February 29 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 29

0

Today Special Historical Events In Tamil | 29-02 | February 29

February 29 Today Special | February 29 What Happened Today In History. February 29 Today Whose Birthday (born) | February-29th Important Famous Deaths In History On This Day 29/02 | Today Events In History February 29th | Today Important Incident In History | மாசி 29 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 29-02 | மாசி மாதம் 29ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 29.02 Varalatril Indru Nadanthathu Enna| February 29 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 29/02 | Famous People Born Today 29.02 | Famous People died Today 29-02.

Today Special in Tamil 29-02
Today Events in Tamil 29-02
Famous People Born Today 29-02
Famous People died Today 29-02

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 29-02 | February 29

அரிய நோய் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (நெட்டாண்டுகளில்; சாதாரண ஆண்டுகளில் பெப்ரவரி 28 இல்)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 29-02 | February 29

1504ல் கிறித்தோபர் கொலம்பசு அன்றிரவு சந்திர கிரகணம் குறித்த தனது அறிவைப் பயன்படுத்தி யமேக்கப் பழங்குடி மக்களை அவருக்குத் தேவையான பொருட்களை வழங்கும்படி வைத்தார்.
1644ல் ஏபெல் டாசுமானின் இரண்டாவது கடல்வழிப் பயணம் ஆரம்பமானது.
1704ல் பிரெஞ்சுப் படைகளும் அமெரிக்கப் பழங்குடிகளும் இணைந்து மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்தில் டியர்பீல்ட் என்ற இடத்தில் ஆங்கிலக் குடியேறிகளைத் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றிற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1712ல் சுவீடனில் சுவீடன் நாட்காட்டியில் இருந்து யூலியன் நாட்காட்டிக்கு மாறுவதற்காக பெப்ரவரி 29 ஆம் நாளுக்குப் பின்னர் பெப்ரவரி 30ம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1720ல் சுவீடன் அரசி உல்ரிக்கா எலனோரா முடி துறந்தார். இவரது கணவர் முதலாம் பிரெடெரிக்கு மன்னரானார்.
1752ல் பர்மாவின் கடைசி மன்னராட்சியின் கடைசி வம்சம் கோன்பவுங்கை அலோங்பாயா மன்னார் தொடங்கினார்.
1796ல் ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே அமைதியான வணிகம் நடைபெறுவதற்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1864ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரிச்மண்டில் பிடித்து வைக்கப்பட்டிருந்த 15,000 அமெரிக்க ஒன்றியப் படையினரை விடுவிக்கௌம் முயற்சி தோல்வியடைந்தது.
1916ல் டோக்கெலாவ் ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.
1916ல் குழந்தைத் தொழிலாளர்: அமெரிக்காவின் தென் கரொலைனாவில் தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் பணியாற்றும் தொழிலாளர்களின் குறைந்த வயதெல்லை 12 இல் இருந்து 14 ஆக அதிகரிக்கப்பட்டது.
1920ல் செக்கோசிலோவாக்கியாவின் தேசியப் பேரவை 1920 அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டது.
1936ல் தோக்கியோவில் பெப்ரவரி 26 இல் ஆரம்பமான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது.
1940ல் பின்லாந்து பனிக்காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுகளை ஆரம்பித்தது.
1940ல் இரண்டாம் உலகப் போர் காரணமாக, இயற்பியலாளர் எர்னஸ்ட் லாரன்சு தனது 1939 நோபல் பரிசை கலிபோர்னியாவின் பெர்க்லி நகரில் பெற்றுக் கொண்டார்.
1944ல் இரண்டாம் உலகப் போர்: ஆட்மிரால்ட்டி தீவுகள் டக்ளசு மக்கார்த்தர் தலைமையிலான அமெரிக்கப் படைகளினால் முற்றுகைக்குள்ளானது.
1960ல் மொரொக்கோவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 12,000 பேர் வரையில் உயிரிழந்தனர்..
1972ல் வியட்நாம் போர்: தென் கொரியா தனது மொத்தமுள்ள 48,000 படையினரில் 11,000 பேரை வியட்நாமில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டது.
1988ல் தென்னாபிரிக்காவின் ஆயர் டெசுமான்ட் டுட்டு உட்பட 100 மதகுருமார் இனவொதுக்கலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது கேப் டவுன் நகரில் கைது செய்யப்பட்டனர்.
1992ல் பொசுனியாவின் விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு ஆரம்பமானது.
1996ல் சாரயேவோ மீதான செரப்சுக்கா குடியரசின் முற்றுகை முடிவுக்கு வந்தது.
1996ல் பெரு விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 123 பேரும் உயிரிழந்தனர்.
2000ல் செச்சினியாவில் 83 உருசிய படையினர் தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
2004ல் எயிட்டியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் சான்-பெட்ரான்ட் அரிசுட்டைடு பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2012ல் உலகின் மிகப்பெரிய கோபுரம் தோக்கியோ இசுக்கைட்றீ கட்டி முடிக்கப்பட்டது. இதன் உயரம் 634 மீட்டர்கள் ஆகும்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 29-02 | February 29

1468ல் திருத்தந்தையான‌ மூன்றாம் பவுல் பிறந்த நாள். (இறப்பு-1549)
1896ல் இந்தியாவின் 4-வது பிரதமரான‌ மொரார்ஜி தேசாய் பிறந்த நாள். (இறப்பு-1995)
1904ல் பரத நாட்டியக் கலைஞரான‌ ருக்மிணி தேவி அருண்டேல் பிறந்த நாள். (இறப்பு-1986)
1924ல் தமிழகப் பேராசிரியரும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான‌ மா. இளையபெருமாள் பிறந்த நாள். (இறப்பு‍ 1984)
1928ல் ஆங்கிலேய எழுத்தாளரான‌ ஜீன் ஆடம்சன் பிறந்த நாள்.
1932ல் இந்தியக் கணிதவியலாளரான‌ சி. எஸ். சேசாத்திரி பிறந்த நாள்.
1936ல் மலேசியத் தமிழ் எழுத்தாளரான‌ வீ. செல்வத்துரை பிறந்த நாள்.
1940ல் மறைமுதுவரான‌ முதலாம் பர்த்தலமேயு பிறந்த நாள்.
1952ல் இலங்கையின் 44-வது தலைமை நீதிபதியான‌ க. சிறீபவன் பிறந்த நாள்.
1976ல் இந்தியக் குறிவைத்துச் சுடும் வீரரான‌ பிரகாசு நஞ்சப்பா பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 29-02 | February 29

468ல் திருத்தந்தையான‌ ஹிலாரியுஸ் இறப்பு நாள்.
2004ல் தென்னாப்பிரிக்கத் துடுப்பாளரான‌ லோரி வில்மோட் இறப்பு நாள்.
2016ல் தமிழ்த் திரைப்பட நடிகரான‌ குமரிமுத்து இறப்பு நாள்.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleFebruary 28 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 28
Next articleஇன்றைய ராசிபலன் 14.10.2022 Today Rasi Palan 14-10-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!