ஜூலை 29 முதல் நவம்பர் 24 வரை நான்கு மாத காலம் ஓட்டாண்டியையும் கோடிஸ்வரராக்கும் குரு வக்ர பெயர்ச்சி!
குரு பகவானின் வக்ர சஞ்சாரத்தினால் ஜூலை 29 முதல் சிலருடைய வாழ்க்கையை புரட்டிப்போடும் சம்பவங்கள் நிகழப்போகிறது.
ஜூலை 29 முதல் நவம்பர் 24 வரையிலும், நான்கு மாத காலம் குருபகவான் மீன ராசியில் உள்ள உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே வக்ரத்தில் செல்கிறார்.
இதனால் யார் யாருக்கெல்லாம் நல்ல தகவல்கள் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.
ஓட்டாண்டியையும் கோடிஸ்வரராக்கும் குரு வக்ர பெயர்ச்சி! 3 நாட்களில் மாறப்போகும் 3 ராசியின் தலையெழுத்து! | Guru Vakra Peyarchi2022
மிதுனம்
குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவு அதிகமாக இருக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த கடன்களை திருப்பி கொடுப்பீர்கள். தொலைந்து போன பணம், நகை ஆவணங்கள் திரும்ப கிடைக்கும். தொழில் முதலீடுகளில் செய்யும் லாபம் இரட்டிப்பு மடங்காக திரும்ப கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
கடகம்
குரு பகவான் வக்ரமடைவதால் புது வேலை கிடைக்கும். நல்ல செய்தி தேடி வரும். பணத்தட்டுப்பாடு நீங்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உற்சாகமாக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
கும்பம்
குருவின் பயணத்தால் உங்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.