நீங்கள் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவரா?

0

நீங்கள் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவரா?

பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். இந்த பழக்கம் எமது உடலில் நோய்த் தொற்றை ஏற்படுத்தும்.

இதனால் தான் எமது முன்னோர் நகம் கடித்தால் வீட்டிற்கு நல்லது இல்லையென்றுக் கூறுவார்கள். இது நோய் கிருமிகளை உடலினுள் கொண்டு செல்ல இலகுவான வழியாகும்.

நகங்களை தொடர்ந்து கடிப்பதால் நகத்தினுள் இருக்கும் பாக்டீரியாக்கள் உடலினுள் செல்வதுடன், தொற்று பாதிப்பும் ஏற்படுகின்றது.

விரல்களில் வீக்கம் ஏற்பட்டு, நகத்தின் தசைப்பகுதி சிவப்பு நிறத்திற்கு மாறும் பார்ப்பதற்கு சீழ்படிவது போல் காணப்படும்.

நகம் கடிப்பதால் பல் ஈறுகளில் காயம், முன்புற பற்களில் சொத்தை மற்றும் பல் கூச்சம் போன்ற வாய்வழி பிரச்சினைகள் வரக்கூடும். நீண்ட நாட்களாக நகம் கடிக்கும் பழக்கத்தை தொடர்வது பற்களுக்கு பாதிப்பை அதிகப்படுத்தி வேறு பொருட்களை கூட கடிக்க முடியாத நிலை ஏற்பட கூடும்.

கடித்த நகத்தை விழுங்கிவிட்டால் வயிற்று வலி மற்றும் ஜீரண தொடர்பான பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.

நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் எளிதில் குற்ற உணர்வுக்கு உட்படுவார்கள். பெற்றோர், நண்பர்களிடம் மதிப்புக் குறையும்.

இந்த பழக்கத்திலிருந்து விடுபட ஆண்களும் நெயில் பாலிஷ் உபயோகிப்பார்கள். இதனால் சமூகத்தில் கௌரவ பிரச்சினைகள் எழக்கூடும்.

மருந்துக்கடையில் கிடைக்கக்கூடிய கசப்புத் தன்மையுள்ள மருந்து, எண்ணெய், சாயம் போன்றவற்றில் ஏதாவதொன்றை விரல்களில் பூசிக் கொள்ளுதல்.

விரல்களை துணிகளால் சுற்றிக் கட்டி விடுதல் அல்லது கையுறை போட்டு விடுதல்.

குறிப்பிட்ட கொஞ்ச நேரத்துக்கு நகங்களைக் கடிக்காமல் இருந்தால் குழந்தைக்கு மகிழ்ச்சி தரக் கூடிய ஒரு பொருளைத் தருவதாக குழந்தைகளுக்கு வாக்குறுதி கொடுத்தல்.

நகம் கடிக்கும் குழந்தைகளைக் கண்டித்தல் மற்றும் நெயில் பாலீஸ் பயன்படுத்துதல்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநம் வீட்டில் உள்ள மருத்துவ குணம் கொண்ட பொருட்கள்!
Next articleஇளநீரில் உள்ள மருத்துவ பலன்கள்!