Today Special Historical Events In Tamil | 05-10 | October 05
October 05 Today Special | October 05 What Happened Today In History. October 05 Today Whose Birthday (born) | October -05th Important Famous Deaths In History On This Day 05/10 | Today Events In History October-05th | Today Important Incident In History | ஐப்பசி 05 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 05-10 | ஐப்பசி மாதம் 05ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 05.10 Varalatril Indru Nadanthathu Enna| October 05 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 05/10 | Famous People Born Today October 05 | Famous People died Today 05-10.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 05-10 | October 05
உலக விண்வெளி வார நாளாக கொண்டாடப்படுகிறது.(அக்டோபர் 4-10)
உலக ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது.
குடியரசு நாளாக கொண்டாடப்படுகிறது. (போர்த்துகல்)
பால்வினைத் தொழிலுக்கு எதிரான பன்னாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 05-10 | October 05
610ல் எராகிளியசு ஆப்பிரிக்காவில் இருந்து கான்ஸ்டண்டினோபோலை கப்பல் மூலம் அடைந்து பைசாந்தியப் பேரரசன் போக்காசை ஆட்சியில் இருந்து கவிழ்த்து பேரரசனானான்.
816ல் புனித உரோமைப் பேரரசராக லூயி பயசு முடிசூடினார்.
1143ல் லெயோன், காசுட்டில் மன்னர் ஏழாம் அல்பொன்சோ போர்த்துகலை ஒரு இராச்சியமாக அங்கீகரித்தார்.
1450ல் பவேரியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
1582ல் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1780ல் வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு இடம்பெற்றது.
1789ல் பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் பெண்கள் பதினாறாம் லூயி மன்னனுக்கு எதிராக வெர்சாய் அரண்மனை நோக்கி அணிதிரண்டு சென்றனர்.
1795ல் இலங்கையின் மன்னார்ப் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர்.
1799ல் ஆங்கிலேயரினால் பிடிக்கப்பட்ட கட்டபொம்மன் கயத்தாறு கொண்டுவரப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான்.
1838ல் கிழக்கு டெக்சாசில் 18 குடியேறிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1864ல் இந்தியாவின் கல்கத்தா நகரத்தில் இடம்பெற்ற சூறாவளி நகரை முற்றாக சேதப்படுத்தியது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
1905ல் ரைட் சகோதரர்கள் 24 மைல்களை 39 நிமிடங்களில் விமானத்தில் பறந்து சாதனை படைத்தனர்.
1910ல் போர்த்துக்கலில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து அங்கு மன்னராட்சி முடிவுக்கு வந்து குடியரசாகியது.
1911ல் கவுலூன்-குவாங்சோவ் தொடருந்துச் சேவை ஆரம்பமானது.
1915ல் முதலாம் உலகப் போர்: பல்கேரியா போரில் இறங்கியது.
1930ல் பிரித்தானிய வான்கப்பல் ஆர்101 தனது முதலாவது பயணத்தில் இந்தியா செல்லும் வழியில் பிரான்சில் விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழந்தனர்.
1938ல் நாட்சி செருமனியில் யூதர்களின் கடவுச்சீட்டுகள் செல்லுபடியற்றதாக்கப்பட்டன.
1943ல் இரண்டாம் உலகப் போர்: வேக் தீவில் 98 அமெரிக்கப் போர்க் கைதிகள் சப்பானியப் படைகளால் கொல்லப்பட்டனர்.
1947ல் பஞ்சத்தில் வாடும் ஐரோப்பியருக்காக தானியங்கள் உட்கொள்ளுதலைக் குறைக்குமாறு தொலைக்காட்சி உரையில் அரசுத்தலைவர் ட்ரூமன் அமெரிக்க மக்களைக் கேட்டுக் கொண்டார்.
1948ல் துருக்மெனிஸ்தான் தலைநகர் அசுகாபாத் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
1974ல் இங்கிலாந்தில் ஐரியக் குடியரசு இராணுவத்தினர் மதுபான சாலை ஒன்றில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர். 65 பேர் காயமடைந்தனர்.
1970ல் அமெரிக்காவில் பொது ஒளிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1978ல் ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு கிருஷ்ணா வைகுந்தவாசன் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றினார்.
1987ல் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 பேர் இந்தியப் படையின் காவலில் இருக்கும்போது நஞ்சருந்தி மரணமானார்கள்.
1988ல் சிலியின் எதிர்க்கட்சிக் கூட்டணி அகஸ்தோ பினோசெட்டை அரசுத்தலைவர் தேர்தலில் தோற்கடித்தனர்.
1991ல் இந்தோனேசியாவின் இராணுவ விமானம் ஒன்று ஜகார்த்தாவில் விபத்துக்குள்ளாகியதில் 137 பேர் இறந்தனர்.
1999ல் மேற்கு லண்டனில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
2000ல் செர்பியாவில் சிலோபதான் மிலோசேவிச்சுக்கு எதிரான மிகப் பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
2008ல் கிர்கிஸ்தானில் சீன எல்லை மலைப்பகுதியில் 6.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 65 பேர் உயிரிழந்தனர்.
2011ல் மேக்கொங் ஆற்றில் இரண்டு சீன சரக்குப் படகுகள் கடத்தப்பட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 05-10 | October 05
1524ல் கோண்டுவானா அரசியான ராணி துர்காவதி பிறந்த நாள். (இறப்பு-1564)
1823ல் இந்திய சன்மார்க்க சிந்தனையாளரான இராமலிங்க அடிகளார் பிறந்த நாள். (இறப்பு-1873)
1864ல் பிரான்சியத் தயாரிப்பாளரும் இயக்குநருமான லூயி சான் பிறந்த நாள். (இறப்பு-1948)
1882ல் அமெரிக்க இயற்பியலாளரான இராபர்ட் காடர்ட் பிறந்த நாள். (இறப்பு-1945)
1889ல் டச்சு இயற்பியலாளரான டிர்க் கோஸ்டர் பிறந்த நாள். (இறப்பு-1950)
1889ல் இத்தாலிய வானியலாளரான ஜியார்ஜியோ அபெட்டி பிறந்த நாள். (இறப்பு-1982)
1885ல் இலங்கை அரசியல்வாதியான அருணாசலம் மகாதேவா பிறந்த நாள். (இறப்பு-1969)
1907ல் எசுத்தோனிய-அமெரிக்க பொருளியலாளரான ராக்னர் நர்க்சு பிறந்த நாள். (இறப்பு-1959)
1911ல் தமிழ்த் திரைப்பட நடிகையான ப. கண்ணாம்பா பிறந்த நாள். (இறப்பு-1964)
1927ல் தமிழக எழுத்தாளரும் இதழாளருமான ரா. கி. ரங்கராஜன் பிறந்த நாள். (இறப்பு-2012)
1934ல் பத்திரிகை ஆசிரியரும் நாடக ஆசிரியரும் நடிகருமான சோ பிறந்த நாள். (இறப்பு-2016)
1936ல் செக் குடியரசின் 1வது அரசுத்தலைவரான வாக்லாவ் அவொல் பிறந்த நாள். (இறப்பு-2011)
1945ல் தென்னிந்தியத் தெலுங்கு நடிகையான ரமா பிரபா பிறந்த நாள்.
1946ல் தமிழக எழுத்தாளரான கோ. கேசவன் பிறந்த நாள். (இறப்பு-1998)
1950ல் புதுச்சேரியின் அரசியல்வாதியும் முன்னாள் முதலைமைச்சருமான வி. வைத்தியலிங்கம் பிறந்த நாள்.
1952ல் பாக்கித்தானியத் துடுப்பாளரும் அரசியல்வாதியுமான இம்ரான் கான் பிறந்த நாள்.
1957ல் அமெரிக்க நடிகரான பெர்னி மாக் பிறந்த நாள். (இறப்பு-2008)
1965ல் தென்னிந்திய-மலையாளத் திரைப்பட நடிகையான கல்பனா பிறந்த நாள். (இறப்பு-2016)
1975ல் ஆங்கிலேய நடிகையான கேட் வின்ஸ்லெட் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 05-10 | October 05
1565ல் இத்தாலியக் கணிதவியலாளரான லியூஜி ஃபெறாரி இறப்பு நாள். (பிறப்பு-1522)
1805ல் ஆங்கிலேய இராணுவ அதிகாரியும் அரசியல்வாதியுமான காரன்வாலிஸ் இறப்பு நாள். (பிறப்பு-1738)
1813ல் அமெரிக்க பழங்குடித் தலைவரான டிக்கம்சா இறப்பு நாள். (பிறப்பு-1768)
1938ல் போலந்து புனிதரான மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா இறப்பு நாள். (பிறப்பு-1905)
1942ல் அமெரிக்க வானியலாளரான டோரத்தியா கிளம்ப்கே இராபட்சு இறப்பு நாள். (பிறப்பு-1861)
1960ல் அமெரிக்க மானிடவியலாளரான அல்பிரட் எல். குறோபெர் இறப்பு நாள். (பிறப்பு-1876)
1976ல் நோபல் பரிசு பெற்ற நோர்வே-அமெரிக்க வேதியலாளரும் இயற்பியலாளருமான லார்ஸ் ஒன்சாகர் இறப்பு நாள். (பிறப்பு-1903)
1976ல் இந்தியக் கணிதவியலாளரான பி. எல். பட்நகர் இறப்பு நாள். (பிறப்பு-1912)
1996ல் ஈழத்து எழுத்தாளரான யாழ்வாணன் இறப்பு நாள். (பிறப்பு-1933)
2009ல் சோவியத் கணிதவியலாளரான இசுரேல் கெல்ஃபாண்ட் இறப்பு நாள். (பிறப்பு-1913)
2011ல் ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்தவரான ஸ்டீவ் ஜொப்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1955)
2015ல் ஈழத்துக் கவிஞரான திருமாவளவன் இறப்பு நாள். (பிறப்பு-1955)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan