October 06 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 06

0

Today Special Historical Events In Tamil | 06-10 | October 06

October 06 Today Special | October 06 What Happened Today In History. October 06 Today Whose Birthday (born) | October -06th Important Famous Deaths In History On This Day 06/10 | Today Events In History October-06st | Today Important Incident In History | ஐப்பசி 06 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 06-10 | ஐப்பசி மாதம் 06ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 06.10 Varalatril Indru Nadanthathu Enna| October 06 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 06/10 | Famous People Born Today October 06 | Famous People died Today 06-10.

  • Today Special in Tamil 06-10
  • Today Events in Tamil 06-10
  • Famous People Born Today 06-10
  • Famous People died Today 06-10
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 06-10 | October 06

    யோம் கிப்பூர் நினைவு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (சிரியா)
    உலக விண்வெளி வார நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (அக்டோபர் 4–10)
    ஆசிரியர் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (இலங்கை)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 06-10 | October 06

    கிமு 69ல் உரோமைப் படைகள் திக்ரனோசெர்ட்டா சமரில் ஆர்மீனியாவை வெற்றி கொண்டது.
    கிபி 23ல் சீனாவில் இடம்பெற்ற உழவர் கிளர்ச்சியை அடுத்து சின் பேரரசர் கிளர்ச்சிவாதிகளால் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.
    404ல் பைசாந்தியப் பேரரசி இயூடோக்சியா தனது ஏழாவது பிள்ளைப்பேறின் போது இறந்தார்.
    1582ல் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
    1683ல் வில்லியம் பென் தன்னுடன் 13 செருமனியக் குடும்பங்களை பென்சில்வேனியாவுக்கு அழைத்துவந்து குடியேற்றினார். இவர்களே முதன் முதலாக அமெரிக்காவுக்கு குடியேறிய செருமானியர் ஆவர்.
    1762ல் ஏழாண்டுப் போர்: பிரித்தானியாவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் மணிலாவில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்தது. ஏழாண்டுப் போர் முடிவடையும் வரையில் பிரித்தானியா மணிலாவைத் தன் பிடியில் வைத்திருந்தது.
    1777ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படைகள் அட்சன் ஆற்றுப் பகுதியில் கிளிண்டன், மொன்ட்கோமரி கோட்டைகளைக் கைப்பற்றின.
    1789ல் பிரெஞ்சுப் புரட்சி: முன்னைய நாள் பெண்களின் போராட்ட அணியை வெர்சாய் அரண்மனையில் எதிர்கொண்ட பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அங்கிருந்து வெளியேறி துலேரிசு அரண்மனைக்குக் குடியேறினான்.
    1795ல் கேணல் பாபற் என்பவரின் தலைமையில் பிரித்தானியப் படையினர் மன்னாரை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.
    1847ல் அமெரிக்க மதப்பரப்புனரும், மருத்துவருமான சாமுவேல் பிஸ்க் கிறீன் பருத்தித்துறையை வந்தடைந்தார்.
    1849ல் அங்கேரிய விடுதலைப் போரின் முடிவில் போராளிகள் 13 பேர் அராட் என்ற இடத்தில் (தற்போது ருமேனியாவில்) தூக்கிலிடப்பட்டனர்.
    1854ல் இங்கிலாந்தில் நியூகாசில் மற்றும் கேற்சுகெட் நகரங்களில் பரவிய பெருத் தீயில் 54 பேர் உயிரிழந்து நூற்றுக்கணகானோர் காயமடைந்தனர்.
    1889ல் தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையின் உச்சி முதன் முதலில் எட்டப்பட்டது.
    1890ல் யாழ்ப்பாண நகரில் “சின்னக்கடை” எனப்படும் முக்கிய சந்தையில் கடைத்தொகுதி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் சில உயிரிழப்புகளுடன் பலர் படுகாயமடைந்தனர்.
    1908ல் ஆத்திரியா-அங்கேரி தன்னுடன் பொசுனியா எர்செகோவினாவை இணைத்துக் கொண்டது.
    1923ல் முதலாம் உலகப் போர்: இசுதான்புல்லில் இருந்து பெரும் வல்லரசுகள் வெளியேறின.
    1939ல் இரண்டாம் உலகப் போர்: போலந்தின் கடைசி இராணுவத்தினர் தோற்கடிக்கப்பட்டனர்.
    1943ல் இரண்டாம் உலகப் போர்: கிரீட்டில் 13 பொதுமக்கள் துணை இராணுவக் குழுக்களினால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
    1966ல் எல்எஸ்டி ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.
    1973ல் 80,000 எகிப்தியப் படைகள் சூயசுக் கால்வாயைக் கடந்து இசுரேலிய பார் லேவ் கோட்டை அழித்து, யோம் கிப்பூர்ப் போரை ஆரம்பித்தனர்.
    1976ல் சீன பிரதமர் நால்வர் குழுவையும் அவர்களைச் சேர்ந்தவர்களையும் கைது செய்ய உத்தரவிட்டார். சீனப் பண்பாட்டுப் புரட்சி முடிவுக்கு வந்தது.
    1976ல் பார்படோசில் இருந்து புறப்பட்ட கியூபா விமானம் ஒன்று பிடெல் காஸ்ட்ரோவுக்கெதிரான தீவிரவாதிகளால் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டதில் 73 பேர் கொல்லப்பட்டனர்.
    1976ல் தாய்லாந்தில் அரசுக்கெதிராக இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
    1977ல் மிக்-29 வானூர்தி தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.
    1979ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வெள்ளை மாளிகைக்குச் சென்ற முதலாவது திருத்தந்தை என்ற பெயரைப் பெற்றார்.
    1981ல் எகிப்திய அரசுத்தலைவர் அன்வர் சாதாத் இசுலாமியத் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
    1987ல் பிஜி குடியரசாகியது.
    1995ல் வேறொரு சூரியனை சுற்றி வரும் முதலாவது கோள் 51 பெகாசி பி கண்டுபிடிக்கப்பட்டது.
    2008ல் அநுராதபுரம் குண்டுவெடிப்பு: தற்கொலைக் குண்டுவெடிப்பில் இலங்கையின் இராணுவத் தளபதி ஜானக பெரேரா உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.
    2010ல் இன்ஸ்ட்டாகிராம் ஆரம்பிக்கப்பட்டது.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 06-10 | October 06

    1552ல் இத்தாலிய மதப்பரப்புனரான‌ மத்தேயோ ரீச்சி பிறந்த நாள். (இறப்பு-1610)
    1732ல் பிரித்தானிய அரசு வானியலாளரான‌ நெவில் மசுகெலினே பிறந்த நாள். (இறப்பு-1811)
    1831ல் செருமானியக் கணிதவியலாளரும் மெய்யியலாளருமான‌ ரிச்சர்டு டீடிகைண்டு பிறந்த நாள். (இறப்பு-1916)
    1846ல் அமெரிக்கப் பொறியியலாளரும் தொழிலதிபருமான‌ ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் பிறந்த நாள். (இறப்பு-1914)
    1887ல் சுவிட்சர்லாந்து-பிரான்சியக் கட்டிடக் கலைஞரும் ஓவியருமான‌ லெ கொபூசியே பிறந்த நாள். (இறப்பு-1965)
    1893ல் இந்திய வானியலாளரான‌ மேகநாத சாஃகா பிறந்த நாள். (இறப்பு-1956)
    1897ல் அமெரிக்க உயிரிவேதியியலாளரான‌ புளோரன்ஸ் பி. சீபர்ட் பிறந்த நாள். (இறப்பு-1991)
    1921ல் இலங்கை அரசியல்வாதியும் தொழிற்சங்கத் தலைவருமான‌ அப்துல் அசீஸ் பிறந்த நாள். (இறப்பு-1990)
    1928ல் கேரள வயலின் இசைக் கலைஞரான‌ டி. என். கிருஷ்ணன் பிறந்த நாள்.
    1930ல் அரியானா மாநில முன்னாள் முதலமைச்சரான‌ பஜன்லால் பிறந்த நாள். (இறப்பு-2011)
    1930ல் ஆத்திரேலியத் துடுப்பாளரும் ஊடகவியலாளருமான‌ ரிச்சி பெனோட் பிறந்த நாள். (இறப்பு-2015)
    1931ல் உருசிய வானியலாளரான‌ நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக் பிறந்த நாள். (இறப்பு-2004)
    1931ல் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளரும் வானியலாளருமான‌ இரிக்கார்டோ ஜியாக்கோனி பிறந்த நாள். (இறப்பு-2018)
    1935ல் தமிழகக் கவிஞரும் பாடலாசிரியருமான‌ புலமைப்பித்தன் பிறந்த நாள். (இறப்பு-2021)
    1940ல் தென் இந்திய திரைப்பட நடிகையான‌ சுகுமாரி பிறந்த நாள். (இறப்பு-2013)
    1944ல் பீகாரின் 23-வது முதலமைச்சரான‌ ஜீதன் ராம் மாஞ்சி பிறந்த நாள்.
    1946ல் தென்னாப்பிரிக்க-ஆங்கிலேயத் துடுப்பாளரும் ஊடகவியலாளருமான டோனி கிரெய்க் பிறந்த நாள். (இறப்பு-2012)
    1946ல் இந்தி நடிகரான‌ வினோத் கன்னா பிறந்த நாள்.
    1957ல் இலங்கை அரசியல்வாதியான‌ ஏ. எல். எம். அதாவுல்லா பிறந்த நாள்.
    1969ல் மலேசிய மன்னரான‌ கெலந்தானின் ஐந்தாம் முகம்மது பிறந்த நாள்.
    1982ல் தமிழகத் திரைப்பட நடிகரான‌ சிபிராஜ் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 06-10 | October 06

    1661ல் 7வது சீக்கிய குருவான‌ குரு ஹர் ராய் இறப்பு நாள். (பிறப்பு-1630)
    1892ல் ஆங்கிலேயக் கவிஞரான‌ ஆல்பிரட் டென்னிசன் இறப்பு நாள். (பிறப்பு-1809)
    1905ல் செருமானியப் புவியியலாளரான‌ பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென் இறப்பு நாள். (பிறப்பு-1833)
    1944ல் இசுக்காட்லாந்து அரசியல்சட்ட அறிஞரும் இந்தியவியலாளருமான‌ ஆர்தர் பெரிடேல் கீத்து இறப்பு நாள். (பிறப்பு-1879)
    1951ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவரான‌ ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப் இறப்பு நாள். (பிறப்பு-1884)
    1962ல் சென்னை மாகாணத்தின் முதல்வரான‌ ப. சுப்பராயன் இறப்பு நாள். (பிறப்பு-1889)
    1974ல் இந்திய அரசியல்வாதியான‌ வி. கே. கிருஷ்ண மேனன் இறப்பு நாள். (பிறப்பு-1896)
    1981ல் எகிப்தின் 3வது அரசுத்தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான‌ அன்வர் சாதாத் இறப்பு நாள். (பிறப்பு-1918)
    2008ல் இலங்கை இராணுவத் தளபதியான‌ ஜானக பெரேரா இறப்பு நாள். (பிறப்பு-1946)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleஇன்றைய ராசி பலன் 16.09.2022 Today Rasi Palan 16-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
    Next articleOctober 07 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 07