September 25 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 25

0

Today Special Historical Events In Tamil | 25-09 | September 25

September 25 Today Special | September 25 What Happened Today In History. September 25 Today Whose Birthday (born) | September-25th Important Famous Deaths In History On This Day 25/09 | Today Events In History September-25th | Today Important Incident In History | புரட்டாதி 25 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 25-09 | புரட்டாதி மாதம் 25ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 25.09 Varalatril Indru Nadanthathu Enna| September 25 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 25/09 | Famous People Born Today September 25 | Famous People died Today 25-09.

  • Today Special in Tamil 25-09
  • Today Events in Tamil 25-09
  • Famous People Born Today 25-09
  • Famous People died Today 25-09
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 25-09 | September 25

    புரட்சி நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (மொசாம்பிக்)
    தேசிய இளைஞர் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (நவூரு)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 25-09 | September 25

    275ல் உரோமில் பேரரசர் அவுரேலியன் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, டசீட்டசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார்.
    762ல் அப்பாசியக் கலீபகத்திற்கு எதிராக அலீதுகள் கிளர்ச்சியில் இறங்கினர்.
    1237ல் இங்கிலாந்தும் இசுக்காட்லாந்தும் தமது பொது எல்லைகளை வரையறுக்கும் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன.
    1396ல் உதுமானியப் பேரரசர் முதலாம் பயெசிது கிறித்தவ இராணுவத்தை நிக்கோபோலிசு நகரில் தோற்கடித்தார்.
    1513ல் எசுப்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா பெருங்கடல் ஒன்றை அடைந்தார். இது பின்னர் பசிபிக் பெருங்கடல் என்ற பெயரைப் பெற்றது.
    1690ல் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப்பத்திரிகை முதலும் கடைசித் தடவையாகவும் வெளிவந்தது. இது அரசினால் தடை செய்யப்பட்டது.
    1789ல் ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அமெரிக்க அரசியலமைப்பிற்கு உரிமைகளுக்கான 10 திருத்தங்கள் உட்பட 12 திருத்தங்களைக் கொண்டு வந்தது.
    1862ல் செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
    1868ல் இளவரசர் அலெக்சி அலெக்சாந்திரொவிச்சை ஏற்றிச் சென்ற உருசியப் பேரரசின் அலெக்சாந்தர் நேவ்ஸ்கி கப்பல் யுட்லாண்டு அருகே மூழ்கியது.
    1906ல் கரையிலிருந்து படகை வழி நடத்தும் முறை எசுப்பானியாவில் இயக்கிக் காட்டப்பட்டது. தொலைக் கட்டுப்படுத்தி பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
    1926ல் அடிமை வணிகத்தைத் தடுக்கும் பன்னாட்டு ஒப்பந்தம் உலக நாடுகள் அணியின் ஆதரவில் கையெழுத்திடப்பட்டது.
    1942ல் இரண்டாம் உலகப் போர்: பெரும் இனவழிப்பில் இருந்து தப்பிய யூதர்களை அகதிகளாக ஏற்க சுவிட்சர்லாந்து மறுத்தது.
    1956ல் அத்திலாந்திக் பெருங்கடலைக் கடந்த முதலாவது தொலைபேசிக் கம்பித்திட்டம் TAT-1 நிறுவப்பட்டது.
    1957ல் ஐக்கிய அமெரிக்காவில் ஆர்கன்சஸ் மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9 கருப்பின மாணவர்கள் 300 இராணுவத்தினர்களின் பாதுகாப்புடன் பாடசாலை சென்றனர்.
    1959ல் இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சோமராம தேரர் என்ற புத்த பிக்கு ஒருவரினால் சுடப்பட்டுப் படுகாயமடைந்து அடுத்த நாள் இறந்தார்.
    1962ல் வடக்கு ஏமன் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. ஏமன் மன்னர் இமாம் அல்-பத்ர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அப்துல்லா அல்-சலால் ஏமனை ஒரு குடியரசாக்கி, தன்னை அதன் அரசுத்தலைவராக அறிவித்தார்.
    1962ல் அல்சீரிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது.
    1964ல் மொசாம்பிக்கில் போர்த்துகலுக்கு எதிரான விடுதலைப் போர் ஆரம்பமானது.
    1978ல் கலிபோர்னியாவில் சான் டியாகோ நகரில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் 144 பேர் உயிரிழந்தனர்.
    1981ல் பெலீசு ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
    1983ல் வட அயர்லாந்தில் 38 ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகள் சிறையை உடைத்து தப்பினர்.
    1992ல் செவ்வாய்க் கோளை நோக்கிய “செவ்வாய் நோக்கி” என்ற விண்கலத்தை நாசா ஏவியது. 11 மாதங்களின் பின்னர் இவ்விண்கலம் செயலிழந்தது.
    1992ல் யாழ்ப்பாணம், பூநகரியில் 62 இராணுவக் காவலரண்கள் விடுதலைப் புலிகளினால் தாக்கி அழிக்கப்பட்டன.
    2002ல் குஜராத் மாநிலத்தில் இந்துக் கோயில் ஒன்றில் இடம்பெற்ற வன்முறையில் 32 பேர் உயிரிழந்தனர்.
    2003ல் சப்பானில் ஒக்காய்டோ என்ற இடத்தில் 8.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில், 800 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்..
    2015ல் இலங்கையின் மலையகத்தில் இறம்பொடையில் ஏற்பட்ட மண்சரிவில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
    2017ல் இந்தோனேசியாவில் பாலித் தீவில் ஆகூங்க் மலையில் எரிமலை வெடித்தது.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 25-09 | September 25

    1644ல் தென்மார்க்கு வானியலாளரான‌ ஓலி ரோமர் பிறந்த நாள். (இறப்பு-1710)
    1846ல் உருசிய-செருமானிய அறிவியலாளரும் காலநிலை ஆய்வாளருமான‌ விளாதிமிர் கோப்பென் பிறந்த நாள். (இறப்பு-1940)
    1848ல் சோவியத் ஒன்றிய வானியலாளரான‌ செர்கேய் பாவ்லோவிச் கிளாசனாப் பிறந்த நாள். (இறப்பு-1937)
    1857ல் திருவிதாங்கூர் மன்னரான‌ மூலம் திருநாள் பிறந்த நாள். (இறப்பு-1924)
    1881ல் சீன எழுத்தாளரான‌ லூ சுன் பிறந்த நாள். (இறப்பு-1936)
    1897ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளரான‌ வில்லியம் பால்க்னர் பிறந்த நாள். (இறப்பு-1962)
    1899ல் தமிழகக் கவிஞரும் பாடலாசிரியருமான‌ உடுமலை நாராயணகவி பிறந்த நாள். (இறப்பு-1981)
    1914ல் இந்திய அரசியல்வாதியான‌ தேவிலால் பிறந்த நாள். (இறப்பு-2001)
    1916ல் இந்தியப் பொருளியலாளரும் சமூகவியலாளருமான‌ தீனதயாள் உபாத்தியாயா பிறந்த நாள். (இறப்பு-1968)
    1920ல் இந்தியப் பொறியியலாளரான‌ சதீஷ் தவான் பிறந்த நாள். (இறப்பு-2002)
    1922ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான‌ அரசியல்வாதியான‌ நாத் பாய் பிறந்த நாள். (இறப்பு-1971)
    1924ல் இந்திய இடதுசாரி அரசியல்வாதியான‌ அ. பூ. பர்தன்வ் பிறந்த நாள். (இறப்பு-2016)
    1939ல் இந்திய நடிகரும் இயக்குநருமான‌ பெரோசு கான் பிறந்த நாள். (இறப்பு-2009)
    1946ல் இந்தியத் துடுப்பாளரான‌ பிசன் சிங் பேடி பிறந்த நாள்.
    1952ல் அமெரிக்க எழுத்தாளரான‌ பெல் ஹூக்சு பிறந்த நாள்.
    1952ல் அமெரிக்க நடிகரும் தயாரிப்பாளருமான‌ கிறிஸ்டோபர் ரீவ் பிறந்த நாள். (இறப்பு-2004)
    1968ல் அமெரிக்க நடிகரும் பாடகருமான‌ வில் சிமித் பிறந்த நாள்.
    1977ல் இந்தி மற்றும் பஞ்சாபி நடிகையான‌ திவ்யா தத்தா பிறந்த நாள்.
    1977ல் தமிழகத் திரைப்பட இயக்குநரும் திரைக்கதை ஆசிரியரும் தயாரிப்பாளருமான‌ ஏ. ஆர். முருகதாஸ் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 25-09 | September 25

    1777ல் சுவிட்சர்லாந்து-செருமானியக் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் வானியலாளருமான யோகான் என்றிச் இலாம்பெர்ட் இறப்பு நாள். (பிறப்பு-1728)
    1958ல் அமெரிக்க உளவியலாளரான‌ ஜான் பி வாட்சன் இறப்பு நாள். (பிறப்பு-1878)
    2003ல் பாலத்தீன-அமெரிக்க மெய்யியலாளரான‌ எட்வர்டு செயித் இறப்பு நாள். (பிறப்பு-1935)
    2007ல் தமிழக அரசியல்வாதியான‌ ஜனா கிருஷ்ணமூர்த்தி இறப்பு நாள். (பிறப்பு-1928)
    2011ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கென்ய சூழலியலாளரான‌ வாங்கரி மாத்தாய் இறப்பு நாள். (பிறப்பு-1940)
    2017ல் தமிழகத் திரைப்பட நடிகரான‌ பீலி சிவம் இறப்பு நாள். (பிறப்பு-1938)
    2018ல் தமிழக அரசியல்வாதியான‌ பி. வி. எஸ். வெங்கடேசன் இறப்பு நாள். (பிறப்பு-1947)
    2020ல் தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரான‌ எஸ். பி. பாலசுப்ரமணியம் இறப்பு நாள். (பிறப்பு-1946)
    2021ல் ஈழத்துக் கருநாடக இசைப் பாடகரும் மிருதங்கக் கலைஞருமான வர்ண ராமேஸ்வரன் இறப்பு நாள். (பிறப்பு-1968)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleSeptember 24 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 24
    Next articleஇன்றைய ராசி பலன் 09.09.2022 Today Rasi Palan 09-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!