March 06 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 06

0

Today Special Historical Events In Tamil | 06-03 | March 06

March 06 Today Special | March 06 What Happened Today In History. March 06 Today Whose Birthday (born) | March-6th Important Famous Deaths In History On This Day 06/03 | Today Events In History March 6th | Today Important Incident In History | பங்குனி 06 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 06-03 | பங்குனி மாதம் 06ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 06.03 Varalatril Indru Nadanthathu Enna| March 06 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 06/03 | Famous People Born Today 06.03 | Famous People died Today 06-03.

Today Special in Tamil 06-03
Today Events in Tamil 06-03
Famous People Born Today 06-03
Famous People died Today 06-03

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 06-03 | March 06

நிறுவன நாளாக கொண்டாடப்படுகிறது. (நோர்போக் தீவு, 1788).
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (கானா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1957)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 06-03 | March 06

632ல் முகம்மது நபி தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்.
845ல் இசுலாமைத் தழுவ மறுத்த 42 பைசாந்திய அரசு அதிகாரிகள் ஈராக்கின் சாமரா நகரில் தூக்கிலிடப்பட்டனர்.
1079ல் ஓமர் கய்யாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார்.
1204ல் சாட்டோ கைலார்டு சமரில் இங்கிலாந்தின் ஜான் மன்னர் நார்மாண்டி மீதான தனது ஆதிக்கத்தை பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பிடம் இழந்தார்.
1447ல் ஐந்தாம் நிக்கலாசு திருத்தந்தை ஆனார்.
1479ல் கனரித் தீவுகளை போர்த்துக்கல் காஸ்டில் பேரரசுக்கு வழங்கியது.
1521ல் பேர்டினண்ட் மகலன் குவாம் தீவை அடைந்தார்.
1665ல் பிரித்தானிய அரச கழகத்தின் அரச கழகத்தின் மெய்யியல் இதழின் முதல் இதழ் வெளியிடப்பட்டது.
1788ல் கைதிகளைக் குடியமர்த்தும் திட்டத்தில் முதற்படியாக முதலாவது தொகுதி பிரித்தானியக் கைதிகள் அடங்கிய கப்பல் நோர்போக் தீவை அடைந்தது.
1790ல் மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1820ல் மிசூரி அமெரிக்காவின் அடிமை மாநிலமாக இணைந்தது.
1836ல் அலாமா போர்: டெக்சாசில் அலாமா நகரை மெக்சிக்கோ படைகள் தாக்கிக் கைப்பற்றினர்.
1866ல் இலங்கையில் கண்டி மாநகரசபைக்கான முதலாவது தேர்தல் இடம்பெற்றது.
1869ல் திமீத்ரி மென்டெலீவ் தனது முதலாவது தனிம அட்டவணையை உருசிய வேதியியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.
1882ல் செர்பிய இராச்சியம் மீண்டும் நிறுவப்பட்டது.
1899ல் செருமனியின் பேயர் நிறுவனம் “ஆஸ்பிரினை” வணிகச் சின்னமாகப் பதிந்தது.
1902ல் ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1912ல் இத்தாலிய-துருக்கிப் போர்: முதல் தடவையாக வான்கப்பல்களை போர் ஒன்றில் இத்தாலியப் படைகள் பயன்படுத்தின.
1933ல் பெரும் பொருளியல் வீழ்ச்சி: அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் அனைத்து வங்கிகளையும் மூடி வங்கி விடுமுறையாக அறிவித்தார்.
1940ல் பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் தற்காலிகப் போர் ஓய்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
1944ல் இரண்டாம் உலகப் போர்: சோவியத் வான்படைகள் செருமனியால் ஆக்கிரமிக்கப்பட்ட நர்வா என்ற எசுத்தோனிய நகரைக் குண்டுகளால் தாக்கி, வரலாற்றுப் புகழ் மிக்க அந்நகரை அழித்தன.
1945ல் இரண்டாம் உலகப் போர்: செருமனியின் கோல்ன் நகரம் அமெரிக்கப் படைகளினால் கைப்பற்றப்பட்டது.
1946ல் வியட்நாம் போர்: ஹோ சி மின் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பிரான்சு வியட்நாமை பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோ-சீனக் கூட்டமைப்பினுள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஏற்றுக் கொண்டது.
1953ல் ஸ்டாலினின் மறைவையடுத்து சோவியத்தின் பிரதமராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை செயலாளராகவும் கியோர்கி மாலென்கோவ் பதவியேற்றார்.
1957ல் ஐக்கிய இராச்சியக் குடியேற்ற நாடுகளான கோல்ட் கோஸ்ட் மற்றும் பிரித்தானிய தோகோலாந்து ஆகியன இணைந்து கானா குடியரசு என்ற பெயரில் விடுதலை பெற்றன.
1964ல் கிரேக்கத்தின் மன்னராக இரண்டாம் கான்சுடன்டைன் பதவியேற்றார்.
1964ல் அமெரிக்காவின் இஸ்லாம் தேசம் அமைப்பின் தலைவர் எலிஜா முகம்மது குத்துச்சண்டை வீரர் காசியசு கிளேயின் பெயரை முகம்மது அலி என மாற்றினார்.
1967ல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
1967ல் பனிப்போர்: யோசப் ஸ்டாலினின் மகள் சுவெத்லானா அலிலுயேவா ஐக்கிய அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார்.
1975ல் ஈரானும் ஈராக்கும் தமது எல்லை தொடர்பாக உடன்பாட்டிற்கு வந்தன.
1987ல் பிரித்தானியப் பயணிகள் கப்பல் எரால்டு ஒஃப் பிரீ என்டர்பிரைசசு 90 செக்கன்களில் மூழ்கியதில் 193 பேர் உயிரிழந்தனர்.
1988ல் மூன்று ஐரியக் குடியரசுப் படை வீரர்கள் ஜிப்ரால்ட்டரில் சிறப்பு வான்சேவையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2003ல் அல்சீரியாவில் வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 103 பேரில் 102 பேர் உயிரிழந்தனர்.
2007ல் இந்தோனீசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற இரண்டு அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் 70 பேர் வரையில் உயிரிழந்தனர்.
2008ல் பக்தாதில் நிகழ்ந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 06-03 | March 06

1475ல் இத்தாலிய ஓவியரும் சிற்பியுமான‌ மைக்கலாஞ்சலோ பிறந்த நாள். (இறப்பு-1564)
1508ல் 2-வது முகலாயப் பேரரசரான‌ நசிருதீன் உமாயூன் பிறந்த நாள். (இறப்பு-1556)
1697ல் பிரித்தானிய இந்தியாவின் முதற் பெரும் படைத்தலைவரான‌ ஸ்ட்ரிங்கர் லாரன்சு பிறந்த நாள். (இறப்பு-1775)
1806ல் ஆங்கிலேய-இத்தாலியக் கவிஞரான‌ எலிசபெத் பிரௌனிங் பிறந்த நாள். (இறப்பு-1861)
1926ல் அமெரிக்கப் பொருளியல் அறிஞரான‌ ஆலன் கிரீன்சுபன் பிறந்த நாள்.
1927ல் நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளரான‌ கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் பிறந்த நாள். (இறப்பு-2014)
1935ல் ஈழத்து எழுத்தாளரான‌ அன்புமணி பிறந்த நாள். (இறப்பு-2014)
1937ல் இலங்கை வானொலி ஒலிபரப்பாளரான‌ சற்சொரூபவதி நாதன் பிறந்த நாள்.
1937ல் உருசிய விண்வெளி வீராங்கனையான‌ வலண்டீனா தெரெசுக்கோவா பிறந்த நாள்.
1938ல் இந்திய வானியலாளரான‌ சி. வி. விசுவேசுவரா பிறந்த நாள். (இறப்பு-2017)
1948ல் அமெரிக்க இசையமைப்பாளரான‌ இசுடீபன் சுவார்ட்சு பிறந்த நாள்.
1953ல் நேப்பாளத்தின் 34வது பிரதமரான‌ மாதவ் குமாரான் நேபாள் பிறந்த நாள்.
1953ல் அமெரிக்க வானியலாளரான‌ கரோலின் பொற்கோ பிறந்த நாள்.
1954ல் தமிழறிஞரும் கல்வியாளருமான‌ ம. சா. அறிவுடைநம்பி பிறந்த நாள். (இறப்பு-2014)
1972ல் தமிழகத் திரைப்பட இயக்குநரான‌ கரு பழனியப்பன் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 06-03 | March 06

1866ல் ஆங்கிலேய வரலாற்றாளரும் மெய்யியலாளருமான‌ வில்லியம் ஹியூவெல் இறப்பு நாள். (பிறப்பு-1794)
1900ல் செருமானியத் தொழிலதிபரும் பொறியியலாளருமான‌ காட்லீப் டைம்லர் இறப்பு நாள். (பிறப்பு-1834)
1939ல் செருமானியக் கணிதவியலாளரான‌ லிண்டெமன் இறப்பு நாள். (பிறப்பு-1852)
1973ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளரான‌ பெர்ல் பக் இறப்பு நாள். (பிறப்பு-1892)
1982ல் உருசிய-அமெரிக்க எக்ழுத்தாளரும் மெய்யியலாளருமான‌ அய்ன் ரேண்ட் இறப்பு நாள். (பிறப்பு-1905)
1986ல் அமெரிக்க ஓவியரான‌ ஜோர்ஜியா ஓ’கீஃப் இறப்பு நாள். (பிறப்பு-1887)
2000ல் ஈழத்துப் பொறியியலாளரும் எழுத்தாளருமான‌ எஸ். ஆறுமுகம் இறப்பு நாள். (பிறப்பு-1905)
2002ல் தமிழக இலக்கிய வரலாற்றாசிரியரான‌ சி. ஜேசுதாசன் இறப்பு நாள். (பிறப்பு-1919)
2005ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளரான‌ அன்சு பேத்து இறப்பு நாள். (பிறப்பு-1906)
2008ல் இலங்கை அரசியல்வாதியான‌ கி. சிவநேசன் இறப்பு நாள். (பிறப்பு-1957)
2009ல் தமிழக அரசியல்வாதியான‌ சோ. அழகர்சாமி இறப்பு நாள். (பிறப்பு‍ 1926)
2015ல் பீகாரின் 18-வது முதலமைச்சரான‌ ராம் சுந்தர் தாசு இறப்பு நாள். (பிறப்பு-1921)
2015ல் தமிழ்த் திரைப்படத் தொகுப்பாளரான‌ கிஷோர் இறப்பு நாள். (பிறப்பு-1978)
2016ல் அமெரிக்க நடிகையும் அமெரிக்காவின் 42வது முதல் பெண்மணியுமான‌ நான்சி ரேகன் இறப்பு நாள். (பிறப்பு‍ 1921)
2016ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் பாடகருமான‌ கலாபவன் மணி இறப்பு நாள். (பிறப்பு-1971)
2019ல் தமிழக நாடக மற்றும் திரைப்பட நடிகரான‌ டைப்பிஸ்ட் கோபு இறப்பு நாள்.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 15.10.2022 Today Rasi Palan 15-10-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!
Next articleMarch 07 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 07