நம் உடலின் இரத்தம், நாம் சாப்பிடும் உணவுகளால், கெட்டுப்போகிறது, என்ன காரணம்? நாம் சாப்பிடும், நம்முடைய நாட்டின் தட்ப வெப்ப நிலைக்குப் பொருந்தாத நவீன கால துரித உணவுப்பொருட்கள்தான் முதல் காரணம் அப்புறம், மது மற்றும் புகை. இரத்தம் கெட்டால், என்னாவாகும்?
உடல் பலகீனமடையும், எதிலும் நாட்டம் இருக்காது, மந்தமாக இருக்கும், உடல் தளர்ந்து போகும், சோர்வுடன் காணப்படுவார்கள்.
இத்தகைய விளைவுகளைப் புறக்காரணிகள் என்று சொல்வார்கள், அவர்களைப்பார்க்கும் எல்லோரும், இத்தகைய பாதிப்புகள் கொண்ட நபரின் நிலையை நன்கு அறியமுடியும்.
இரத்தம் கெட்டுப்போவதால் உடலில் ஏற்படும் கெடுபலன்கள் என்ன? உடலில் அங்கங்கே கட்டிகள் தோன்றும், உடல் உல் உறுப்புகள் எல்லாம் பாதிக்கும். சிலருக்கு தோலில் அரிப்பு அல்லது நமைச்சல் ஏற்படலாம் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்!
குப்பை மேனி!
மனிதர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தும் இத்தகைய இரத்த மாசு நீங்கி உடல் பலம் பெற, புத்துணர்ச்சியும் எளிதில் செயல்களில் ஈடுபடும் ஆற்றல்களை அடைய, அருமையான ஒரு மூலிகை, அதுவும் ஒருபைசா கூட செலவில்லாமல் என்ன ஆச்சரியமா இருக்கா?
கிராமங்களிலோ அல்லது நகரங்களிலோ , நாம் எங்கு வசித்தாலும் சரி , நம் வீடுகளின் கொல்லைப்புரங்களில் யாரும் கவனிக்காமல், தானாக வளர்ந்து இருக்கும் பூனைவணங்கி என்று சொல்லப்படும் குப்பைமேனி செடிதான் அது. பெயரைக்கேட்டு, அலட்சியமாக நினைக்கவேண்டாம், அந்தக் காரணப்பெயர், கண்ணில் கண்ட உணவுகளை எல்லாம் உண்டு. குப்பையாகிப் போன மனிதர்களின் உடல் நலம் சீராக்க வந்ததால்தான், குப்பைமேனி என்றழைக்கப்படுகிறது.
இந்த அரிய மூலிகை மனிதர்களுக்கு எளிதில் கிடைத்து அவர்கள் உடல் உபாதைகள் எல்லாம் தீர, அவர்கள் காடு மலைகள் எல்லாம் ஏறி அலைந்து சிரமப்படாமல்,
அவர்கள் வாழும் இடங்களிலேயே கிடைக்கக்கூடியது. குப்பைமேனி சமூலம் என்று சொல்வார்கள், சமூலம் என்றால் அடிவேருடன் கூடிய முழு செடியைக் குறிக்கும், அந்த முழு செடியும், மனிதர்களுக்கு நிறைய நல்ல பலன்கள் தரக் கூடியது.
இப்போது குப்பைமேனி செடியைக்கொண்டு, அசுத்த இரத்தத்தை எப்படி சுத்தம் செய்வது, என்று பார்ப்போம்.
காலையில் எழுந்ததும், ஒன்றிரண்டு குப்பைமேனி செடிகளை வேருடன் பிடுங்கி எடுத்துக்கொண்டு,நன்கு அலசி அதனுடன் ஆறு அல்லது ஏழு மிளகுகள் சேர்த்து அம்மியில் நன்கு மை போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
நெல்லிக்காய் அளவு!
இந்தக் கலவையை காலையில் அரைத்த உடனே வெறும் வயிற்றில், ஒரு நெல்லிகாய் அளவு எடுத்து விழுங்கிவிடவேண்டும். இப்படி வாரம் ஒரு முறை என்ற அளவில் மூன்று வாரம் சாப்பிட, உடலில் உள்ள அசுத்த இரத்தம் நீங்கி, உடல் வலுப்பெறும், இரத்தம் சீராகும்.
இந்தக் கலவை சற்று காரமாக இருந்தால், மிளகுக்குப் பதில் திரிகடுகப் பொடி சிறிது சேர்த்து, உட்கொள்ளலாம்.
புத்துணர்ச்சி!
மருந்தை எடுத்துக்கொள்ளும் காலங்களிலேயே, உடலில் ஏற்படும் நல்ல மாற்றங்களை உணரலாம். உடலில் புது உற்சாகம் தோன்றும், உடல் தளர்ச்சி நீங்கி, புத்துணர்வு உண்டாகும். மனம் தெளிவடைந்து, ஈடுபடும் செயல்களை விரைந்து முடிக்கலாம். முகம் பொலிவுபெறும்.
கவனிக்க வேண்டிய விஷயம்!
ஒரு விஷயத்தை மட்டும் மனதில் வைக்கணும், இந்த மருந்தை சாப்பிடும் காலங்களில், அவசியம், அசைவ உணவு,மது மற்றும் புகை நீக்கிவிடவேண்டும்.
எளிதில் கிடைக்கும் மருந்துதானே, முயன்று பார்ப்போமா? நலம் தரும் தமிழர் ஆரோக்கிய உணவுகள் இருக்க, எதற்கு பாஸ்ட்புட்? சுகாதாரமற்ற, தரமில்லாத, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களுடன் தயாராகும், துரித உணவு வகைகள் தவிர்ப்போம்.
உடல்நலம் பேணுவோம்!
குப்பை மேனியின் நன்மைகள் : குப்பைமேனி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டிகள், வீக்கங்களில் கட்ட, வீக்கங்கள் வடியும், படுக்கையிலேயே இருக்கவேண்டிய சூழ்நிலையுள்ள நோயாளிகளின் பெரும் பிரச்சனையான படுக்கைப்புண்ணையும் இந்தக் கலவை சரி செய்யும்.
குப்பைமேனி இலைகளுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூச, தோல் வியாதிகள் தீரும் மற்றும் முகப்பருக்கள் நீங்கி,முகம் பொலிவு பெரும்.
தேவையற்ற முடி உதிரும்!
பெண்கள் இந்தக்கலவையை முகத்தில் பூசிவர, முகத்தில் உள்ள உரோமங்கள் நீங்கி முகம் அழகு பெறும். காயங்கள் மற்றும் தீப்புண்கள் ஆறும். இலைச்சாறு சளி மற்றும் நெஞ்சில் உள்ள கோழையை அகற்றும், மலச்சிக்கல் போக்கும்.
குப்பைமேனி வேர்களை நீரில் கொதிக்கவைத்து அருந்திவர, வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும்.இன்னும் பல எண்ணற்ற பலன்கள் இருக்குது.