நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பை தடுக்கும் அபான வாயு “மிருத்யு சஞ்சீவி” முத்திரை! apana vayu mudra mrityu sanjeevani mudra

0
2387

நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பை தடுக்கும் அபான வாயு “மிருத்யு சஞ்சீவி” முத்திரை! apana vayu mudra mrityu sanjeevani mudra

apana vayu mudra mrityu sanjeevani mudra

தினமும் அதிக பட்சம் 40 நிமிடங்களும் குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது நமது மோதிர விரல் நுனியும் நடு விரல் நுனியும் பெருவிரல் நுனியை தொடும்படி வைத்து ஆள்காட்டி விரலை பெருவிரலின் அடிப்பாகத்தை தொடும்படி வைத்து சிறுவிரலை நேராக நீட்டி வைத்துக்கொள்ளும் முத்திரையை செய்வது நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பு போன்ற அனைத்து வகையான இருதய சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை கொண்டதனாலேயே இதனை “மிருத்யு சஞ்சீவி” என்று அழைத்து வருகின்றனர். apana vayu mudra mrityu sanjeevani mudra

நன்மைகள்:

இந்த உயிர் காக்கும் முத்திரையினைச் செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்த நோய் 15 நிமிடங்களில் குறைவடைவதுடன் நெஞ்சு படபடப்பு குறைவடைந்து இருதயத்தை பலப்படுத்தி இருதய நோய் வராமல் பாதுகாக்கும். மேலும் உடலில் உள்ள கழிவுகள் சீராக வெளியேற்றப்படுவதுடன் உறுப்புகள் நன்றாக இயங்கி உடலில் சக்தி அதிகமாகுவதன் மூலம் வாயுக்கோளாறு மலச்சிக்கலில் போன்றனவற்றிலிருந்து நிவாரணம் கிடப்பதுடன் மூலநோயும் குணமடையும்.

சிறிநீர்ப்பை உறுப்புகளில் உள்ள தடைகள் நீங்கி சிறுநீர் சிரமமில்லாமல் வெளியேறுவதுடன் இரைப்பை மற்றும் பெருங்குடலில் உள்ள வாய்வுத் தொல்லைகளும் நீங்கும். மேலும் இந்த முத்திரை பயிற்சி தொடர்ந்து செய்து வந்தால் இருதயத்தில் இரத்த நாளங்களில் ஏதாவது தடை காணப்பட்டிருந்தால் அத்தடைகள் நீங்கி நெஞ்சு வலி குறைவடைவதுடன் இருதயம் நன்கு பலப்படும்.

கவனிக்க இதனை காலை மாலை இருவேளையும் சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் 15 – 40 நிமிடங்கள் வரை செய்ய முடியும் என்பதுடன் நாற்காலியில் அமர்ந்து தரையில் கால்களை ஊன்றியபடியோ அல்லது தரை விரிப்பில் சம்மணமிட்டு உட்கார்ந்தோ செய்யலாம். ஆனால் படுத்துக் கொண்டு செய்யக் கூடாது. மேலும் பேதி பிரச்சனை இருக்கும்போதும் கர்ப்பிணிகளும் இந்த முத்திரை செய்வதைத் தவிர்ப்பது நல்லது. apana vayu mudra mrityu sanjeevani mudra

Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

Article By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவேர்க்கடலையில் தயாரிக்கப்படும் எண்ணெய் நல்ல கொழுப்பா! சக்கரை நோயாளிகள் மற்றும் கொலஸ்ரால் உள்ளவர்கள் சாப்பிட முடியுமா?
Next articleஇன்றைய ராசிப்பலன் – 19.01.2019 சனிக்கிழமை !