Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசிபலன் 13.4.2018

இன்றைய ராசிபலன் 13.4.2018

0
963

இன்றைய ராசிபலன் 13.4.2018

13.4.2018 வெள்ளிக்கிழமை ஹேவிளம்பி வருடம் பங்குனி மாதம் 30-ம் நாள்.
தேய்பிறை துவாதசி திதி காலை 8.14 வரை பிறகு திரயோதசி. பூரட்டாதி நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 3.34 வரை பிறகு உத்திரட்டாதி. யோகம்: சித்தயோகம்.
பிரதோஷம்.
குளிகை: 7:30 – 9:00
சூலம்: மேற்கு.
பொது: ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் ரதம், சமயபுரம் மாரியம்மன் யானை வாகனத்தில் திருவீதிவுலா, வள்ளிமலை, திருப்போரூர் இத்தலங்களில் முருகப்பெருமான் படி திருவிழா.
பரிகாரம்: வெல்லம்.

நல்ல நேரம் 6-9, 1-3, 5-6, 8-10.
எமகண்டம் மாலை மணி 3.00-4.30.
இராகு காலம் காலை மணி 10.30-12.00.

மேஷம் : வெற்றி
ரிஷபம் : யோகம்
மிதுனம் : அனுபவம்
கடகம் : எதிர்ப்பு
சிம்மம் : பொருள்
கன்னி : திட்டங்கள்
துலாம் : சந்தோஷம்
விருச்சிகம் : தனலாபம்
தனுசு : முயற்சி
மகரம் : திருப்பம்
கும்பம் : வீண்விரயம்
மீனம் : சலனம்

மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். சிறப்பான நாள்.

ரிஷபம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேச தொடங்குவார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமானசெய்தி வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். மற்றவர்களை முழுமையாக நம்பி கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.

கன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். பொதுகாரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

துலாம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்: எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பயணங்களால் அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இங்கிதமாக பேசி எல்லோரையும் கவர்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிகொண்டிருக்க வேண்டாம். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

மீனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்துப் போகும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

Previous articleஅப்பாவையும் தாத்தாவையும் திருமணம் செய்த எகிப்து ராணி: ரகசியம் வெளிவருமா?
Next articleதமிழகத்தில் பெரும் பரபரப்பு: இரவோடு இரவாக விடுதலை செய்யப்பட்ட சீமான்!