இன்றைய ராசி பலன் 07.09.2022 Today Rasi Palan 07-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்று 07-09-2022 ஆவணி மாதம் 22ம் நாள் புதன்கிழமை ஆகும். இன்று துவாதசி திதி இரவு 12.05 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. இன்று உத்திராடம் நட்சத்திரம் மாலை 04.00 வரை பின்பு திருவோணம். இன்று அமிர்தயோகம் மாலை 04.00 வரை பின்பு சித்தயோகம். இன்று நேத்திரம் – 2. ஜீவன் – 1. இன்று சுபமுகூர்த்த நாள். இன்று சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்: மதியம் 12.00-1.30, எம கண்டம்: காலை 07.30-09.00, குளிகன்: பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள்: காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷம் ராசிக்காரர்களே!

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

ரிஷபம் ராசிக்காரர்களே!

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

மிதுனம் ராசிக்காரர்களே!

இன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது.

கடகம் ராசிக்காரர்களே!

இன்று உங்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதார நிலை சற்று உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கப் பெறும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும்.

சிம்மம் ராசிக்காரர்களே!

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். வேலையில் பணிச்சுமை குறையும்.

கன்னி ராசிக்காரர்களே!

இன்று பூர்வீக சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் இழுபறி நிலை உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் சோர்வு ஏற்படும். உற்றார் உறவினர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

துலாம் ராசிக்காரர்களே!

இன்று நீங்கள் எதிர்பார்த்த காரியம் நிறைவேற அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் வேலைபளுவால் உடல் சோர்வு, மன உளைச்சல் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே!

இன்று இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு உண்டாகும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு ராசிக்காரர்களே!

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

மகரம் ராசிக்காரர்களே!

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகஸ்தர்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம் ராசிக்காரர்களே!

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். திருமண சுப முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

மீனம் ராசிக்காரர்களே!

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறைந்து மன அமைதி உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும்.

Previous articleதினமும் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜூஸ் தரும் பலன்கள்! Pavakkai payangal – Bitter gourd
Next articleSeptember 16 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 16