காலையில் எழுந்ததும் உங்கள் உள்ளங்கையை பார்ப்பதால் நிகழும் அற்புதங்கள்!

0

ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும் இந்த நாள் சிறப்பானதாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.

இப்படி எண்ணம் இருந்தால் மட்டும் போதாது, அதற்காக சில விஷயங்களை காலையில் எழுந்ததும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

ஒருவருக்கு ஒரு நாள் சிறப்பாக இருக்க வேண்டுமெனில், அது மனநிலையைப் பொறுத்தது.

மனநிலை காலையில் எழுந்ததில் இருந்தே சிறப்பானதாக இருந்தால், அன்றைய நாள் மன அழுத்தமின்றி சுமுகமாக செல்லும்.

இங்கு ஒருவரது நாள் சிறப்பானதாக இருக்க காலையில் எழுந்ததும் தவறாமல் செய்ய வேண்டிய சில ஆன்மீக விஷயங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

கைகளைத் தேய்த்துப் பார்ப்பது

காலையில் எழுந்ததும், இரு கைகளையும் தேய்த்து, கண்களைத் தொட்டு, பின் விழித்துப் பார்க்க வேண்டும். இப்படி செய்வதற்கு பின்னணியில் ஓர் ஆன்மீக காரணம் உள்ளது. அது என்னவெனியில், நம் கைவிரலின் நுனியில் லட்சுமி தேவியும், உள்ளங்கையில் சரஸ்வதி தேவியும், மணிக்கட்டு பகுதியில் பிரம்மனும் இருக்கிறார்கள். ஆகவே காலையில் எழுந்ததும் இப்படி ஒருவர் செய்யும் போது, அன்றைய நாள் மிகவும் சிறப்பானதாக இருக்குமாம்.

பாதங்களை ஸ்ட்ரெட் செய்வது

காலையில் படுக்கையில் இருந்து எழும் முன், பாதங்களை ஸ்ட்ரெட் செய்ய வேண்டும். அதுவும் கால் விரல்களின் நுனிப்பகுதியை 15-30 நொடிகள் முன்னோக்கி ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டும். இப்படி செய்வதால், தசை தொகுதிகள் செயல்படுத்தப்பட்டு, பாதங்கள் விழிப்புணர்வு பெறும்.

புன்னகை

ஒவ்வொருவரிடமும் உள்ள ஓர் அழகான ஒன்று தான் புன்னகைப்பது. காலையில் எழும் போது, புன்னகைத்துக் கொண்டே எழுவதன் மூலம், அன்றைய நாள் மிகவும் சாந்தமாக செல்லும்.

இன்றைய செயல்களை சிந்தியுங்கள்

தூக்கம் கலைந்த பின்பும், படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் போது, இன்று நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய செயல்கள் என்னவென்றும், எப்படி செய்யலாம் என்றும் சிறிது நேரம் சிந்தியுங்கள்.

துணை அல்லது செல்லப்பிராணியைக் கொஞ்சுவது

ஆய்வு ஒன்றின் படி, தினமும் 8 முறை கட்டிப்பிடிப்பதன் மூலம், உணர்வுகள் சீராக செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. எனவே திருமணமானவராக இருந்தால், காலையில் எழும் போது, துணையைக் கட்டிப்பிடித்து சிறிது நேரம் கொஞ்சுங்கள். ஒருவேளை சிங்கிள் என்றால், செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடுங்கள். இதனால் மனதில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.

தியானம்

தினமும் காலையில் எழுந்ததும் 10 நிமிடம் தியானம் செய்வதன் மூலம், மனம் சாந்தமடைந்து, நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், மன அழுத்தமின்றியும் செயல்பட முடியும்.

கண்ணாடியைப் பார்க்காதீர்கள்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, படுக்கை அறையில் படுக்கையைப் பார்த்தவாறு கண்ணாடியை வைத்தால், அது வீட்டில் தீவிர பிரச்சனையை உண்டாக்குமாம். அதிலும் திருமணமானவர்களது படுக்கை அறையில் கண்ணாடி இருந்தால், அது தம்பதியருக்குள் மூன்றாம் நபரால் பிரச்சனைகளை உண்டாக்குமாம். மேலும் தூக்க பிரச்சனைகளை சந்திக்க வைத்து, மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தால் அவஸ்தைப்பட செய்யுமாம். ஆகவே படுக்கையில் படுத்தவாறு கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே எழாதீர்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநம் பாவங்களைப் போக்க கண்டிப்பாக என்ன செய்ய வேண்டும்?
Next articleஉடலில் உள்ள அசுத்த இரத்தம் நீங்கி உடல் வலுப்பெற செய்யும் வசிய மூலிகை பற்றி தெரியுமா? உங்களுக்காக ஒரு அரிய சித்த வைத்தியம்.!