இளநீரில் எல்லையற்ற மருத்துவ பலன்கள் உள்ளது. அதுவும் குறிப்பாக தினமும் இளநீர் குடித்து வருவதால் உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவுகின்றது.
ஆனால் எது சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிடுவது அவசியம். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழியை கேட்டு இருப்போம். அது முற்றிலும் உண்மை.
ஒரு டம்ளரில் இளநீரை எடுத்து கொண்டு அதில் ஒரு ஸ்பூன் தேனை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
பிறகு இந்த பானத்தை காலை உணவை எடுத்துகொள்வதற்கு முன்பே எடுத்து கொள்ள வேண்டும். அப்போது தான் இதில் இருந்து ஏராளமான நன்மைகளை பெறலாம்.
இந்த இயற்கை பானம் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இரத்தக் குழாய்களில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுத்து, இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
இளநீரில் தேன் கலந்து குடிப்பதால் குடலியக்கத்தின் செயல்பாடு மேம்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இளநீருடன் தேன் கலந்து குடிக்கும் போது உடலினுள் உள்ள அழற்சி குறைவதோடு, தொற்றுக்கிருமிகளும் அழிக்கப்பட வாய்ப்புள்ளது. வயிற்றில் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான அமில சுரப்பு குறையும். இதனால் அசிடிட்டி பிரச்சனை தடுக்கப்படும்.
அதுமட்டும் இல்லாமல் அடிக்கடி ஏற்படும் குடலியக்கதிற்கு சிறப்பு மருந்தாக செயல்படுகின்றது. இந்த அற்புதமான நீரில் இயற்கையாகவே ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஏ உள்ளதால் விரைவில் முதுமை தோற்றம் வருவதைத் தடுக்க உதவுகின்றது.