Ashwagandha Benefits in Tamil Amukkara Benefits Ashwagandha Payangal Amukkara Payangal அஸ்வகந்தா பயன்கள் / அமுக்கிரா பயன்கள்

0

Ashwagandha Benefits in Tamil Amukkara Benefits Ashwagandha Payangal Amukkara Payangal அஸ்வகந்தா அமுக்கிரா பயன்கள்: Ashwagandha Benefits in Tamil அஸ்வகந்தா சூரணம், அஸ்வகந்தா அமுக்கரா மருத்துவ பயன்கள், Ashwagandha Uses, Ashwagandha Nanmaigal, Amukkara Nanmaigal, Ashwagandha Benefits in Tamil. நரம்பு தளர்ச்சி ஆண்மை குறைபாடு போக்கும் அஸ்வகந்தா சூரணம், மீண்டும் இளமை திரும்பும்.

Ashwagandha Benefits in Tamil

Ashwagandha Benefits in Tamil | அஸ்வகந்தா | அமுக்கரா பயன்கள்

வேறு பெயர்கள் -: அமுக்குரா, இருளிச்செவி, வராககர்ணி, இடிச்செவி.

வடமொழியில் ‘அஸ்வம்’ என்றால் குதிரை என்றும் ‘கந்தம்’ என்றால் கிழங்கு என்றும் பொருள்கொள்ளும் வகையில் குதிரை பலத்தை அஸ்வகந்தா வழங்குகிறது என்பதனாலும், இதன் இலையை மணந்து பார்த்தால் குதிரை வாசத்தினை முகரமுடிவதனாலும் இந்தப் பெயரை இது கொண்டுள்ளது என்று கூறுகின்றார்கள்.

‘கொஞ்சந் துவர்ப்பாங் கொடியகஞ் சூலையரி

மிஞ்சுகரப் பான்பாண்டு வெப்பதப்பு-விஞ்சி

முசுவுறு தோடமும்போ மோகம் அனு லுண்டாம்

அசுவகந் திக்கென்றறி.’

என்கிறது சித்தர் பாடல்

சிறிது துவர்ப்பு தன்மையுள்ள அசுவகந்திக் கிழங்கினால் க்ஷாயம், வாதசூலை, வாத கரப்பான், பாண்டு, சுரம், வீக்கம், சலதோஷம் இவை நீங்குவதுடன், பெண்கள் மீதான நாட்டம், பசியும் உண்டாகும் என்றும் கூறியுள்ளனர்.

முறை -: முதலில் அசுவகந்திக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கவும். பின்னர் நறுக்கிய துண்டுகளை பசுப்பாலில் அவிக்கவும். பின்னர் அதனை நன்கு ஈரம் உலர்த்திய பின் இடித்துச் சூரணம் தயாரித்து சம அளவு நிறையடைய சர்க்கரை சேர்த்து போத்தல் ஒன்றில் பத்திரப் படுத்தி வைக்கவும்.

தேவையேற்படும் போது இச்சூரணத்தை வேளைக்கு ஒரு வராகனெடை வீதம் நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் பசுப்பாலில் கலந்து கொடுக்கும் போது மேனியழகு மேலும் கூடுவதுடன், உடலிலுள்ள கெட்ட நீர், கபம், கரப்பான், பாண்டு, சூலை, மேக அழலை, வெட்டை, வீக்கம், கட்டி மற்றும் பித்த மயக்கம் போன்றனவும் நீங்கும்.

மேலும், கட்டி மற்றும் வீக்கம் போன்றனவற்றை கரைப்பதற்கு அசுவகந்திக் கிழங்கு மற்றும் சுக்கு இரண்டினையும் அரைத்து அவற்றின் மேல் பத்துப் போடலாம். இவற்றை விட இதனுடன் இதர சரக்குகளைக் சோர்த்து சில வகையான அவிழ்தங்கள் செய்வதும் உண்டு.

உலகத்தில் உள்ள மிக சக்தி வாய்ந்த பாலுணர்வூட்டியாக காணப்படும் அஸ்வகந்தா என்ற அதிசயமான மூலிகை பாலியல் ரீதியான அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதாவது, இதனை உட்கொள்ளும் போது, பாலியல் சக்தி அதிகரிக்கின்றது. குறிப்பாக ஆண்களிடம் இது ஆண்மையை அதிகரித்து, படுக்கையில் நீண்ட நேரம் நீடிக்க உதகின்றது. ஆண்கள் இதனை உண்ணும் போது, விந்தணு எண்ணிக்கையும் அதன் தரமும் அதிகரிப்பதனால் கருவுறும் தன்மையும் அதிகரிக்கும்.

ஆண்மைக் குறைவுக்கு அசுவகந்தி லேகியம்:

தேவையான பொருட்கள்

உலர்ந்த நாட்டு அமுக்கிராக் கிழங்கு – 500 கிராம்

சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கோரைக் கிழங்கு, நன்னாரி, ஏலரிசி – தலா 25 கிராம்

பனைவெல்லம் – 1500 கிராம்

நெய் – 150 கிராம்.

செய்முறை:

முதலில் ஒரு லீட்டர் நீரில் பனைவெல்லத்தைக் கரைத்துக் காய்ச்சி கல், மண் இல்லாமல் வடிகட்டுதல் வேண்டும். பின்னர், மீண்டும் பாகுபதமாகக் காய்ச்சி, மேலே கூறப்பட்ட சரக்குகளின் சூரணத்தைப் போட்டு, நன்கு கிளறி, நெய் விட்டு ஒன்று கலந்து ஆறியபின்னர் அதனைப் பதப்படுத்தவும்.

அளவு: தினமும் இரண்டு வேளைகள் 10 கிராம் அளவினை பால் அல்லது நீருடன் கலந்து பருகவும்.

தீரும் நோய்கள்: இரத்தக் கொதிப்பு, இரத்தக் குறைவு, இரத்த தோஷங்கள், ஆண்மைக்குறைவு, சுக்கிலக் குறைவு, பலவீனம், நரம்புத் தளர்ச்சி மற்றும் இளைப்பு போன்ற பல்Nவுறுபட்ட வியாதிகள்; நீங்கி உடல் வலுவடையும்.

குறிப்பு: இந்த லேகியத்துடன் ஒரு சிறந்த வலுவூட்டி டானிக் என்ற வகையில் இதனுடன் அயச் செந்தூரம் சேர்த்து சாப்பிட்டால் மிகு இரத்த விருத்தி உண்டாகி, நரம்புகள் பலமடையும்.

ஒரு கரண்டி அஸ்வகந்தா லேகியம் அல்லது அரை கரண்டி அஸ்வகந்தா பொடி அல்லது தினமும் 2 மாத்திரைகள் என தொடர்ந்து 1 மாதத்திற்கு எடுத்து வரும்போது, நீங்கள் விந்தணு தரம், எண்ணிக்கை, பாலியல் சக்தி, நீடித்து நிற்கும் திறமையில் கண்டிப்பாக கவனிக்கத்தக்க மாற்றத்தை காண்பீர்கள்.

உணவருந்திய பின் அரை கரண்டி அஸ்வகந்தா பொடியுடன் தேன், கற்கண்டு மற்றும் நெய் கலதோ அல்லது அஸ்வகந்தாவை திரிபலா பொடியுடன் கலந்தோ தினமும் உண்ணலாம். இதனை எடுத்துக் கொண்ட பிறகு இளஞ்சுடான ஒரு கப் பாலை குடித்தல் பலனை மேலும் அதிகரிக்கும்.

அசுவகந்தித் தைலம்:

முதலில் நன்கு சுத்தம் செயயப்பட்ட அசுவகந்திக் கிழங்கு பலம் 10 மற்றும் சற்றாமுட்டி வேர் பலம் 10 என்பனவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி, இடித்து ஒரு பழகிய தைல பாத்திரத்தில்; போடவும். பின்னர் 12 படி சலம் விட்டு அதற்குள் 10 பலம் கொம்பரக்குத் தூளைத் தளர்ச்சியாக சீலையில் முடிந்து பாத்திரத்;தின் அடி மட்டத்திற்கு மேலே 4 விரல் உயரத்தில் நிற்கும் படி தோலாந்திரமாகக்கட்டி அடுப்பில் வைத்து சிறு தீயாக எரிக்கவும். இந்த மண் பாத்திரத்தில்; விட்ட சலமானது நன்றாய்ச் சுண்டி மூன்று படி நிதானத்திற்கு வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி ஆற விட்டு, வேறொரு பாத்திரத்தில் வடித்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அப்பால் முன் கியாழமிட்ட பாத்திரத்தைச் சுத்தப்படுத்தி அதனில் நல்லெண்ணெய் 2 ததிமஸ்து (பசுவின் தயிரைச் சீலையில் முடிச்சுக் கட்டி வடித்தெடுத்த சலம்) 1 முன் சித்திப் படுத்திய கியாழம் விட்டு உறவாகும் படி கலக்கி அடுப்பில் வைத்து சிறு தீயாக எரிக்கும் போது சிற்றரத்தை, நன்னாரி, தேவதாரம், பூலாங்கிழங்கு, பூஞ்சாத்துப் பட்டை, கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல், கண்டந்திப்பிலி வகைக்கு பலம் அரைக்கால் வீதம் இடித்து வஸ்திரகாயம் செய்து பால் விட்டு அரைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறிக் கொடுக்கவும்.

தைலமானது நன்றாய் கொதித்து வண்டல் மெழுகு பதமாக மாறும் போது, கீழே இறக்கி ஆற விட்டு வடித்து சீசாவில் அடைத்துத் தானிய புடம் வைத்து எடுத்துக் கொள்ளவும். இதனை வாரம் ஒரு முறை தலைமுடிக்கு பூசி; குளித்து வரும் போது தலை சார் ரோகம் மற்றும் காய்ச்சல் குணமடைவதுடன், உடல்; இறுகும், கண் தெளிவடையும். இதற்குப் பத்தியம் பகல் நித்திரை, அலைச்சல், உடல் உழைப்பு என்பன கூடாது.

அசுவகந்திச் சூரணம்:

முதலில், 1 கிராம்பு, 2 சிறு நாகப்பூ, 3 ஏலம், 4 இலவங்கப் பட்டை, 5 இலவங்கப் பத்திரி, 6 சீரகம், 7 தனியா, 8 மிளகு, 16 திப்பிலி, 32 சுக்கு என்பனவற்றை பாலில் அவித்து, நன்கு சுத்தம் செய்த 64 அசுவகந்திக் கிழங்கு, ஆகியனவற்றை வராகனெடையாக நிறுததுக் கொள்ளவும். பின்னர், அதனை கல்லுரலில் இட்டுக் கடப்பாறையால் நன்கு இடித்து வஸ்திரகாயம் செய்து இவற்றின் மொத்த நிறைக்கு நிகரான வெள்ளைச் சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்துக. தேவையேற்படும் போது வேளைக்கு கால் அரைத் தோலா வீதம் தினமும் இரண்டுவேளை 20 முதல் 40 நாள் கொடுத்து வர மேகம், அஸ்திசுரம், அஸ்திவெட்டை சுவாசம், ஈளை, பாண்டு, மேக ஊறல் முதலியவை நீங்கும்.

மேலும், இதன் வேர்கள் மூட்டுவலி, வாதம், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண் இவைகளைக் குணப்படுத்துவதுடன், வேர், இலை, விதை மற்றும் பழம் என அனைத்திலும் ஆல்கலாய்டுகள் உள்ளதனால் இதனை சித்தா, யுனானி, அலோபதி போன்ற மருந்துகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றதுடன், இது பாலுணர்வை அதிகரிக்கப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் உடல் பலவீனம், கை, கால், சோர்வு போன்றனவற்றை நீக்கி, அதிக வலிமையையும் சக்தியினையும் வழங்குகின்றது.

இதனைவிட, அரசபிளவை, எரிகரப்பான் மற்றும் பாலியல் நோய்ப்புணகளிற்கு இதன் இலையை மென்மையாய் அரைத்துப் பற்றுப்போட அவை எளிதில் குணமடைவதுடன், இந்த மூலிகை வயதாவதை தடுக்கும் வலிமையையும், இளமையை பராமரிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளதனால், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களுக்கு எதிராக போராட எமக்கு உதகின்றது.

இரண்டு கிராம் உலர்ந்த கிழங்குப் பொடியினை தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வரும்போது உடல் பலவீனம், இருமல், உடல் வீக்கம், காசம், பசியின்மை, மூட்டு அழற்சி, செரிமானக் குறைவு மற்றும் முதுமைத் தளர்ச்சி ஆகியவை நீங்குவதுடன், இரத்தத்தில் உள்ள இரும்புச்சத்து இந்த மூலிகையிலும் உள்ளதனால், காசநோயினால் அவதிப்படுபவர்களை இது சிறப்பாக குணப்படுத்தும்.

இதன் இலை மற்றும் வேர் ஆகியவற்றைச் சமனளவு எடுத்து மையாய் அரைத்துப் பற்றுப் போட அரசபிளவை, ஆறாதபுண்கள், மூட்டு அழற்சியினால் ஏற்படும் வீக்கம் ஆகியவை தீருவதுடன், அஸ்வகந்தாவை உண்ணுவதனால் உடல் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு, புத்துணர்வை பெறுவதுடன், இனப்பெருக்க உறுப்புகளுக்கு புத்துணர்வை வழங்கி, நரம்புகளை மறுபடியும் உயிர்ப்பிக்க செய்து, உடலுக்கு புதிய வலிமையை வழங்குகின்றது. இவ்வாறாக, உடலுக்கு புதிய வலிமை கிடைப்பதனால், உடலின் சோர்வும் வலுவின்மையும் நீங்குவதுடன், மனதுக்கு அமைதியையும் வழங்கி, நின்மதியான தூக்கத்திற்கும் வழிவகுக்கும்.

இதன் காயை அரைத்துப் படர்தாமரையில் தடவும் போது படர்தாமரை குணமாகுவதோடு, இந்த மூலிகை பசியினைத் தூண்டி அதிகரித்து, சமிபாடு தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்தி, சமிபாட்டு செயல்முறையை இயல்பாக்குவதுடன், இந்த மூலிகையை உண்ணுவதன் மூலம் சீரான தூக்கத்தினைப் பெற முடியும். அதாவது மனதுக்கு அமைதியை உண்டாக்கி, நல்ல நிம்மதியான தூக்கத்தை ஏற்படுத்தும்.

ஐந்து கிராம் வேர்ச்சூரணத்தை தேனில் கலந்து காலை மற்றும் மாலை உள்ளெடுக்கும் போது சளி கரைந்து (நிமோனியா) கபவாதச் காய்ச்சல் நீங்குவதுடன், வெண்கழிவால் அவதிப்படும் பெண்கள் இந்த மூலிகையை உண்ணவதன் மூலம் வெண்கழிவை குணப்படுத்த முடியும்.

மேலும், வீக்கம் மற்றும் படுக்கைப்புண் என்பன சூரணத்தைப் பாலில் கலந்து பூசும் போது ஆறுவதுடன், இந்த மூலிகை மூட்டுக்களில் உள்ள அழற்சியை குறைத்து, கீல்வாதத்தையும் குணப்படுத்துகின்றது.

இந்த மூலிகையை உட்கொள்வதனால்;, உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவடைந்து, நீரிழிவு நோய் கட்டுப்பாடுத்தப்படுவதுடன், கொலஸ்ட்ரால் அளவு குறைவடைந்து கொலஸ்ட்ராலும் கட்டுப்படுத்தப்படும்.

வேர்ச்சூரணம் தூதுவேளை மற்றும் சமன் என்பனவற்றைக் கலந்து, அதை 5 கிராம் அளவான நெய் அல்லது பால் அல்லது வெண்ணையில் தினமும், மூன்று வேளை பத்தியத்துடன் கொடுத்து வரும்போது சிலேத்துமக் காய்ச்சல், பக்கச் சூலைக் காய்ச்சல் தீரும் என்பன நீங்குவதுடன், 10 கிராம் அமுக்கரா சூரணம், 30 கிராம் கசகசா, 10 கிராம் பாதாம் பருப்பு, 5 கிராம சாரப்பருப்பு மற்றும் 5 கிராம் பிஸ்தா பருப்பு என்பனவற்றை நன்கு ஊற வைத்து, தோல் நீக்கி, அதனை நன்கு அரைத்து 200 மில்லி பாலில் கலந்து, அதனுடன் சர்க்கரைச் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் மட்டும் தொடர்சியாக 90 நாள்கள் சாப்பிட்டு வரும் போது இழந்த இளமையைப் மீண்டும் பெறமுடியும்.

முன்னெச்சரிக்கைகள் (அமுக்கரா | அஸ்வகந்தாவின் தீமைகள்)

சிபாரிச செய்யப்பட்ட அளவில் அஸ்வகந்தாவை உட்கொள்ளும் போது, அஸ்வகந்தாவால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. எனினும், கர்ப்பமான பெண்கள் உண்ணும் போது சிசுவின் மீது தீவிரமான தாக்கம் ஏற்படக் கூடிய வாய்புகள் உள்ளன.

இதுவரை அஸ்வகந்தாவின் மீது போதியளவான ஆய்வுகள் நடத்தப்படவில்லை. இதனால் இதனை நீண்ட காலம் உட்கொண்டு வருவதால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி குறிப்பிட்டுக் கூற முடியவில்லை. எவ்வாறாயினும்;, அஸ்வகந்தா தைராய்டை ஊக்குவிக்கும் என ஓர் ஆய்வறிக்கை கூறியுள்ள வகையில்; இதனை நீண்ட காலத்திற்கு அதிகமாக உட்கொள்ளும் போது, சில பேருக்கு தைராய்டு ஏற்பட்டுள்ளதுடன், இரத்த கொதிப்பு மற்றும் அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மூலிகையை தவிர்த்துக் கொள்வது நல்லது.

Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

Article By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan 06-02-2020 இன்றைய ராசி பலன் 06.02.2020 இன்றைய பஞ்சாங்கம் வியாழக்கிழமை Today Calendar 06/02/2020 Thursday Indraya Rasipalan
Next articleஇன்றைய ராசி பலன் 07.02.2020 Today Rasi Palan 07-02-2020 !