியதை அடுத்து பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812 முடிவுக்கு வந்தது.
1846ல் பிரித்தானியர் புரூணையிடம் இருந்து லாபுவான் தீவைப் பெற்றனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் இத்தீவு மலேசியாவுக்குச் சொந்தமானது.
1851ல் அமெரிக்கக் காங்கிரசு நூலகம் தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.
1865ல் அமெரிக்காவின் இரகசிய அமைப்பான கு கிளக்சு கிளான் தோற்றுவிக்கப்பட்டது.
1906ல் ரெஜினால்ட் பெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.
1913ல் மிச்சிகனில் இத்தாலி மண்டபத்தில் கிறித்துமசு கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற நெரிசலில் 59 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழந்தனர்.
1914ல் முதலாம் உலகப் போர்: கிறித்துமசு தினத்துக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
1924ல் அல்பேனியா குடியரசாகியது.
1939ல் இரண்டாம் உலகப் போர்: திருத்தந்தை பன்னிரண்டாம் பயசு கிறித்துமசு நாள் அமைதி அமைதி காக்கக் கோரிக்கை விடுத்தார்.
1941ல் இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் பங்காசி நகரத்தை பிரித்தானியப் படையினர் கைப்பற்றினர்.
1941ல் இரண்டாம் உலகப் போர்: மலேசியாவின் சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங் சப்பானியரிடம் வீழ்ந்தது.
1951ல் லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் இத்ரிசு லிபிய மன்னராக முடிசூடினார்.
1953ல் நியூசிலாந்தில் டாங்கிவாய் என்ற இடத்தில் தொடருந்து மேம்பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதில் சென்று கொண்டிருந்த தொடருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 151 பேர் உயிரிழந்தனர்.
1966ல் அமெரிக்கப் படையினரை ஏற்றிச் சென்ற கனடாஏர் விமானம் தெற்கு வியட்நாமில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 129 பேர் உயிரிழந்தனர்.
1968ல் மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.
1969ல் வடகடலின் நோர்வே பகுதியில் முதன் முதலாக எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
1974ல் ஆத்திரேலியாவில் டார்வின் நகரில் சூறாவளி ட்ரேசி தாக்கியதில் 71 பேர் இறந்தனர்.
1994ல் ஏர் பிரான்சு விமானம் 8969 அல்ஜியர்சில் கடத்தப்பட்டது. மூன்று நாட்கள் நீடித்த இக்கடத்தலின் முடிவில் மூன்று பயணிகளும் நான்கு கடத்தல்காரரும் கொல்லப்பட்டனர்.
1999ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 காட்மாண்டிற்கும், தில்லிக்கும் இடையில் கடத்தப்பட்டு, ஆப்கானித்தான், கந்தகார் நகரில் தரையிறக்கப்பட்டது. டிசம்பர் 31 இல் இக்கடத்தல் முடிவுக்கு வந்தது. ஒரு பயணி கொல்லப்பட்டு, 190 பேர் விடுவிக்கப்பட்டனர்.
2005ல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு தேவாலயம் ஒன்றில் நத்தார் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது துணை இராணுவக் குழுக்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2005ல் டிசம்பர் 18 இடம்பெற்ற தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, சாட் சூடான் மீது போரை அறிவித்தது.
2008ல் உகாண்டாவின் கிளர்ச்சிக் குழு ஒன்று காங்கோ சனநாயகக் குடியரசில் நடத்திய தாக்குதலில் 400 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 24-12 | December 24
1166ல் இங்கிலாந்தின் அரசனாக இருந்த ஜான் பிறந்த நாள். (இறப்பு-1216)
1740ல் பின்லாந்து-சுவீடிய வானியலாளரும் கணிதவியலாளருமான ஆண்டர்சு இலெக்செல் பிறந்த நாள். (இறப்பு-1784)
1761ல் பிரான்சிய வானியலாளர் ழீன் உலூயிசு பொன்சு பிறந்த நாள். (இறப்பு-1831)
1818ல் ஆங்கிலேய இயற்பியலாளர் ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல் பிறந்த நாள். (இறப்பு-1889)
1822ல் ஆங்கிலேயக் கவிஞரும் திறனாய்வாளருமான மேத்யு அர்னால்ட் பிறந்த நாள். (இறப்பு-1888)
1837ல் பவேரியாவின் எலிசபெத் பிறந்த நாள். (இறப்பு-1898)
1822ல் பிரான்சியக் கணிதவியலரான சார்ல்ஸ் ஹெர்மைட் பிறந்த நாள். (இறப்பு-1901)
1881ல் நோபல் பரிசு பெற்ற எசுப்பானியக் கவிஞரான வான் ரமோன் ஹிமெனெஸ் பிறந்த நாள். (இறப்பு-1958)
1896ல் சிந்தி அறிஞரும் விமர்சகரும் எழுத்தாளருமான மங்காராம் உதராம் மல்கானி பிறந்த நாள். (இறப்பு-1980)
1905ல் அமெரிக்கத் தொழிலதிபரும் பொறியியலாளரும் விமானியுமான ஹோவார்ட் ஹியூஸ் பிறந்த நாள். (இறப்பு-1976)
1924ல் இந்தியப் பின்னணிப் பாடகரான முகமது ரபி பிறந்த நாள். (இறப்பு-1980)
1924ல் காந்தியவாதியும் நூலாசிரியருமான நாராயண் தேசாய் பிறந்த நாள். (இறப்பு-2015)
1932ல் இந்திய இயற்பியலாளரான மதன் லால் மேத்தா பிறந்த நாள். (இறப்பு-2006)
1938ல் இந்தியத் தொழிலதிபரான சுரேஷ் கிருஷ்ணா பிறந்த நாள்.
1939ல் தமிழறிஞரும் இதழாளருமான இல. செ. கந்தசாமி பிறந்த நாள். (இறப்பு-1992)
1944ல் இந்தியப் பேராயரும் கருதினாலுமான ஆஸ்வால்டு கிராசியாஸ் பிறந்த நாள்.
1946ல் தமிழிசை ஆய்வாளரும் எழுத்தாளருமான நா. மம்மது பிறந்த நாள்.
1957ல் ஆப்கானித்தானின் 12வது அரசுத்தலைவரான ஹமித் கர்சாய் பிறந்த நாள்.
1959ல் இந்திய நடிகரான அனில் கபூர் பிறந்த நாள்.
1964ல் எழுத்தாளரான தமிழ்மகன் பிறந்த நாள்.
1969ல் ஆங்கிலேய அரசியல்வாதியான எட் மிலிபாண்ட் பிறந்த நாள்.
1971ல் புவெர்ட்டோ ரிக்கோ-அமெரிக்கப் பாடகரான ரிக்கி மாட்டின் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 24-12 | December 24
1524ல் போத்துக்கீச இந்தியாவின் ஆளுநரும் மாலுமியுமான வாஸ்கோ ட காமா இறப்பு நாள். (பிறப்பு-1469)
1950ல் திரைப்பட நடிகரான பி. ஜி. வெங்கடேசன் இறப்பு நாள்.
1973ல் திராவிடர் கழகத்தினை தோற்றுவித்தவரான ஈ. வெ. ராமசாமி இறப்பு நாள். (பிறப்பு-1879)
1987ல் தமிழக நடிகரும் தமிழ்நாட்டின் 5வது முதலமைச்சருமான எம். ஜி. இராமச்சந்திரன் இறப்பு நாள். (பிறப்பு-1917)
1997ல் சீன-சப்பானிய நடிகருமான டோஷிரோ மிபூன் இறப்பு நாள். (பிறப்பு-1920)
2002ல் தமிழ் திரைப்பட நடிகரான வி. கே. ராமசாமி இறப்பு நாள். (பிறப்பு-1926)
2005ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான ஜோசப் பரராஜசிங்கம் இறப்பு நாள். (பிறப்பு-1934)
2005ல் தமிழ்த் திரைப்பட நடிகையான பி. பானுமதி இறப்பு நாள். (பிறப்பு-1925)
2008ல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய நாடகாசிரியரான ஹரோல்ட் பிண்டர் இறப்பு நாள். (பிறப்பு-1930)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan