இன்றைய ராசி பலன் 27.07.2022 Today Rasi Palan 27-07-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்று 27-07-2022 ஆடி மாதம் 11ம் நாள் புதன்கிழமை ஆகும். இன்று சதுர்த்தசி திதி இரவு 09.12 வரை பின்பு அமாவாசை. இன்றைய நாள் முழுவதும் புனர்பூசம் நட்சத்திரம். இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. இன்று சுபமுகூர்த்த நாள். இன்று சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இன்று வாஸ்து நாள். காலை காலை 7.30 மணி முதல் 8.06 மணி வரை.

இராகு காலம்: மதியம் 12.00-1.30, எம கண்டம்: காலை 07.30-09.00, குளிகன்: பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள்: காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷம் ராசிக்கு: இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்.

ரிஷபம் ராசிக்கு: இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வீட்டில் ஒற்றுமை குறையலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கடன் ஓரளவு குறையும்.

மிதுனம் ராசிக்கு: இன்று நீங்கள் கடினமான காரியங்களையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் ஏற்படும்.

கடகம் ராசிக்கு: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படக்கூடும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

சிம்மம் ராசிக்கு: இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும்.

கன்னி ராசிக்கு: இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சேமிக்கும் அளவிற்கு பணவரவு இருக்கும்.

துலாம் ராசிக்கு: இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். வியாபாரம் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.

விருச்சிகம் ராசிக்கு: இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களை தள்ளி வைப்பது நல்லது.

தனுசு ராசிக்கு: இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

மகரம் ராசிக்கு: இன்று உறவினர்களால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

கும்பம் ராசிக்கு: இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். வேலையில் உடன் இருப்பவர்களால் பணிச்சுமை குறையும்.

மீனம் ராசிக்கு: இன்று தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பிள்ளைகள் வழியில் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 26.07.2022 Today Rasi Palan 26-07-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஜூலை 29 முதல் நவம்பர் 24 வரை நான்கு மாத காலம் ஓட்டாண்டியையும் கோடிஸ்வரராக்கும் குரு வக்ர பெயர்ச்சி!