அப்பா தந்த சட்டை appa thantha saddai kavithai Tamil Kavithai Lyrics (Tamilpiththan kavithaigal-39)

0
394

அப்பா தந்த சட்டை

பட்டுவண்ண சட்டை பட்டுவண்ண சட்டை
அப்பா தந்த சட்டை அப்பா தந்த சட்டை
சின்ன குட்டி எனக்கு சின்ன குட்டி எனக்கு
அப்பா தந்த சட்டை பட்டு வண்ண சட்டை!

அழகான சட்டை அழகான சட்டை
விலையான சட்டை விலையான சட்டை

நிறமான சட்டை நிறமான சட்டை
சிவப்பு பச்சை மஞ்சல் நீல வண்ண சட்டை

வாசமான சட்டை வாசமான சட்டை
பூ போட்ட சட்டை பூ போட்ட சட்டை

மல்லிகைப்பூ மாதுள‌ம்பூ ரோஜாப்பூ சட்டை
மல்லிகைப்பூ மாதுள‌ம்பூ ரோஜாப்பூ சட்டை

அப்பா தந்த சட்டை பட்டு வண்ண சட்டை

ஜம்மு குட்டி நானும் அணிந்து கொண்டு செல்வேன்
கோவிலுக்கு செல்வேன் கோவிலுக்கு செல்வேன்

தாத்தாவும் பார்ப்பார் அம்மம்மாவும் பார்ப்பார்
அப்பப்பாவும் பார்ப்பார் அப்பம்மாவும் பார்ப்பார்
பெரியப்பாவும் பார்ப்பார் பெரியம்மாவும் பார்ப்பார்
மாமாவும் பார்ப்பார் அத்தையும் பார்ப்பார்

அண்ணனும் பார்ப்பார் அக்காவும் பார்ப்பார்
தம்பியும் பார்ப்பார் தங்கையும் பார்ப்பார்
மச்சானும் பார்ப்பார் மச்சாளும் பார்ப்பார்

கடவுழும் பார்ப்பார் வந்தோரெல்லாம் பார்ப்பார்கள்
எல்லோரும் பார்ப்பார்கள் எல்லோரும் பார்ப்பார்கள்

செல்லக்குட்டி என்னைப்பார்த்து செல்லக்குட்டி என்னைப்பார்த்து
எல்லோரும் கேட்பார்கள் எல்லோரும் கேட்பார்கள்

யாரு தந்த சட்டை இது யாரு தந்த சட்டை
என்று என்னை கேட்பார்கள் என்று என்னை கேட்பார்கள்

செல்லக்குட்டி நானும் பம்பரம் போல் சுற்றி
பம்பரம் போல் சுற்றி பெருமையுடன் சொல்லுவேன்
பெருமையுடன் சொல்லுவேன்
அப்பா தந்த சட்டை இது அப்பா தந்த சட்டை
பட்டு வண்ண சட்டை அப்பா தந்த சட்டை!

அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்

Previous articleஇன்றைய ராசிபலன் 17.07.2023 Today Rasi Palan 17-07-2023 Today Tamil Calander Indraya Rasi Palan
Next articleசெம்மணித்தாய் semmani thaai Tamil Kavithai Lyrics (Tamilpiththan kavithaigal-40)