ஒரு தம்பியிடம் கேட்டேன்:
தம்பி எல்லோரும் ஏன் கியூவில நிக்கிறியள்?
அவர் சொன்ன பதில்:
இலங்கையில் கொரோனா நோயாளியள் 2 பேரை அடையாளம் கண்டுட்டாங்களாம். யாழ்ப்பாணத்துக்கும் வந்தா கஸ்ரம் தானே அண்ண.
ஓம் ஓம் கஸ்ரம் தான் தம்பி அதுக்கு ஏன் பெற்றோலுக்கு கியூவில நிக்கிறியள்
ஒரு வேளை கொரோனா பரவிச்சுது எண்டா வெளியில வெளிக்கிட அரசாங்கம் விட மாட்டுது தானே. 2, 3 கிழமைக்கு வீட்டுக்க தான் இருக்க வேண்டி வரும் எண்டு சனம் கதைக்குது. அதுதான். தட்டுப்பாடு வந்தாலும் எண்டு வாங்குறம்.
2, 3 கிழமைக்கு வீட்டுக்கயே இருக்க வேண்டி வரும் எண்டா வெளியில வெளிக்கிடமாட்டியள் தானே. பிறகு எதுக்குடாப்பா கான் கணக்கில பெற்றோல் வாங்கிறியள்.
நீங்கள் சொல்லுறதும் சரிதான். ஆனாலும் எல்லாச் சனமும் வேண்டி வைக்கேக்க நாங்களும் வாங்கத்தானே வேணும். பிறகு தட்டுப்பாடு வந்தா?
போச்சுடா போச்சு..
சரி. என்னெண்டான்ன செய்து துலயுங்கோ.
எங்கட சனம் இடப்பேர்வு வரேக்கயே புத்தியா மாசக்கணக்கில எல்லா சாமானையும் வாங்கி வச்சுப்போட்டு விட்டுப்போட்டு ஓடினதுகள் தானே!
ஈரானில் நாட்டில அமெரிக்கா விமானத் தாக்குதல் நடாத்திய போது யாழ்ப்பாணத்தில் பெற்றோல் நிலையங்களில் சனம் அலைமோதியது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம்.
தற்போது கொறோனா வைரஸ் தாக்கம் என கூறி அதற்கு எச்சரிக்கையாக பாடசாலைகளை அரசாங்கம் மூடியதையடுத்து பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் யாழில் சனங்கள் நிரம்பி வழிகின்றனர்.
இப்படி சுத்த முட்டாள் தனமான செயற்பாடுகளை சனம் எப்போதுதான் நிறுத்தப் போகின்றதோ தெரியாது என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.
யாழில் வர்த்தக நிலையங்களை நோக்கி படை எடுக்கும் மக்கள், அடிப்படை பொருட்களை களஞ்சியப்படுத்தல் முக்கியம் என்கிறார்கள். கொரொனா தாக்கினால் நாட்டிற்குள் சரக்கு கப்பல் வராது என தாமே தீர்மானித்து விட்டனர். வர்த்தகர்கள் மக்களின் இச்செயல் மீது முகம் சுழிக்கின்றனர், நிலவரம் அவ்வாறு இல்லை எனவும் கூறி மக்கள் செவிசாய்ப்பதாக இல்லை. இருந்தாலும் யாழில் நல்ல வியாபாரம் நடக்குது.
அன்றாடம் உழைத்து அடுப்பு மூட்டும் மக்களும் இதே சமூகத்திற்குள் வாழ்கிறார்கள் என்பதுதான் வருத்தத்திற்குரிய விடயம்.
ஆனா பாருங்கோ நம்ம புள்ளீங்கோ எல்லாம் அப்பவே அப்படி கொரோணாவ யாழ்ப்பாணத்துக்க வர விட்டிருவாங்களா என்ன?


By: Tamilpiththan