December 23 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 23

0

Today Special Historical Events In Tamil | 23-12 | December 23

December 23 Today Special | December 23 What Happened Today In History. December 23 Today Whose Birthday (born) | December-23th Important Famous Deaths In History On This Day 23/12 | Today Events In History December 23th | Today Important Incident In History | மார்கழி 23 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 23-12 | மார்கழி மாதம் 23ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 23.12 Varalatril Indru Nadanthathu Enna| December 23 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 23/12 | Famous People Born Today 23.12 | Famous People died Today 23-12.

Today Special in Tamil 23-12
Today Events in Tamil 23-12
Famous People Born Today 23-12
Famous People died Today 23-12

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 23-12 | December 23

குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. (தெற்கு சூடான், சூடான்)
தேசிய உழவர் நாளாக கொண்டாடப்படுகிறது. (இந்தியா)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 23-12 | December 23

562ல் கான்ஸ்டண்டினோபில் நகரில் நிலநடுக்கங்களால் சேதப்படுத்தப்பட்ட ஹேகியா சோபியா பெருங்கோவில் புனரமைக்கப்பட்டது.
962ல் அரபு–பைசாந்தியப் போர்கள்: நிக்கொப்போரசு போக்கசு தலைமையில் பைசாந்திய இராணுவம் அலெப்போ நகரைத் தாக்கியது.
1572ல் செருமனிய இறையியலாளர் யொகான் சில்வான் ஐடெல்பெர்கு நகரில் அவரது திரிபுவாத திருத்துவ-எதிர்க் கொள்கைகளுக்காகத் தூக்கிலிடப்பட்டார்.
1688ல் மாண்புமிகு புரட்சியின் ஒரு கட்டமாக, இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் இங்கிலாந்தில் இருந்து பாரிசுக்குத் தப்பி ஓடினார்.
1783ல் சியார்ச் வாசிங்டன் அமெரிக்க விடுதலைப் படையின் இராணுவத்தளபதி பதவியில் இருந்து விலகினார்.
1876ல் கான்ஸ்டண்டினோபில் மாநாட்டின் ஆரம்ப நாளில் பால்கன் குடாவில் அரசியல் சீர்திருத்தத்திற்கு உடன்பாடு காணப்பட்டது.
1914ல் முதலாம் உலகப் போர்: ஆத்திரேலிய, நியூசிலாந்துப் படைகள் கெய்ரோவில் தரையிறங்கினர்.
1916ல் முதலாம் உலகப் போர்: எகிப்தின் சினாய்க் குடாவில் கூட்டுப் படைகள் துருக்கியப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் வெற்றி பெற்றன.
1941ல் இரண்டாம் உலகப் போர்: 15 நாட்கள் சண்டைக்குப் பின்னர் சப்பானிய இராணுவம் வேக் தீவைக் கைப்பற்றியது.
1947ல் முதலாவது டிரான்சிஸ்டர் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
1948ல் ஏழு சப்பானியப் போர்க் குற்றவாளிகளுக்கு டோக்கியோவின் சுகோமோ சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1954ல் முதலாவது மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
1958ல் டோக்கியோ கோபுரம், உலகின் மிகப்பெரிய இரும்பினாலான கோபுரம், திறக்கப்பட்டது.
1968ல் வட கொரியாவில் 11 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 82 அமெரிக்க மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர்.
1970ல் நியூயார்க் நகரில் அமைந்துள்ள உலக வணிக மையத்தின் வடக்குக் கோபுரம் உலகின் மிக உயர்ந்த கட்டடமாக அறிவிக்கப்பட்டது.
1970ல் காங்கோ மக்களாட்சிக் குடியரசு அதிகாரபூர்வமாக ஒரு-கட்சி நாடாக மாறியது.
1972ல் நிக்கராகுவா தலைநகர் மனாகுவாவில் இடம்பெற்ற 6.5 அளவு நிலநடுக்கத்தில் 10,000 இற்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
1972ல் தென்னமெரிக்காவில் ஆண்டீஸ் மலைத்தொடரில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் தப்பிய 16 பேர் 73 நாட்களுக்குப் பின்னர் காப்பாற்றப்பட்டனர்.
1979ல் ஆப்கான் சோவியத் போர்: சோவியத் படையினர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றினர்.
1986ல் எங்கும் தரையிறங்காமல் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த வொயேஜர் விமானம், டிக் ரூட்டன், ஜீனா யேகர் ஆகிய விமானிகளுடன் கலிபோர்னியாவில் தரையிறங்கியது.
1990ல் 88% சுலோவீனிய மக்கள் யுகோசுலாவியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2003ல் சீனாவின் சோங்கிங்கில் இடம்பெற்ற இயற்கை வாயு வெடி விபத்தில் 234 பேர் உயிரிழந்தனர்.
2005ல் அசர்பைஜான் விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் பக்கூ நகரில் வீழ்ந்து நொருங்கியதில் 23 பேர் உயிரிழந்தனர்.
2005ல் சாட் சூடானுடன் போரை அறிவித்தது.
2007ல் நேபாள இராச்சியம் கலைக்கப்பட்டு குடியரசாக மாறுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. பிரதமர் அரசுத்தலைவரானார்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 23-12 | December 23

1722ல் சுவீடன் கனிமவியலாளரும் வேதியியலாளருமான‌ ஏக்சல் பிரெடரிக் குரான்ஸ்டெட் பிறந்த நாள். (இறப்பு-1765)
1777ல் உருசியப் பேரரசரான‌ முதலாம் அலெக்சாந்தர் பிறந்த நாள். (இறப்பு-1825)
1805ல் அமெரிக்க மதத் தலைவரான‌ இரண்டாம் யோசப்பு இசுமித்து பிறந்த நாள். (இறப்பு-1844)
1807ல் ஸ்பானிய ரோமன் கத்தோலிக்க மறைப்போதகரான‌ அந்தோனி மரிய கிளாரட் பிறந்த நாள். (இறப்பு-1870)
1867ல் அமெரிக்கத் தொழிலதிபரான‌ மேடம் சி. ஜே. வாக்கர் பிறந்த நாள். (இறப்பு-1919)
1902ல் 5வது இந்தியப் பிரதமரான‌ சரண் சிங் பிறந்த நாள். (இறப்பு-1987)
1912ல் அமெரிக்க வேதியியலாளரான‌ அன்னா ஜேன் ஆரிசன் பிறந்த நாள். (இறப்பு-1998)
1922ல் அமெரிக்கப் புவியியலாளரும் வானியலாளருமான‌ அரோல்டு மாசுர்சுகி பிறந்த நாள். (இறப்பு-1990)
1933ல் சப்பானியப் பேரரசரான‌ அக்கிகித்தோ பிறந்த நாள்.
1938ல் அமெரிக்கக் கணினி அறிவியலாளரும் பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறையைக் கண்டுபிடித்தவருமான‌ பாபு கான் பிறந்த நாள்.
1940ல் பாக்கித்தானின் 12-வது அரசுத்தலைவரான‌ மம்நூன் உசைன் பிறந்த நாள்.
1948ல் அமெரிக்க வானியலாளரான‌ ஜான் பீட்டர் அக்ரா பிறந்த நாள். (இறப்பு-2010)
1958ல் இந்திய ஊடகவியலாளரும் எழுத்தாளருமான‌ அனிதா பிரதாப் பிறந்த நாள்.
1962ல் நோபல் பரிசு பெற்ற உருமேனிய-அமெரிக்க வேதியியலாளரான‌ இசுடீபன் எல் பிறந்த நாள்.
1967ல் இத்தாலிய-பிரான்சிய பாடகியான‌ கார்லா புரூனி பிறந்த நாள்.
1981ல் இலங்கை-கனடிய அரசியல்வாதியான‌ ராதிகா சிற்சபையீசன் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 23-12 | December 23

1834ல் ஆங்கிலேய பொருளியலாளரான‌ தோமஸ் மால்தஸ் இறப்பு நாள். (பிறப்பு-1766)
1907ல் பிரான்சிய வானியலாளரான‌ பியேர் ஜான்சென் இறப்பு நாள். (பிறப்பு-1824)
1952ல் தமிழகத் தமிழறிஞரான‌ சா. தர்மராசு சற்குணர் இறப்பு நாள். (பிறப்பு-1877)
1959ல் பிரித்தானிய அரசியல்வாதியான‌ இர்வின் பிரபு இறப்பு நாள். (பிறப்பு-1881)
1973ல் டச்சு-அமெரிக்க வானியலாளரும் கோள் அறிவியலாளருமான‌ ஜெரார்டு குயூப்பர் இறப்பு நாள். (பிறப்பு-1905)
1981ல் இந்திய விடுதலை போராட்ட வீரரும் அரசியல்வாதியுமான‌ பி. கக்கன் இறப்பு நாள். (பிறப்பு-1908)
2004ல் 9வது இந்தியப் பிரதமரான‌ பி. வி. நரசிம்ம ராவ் இறப்பு நாள். (பிறப்பு-1921)
2010ல் கேரளாவின் 7வது முதலமைச்சரான‌ கே. கருணாகரன் இறப்பு நாள். (பிறப்பு-1918)
2013ல் ஏகே-47 துப்பாக்கியை வடிவமைத்த உருசியப் பொறியாளரான‌ மிக்கைல் கலாசுனிக்கோவ் இறப்பு நாள். (பிறப்பு-1919)
2014ல் தமிழகத் திரைப்பட இயக்குனரான‌ கே. பாலச்சந்தர் இறப்பு நாள். (பிறப்பு-1930)
2014ல் தமிழக நாடகக் கலைஞரான‌ கூத்தபிரான் இறப்பு நாள். (பிறப்பு-1932)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleDecember 22 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 22
Next articleDecember 24 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 24