தமிழகத்தில் பெரும் பரபரப்பு: இரவோடு இரவாக விடுதலை செய்யப்பட்ட சீமான்!

0

கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரவு ஒன்பது மணியளவில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் சென்னையில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இடம்பெற்ற நிலையில், நடைபெற்ற போராட்டத்தில் போது பொலிஸாரை தாக்கியதாக சீமான் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் பாரத பிரதமர் தமிழகத்திற்கு வியஜம் மேற்கொண்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன் போது சீமான், மணியரசன், தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு, இயக்குநர்கள் பாரதிராஜா, கௌதமன், அமீர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் வெடிக்கத்தொடங்கின. இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்து..

இதனையடுத்து, கைது செய்யப்பட்வர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அதிரடிப்படையினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், தமிழகத்தில் அதிருப்தி நிலை தொடர்ந்ததை அடுத்து இரவு ஒன்பது மணியளவில் சீமான் உள்ளிட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 13.4.2018
Next articleகாணாமல்போன பலர் சுயநினைவின்றி தடுப்பு முகாமில் உயிருடன்! முன்னாள் போராளியின் பகிரங்க வாக்குமூலம்!